Sunday, June 07, 2020

அக்கட தேசத்து பாட்டையும் ரசிப்போமில்ல!! -பாட்டு புத்தகம்

எங்க அப்பாருக்கு நான் டீச்சராகி பொத்தனாப்ல காலையில் வேலைக்கு போய் மாலையில் வீட்டுக்கு வந்து சனி, ஞாயிறுகளில் வீட்டில் இருக்குற மாதிரி டீச்சர் வேலைக்கு போகனும்ன்னு ஆசை. என் ஆத்தாளுக்கோ விஜயசாந்தி ஐ.பி.எஸ் சாரி வெஜெயந்தி ஐ.பி,எஸ் மாதிரி பறந்து பறந்து சண்டை போட்டு பேர் வாங்கனும்ன்னு ஆசை. இப்படி படிச்சு திரைக்கடல் ஓடி திரவியம் தேடனும்ன்னு ஆசைப்பட்ட பொண்ணு இது எதையும் மைண்ட்ல வச்சுக்காம பாட்டு கேட்டுக்கிட்டு படிப்புல கோட்டைய விட்டது. என்னோட இசையார்வம் தமிழ் பாட்டுக்களை மட்டுமில்லாம மத்த மொழி  பாட்டுக்களையும் ரசிக்க வைத்தது...



90களில் இந்தியில் வந்த  பாட்டுக்களான... டிங்க்.. டாங்கு... டிங்க்.. டாங்கு.. ஏக், தோ, தீன்.. பாட்டும், மைனே பியார் கே  பட பாட்டுக்களும் பிரபலம். தெலுங்கில் முட்டா மேஸ்திரி படத்தில் இந்த பேட்டைக்கு நானே மேஸ்திரி பாட்டும், ஹலோ பிரதர் படத்திலிருந்து இன்ப ராகங்கள் பாட்டும் செம ஹிட்..  அப்ப திருத்தணியில் இருந்ததாலும் திருத்தணி ஆந்திராவின் பார்டர் என்பதாலும் முட்டா மேஸ்திரி, ஹலோ பிரதர் பாட்டும் கேட்காத நாளில்லை. முட்டா மேஸ்திரி குத்து பாட்டு ரகம். ஹலோ பிரதர் படத்தில் வரும் இன்ப ராகங்கள் பாட்டு டூயட் ரகம்.. இந்த பாட்டில் வரும் ஏ.. ஏ.. ஹோ..ஹோ... ஹம்மிங்க் கேட்டாலே உடலில் ஒரு துள்ளல் வரும். அந்த ஹம்மிங்க்காகவே பாட்டு பிடிச்சது. பாடுக்காகவே நாகார்ஜுனாவை பிடிச்சது. ரொம்ப நாளுக்கப்புறம் யூட்யூபில் கேட்டு பார்த்து ரசித்த பாட்டு...


இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன்வேளை..
ஏ..ஏ..ஹே..
உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுங்கின்ற சுபவேளை..
ஏ...ஏ.. ஹே..ஹே..
கண்ணோடு அடிக்குது மேளம்..
நெஞ்சோடு தகதிமி தாளம்..
நம்மோடு குறையட்டும் தூரம்..
கொண்டாடும் வாலிப வாரம்...

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே...

சோலையில் பூங்குயில் பாடிய சுரங்களும் நீதானே?!
பதங்களும் நாந்தானே?!
வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்
சுதி சுதி நீதானே?!
லயம் லயம் நாந்தானே?!
ஏ.. ஏ.. ஹே...
எதிர்காலம் கண்களில் நான் கண்டுகொண்டேன்..
அது எப்படி உன்னிலே நான் என்னை கண்டேன்?!
பூங்கொடி...ஓஒ
உன் பார்வையே போதைதானே?!
உன் வார்த்தையே கீதைதானே?!
ஏ.. ஏ.. ஹே...

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே...

காமனும்,, தேவியும் காதலில் காண்கிற
அதே அதே கலை வேண்டும்..
இதே இதே சுகம் வேண்டும்..
ஏ..ஏ..ஹே..
வயசுக்கு ருசிதரும் வேளையில் 
மாங்கனி அகம் கனிந்தது என்ன?!
சுகம் விளைந்தது என்ன?!
ஏ..ஏ..ஹே...
பெண்மை கொண்ட கண்மனி
உன்னை கண்டுகொண்டாள்..
இரு கண்ணில் வெண்ணிலா 
அவள் கொண்டு வந்தாள்.
மன்னவா! பரிமாற பள்ளி எங்கே?!
பசியாற பால்பழம் தேவை இங்கே?!

உந்த  கானங்கள் காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை..
ஏ..ஏ.. ஹே..

கண்ணோடு அடிக்குது மேளம்..
நெஞ்சோடு தகதிமி தாளம்..
கொண்டாடும் வாலிப வாரம்.....
ஏ...ஏ.. ஹே....

இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே..
படம்: ஹலோ பிரதர்
இசை-ராஜ்-கோட்டி
நடிகர்கள்: நாகார்ஜுனா-சௌந்தர்யா

பாட்டு எப்படி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க...

நன்றியுடன்,
ராஜி


6 comments:

  1. பாடல் வரிகள் மட்டுமே இருக்கிறது.
    காணொளி இல்லையே... ?

    ReplyDelete
  2. இந்தப் படத்தில்தானே உயிரே பாடலும்?  ஹிந்தியில் து மிலே?  அது நல்ல மெலடி.  இந்தப் பாடலும் கேட்டு ரசித்திருக்கிறேன்.  ஓ..   நான் சொல்லும் பாடல் 'எல்லாமே என் காதலி' படப்படல்.

    ReplyDelete
  3. பாடல் கேட்டதாக நினைவில்லை..

    ReplyDelete
  4. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேனே பாட்டு கேட்ட போதுதான் தெரிந்தது இந்தப் படம் என்பதெல்லாம் சுத்தமா தெரியாது. நல்ல மெட்டு. இதே மெட்டில் வேற பாட்டும் இருக்குதோன்னு தோணுது

    கீதா

    ReplyDelete