Saturday, November 10, 2012

உன்னை, நான் நேசிக்க வைத்த “ஆயிரம் காரணங்களுள்” சில...,


                                   
 ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., அந்த ”புரிதல்”

உன்னை நான் எதற்காகவும், எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அந்த என் உள்ளுணர்வு 

யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்ள வைக்கும் ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன் பார்வை .

என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் உன் கோரிக்கை.  

 ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் உன் அகங்காரம்

 என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த உரிமை.

 உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த பன்மை

உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதை சொல்லாமல் சொல்லும் உன் கோபம்

 தவறு என்மீது இல்லையென்றாலும்.., என்னை ஒரு வார்த்தை, பதில்கூட பேசவிடாமல் செய்துவிடும் உன்
திறமை.

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த
கண்களின் மொழி.

பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்.

 “டா” போட்டு யார் பேசினாலும் உனக்கு பிடிக்காது. ஆனால் நான் மட்டும்உன்னை நான் பார்த்த நாள் முதல் கொண்டு ”டா” போட்டு தான் பேசுகிறேன். எனக்குமட்டும் நீ அளித்த அந்த
விதிவிலக்கு

 யார் அதட்டலுக்கும் அசராத நான், உன் அதட்டலுக்கு மட்டும் அடைந்து விடும்
சரண்

 திரைப்படங்கள் நம்மிடம் தோற்றுப் போகும் நாம் பேசினால். நம் ஒரு நாள்சண்டையிலும், சமாதானத்திலும் ஒரு திரைப்படம் அளவிற்கு இருக்கும் வசனங்கள்

சோகங்களில் நான் சுருண்டு விழும்போதெல்லாம் ஆலம் விழுதாய்தாங்குவாய். துன்பங்கள் என்னுடையதென்றால், வலிகளை உன்னுடையதைமாற்றி கொள்ளும் நேசம்

 நம் ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கையில் என் கோடிதுன்பங்களும் கால் தூசிதான். அந்த
வலி நிவாரணி

 சொன்னதையே நான் திரும்ப திரும்ப சொன்னாலும் , அலுக்காமல் கேட்கும்உன் பொறுமை

 இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் ஒரு
குறுஞ்சிரிப்பு

 "
நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்து, " நீ" வேண்டும் என்று நீண்டு இப்போதுநீ மட்டுமே" வேண்டும் என்றில் வந்து நிற்கும் என் பாதை

 சரியோ? தவறோ? என் பாதைகள் தெரியவில்லை. வழித்துணையாய் நீஇருக்கிறாய் என்று நம்பும் என்
நம்பிக்கை

 என் பைத்தியக்காரத்தனம் அத்துனையும் உனக்கு பிடிக்கும், பின் எப்படிஉன்னை எனக்கு பிடிக்காமல் போகும். என் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்ளும் உன் பொறுமை

 என் எந்த செயலையும் நீ கேலி செய்வதில்லை. அப்படியே என்னைஏற்றுக்கொண்ட
மனப்பாங்கு

 இறுக்கமாக விரல்களை பற்றிக் கொள்ளும்போது என் வலிகள் தெரிவதில்லை. எங்கே கற்றுக் கண்டாய் அந்த
வித்தையை

 அன்பு மட்டும் போதாது காதலுக்கு என்று சொல்லி என் மீது நீ வைத்த
நம்பிக்கை

 என்னை அழ வைப்பவன் நீ. என்னை சிரிக்க வைக்கவும் தெரிந்த
மாயாஜாலக்காரன்

என்னோடு கடைசி வரை நீ நிலைத்திருப்பாயா?! என்று எண்ணும் என் 
ஏக்கம்

 என் பாரங்கள் அத்துனையும் கரைத்துவிடும் உன் ஒற்றை சொல் ----------  காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதைவிட அதிகமாகவே நீ தந்த அந்த கொடை.   

 என் ஆதி முதல் அந்தம் வரை உனக்கு அத்துப்படி.., ஆனால் உன்??!! அந்த புரியாத புதிர் .

எதன்பொருட்டோ பாராட்டவோ, திட்டவோ, இல்லை கருத்துஏதாவது தெரிவிப்பாய் என காத்திருக்க கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும்
விட்டேற்றித்தனம்.

நான் உன்னிடம் நிபந்தனையிட , நமக்குள்ளே எந்த நிபந்தனையும் வேணாம்னு கூறி ...., உன் நிபந்தனையை என்மேல் திணிக்கும்
ஆளுமை

தெரிந்தோ, தெரியாமலோ என்மீது படிந்துவிட்ட உன்
சாயல்

எலியை பிடிக்கவும், தன் குட்டியை தூக்கவும் ஒரே பற்கள்தான் பயன்படுகிறதுபூனைக்கு. அதுப்போன்ற உன்
கரங்கள்.

 கடவுளும் நீயும் ஒன்று. ஏனெனில், இருவருமே எதிர்பார்ப்பவற்றை தராமல் ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள்.

 நாளை என்ன நடக்குமோ யாமறியேன். ஆனால் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. என்னோடு நீ இருந்ததால் மட்டும்

காதல் என்பது எவ்வளவு தூயமையானதோ அதைவிட அதிக தூய்மையை கண்டேன் நான் உன்னிடம்

 உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் துடிப்பு ஒன்று காணாமல் போய்விடுகிறது. திரு டா

 எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்
எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனது நீ அருகில் இருக்கையில் மட்டும்.

 மனத்திலும், உடலிலும் எத்தனை வலி இருந்தாலும் சாய்ந்த உடனே வலிகளை போக்கிவிடும் உன்
மடி

இந்த நிமிடமே நான் இறந்துகூட போவேன் சந்தோசமாய். ஏனெனில் என்மீதுஅன்பு செலுத்தும்
தேவனை கண்டுக் கொண்டேன், கண்டு கொண்டேன்.

வெகுநாட்கள் காணாமல் இருந்துவிட்டு பார்க்கும்போது பிணைத்துக்கொள்ளும் கைகளில் உள்ள
நெருக்கம்

 கண்டு விட்டு பிரியும்போது 'திரும்பி பார்க்கக் கூடாது" என எனக்கு நானேநூறு முறை சொல்லியும், சொல்பேச்சுக் கேளாமல் அடமாய் திரும்பிபார்க்கையில்..., எப்படியும் நான் திரும்பிப் பார்ப்பேன்..., கையசைக்கலாம் எனக்பார்த்திருக்கும் உன் காத்திருப்பு
 
 கிறுக்குத் தனமாக எதாவது செய்து விட்டு உன்னிடம் நான் வாங்கும்
குட்டு, வலிக்கும். ஆனா வலிக்காது

 என்னை பொறுத்தவரை வண்டி ஓட்டுவது ஒரு சிலருக்குதான் அழகு. அப்படிஓட்டுபவர்களில் நான் ரசித்தவர்கள் ஒரு சிலரே. அதிலும் உனக்கே
முதலிடம்.

44. என்ன தவறு நான் செய்தாலும் , உன்னிடம் எனக்கு கண்டிப்பாக உண்டு
மன்னிப்பு. 

உன்னிடம் ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து விட்டு, கண்டிப்பாய் எனக்காக இதை செய்வாய் என நம்பி இருக்கும் என் ஏமாளித்தனம்

 என் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும்... கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைப் போல் மீண்டும் , மீண்டும் உன்னிடமே எதிர்நோக்கும் என் எதிபார்ப்பு

இந்த கேள்விக்கு இந்த பதில்தான் சொல்லுவே..., இப்படி பேசினால்இப்படி எதிர்கேள்வி கேட்பே னு நம்பி பேசினால் கண்டிப்பாய் அந்த கேள்வி பதிலை choice விட்டுவிடுவாய்.

அந்த choice களை இன்றுவரை தொடர்ந்து வரும் உன் சாகசம்.

 ஆனால் அந்த choice களை நீ தொடர்வதால் உன்னிடம் இன்னும்கூட சொல்லாமலே விட்ட ரகசியங்கள்
  நாம் அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஒன்றாய் அமைந்துவிட்ட ரசனைகள்.
 
 தொலைப்பேசியில் தான் பேசுவோம். முகம் காணாவிட்டாலும் என்உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லும் உன்
கெட்டிகாரத்தனம்.
எனக்கு பிடிக்காது என அந்த டாபிக்கையே விலக்குவதாக்..., நடிக்கும் அந்த
நடிப்பு

  எனக்கு பிடிக்காத டாப்பிக்கை நீ தொடவே மாட்டேன் னு நம்பி இறுமாந்திருக்கையில், அதை தெரிந்தும் திடுமென்று அதைபத்தி பேசி என்னை நிலைகுலைய வைக்கும்அந்த திமிர் .

 யாரையும் நம்பாதே னு சொல்லி, உனக்கே தெரியாமல்.., உன்னை மட்டுமே நம்பணும்னு திணிக்கும் உன்
திணிப்பு.

 உன்னை மட்டுமே நான் கொண்டாடனும்னு நினைக்கும் உன்
ஆசை

ஆனால், அதுபோல் நீ நடக்காமல் என்னை அவமதிக்கும் உன்
செயல்
வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்த மாதிரி இருக்கும்என் வேட்கை

இளங்கதிர் புறப்படும் வரை நீண்ட தொலை பேசி உரையாடல்கள். விடிந்தப்பின்னும்..., முடியாமல் தொடர்ந்த..., குறுஞ்செய்திகள்..,
 
வேண்டாம் முடித்துக் கொள்வோம் என தினம் தினம் முற்றுப்புள்ளி வைத்து அதுவே இன்று தொடர்புள்ளியான அதிசயம்.

  சட்டென்று கோபப்படும் நான். நீ என்ன பிழைசெய்தாலும் உன்மீது எனக்கு இதுநாள் வரை வராத கோவம்.
 
கண் குவளைமலர், சிறப்பு தாமரைன்னு கவிஞர்கள் மலருடன் ஒப்பிடுவார்கள். அதுப் போல் உன்னை மலருடன ஒப்பிட சொன்னால் அனிச்சைமலருடன்தான் ஒப்பிடுவேன்.

அனிச்ச மலர் கூட முகர்ந்து பார்த்தால்தான் வாடும். ஆனால் மனதிற்குள் சிறிதாக, நான்  மருகினாலும் உன் முகம் வாடிவிடும். அப்படி என்றால் உன்னை எதனுடன் ஒப்பிடுவது என தெரியாமல் திணறும் என் மனது. 

  நான் சொல்றதெல்லாம் பொய்., ரீல் விடுறேன்னு தெரிஞ்சும் என்னைநம்பி உக்காந்து படிக்குறே பாரு அந்த வெகுளித்தனம்.


இப்படி பொது இடத்துல எழுதலாமான்னு என்மீது கோபப்பட்டுக்கொண்டே இதை சிரித்து  ரசிக்கும் உன் சிரிப்பு

18 comments:

 1. ஹைலைட் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா...? சூப்பர்... எத்தனை சிந்தனைகள்... கலக்கல் என்றால் சகோதரி ராஜி தான்... வாழ்த்துக்கள்...

  நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. ரசித்தீர்களா அண்ணா?! ரசித்தமைக்கு நன்றி.

   Delete
 2. இல்லறத்துக்கு தேவையான இனிய இன் நற் குணங்கள் அடங்கிய வாழ்க்கைத் துணைகள் இவ்வாறு பொருந்திவிட்டால் இன்னல்களுக்கு வழி ஏது சகோதரி?....வாழ்த்துக்கள் இனிய படைப்பிற்கும் இனிப்பாக உங்கள் வாழ்வு வாடா மலர்போன்று வாழும் காலம் முழுவதும் நறு மணம் வீச!...மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி

   Delete
 3. உன்னவனுக்காக எவ்வளவு யோசித்து மனமறிந்து உங்களது அன்பை வெளிப்படுத்திய விதம அருமை.உங்கள் உறவு இனிமையாக தொடரட்டும்

  ReplyDelete
 4. ஹைலைட் பண்ணிய ஒவ்வொன்றும் தனித்தனித் தலைப்பில் பிரிந்து மேய்ந்துவிட வேண்டியவைகள்....
  திருக்குறள் போல இரட்டைவரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
  படிச்சி முடிக்கும் போது மூச்சுவாங்குது....

  ReplyDelete
 5. அம்மாடி....இன்னைக்கு இப்படி கலக்குறீங்க


  அத்தனையும் அழகு...

  ReplyDelete
 6. யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்ள வைக்கும் ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன் பார்வை .

  தமிழ் நாட்டுக்கு மின்சாரம் சப்ளை செய்யமுடியுமா !!???????....

  ReplyDelete
 7. அப்பப்பா
  என்னமா யோசிக்கிறீங்க..
  ஆனா எல்லாம்
  மிகச் சரியான கணிப்புகள்...

  அருமை அருமை...

  ReplyDelete
 8. சிந்தனை துளிகள் அனைத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 9. தலை சுத்துதுங்கோ

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. துவக்கமும் முடிவும் தான் வித்தியாசம் ஆனால் கருத்துகள் எத்தணை ஒற்றுமை, விவரிக்கும் போக்கும் கூட ஒரே போல் என்ன ஆச்சரியம்.......

  http://panimalar.blogspot.com/2012/07/blog-post.html

  ReplyDelete
 12. அருமையான கருத்துக்கள். சிறப்பான எழுத்து நடை. சிட்டுக்குருவி சொன்னது போல ஒவ்வொரு தலைப்பையும் தனிப் பதிவாகவே எழுதிடலாம் போலருக்கே. ம்ம்ம்ம்... அருமை.

  ReplyDelete
 13. மிக மிக அருமை.......உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. ம்ம்ம்... அருமை. நல்ல சிந்தனை :)))

  ReplyDelete
 16. எண்ணங்களை எழுத்தாக்கிய விதம் அழகு.

  ReplyDelete