Saturday, June 24, 2017

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா! - கேபிள் கலாட்டா



வேந்தர்  டிவில பின்கோடுங்குற நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. அமிஞ்சிக்கரை முதல் அமெரிக்கா வரை எல்லா இடத்தையும் சுத்திக்காட்டுறாங்க. நிகழ்ச்சியின் முதல்பகுதியில் அந்த பகுதியின் ஊர்பெயர்க்கான காரணம், அந்த பகுதி உருவான வரலாறு உள்ளிட்ட விஷயங்களும், நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் அந்த பகுதியின் வரலாற்று பழைமை வாய்ந்த கட்டிடங்கள், புகழ்பெற்ற வழிபாட்டுதலங்களுக்கான வரலாற்று குறிப்புகளும்,  நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் அந்த பின்கோடு பகுதியில் கிடைக்கும் பிரபலமான உணவுகள், சாலையோர பிரசித்தமான உணவுவகைகள் முதலியவற்றை அந்த ஏரியாவின் மண்மனம் குறையாமல் ஒளிப்பரப்பாகுட் இந்த நிகழ்ச்சியுடைய மறுஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை இரவு 9:00மணிக்கும் ஒளிபரப்பப்பாகுது.  இந்நிகழ்ச்சியை தி.முத்துராஜ் இயக்கி, அலெக்ஸ் தொகுத்து வழங்குகிறார். 

ஜீ டிவில வீக் எண்ட்  வித் ஸ்டார்ஸ்ன்னு ஒரு நிகழ்ச்சி. திரை உலக பிரபலங்களை கூப்பிட்டு சுகாசினி பேட்டி காணுற சாதாரண நிகழ்ச்சிதான். ஆனா, மத்த நிகழ்ச்சிகளைவிட இந்த நிகழ்ச்சியை அழகாக்குறது அந்த பிரபலங்களோட குடும்பத்தினரையும் அவங்க நண்பர்களையும் அவங்களுக்கே தெரியாம சந்திக்க வைக்குறாங்க. இதுவரை அர்ஜுன், குஷ்பு, பாக்கியராஜ், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த்ன்னு கெஸ்ட்டா வந்திருக்காங்க. இன்னிக்கு (23/6/2017) அன்னிக்கு நடிகை ரோஜா கலந்துக்குறாங்க.



 நேஷனல் ஜியாகரபிக் சேனல்ல இன்டியாஸ்  மெகா கிட்சன்னு ஒரு நிகழ்ச்சி முன்ன ஒளிப்பரப்பாச்சு. திருப்பதி, தர்மஸ்தலா, இஸ்கான் கோவில்,  அமிர்தசரஸ், கலிங்கா யூனிவர்சிட்டின்னு சதா சர்வ நேரமும் அன்னதானம் நடக்குற இடம், சாப்பாடு தயாராகுற இடம், அதுக்கு தேவையான மூலப்பொருட்கள் சுத்தம் செய்யுறது, அதை பாதுகாத்து வைக்குறதுன்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பாங்க. பார்க்க பிரம்மாண்டமாவும், பிரமிப்பாவும் இருக்கும். இப்ப புதுப்பொலிவோடு அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிச்சிருக்காங்க. வரும் திங்கட்கிழமை முதல் இரவு 9.00 மணிக்கு இன்னிகழ்ச்சி ஒளிப்பரப்பாக போகுது. முதல் நிகழ்ச்சி பொற்கோவில் நடக்குற அன்னதானத்தையும், உணவு தயாராகுற கிச்சனும்தான். தவறாம பாருங்க.



புதிய தலைமுறை டிவில புதுபுது அர்த்தங்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது.  அரசியல் நிகழ்வு, சமுதாய நிகழ்வினை புது கோணத்துல அலசுறாங்க.. சம்பந்தப்பட்ட தலைவர்களை கூப்பிட்டு வந்து அவர் கருத்தையும் கேக்குறாங்க.


எல்லா தெய்வத்தையும் அந்தந்த கோவில்ல போய் வேண்டிக்கிட்டாதான் வரம் கொடுக்கும், ஆனா, நம்ம குலதெய்வம் மட்டும் நாம வரம் கேட்கனும்ங்குறதுக்காகவே நம்ம வீட்டு வாசல்ல காத்திருக்கும்ன்னு சொல்வாங்க. குலதெய்வம் முதல் கடவுள். அதுக்கப்புறம்தான் மத்த கடவுள். எல்லா சாமியும் குலத்தெய்வமாகிடாது. அதேமாதிரி குலதெய்வம் கோவில் நம்ம வசிப்பிடங்களுக்கு அருகில் இருக்காது. தூர எங்கோ காட்டுல, ஏரிக்க்கரையில, வரப்புமேட்டுல இருக்கும். அப்படி இருந்தாலும் குலதெய்வம் நம்ம வாசப்படில காத்திருக்கும்.   அப்பேற்பட்ட குலத்தெய்வம் இருக்குற கோவிலை தேடிப்பிடிச்சு  அதோட சிறப்புகளை மக்கள் டிவில ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு எங்க குலச்சாமின்ற பேர்ல ஒளிப்பரப்பாகுது.


நமக்கு நம்ம பொறந்த நாள்,  கல்யாண நாள், பசங்க பிறந்த நாள், அவங்க சம்பந்தப்பட்ட நால், நம்ம மூதாதையர்கள் திதின்னு இப்படி நம்மை சார்ந்த நிகழ்ச்சிகள் நினைவிலிருக்கும். இல்லன்னா படிப்பு, நுழைவுத்தேர்வுக்காக கொஞ்சம் முக்கியமான நாட்களை நினைவு வச்சுக்குவோம். அந்த மாதிரி அன்றைய தினத்தின் வரலாற்றை வரலாறு பேசுகிறதுன்ற நிகழ்ச்சில ஒளிப்பரப்பாகுது. அந்நாளில் நடந்த  இயற்கை சீற்றம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நாட்களை திங்கள் முதல் சனி வரை மாலை 6.30க்கு ஒளிப்பரப்பாகுது. பயனுள்ள நிகழ்ச்சி.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464385


நன்றியுடன்,
ராஜி.

24 comments:

  1. வணக்கம் சகோ
    எல்லாம் சரி சுகாசினி நடத்தும் நிகழ்ச்சியில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வருவது அவர்களுக்கு தெரியாமல் அல்ல தெரிந்தே நமக்கு தெரியாததுபோல் நடத்தும் கூத்து

    கூத்தாடிகள்தானே இவர்களுக்கா நடிக்க தெரியாது.

    தமன்னாவின் இணைப்பை சரி செய்யுங்கள் சகோ.

    ReplyDelete
  2. தமன்னாவா!? நான் அன் தமன்னான்னு நினைச்சு ஒரு நிமிசம் ஷாக்காகிட்டேன்.

    அவங்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்குறாய்ங்கன்னு நினைச்சேன்

    ReplyDelete
  3. வணக்கம்

    நானும் பார்க்கும் நிகழ்ச்சிதான்நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  4. மக்கள் டிவி பார்த்திட வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்கண்ணே. இந்த வாரம் பிரத்தியங்கிரா தேவி பத்தி வருது.

      Delete
  5. நல்ல கலெக் ஷன் நிகழ்ச்சிகள் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  6. எல்லாம் சரி, நீங்கள் எப்போது டிவியில் பேட்டி கொடுக்கப்போகிறீர்கள்? அல்லது, யாராவது பெரியமனிதர்களை (என்னைத்தான் என்று அவசியமில்லை) பேட்டி காணப்போகிறீர்கள்? முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும் ப்ளீஸ்! -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு நான் ஒரு டிவி கம்பெனிக்கு ஓனராகனும்.

      ஆனா, பேட்டி காண டிவிதான் வேணும்ன்னு இல்ல. பேசாம பிளாக்லயே பேட்டி கண்டு போடலாமே. ஐடியா எப்படிப்பா?!

      Delete
    2. ஐடியா அருமைதான். ராய செல்லப்பாவை விடுங்க, என்னை மாதிரி பிரபலங்களைப் பேட்டி கண்டா வழக்கமா உங்க பிளாக்குக்கு வர்றவங்களும் ‘அம்பேல்’ஆயிடுவாங்களே!

      Delete
    3. பிளாக் எழுதுறது என் விருப்பத்திற்குப்பா. இங்க எழுதுறதால ஒருத்தரோட மனசும் நோகக்கூடாதுன்னு கவனமா இருப்பேனே தவிர அடுத்தவங்களுக்காக எழுத மாட்டேன். தலைப்பை கேட்சிங்கா பிடிச்சுட்டு ஆரம்பிச்சுரலாம்.

      Delete
  7. குல தெய்வம் வாசலில் காத்து நிற்க்கும் ....இது உங்களுக்கே டூ மஸ் சா தோன்ற வில்லையா :)

    ReplyDelete
    Replies
    1. இல்லண்ணே. இது நான் அனுபவப்பூர்வமாய் உணர்ந்த உண்மை

      Delete
    2. குலதெய்வம்ங்குறது எங்கயோ கோவில்ல இருக்கும் கண்ணுல பார்க்காத இருக்கா இல்லியாங்குற யோசிக்க வைக்கும் சிலைகள் இல்லண்ணே. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் “குலதெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளையும் கூட நீக்க வல்லவை. ரத்தமும் சதையுமாய் வாழ்ந்த மூதாதையர்களே குலதெய்வமாகும். அதனாலதான் குலதெய்வம்ங்குறது நம்ம முன்னோர்கள் வாழ்ந்த நம்ம பூர்வீக இடத்துல இருக்கும். இதை வச்சும் உணரலாம்.

      Delete
    3. குலதெய்வம் பத்தி விரிவா ஒரு பதிவு வரும்ண்ணே

      Delete
  8. சுகாசினியோட நிகழ்ச்சி நானும் பார்ப்பதுண்டு. டி ராஜேந்தர் சார் கலந்துக்கிட்ட நிகழ்ச்சி - நெகிழ்ச்சியா இருந்திச்சு. அதேபோல அர்ஜுன் கலந்துக்கிட்டதும் பிரமாதம்.

    7 வது ஓட்டுப் போட்டு பதிவை தமிழ்மணத்தின் இடப்பக்கம் தூக்கி வைத்தது அடியேன் தான் :) :)

    ReplyDelete
    Replies
    1. ரோஜா கலந்துக்கிட்ட நிகழ்ச்சியும் அருமை. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு சகோ. ஓட்டு போட்டு தூக்க்க்க்கி வைத்ததுக்கு நன்றி சகோ

      Delete
  9. சில நிகழ்ச்சிகள் பற்றி படிக்கும்போது 'பார்க்கலாம் போலிருக்கே..' என்றும் தோன்றுகிறது. அப்புறம் மறந்து விடுவேன் என்பது வேறு விஷயம்! தம +1

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்பிடிதான் சகோ. விளம்பரம் போடும்போது அவசியம் பார்க்கனும்ன்னு நினைப்பேன். அப்புறம் மறந்துடுவேன்

      Delete
  10. வாசிப்பிலேயே என் பொழுதைக் கழிக்கிறேன். எப்பொழுதாவதுதான் தொலைக்காட்சியின் பக்கம் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்க டூ இன் ஒன்ப்பா

      Delete