Saturday, July 08, 2017

டிடிம்மா! ஏன்ம்மா இப்படி சிரிக்குறே?! கேபிள் கலாட்டா


 டான்ஸ் ஷோ, காமெடி ஷோக்கள் கொட்டிக்கிடக்கும் நம்மூர் சேனல்ல விவசாயம் சம்பந்தமான நிகழ்ச்சி ரொம்ப கம்மி.  நாமலாம் சின்ன வயசுல தூர்தர்ஷன்ல வயலும் வாழ்வும்ன்ற நிகழ்ச்சி நேரம் வந்தாலே டிவிய ஆஃப் பண்ணிடுவோம். ரூமுக்குள்ள உக்காந்து இந்த உரம் போடுங்க, அந்த மருந்து தெளிங்கன்னு சொல்லி கடுப்பேத்துவாங்க. ஆனா, இப்ப புதிய தலைமுறை டிவில விவசாயம் பத்தி புதுக்கோணத்துல அலசுறாங்க. அந்தந்த இடங்களுக்கு போய் என்ன மாதிரியான இடங்களுக்கு என்ன பயிரிடலாம், அதை எப்படி காப்பாத்தி லாபம் பார்க்கலாம்ன்னு அழகா சொல்லி, விவசாயம்ன்னாலே காசு பார்க்க முடியாதுன்னு பீதிய கிளப்பாம இப்பத்திய இளைஞர்களுக்கும் விவசாயத்தின்மீது ஆர்வம் உண்டாக்குற மாதிரி இந்நிகழ்ச்சி போகுது. இந்த சூழலில் இளை தலைமுறையினருக்கும், விவசாயத்துடன்தொடர்பு இல்லாதவர்களுக்கும் கூட விவசாயத்தின் மீதுமரியாதையையும், ஆர்வத்தையும் இந்நிகழ்ச்சி உண்டாக்க இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. 
 மருமகளை கொடுமைப்படுத்துற மாமியார்களையே எத்தனை நாளைக்கு டிவில பார்க்குறதாம். அதனால, ஒரு சேஞ்சுக்கு மருமகனை கொடுமைப்படுத்துற மாதிரியான சீரியல் ஒன்னு தினமும் நைட் 8 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. இதுக்கு பேரு மாப்பிள்ளை. இந்த புதுமை பத்தாதுன்னு சீரியல் பார்க்குறோமா இல்ல எதாவது பாடாவதி படத்தை பார்க்குறோமாங்குற மாதிரி சீரியல் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள்.. நல்லவேளை. என் ஆத்துக்காருக்கு பிடிச்ச இந்த சனியன் ஒலிப்பரப்பாகுற நேரம் மாத்துனதால நான் தப்பிச்சேன்.
ஜீ டிவில மெல்ல திறந்தது கதவுன்னு ஒரு சீரியல். ஜீ டிவி நடத்துன ஜூனியர் சூப்பர் ஸ்டார்ல ஜெயிச்ச  சின்ன பசங்க ரெண்டு நடிக்குறதால் எங்க வீட்டு பசங்க பார்ப்பாங்க. வயசுக்கு மீறிய பேச்சும், நடத்தைலாம் இந்த சீரியல்ல வரும். எல்லாத்துக்கும் மணிமகுடம் வைக்குறமாதிரி சீரியலோட ஹீரோவுக்கு ரெண்டு பொண்டாட்டி.  ரெண்டுத்துக்கும் சண்டை.  ஒருத்தரையொருத்தர் வீட்டைவிட்டு ஒரு மாசத்துக்குள்ள அனுப்புறதா சவால்;. அதனால புருசனை இம்ப்ரெஸ் பண்ண ஆரம்பிக்க ஐடியா கொடுக்குறது ஹீரோவுக்கும், செக்கண்ட் வொயிப்ஃப்கும் பொறந்த பையன். அம்மாக்களுக்கு ட்ரெஸ் பண்ணிவிடுறதும், சமைக்கச்சொல்லி ஐடியாக்கொடுக்குறதும்ன்னு பார்க்கவே எரிச்சலா இருக்கு. இது திங்கள்லிருந்து வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. 
அது ஒரு சோப் விளம்பரம். அப்பா வர லேட்டாகுது தனியா போகவான்னு பத்து பனிரெண்டு வயசு பொண்ணு அம்மாக்கிட்ட கேக்குது. நான் வரேன்னு அம்மா அவளை கூட்டி போறாங்க. ட்யூஷன்ல கொண்டு போய் விடுறதோட , பக்கத்திலிருக்கும் கராத்தே கிளாஸ்லயும் சேர்த்து விடுறாங்க. அதுல அந்த பொண்ணுக்கு விருப்பமே இல்ல. வீட்டுக்கு வந்து ஏன்ம்ம்மான்னு பொண்ணு கேக்குது. உன் அம்மான்னு பதில் சொல்லுறாங்க. அந்த பொண்ணு மஞ்சள் பெல்ட் வாங்குமளவுக்கு முன்னேறுது.  கொஞ்ச நாள் கழிச்சு அப்பா வர லேட்டாகுது. வாம்மான்னு கூப்பிடுது. ம்ஹூம் நீ தனியாவே போன்னு சொல்லுறாங்க. ஏன்மான்னு கேக்குது பொண்ணு. நான் உன் அம்மான்னு சொல்லி மஞ்சபெல்டை கட்டுறதோட விளம்பரம் முடியுது. பொண்ணுங்களுக்கு படிப்பு மட்டும் போதாது. தன்னை காத்துக்கொள்ளுமளவுக்கு திறமையும் வேணும்ன்னு அழகா சொல்லுது இந்த விளம்பரம்.
காஃபி வித் அனு கொஞ்ச நாள் கழிச்சு காஃபி வித் டிடி ஆனது. இடையில் பிரேக்.  இப்ப அன்புடன் டிடியா விஜய் டிவில மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகுது. பிரபலங்களை கூப்பிட்டு பேசுறதோட அவங்க உறவினர்களையும், பிரண்டுகளையும் கூட்டி வந்து அவங்களை பத்தி  சுவாரசியமான விசயங்களை சொல்ல வைக்குறாங்க. அதுமட்டுமில்லாம, பிரபலங்களோட ரசிகர்கள், மேக்கப் மேன், போட்டோகிராஃபர்ன்னு வெளிச்சத்துக்கு வராதவங்களையும் கூட்டி வந்து பேச வைக்குறாங்க. நிஜமாவே இந்த விசயம் நல்லா இருக்கு. என்ன டிடி சிரிக்குறதும், கன்றாவி ட்ரெஸூம்தான் தாங்க முடில.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465724
출처: https://www.facebook.com/photo.php?fbid=451263394892739=a.529337427085335.121343.167184886633926=1
நன்றியுடன்,
ராஜி.

9 comments:

 1. ம்ம்... எப்படித்தான் இவ்வளவும் பார்க்க முடியுதோ! நான் டி.வி. பார்க்கறதே இல்லை! வீட்டில் இருந்த டி.வி.யை எடுத்து வாட்ச்மேன் கிட்ட கொடுத்தாச்சு!

  ReplyDelete
 2. வயலும் இல்லை... (இனி) வாழ்வும் இல்லை...

  ReplyDelete
 3. தொலைக்காட்சி பக்கம் அதிகம் என் கவனம் இல்லை. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இப்பதிவு உள்ளது.

  ReplyDelete

 4. ​பிக் பாஸ் பற்றி சொல்லவில்லையா?!!

  :)))

  ReplyDelete
 5. நீங்கள் சொன்னவைகளை இடை இடையே விளம்பரங்களில் பார்க்கும் போதே கஷ்டமாய் இருக்கிறது அதை முழுமையாக பார்த்தால்?
  பிக் பாஸும் அப்படித்தான் விளம்பரமே கொடுமை.
  கோவில் உலா, சாமானிய மனிதர்கள், பழைய பாடல்கள், கேட்பேன்.

  ஜீ டிவில குழந்தைகள் நடிக்கும் நிகழ்ச்சியில் பக்தபிரகலாதன் வைத்தார்கள் ந்டித்த குழந்தைகள் எல்லோரும் மிக அருமையாக ந்டித்தார்கள்.

  ReplyDelete
 6. நான் டி.வி.பார்க்காத குறையை உங்களின் இம்மாதிரிப் பதிவு ஓரளவு போக்கிவிடுகிறது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. நான் பார்ப்பதில்லை!

  ReplyDelete
 8. உங்களின் இந்தத் தொகுப்பிலிருந்து டிவி ப்ரோக்ராம் எல்லாம் அறிய முடியுது.

  கீதா

  ReplyDelete
 9. அருமையான கண்ணோட்டம்!

  ReplyDelete