Monday, May 13, 2019

தி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்

மாமா! வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் வாங்கனும்.  பஜாருக்கு போகலாமா? 
என்னென்ன பொருள்கள் வாங்கனும்ன்னு சொன்னா  அதுக்கேத்தமாதிரி பிளான் பண்ணலாம்.
நம்ம ஊரிலும் டி.நகர் மாதிரி ஒரு இடம் இருந்தால் நல்லா இருக்கும்ல!
No photo description available.

ம்ம்ம் நல்லாதான் இருக்கும். இன்னிக்கு குண்டூசி முதல் வைர நகைகள் வரை வீட்டுக்கு, ஆபீசுக்கு, கட்டுமான பொருட்கள்ன்னு பாகுபாடில்லாம எல்லாமே கிடைக்கும்,  ஜன நெரிசலா இருக்கும் டி.நகர்  எனப்படும் தியாகராய நகர் முதல்ல  “லாங் லேக்” என சொல்லப்பட்ட நீள் தடாகமாக இருந்ததுன்னு சொன்னா நம்புவியா?!
அப்படியா?! பள்ளிக்கரணை, செம்பரப்பாக்கம், போரூர்லாம்தான் ஏரில உருவானதுன்னு பார்த்தா, டி. நகரும் அப்படி உருவானதுதானா?!
ஆமா, 1911-ம் வருசத்துல பிரிட்டீஷ் அரசு, வணிக நோக்கத்துக்காகவும், நிர்வாகப் போக்குவரத்து வசதிக்காகவும் மாம்பலம் ரயில் நிலையத்தை அமைத்த பிறகுதான் தியாகராய நகர் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 1920-ம் ஆண்டில் பிரிட்டீஷ் அரசு மதராஸ் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், “மதராஸ் டவுன் ப்ளானிங் ஆக்ட்-1920“ எனும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டம்தான் நாம் இன்று பார்க்கும் இந்த தியாகராயய நகரின் வளர்ச்சிக்கான ஆரம்பப் புள்ளி.
1923 சென்னையை ஆட்சி செய்துக்கொண்டிருந்த நீதிக்கட்சியின் தலைவர்தான் பிட்டி தியாகராயர். கட்சிக்கு இவர் தலைவராக இருந்தாலும், முதல்வர் பதவியை ஏற்க மறுத்த இவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், அப்போதைய முதல்வராக இருந்த பனகல் அரசர்தான் இந்த இடத்துக்கு தியாகராயர் நகர்ன்னு பேர் வச்சார். நீதிக்கட்சியை சேர்ந்தவரும் சமூகப் போராளியுமான சௌந்தரபாண்டியனார் நினைவாகவே சென்னை நகரின் முக்கியக் கடைவீதிகள் இருக்கும் பாண்டி பஜார் பகுதிக்கு அந்தப்பெயர் சூட்டப்பட்டது. கடைத்தெருவின் நுழைவு வாயிலில், அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். அவரது நினைவாக தியாகராய நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றது. நீதிகட்சியின் பொருளாளராகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் இருந்தவர் கோபதி நாராயணசாமி செட்டி. இவர் பெயரை தாங்கி நிற்கும் சாலையே G.N Chetty சாலை.

இன்னிக்கு உஸ்மான் ரோடுன்னு சொல்லப்படும் இடத்துக்கான பெயர்க்காரணம் நீதிக்கட்சி ஆட்சி செய்தபோது அந்த அமைச்சரவையில் முகம்மது உஸ்மான் இடம்பெற்றிருந்தார். 1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் *சென்னை மாஜிஸ்திரேட், *சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், சென்னை நகர செரீப், சென்னை மாநகராட்சி தலைவர், சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், 1942 - 1946 பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழு உறுப்பினர் என பல பதவிகளை வகித்து வந்தார். 1925 - இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாக காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார். இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கைன்னே சொல்லப்பட்டது. இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மானை யுனானி மருத்துவர்ன்னு மரியாதையாய் சொல்வாங்க. முகம்மது உஸ்மானை சிறப்பிக்கவே உஸ்மான் ரோடு என பெயர் சூட்டப்பட்டது.

ஜூலை 1916, பிராமணர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க விடுதிகள் கொடுக்க மறுத்த காலத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் விடுதி தொடங்கி மாணவர் தங்கி படிப்பதற்கு டாக்டர். நடேசன் துணை புரிந்தார். உணவு விடுதியோடு, நூலகமும் அங்கே அமைத்து தந்தார். வாரந்தோறும் நடேசனாரின் தோட்டத்தில் திராவிடர் சங்கத்தின் சார்பில், பார்ப்பனரல்லாதார் இன எழுச்சிக் கூட்டங்களும், இலக்கியக் கூட்டங்களும், இரவு நேரங்களில் முதியோர் கல்வியும் நடத்தப்பட்டது. அவரது சேவையினை பாராட்டி 18.09.08 அன்று டாக்டர் நடேசனார் அஞ்சல் தலை கலைஞரால் வெளியிடபட்டது. அவரது பெயரில் உருவானதுதான் நடேசன் சாலை...
டாக்டர் டி.எம் நாயர் ஒரு புரட்சி வீரர்; சுயமரியாதைகாரர், அவரை ஒரு "திராவிட லெனின்" என சொல்லலாம்ன்னு பெரியாரே சொல்லி இருக்கார். இவர் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவர். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் நடேசனார் என்றாலும், நீதிக்கட்சியை வழிநடத்தியவர் டி.எம் நாயரே!. Justice பத்திரிக்கையின் ஆசிரியர், அயோத்திதாச பண்டிதரால் பாராட்டு பெற்றவர் இப்படி பல சிறப்புகளை பெற்ற இவரது பெயரை தாங்கி நிற்பதே டாக்டர் நாயர் சாலை.
Image result for அபிபுல்லா சாலை

சென்னை மாகாண ஆளுனரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்தான் நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா . அவரின் பெயரை கொண்டுதான் சென்னை தியாகராய நகர் பகுதியின் பிரதான சாலைக்கு இவரின் பெயரின் ஒரு பகுதியினை பெயராய் வைத்து ஹபிபுல்லா சாலைன்னு அழைக்கப்படுது. சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பார்ப்பனர்களுக்கு எந்த ஒரு பணிவாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவவர், 1925ல் சென்னை மாநகராட்சி தலைவராய் இருந்த திரு. தணிகாசலம். அவர்களது பெயரில் தணிகாசலம் தெரு அழைக்கப்படுது. 1920 -சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர், சட்டமன்றத்தில் நீதிகட்சியின் துனைதலைவர், 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வந்தவர். அவரது பெயரில் அழைக்கப்படுவதே எம்.சி.ராஜா சாலை..
ஏன் மாமா! அவங்க கட்சிக்காரங்க பேரையே டி.நகர் முழுக்க வச்சுக்கிட்டாங்க போல!
ம்ஹூம், இப்படி பெரிய பெரிய ஆட்களின் பெயரினை மட்டுமில்லாம, நம்மளை மாதிரி சாமானிய ஆட்களின் பேரையும் வச்சிருக்காங்க. ஜி.என்.செட்டி ரோடில் ஓட்டல் விருதுநகர்ன்னு இருக்கு. அதுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும் தெருக்களான நாதமுனி தெரு, கோவிந்து தெருன்னு ரெண்டு தெரு இருக்கும். இந்த ரெண்டு தெருவும், தியாகராய நகர் உருவான காலத்தில், வேலையில் இருந்த நேரத்தில் இறந்துப்போன கடைநிலை ஊழியர்களின் பெயர்களில் உருவானது. இன்றைக்கு பிரம்மாண்டமாய் ஜன நெரிசலுடன், மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் தியாகராய நகரின் கதையாகும்.
இன்னிக்கு இருக்க மாதிரி சமூக வலைத்தளங்களும் ,படமெடுக்கும் கலாச்சாரமும் அன்னிக்கு இருந்திருந்தால் இதுலாம் நம்ம பசங்களுக்கு தெரிய வரும். இல்லன்னா, அந்தந்த இடத்தின் பாரம்பரியம் மறக்கப்பட்டுடும்தானே மாமா?!
ஆமா! இன்னிக்கு எல்லாமே படமெடுத்துக்குறோம். முதன்முதலாய் செல்பி எப்ப எடுத்தாங்கன்னு தெரியுமா?!
2000ஆண்டுக்கு அப்புறம்தான் கேமரா செல்போன் வந்துச்சு. அப்ப அதுக்கப்புறம்தான் இந்த செல்பி வந்திருக்கும்,..
ம்ஹூம். 1920ல எடுத்த இந்த படம்தான் முதல் செல்பின்னும், முதல் க்ரூப் செல்பின்னும் அதிகாரப்பூர்வமா சொல்லி இருக்காங்க.
நிமிசத்துக்கு நிமிசம் எதாவது ஒரு விபத்து நடக்குது.  நாம வண்டில எத்தனைக்கு எத்தனை வேகமா போறோமோ! அத்தனைக்கு அத்தனை நம்ம குடும்பத்தை விட்டு விலகிப்போறதை இந்த வீடியோ சொல்லாமல் சொல்லுது.. இதை பார்த்துட்டு வண்டில ஸ்பீடா போறதை குறைச்சுக்க புள்ள!!
உன்னைய மாதிரி ஒரு கூறுக்கெட்ட டாக்டரை கட்டுன என்னைய மாதிரி ஒரு பொண்டாட்டி அவசரத்துக்கு பூண்டு உரிச்சு கொடுக்க சொன்னா அந்தாளு எப்படி பூண்டு உரிக்கிறார்ன்னு பாரு மாமா... பார்த்துட்டு கொஞ்சமாச்சும் புத்தியோடு நடந்துக்க..

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

 1. சென்னை நகரின் ஒவ்வொரு இடங்களின் காரணப்பெயரும் பெரிய பார்வேர்டாக முன்பு வாட்ஸாப்பில் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் சுவாரஸ்யமான தகவல்கள்.

  பூண்டு உரிக்கும் காணொளியும் வாட்ஸாப்பில் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ட்விட்டரில் சுடப்பட்டது..

   Delete
 2. மக்கள் மறந்துபோன வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டி உள்ளீர்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. தகவல்கள் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. ட்விட்டரில் சுட்டதுண்ணே

   Delete
 4. சென்னை பற்றிய வரலாறு இடங்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

  பூண்டு உரிக்கும் காணொளியும் வாட்சப்பில் பார்த்தோம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பூண்டு உரிக்கும் காணொளி புதுசுன்னு பகிர்ந்தால் எல்லாருமே பார்த்தாச்சுன்னு சொன்னால் எப்படி?1

   Delete
 5. சென்னையின் வரலாரை யூ ட்யூபில் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்போது பல இடங்களின் பெயர்க்காரணங்களும்

  ReplyDelete
  Replies
  1. இது ட்விட்டரில் சுட்டதுப்பா

   Delete
 6. முதல் காணொளி திறக்க வில்லை எரர் என்று வருகிறது

  ReplyDelete
  Replies
  1. இல்லப்பா, இங்கு வருகிறது. ரிஸ்டார்ட் பண்ணி பாருங்க

   Delete
 7. நான் 80களில் பார்த்த ரங்கனாதன் தெருவுக்கும் இப்போ உள்ள தெருவுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். அப்போவும் கொஞ்சம் கூட்டம் இருக்குனாலும், தனித்தனி கடைகள், உணவு விடுதிகள், கரும்புஜூஸ் போன்றவைகள் இருந்தன. சென்னைக்கு வந்தபோதுதான் முதன் முதலில், காய்கறியின் விலையை 'கால் கிலோவுக்கு இவ்வளவு' என்று எழுதியிருப்பதை ரங்கநாதன் தெருவில் பார்த்தேன்.

  ReplyDelete