Monday, May 20, 2019

யார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்?! - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த முறை வாங்கி வந்த அரிசி சரியில்லை மாமா. சாதம் பெருசு பெருசா இருக்கு. கலரும்  வெள்ளையா இல்லாம மங்கலா இருக்கு..

சோற்று பருக்கை மெல்லிசாகவும், வெள்ளை வெளேர்ன்னு இருக்கனும்ன்னு நாம ஆசைப்படுறோம். ஆனா, அது அத்தனை ஆரோக்கியமானதில்லை.  அரிசி சின்னதாவும் பளப்பளப்பா மாற பல கட்டங்களை தாண்டனும். அப்படி தாண்டும்போது அரிசி தன்னோட இயல்பையும், சுவையையும், சத்தையும் இழக்குது. நாமலாம் வெறும் அரிசி சக்கையைதான் சாப்பிடுறோம். சத்தான அரிசியை கேரள மக்கள்தான் சாப்பிடுறாங்க.  

ஆனா, அதை நாமதான் மட்டை அரிசின்னு கிண்டல் பண்ணுறமே மாமா!

மட்டை அரிசின்னு சொல்லப்படும் சிகப்பரிசி எங்க விளையுதுன்னு தெரியுமா?!

வேறெங்க இருக்கும்?! கேரளாவில்தான்..
No photo description available.
ம்ஹூம் சிகப்பரிசி விளைவது மதுரையில்.  அங்கிருந்துதான் கேரளாவுக்கு சப்ளை ஆகுது.   இந்தியாவில் . இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி?ன்னு 1982ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி ஆய்வு நடத்துச்சு. இரண்டு வருடமா இந்த ஆய்வு நடந்துச்சு.  ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை".  மக்கள்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்வதா  கணக்கிடப்பட்டது.  அதுக்கு அவங்க சொன்ன  காரணம், அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசியும், அதை அவங்க சாப்பிட்டதும்தான் காரணம்ன்னு சொன்னாங்க. சிகப்பரிசி விளைவிக்க உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே,  பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்ற ரக அரிசியை விளைவிப்பதைவிட குறைஞ்ச அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,
யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"...ன்னு 
 இந்த அரிசியை பற்றியும், அதன் விளைச்சல் பத்தியும் சங்ககாலப்பாடல் சொல்லுது. கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம். இந்த அரிசியில் நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, இதில் அதிகமான பைபர் இருக்கு.  எனவே, இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுது.  சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. சிகப்பரிசி சோற்றினை சாப்பிட்டால் உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாகும், எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் இருக்கு..  இன்றும் மதுரையில் 90 வயதுக்குமேல் வீட்டுக்கு ஒரு பாட்டி, தாத்தா நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்குறதை  பார்க்கலாம். அவர்களுக்கு சுகர்ன்னா என்னன்னே தெரியாது.  
கடந்த 25 ஆண்டுகளில் இந்நிலை மாறியது. தடுப்பூசி ஊருக்குள் வந்தது, பாலிஷ் பண்ணப்படாத  அரிசி சோற்றினை சாப்பிட்டால் கௌரவக்குறைச்சல் என மனசில் பதிய வச்சாங்க.  நாமும் நம் பாரம்பரியத்தை மறந்ததன் விளைவு, சர்க்கரை, ரத்தக்கொதிப்ப்பு, தைராய்டு, அதிக  உடல் எடை, சத்துக்குறைபாடு, மாதவிடாய் பிரச்சனை, சிறுவயதில் பூப்பெய்துதல்ன்னு  அவதிப்படுறோம்.  மெல்ல மெல்ல பாரம்பரியத்துக்கு திரும்புறோம்ன்னு மீண்டும் தப்பாதான் அடியெடுத்து வைக்கிறோம்.,  கடின உடல் உழைப்பாளிகளான மலைவாழ் மக்கல் சாப்பிடும் குதிரைவாலி, சாமை, வரகு அரிசியை உடல் உழைப்பில்லாத  நாம சாப்பிடுறோம். இது வேற மாதிரியான பிரச்சனையை உண்டாக்கும். எந்த இடத்தில் வசிக்கிறோமோ அந்த இடத்தில் விளையும் பொருட்களை உண்ணுவதே நம்ம உடல் சரிவர இயங்க செய்யும். இல்லன்னா, ஆரோக்கியத்தை இழந்து அல்லல்படவேண்டியதுதான். 

நீ சொன்னதை நினைவில் வச்சுக்கிறேன் மாமா...
அப்படியே இதையும் மனசில் வச்சுக்க. காலி ஸ்வீட், ஐஸ் டப்பாக்களை வீசி எறியாம இப்படி கறிவேப்பிலை, ப.மிளகாய் போட்டு வச்சு பசங்களை ஏமாத்தாத. 
சீனப்பெருஞ்சுவரை பத்தி ஒருமுறை ஐஞ்சுவை அவியல்ல பார்த்திருக்கிறோம். சீனப்பெருஞ்சுவரின் முடிவையும் ஆரம்பத்தையும் பார்த்திருக்க மாட்டோம். அதை இந்த படத்தில் பார்க்கலாம். 
மரத்தை வச்சவங்களும், அரசாங்கமும்தான் தண்ணி ஊத்தனும்ன்னு அவசியமில்லை. போற வர்ற நாமும், நம்மக்கிட்ட  இருக்கும்  வாட்டர்கேன்ல இருக்கும் தண்ணியை கூட ஊத்தி ஒரு மரத்தை காப்பாத்தலாம்...

நல்ல யோசனைதான் மாமா.. சரி நான் போய் வேலைய பார்க்கிறேன்..
நன்றியுடன்,
ராஜி
7 comments:

 1. நானும் நினைவில் வச்சுக்கிறேன்...!

  ReplyDelete
 2. முடிவில் சொன்னது அருமை சகோ

  ReplyDelete
 3. அரிசி பற்றிய தகவல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது மதுரையிலிருந்து போவது செய்தி. நானும் மதுரையில் இருந்திருக்கிறேன். இந்த அரிசி உபயோகித்தது இல்லை. எனக்குத் தெரிந்து யாருமே!

  ReplyDelete
 4. அவியல் நன்று.

  ReplyDelete
 5. அவியல் நன்றாக இருக்கிறது.
  மரத்தை காக்கும் யோசனை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. கோமதிக்கா உங்களுக்குக் காலைல சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. நீங்க எழுதியிருந்தீங்க பாட்டில் துளை போட்டு ...எங்க வீட்டுல அப்படித்தான் வைப்பதுண்டு ஊருக்குப் போற சமயம்.

   கீதா

   Delete
 6. துளசிதரன்: நாங்கள் குண்டு அரிசிதான் தான் பயன்படுத்துகிறோம். தகவல்கள் அருமை

  கீதா: நான் சிகப்பரிசிதான்/மட்ட அரிதான் பயன்படுத்தறேன். தமிழ்நாட்டிலிருந்து வரும் சிகப்பரிசியை கேரளத்தவர்கள் பயன்படுத்தறாங்களானு தெரியலை. ஏன்னா அதுல கெமிக்கல் கலந்துருக்குனு அவங்க எண்ணம். பாலக்காட்டு/கேரள மட்ட அரிதான் பெரும்பாலும் அங்கு. தமிழ்நாட்டிலும் விளையுது சிகப்பரி. ஆனா கேரளா மட்ட அரினும் இருக்கு. அதிலும் அந்த அரிசில பாத்தீங்கனா வரி இருக்கும் அதுதான் கண்டுபிடிக்க உதவும். யாராவது வீட்டுக்கு வந்தாதான் வெள்ளை அரிசி அப்புறம் கலவை சாதம் செஞ்ச்ஜா வெள்ளை அரிசி இல்லைனா கேரள மட்ட அரிதான்.

  சீனப்பெருஞ்சுவர் படங்கள் அழகா இருக்கு

  எங்க விட்டுல சென்னைல செடி வைச்சப்ப இப்படி பாட்டில்ல தண்ணி ரொப்பி ட்ரிப்ஸ் போடுவது போல இந்த வகைதான் ட்ரிப் இரிகேஷன்னு இது மிக நல்ல மெத்தட் ஊருக்குப் போகும் போது இப்படி வைச்சுட்டுப் போலாம்...எவ்வலவு சொட்டு மெதுவா போனும்னு செட் பண்ணி வைச்சுரலாம். நமக்கு ட்டிப்ஸ் போடுவது போலத்தான்...ஒரு வேளை இனி இது கடைலயே விக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுருவாங்க...


  ReplyDelete