நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல சித்தர்களின் பூர்வீகம், பிறப்பு முதலான தகவல்கள் கிடைப்பது அரிது. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் சித்தர் வள்ளலாருக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர். அதனால், அவர் பிறந்த தேதி,வருடம் , பெற்றோர், என எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதேப்போல் எந்த ஆண்டுகாலத்தில் பாண்டிச்சேரிக்கு வந்தார்?! எப்பொழுது ஜீவ சமாதியானர் என்பது கூட எவருக்கும் தெரியவில்லை.எல்லாமே செவிவழி செய்தியாக சொல்லப்படுபவைகள்தான்!!!
Showing posts with label பாண்டிச்சேரி சித்தர்கள். Show all posts
Showing posts with label பாண்டிச்சேரி சித்தர்கள். Show all posts
Friday, May 01, 2020
Friday, April 24, 2020
சீலத்திரு ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தனித்தன்மையான பழக்க வழக்கம் இருக்கும். சிலர் நகத்தை கடிப்பாங்க. சிலர் தலைமுடியை சுருட்டுவாங்க. அதுமாதிரி இந்த
ஸ்ரீமண்ணுருட்டி சித்தர் தனிமையில் தன்
சிந்தனையினை மனதில் கட்டுபடுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் மண்ணை வைத்துக்கொண்டு தன் கட்டை விரலால்
உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் மக்கள் இவரை மண்ணுருட்டி சாமிகள்ன்னு மக்களால் அழைக்கப்பட்டவரை பற்றிதான் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்க்கலாம். பாண்டிச்சேரியில் உள்ள திருவள்ளூவர் பஸ்நிலையம் பின்புறம் அமைத்துள்ள புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் இருக்கும் கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவசமாதி
Friday, April 17, 2020
யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள்,பிருந்தாவனம் நகர் -பாண்டிச்சேரி சித்தர்கள்.
பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்று பார்க்கப்போறது யாழ்ப்பாணம் ஸ்ரீகதிர்வேல் சுவாமிகள், பாரதியார் யாழ்ப்பாணத்து சித்தரை பற்றி பாடியுள்ளார். ஆனா, அவர் பாடியது ஸ்ரீகதிர்வேல் சுவாமிகளை பற்றின்னு உறுதியா சொல்ல முடியலை. அது நிஜமான்னு கூகுளில் தேடினால் இன்னும் சில யாழ்ப்பாணத்து சித்தர்கள் பற்றி படிக்க முடிஞ்சது. அவர்களை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்...
Friday, April 10, 2020
சற்குரு மகான் ஸ்ரீகணபதி சுவாமிகள்,தட்டாஞ்சாவடி-பாண்டிச்சேரி சித்தர்கள்.
தமிழர் மரபே சித்தர் மரபுதான். சித்தர் என்பவர் யார்? அவர்தான் புலவர். அவர்தான் மருத்துவர். அவரேதான் குரு. அவரேதான் வழிகாட்டி. அவர்தான் சோதிடர். அவர்தான் போர்க்கலை வல்லுனர். அவர்தான் ஆயக்கலை வித்தகர். சித்தர் என்பவன் ஏதோ குகைக்குள் அல்லது தனிமையில் அமர்ந்து சதா சர்வக்காலமும் சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பவன்னு இன்னிக்கு நம்மை புத்தகங்களும், சினிமாக்களும், நாடகங்களும் நம்பவைக்கப்பட்டிருக்கு. மக்களோடு சேர்ந்து வாழ்ந்தவங்கதான் சித்தர்கள். ஆனா அவர்கள் சிந்தனை முழுக்க மருத்துவம், சோதிடம்.. இப்படி எதாவது ஒன்று ஓடிக்கிட்டே இருக்குறதால மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. இன்றைய கொரோனா வாசகத்துக்கு முன்னோடி இந்த சித்தர்கள்தான். உள்ளத்தால் இணைந்து உடலால் தனிச்சிருப்பாங்க. ஆனா, நாம அவங்களை சாமியார்ன்னு ஆக்கி, அவங்க என்ன நினைச்சுட்டிருந்தாங்களோ அதை நிறைவேற்றாம சித்தர்கள்ன்னா மக்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாங்க. அரூபமானவங்கன்னு சொல்லி ஃபிலிம் காட்டிக்கிட்டிருக்கோம்.
Friday, April 03, 2020
சித்தர்கள் இந்து சமயத்தில் மட்டுமல்ல! முஸ்லீம் மதத்திலும் பிறக்கலாம்!! - பாண்டிச்சேரி சித்தர்கள்
இறைவன் ஒருவனே! ஆனால் அவனை அடையும் வழிகள் பல உண்டு. அவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து, பௌத்தம், சீக்கியம்... என பல்வேறு பெயர் கொண்ட பாதைகள் இருக்குன்னு பெரியவங்க சொல்வாங்க.
Friday, March 27, 2020
மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்
ஆணுக்கு பெண் சளைத்தவலல்ல! என்பதை ஆன்மீகத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கு. பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் இன்றைக்கு நாம பார்க்கப்போறது ஒரு பெண் சித்தரை பற்றி... ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி. இவரின் ஜீவசமாதி பாண்டிச்சேரி - விழுப்புரம் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இருக்கு..
Friday, March 06, 2020
ஸ்ரீசிவசடையப்பர் கோவில் - பாண்டிச்சேரி சித்தர்கள்.
கடந்த வாரம் நாம ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் சமாதியில் தரிசனம்
செய்தோம். இப்படி சித்தர்களை தரிசனம் செய்வதால் என்ன நன்மைகள்ன்னு பார்த்தா, அவர்கள் உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயம்
அறிந்தவர்கள். சாகாக்கலை அறிந்தவர்கள் சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலப்பதற்காகவே பிறவிகள் எடுத்தனர். அதுவே, அவர்களின் ஜீவன் முக்திநிலை அடையும் என்று நினைத்தார்கள். அவர்கள் பார்ப்பதெல்லாம்
பரம்பொருளின் படைப்பாகவும், அவற்றில் அன்பு கொண்டும், எல்லா இடத்திலும், எல்லா பொருட்களிலும், எல்லா உயிர்களிடத்திலும் என சிவமே என்று லயித்திருந்தனர். ஆகவே
அவர்கள் நிலையான ஒரு இடத்தில இருப்பதில்லை. புண்ணிய தலங்கள் இருக்கும் இடமெல்லாம்
யாத்திரை செய்வதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு அந்தந்த இடங்களில் உள்ள மக்களுக்கு நன்மை செய்வதே அவர்கள் சிவத்தொண்டாக கருதினர். சில
பக்தர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடிச்சென்று நன்மை செய்த சித்தர்கள்
ஏராளம். ஆனால் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. ஓரிடத்தில் கடமை
முடிந்ததாக இறைவனின் உத்திரவு வந்தால் வேறிடம் செல்வர். உருமாறும் கலை
அறிந்தவர்கள் அவர்கள். நினைத்த வடிவெடுத்து நினைத்த இடத்திற்கு கனப்பொழுதில் செல்வர். சித்தர்கள் எந்த காலத்திலும் தோன்றுவர்.எந்த நாட்டிலும் தோன்றுவர். இன்ன காலத்தில் இன்ன நாட்டில் என்ற நியதிகள் அவர்களுக்கு இல்லை.
சித்தர்களுக்கு தமெக்கென வாழும் எண்ணமும்
இல்லை. இரும்பையும் பொன்னாக்கலாமென்ற வித்தை தெரிந்தும் அவர்கள் பெண், பொருள் என்று எதன்மீதும் ஆசை இல்லாதவர்கள். இறைவன் அருளிருந்தால் மட்டும் போதும் என்று
வாழ்ந்தவர்கள் அவர்கள் தங்களுடைய அருள் வல்லமையை பெருக்கிக்கொள்ள தன்னை சோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டு, தனக்குத்தானே இன்னலை எற்படுத்திக்கொண்டு தனது ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்வார்கள். அவ்வளவு
சிறப்புகள் இருக்கும் சித்தர்களின் கடைசிக்காலம் ஒரு இடத்தில நிலையான
ஜீவசமாதியடைந்து பரம்பொருளுடன் இரண்டர கலந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் ஜீவன்
உறைந்த இடங்களைத்தேடி சென்று தரிசிப்பதென்பது நாம் எல்லோரும் செய்த பாக்கியம் என்றே
கருதுகிறேன்.
அதிலும் இந்த புதுவைமண் தவசீலர்களுக்கு ஞானத்தை
வாரி வழங்கிய பரம்பொருளின் அருள்பெற்ற புண்ணியபூமி. கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்குள் சுமார் 32 சித்தர்கள்
நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு இறை தரிசனம்
பெற்று இறைவனோடு ஐக்கியமாகி ஜீவசமாதியாகி விட்டார்கள்.
இந்த சித்த பூமியைப் பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு பாடப்பட்டுள்ளது..
எத்தலம் சென்றிட்டாலும்
எத்தீர்த்தம் ஆடிட்டாலும்
இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
சிறந்தது ஒன்றில்லை கண்டீர்
முத்தியும் உதவும் ஞானம்
முப்பொருள் தனையும் ஈந்து
சித்தனே வந்து இங்கு
சிவகதி அடைந்தார் அன்றோ
வடலூர் இராமலிங்க சுவாமிகள் புதுவை
அம்பலத்தாடையார் மடத்து வீதியில் சுமார் மூன்று மாதங்கள்
தங்கியிருந்து, சன்மார்க்க நெறியை போதித்தார். கர்னாடகா
யுத்ததின்போது, சிதம்பரத்திலிருந்து, திருவாசக வெள்ளி
பெட்டகத்தை யுத்தத்தின் அழிவிலிருந்து மீட்டு புதுவைக்கு கொண்டு வந்து
பாதுகாத்தார் ஸ்ரீநாகலிங்க சுவாமிகள். மகாகவி பாரதியார் புதுவையிலுள்ள சித்தர்
ஸ்ரீசித்தானந்த சுவாமிகள் ஜீவசமாதியிலுள்ள குயில்தோப்பிலிருந்து குயில்
பாட்டுக்கள் எழுதி இருக்கிறார். இப்பேற்பட்ட பெரியவர்கள்லாம் வந்த இந்த புதுவைக்கு நாமும் இன்று
வந்திருக்கிறோம் என்பதே எப்பிறவியில் நாம் செய்த புண்ணியமோன்னு தெரியலை.
நாங்கள் அங்க போன நேரம் ஏதோ விஷேசமான பூஜைகள்
நடந்திருக்கும்போல! எல்லா தெய்வங்களும் அலங்காரத்தில் வீற்றிருந்தனர். சரி, இந்த
சித்தர் சமாதியின் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்ன்னு யார் சிக்குவாங்கன்னு பார்த்தா, அங்கிருந்த
பரபரப்பில் யாரிடம் கேட்பது எனத்தெரியாமல் வழக்கம்போல முழிக்க, சரி பதிவு அம்புட்டுதான் போல! படமும் இல்ல, கதையும் இல்ல, எப்படி பதிவு எழுதன்னு சித்தரே கதின்னு பிரகாரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்து ஓரிடத்தில் அமைதியாக!! அமர்ந்து
சிறிது நேரம் தியானம் செய்யும்போது, அப்பொழுது சிவனடியார் ஒருவர் பிரசாதம் கொடுத்துக்கிட்டு அருகில் வந்தார். சரி
இவரை விட்டால் வேறு வழியில்லை, இவரிடமே ஜீவசமாதி வரலாற்றை கேட்டுவிட வேண்டியதுதான் என மெதுவாக அவரிடம், ஐயா! இந்த
ஜீவசமாதி பத்தி எங்களுக்கு சொல்லுங்களேன் என பணிவாக கேட்க, அவரும் இந்த
கோவில் பற்றி வழிவழியாக சொல்லப்பட்டுவரும் கதை எங்கள் பெரியவர்கள் சொல்ல, நாங்கள் கேட்டதை
நான் உங்களுக்கு சொல்றேன் என ஆர்வமா சொல்லத்தொடங்கினார்.
இங்கு ஜீவசமாதியான சித்தர் ஒரு பெண்சித்தராகும். அவர் இயற்பெயர் சரியாக தெரியாததால் தாயாரம்மாள் என அழைத்தனர். அப்பொழுது தாயாரம்மாள் சிறுமியாக இருந்தபோது புதுச்சேரியை
அடுத்துள்ள பெருமுக்கல்ன்ற இடத்தில மாடுகள் மேய்த்து வருவாராம். ஒருநாள்
மாடுமேய்த்து வீட்டுக்கு திரும்பும் நேரம் அடைமழையாம். எங்கும் செல்லமுடியாத நிலை. உடனே அருகிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றாராம். இரவும் நெருங்கிவிட்டதால் அங்கேயே சிறுமியான தாயாரம்மாள் தங்கிவிடுகின்றார். அன்றிரவு திடீரென ஒரு பிரகாசமான ஒளி. அதனால் திடீரென கண்விழித்த சிறுமி எங்கிருந்து அந்த ஒளிவருகிறது என்று லேசாக கண்திறந்து பார்த்தாள், அங்கே ஒரு சித்தர் படுத்திருந்தார். அவரைச்சுற்றிதான் ஒரு பெரு ஒளிவட்டம். அவர் உடல் மேலேமேலே சென்றுகொண்டிருந்தது பயந்துபோன சிறுமி கண்ணை இருக்கமுடிகொண்டு பயத்தில் அப்படியே உறங்கிவிடுகிறாள் .
மறுநாள் பொழுது விடிந்தது. ஆனாலும், மழைவிடவில்லை. பசியமயக்கம் வேறு. அதனால், மிகவும் சோர்வாக இருந்தததால் . இரவு நடந்ததை எண்ணிக்கொண்டே பயந்துபோய் இருந்தாள் சிறுமி, ஆனாலும், தைரியத்தை வரவழைத்து இரவு சித்தர் படுத்திருந்த இடத்தை பார்த்தாள். அங்கு சில பச்சை இலைகளும், தங்கத்தால் ஆன சில தகடுகளும் இருந்தன. அதைப்பற்றி ஒன்றுமறியாத சிறுமி சிறிது தூரத்தில் அந்த சித்தர் சாதாரணமாக அமர்ந்திருப்பதை கண்டவுடன் பயம் வந்தது. கூடவே பசிமயக்கமும் சேர்ந்துக்கொள்ள தள்ளாடி நடந்து அவரை தாண்டிச்செல்ல அச்சப்பட்டு நின்றிருக்க, அவளின் நிலையை கண்ட சித்தர் சிறுமிக்கு சாப்பிட சில பழங்களை கொடுத்தார். பசியாறியதும் சித்தர் சிறுமியிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார். தினமும் இந்த மலைக்கு வருவாயா?என கேட்டார். தயக்கத்துடனே நின்ற சிறுமி ஆம் எனச்சொல்லி தயங்கியபடி நின்றாள்.
சிறுமியின் பயத்தையும், தயக்கத்தையும் கண்ட சித்தர் சிறுமியை தினமும் இங்கு வந்து எனக்கு பச்சிலையை அரைத்து தருவாகிறாயா?! எனக்கேட்டார். சிறுமியும் பயத்துடனே சரி எனக்கூறி அங்கிருந்து வீட்டுக்கு சென்றாள் தினமும் மாடுகளை மேயவிட்டுட்டு சித்தருக்கு பச்சிலையை அரைத்துக்கொடுத்து வருவதை வழக்கமாய் கொண்டாள் அந்த சிறுமி. அதற்கு சன்மானமாக சித்தர், சிறுமிக்கு ஒரு நாணயம் கொடுப்பார். இப்படியே காலங்கள் சென்றன .ஒருநாள் சித்தர் சிறுமியிடம் நீ இங்கு வரவேண்டாம். நான் வேறு ஊருக்கு செல்கிறேன். என்று புறப்படத்தயாராக நின்றார். சிறுமிக்கோ தினமும் ஒரு காசு கிடைக்குமே இனி கிடைக்காதே! என்ற கவலை. ஆகையால் தயக்கத்தோடு சித்தரை பார்த்தாள் சிறுமி. சித்தரும் கவலைப்படாதே!ஐந்துவருடம் கழித்து நான் இங்கு வருவேன். அப்படி என்னை பார்க்கவேண்டுமென்றால் ஒவ்வொருவருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இங்கே வருவேன் அப்பொழுது வந்து என்னை பார்த்துச்செல் என்றுக்கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார் .
சிறுமியும் தினம்தினம் அந்த இடத்துக்கு மாடுமேய்க்க சென்றுவிட்டு, சித்தர் இருந்த அந்த இடத்தில அமர்ந்துகொள்வாள். நாட்கள் செல்லசெல்ல சிறுமிக்கும் சித்தர் வழிபட்டுவந்த லிங்கத்தை வழிபடவேண்டும் என ஆசை எழுந்தது. கையில் கிடைக்கும் சில மலர்களைக்கொண்டு அங்கிருந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்ய ஆரம்பித்தாள் சிறுமி. நாளடைவில் சிறுமியின் போக்கில் பலமாற்றங்கள் ஏற்பட்டது. எப்பொழுதும் பாகித்தியிலையே மனதை செலுத்திக்கொண்டிருந்தாள் .அமைதியாக இருக்கத்தொடங்கினார் .சதா பூஜை சிவா சிந்தனை என்று அவரது வாழ்க்கை இருந்தது,ஒரு சித்ரா பௌணமியன்று சித்தர் அங்குவந்தார்.அவரை கண்ட தயாரம்மாவுக்கு சித்தர் அவருக்கு குருவாக தோன்றினார் .சித்தரும் தயாரம்மாவின் தேஜஸ் பார்த்துவிட்டு ,அவர் பக்குவநிலைக்கு வந்துவிட்டார் என்று தெரிந்து ,தயாரம்மாவுக்கு ,யோகமார்க்கத்தையும் ,ரசவாதவித்தையையும் கற்றுக்கொடுத்தார் .
அன்றுமுதல் சிறுமியின் வாழ்க்கையில் பலமாற்றங்கள் நிகழ்ந்தன, எப்ப பார்த்தாலும் தியானதிலயே இருந்தாள். பெற்றோர்கள் அவளது நிலையைக்கண்டு வருத்தமடைந்தனர். சிறுமியின் தந்தை அவளது மனமாற்றத்திற்காக புதுச்சேரியில் உள்ள தன் தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்தும், சதாகாலமும் தியானமும் மனக்குறையோடு வரும் மக்களுக்கு தகுந்த வழியையும் , பில்லிசூனியம் போன்றவற்றால் அவதியுற்றவர்களை குணமாக்குவதையும் வழக்கமாய் செய்துகொண்டு இருந்தார். தன்னை முழுவதுமாக தவவாழ்க்கையில் அர்பணித்துவிட்டார். இவரின் அடர்ந்த கூந்தல் சீவாமல் சடைபிடிக்க ஆரம்பித்தது. அதனாலாயே இவர் பெயருடன் சடை சேர்ந்து அன்றிலிருந்து சடைதாயாரம்மா என்று அழைக்க ஆரம்பித்தனர். ரசவாத மூலிகை வித்தை மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு இரும்பை பொன்னாக்கி கொடுத்தார். பச்சிலைமூலம் பலரது நோய்களை தீர்த்துவைத்தார். இவரது சமாதியான காலம் தெளிவா யாருக்கும் தெரியலை..சிலர் இவர் வளவானுரில் ஜீவசமாதியடைந்ததாகவும், சிலர் இவர் பேட்டையான் சத்திரத்தில் சமாதியடைந்த இடமே சடையப்பர் கோவில் என்றும் சொல்கிறார்கள்,எது எப்படியோ இங்கே அவருக்கு சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு ஒவ்வொரு பிரதோஷமும், சிவராத்திரி போன்ற பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லி முடித்தார் ,
நாமும் அந்த பெண் சித்தரை வணங்கி அவரது ஆசிகளை பெற்று அடுத்த சித்தர் சமாதிக்கு பயணமானோம்.மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்
.நன்றியுடன்
ராஜி
Friday, February 28, 2020
அகண்ட பரிபூரண ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி ஸ்வாமிகள் சமாதி -பாண்டிச்சேரி சித்தர்கள்.
இதுவரை நமது புண்ணியம் தேடி பகுதியில் பல கோவில்களை பற்றிதான் பார்த்திருக்கிறோம். எப்பவாவது ஒருசில சமயத்துல, கோவிலுக்கு பக்கத்திலிருக்கும் சித்தர்கள், சாமியார்கள் ஆசிரமம் பற்றி தனிப்பதிவா பார்த்திருக்கோம். ஆனா, இதுவரை இல்லாமல் நம் தொடரில் தொடர்ந்து சித்தர்களின்
சமாதிகளை பற்றி பகிரப்படுகிறது ஏனென்றால், மானிடராய் பிறந்தவர்களின் துர்க்குணங்களையும், துன்பத்தையும் மாற்றி, தூய்மையானவர்களாக்குவதற்காக
அவதரித்தவர்கள் சித்தர்கள். இவர்கள் தனிமையை நாடுபவர்கள். பசித்திருப்பதையும்
விழித்திருப்பதையும் பெரிதும் விரும்புபவர்கள். எப்பொழுதும் சிவபரம்பொருளையே
தியானித்துக்கொண்டு இருப்பவர்கள். சித்தர்கள் பெரும்பாலும் சங்கேத மொழியில்
பேசுபவர்கள். இவர்கள் பேசுவதை நாம் புரிந்துகொண்டால், நாம் பல ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். மக்களுக்கு நன்மை புரியும் சித்தர்களை மக்கள்
புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். இவர்களின் சக்தியோ அளப்பரியது. இதற்கு உதாரணமாக
எத்தனையோ சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும், நாங்கள் சந்தித்த கடைக்காரர்
சொன்ன மாதிரி புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட
சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றது. அவற்றைதான் நமது பதிவுகளில் தொடர்ந்து பார்த்து, படித்து, தரிசித்து வருகிறோம்.
சரி கடந்தவாரம் நாம ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமிகளின் ஜீவசமாதியை தரிசித்தோம். இந்த வாரம் நாம தரிசிக்கப்போவது அகண்ட பரிபூரண
ஞானதேசிக ஸ்ரீலஸ்ரீ கம்பளி சுவாமிகள் ஜீவசமாதியை. வேதாந்த சுவாமிகளின் ஜீவசமாதியை
தரிசித்து வெளியே வரும்போது,மதியம் ஆகிவிட்டது. பெரும்பான்மையான திருக்கோவில்களில் மதியம் 12:௦௦ மணிக்குமேல் நடையடைத்து விடுவது வழக்கம். சரி இனி சாப்பிட்டு போகலாம்ன்னு பக்கத்திலிருந்த ஒரு
ஹோட்டல்ல சாப்பிட்டு, பக்கத்துல இங்க பக்கத்தில் எதாவது பார்க்குறமாதிரி இருக்கான்னு ஹோட்டல்காரங்கக்கிட்டயே விசாரித்தோம். ம்ம் இருக்கு. இங்கன பக்கத்திலயே கம்பளி சித்தரின் ஜீவசமாதி இருக்கு போய் பார்ருங்க. ரொம்ப விஷேசமானதுன்னு சொல்லி கூடுதல் தகவலாய் பாண்டிச்சேரி முழுக்க 51 சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கு நீங்க ஒவ்வொண்ணா
பாருங்க எனக்கூறி கம்பளி சித்தர் ஜீவ சமாதிக்கு போகும் வழியை சொன்னார்.
நாங்க அங்க போனதும், சித்தர் சமாதிக்குதான் வந்துட்டோமா?! இல்ல எதாவது கார்ப்பரேட் சாமியார்கள் ஆஸ்ரமத்திற்கு வந்துட்டோமான்னு ஜெர்க் ஆனோம். ஏன்னா, அங்கு, வெளிநாட்டுக்காரங்க அதிகம் இருந்தனர். இதிலிருந்து ஒரு உண்மை
புரிகிறது. வெளிநாட்டவர்கள் நம்முடைய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு
இந்தியா வந்து இந்துமத்தை பின்பற்றி அமைதியான வாழ்வு வாழ்ந்து அமைதியை தேடுகின்றனர்
போலும். ஆனா, அதேநேரத்தில் சில தவறுதலான வழிகாட்டுதல்மூலம் சிலருக்கு சில பிரச்சனைகள்
வந்துவிடுகின்றன. வீட்டைவிட்டு வெளியில் வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டால் நல்லா இருக்கலாம்ன்ற பாடல்வரிகள் நினைவுக்கு வந்தது. சரி சரி, நமக்கெதுக்கு ஊர்வம்பு?! நாம வந்தவேலையை பார்ப்போன்னு ஜீவசமாதியை நோக்கி சென்றோம்.
இந்த சித்தரை பற்றி யாருக்கும் சரியான விவரம்
தெரியாதாம். ஆனா, இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்ததாக மட்டும் செவிவழி
செய்தி. இவருடைய உண்மை பெயர்,
பெற்றோர் விவரங்கள் யாருக்கும்
தெரியலை. இவர் கம்பளி போர்வையை எப்பயுமே போர்த்திக்கிட்டு இருக்குறதால, மக்கள் இவரை கம்பளி சாமியார்ன்னு கூப்பிடப்போய் அதுவே பின்னாளில் கம்பளி சித்தர்ன்னு ஆகிட்டது. புதுச்சேரியில் உள்ள பாக்குமுடையான் பட்டு, முத்தியால்பேட்டை, கவுண்டன்பாளையம் போன்ற இடங்களில் அடிக்கடி
நடமாடுவாராம். அதிலும் கவுண்டன்பாளயத்திலுள்ள
சாஹையார்ன்னு பேர்க்கொண்ட குடும்பத்தினரிடம் மட்டும்தான் பேசுவாராம். ஒரு
இஸ்லாமிய பெரியவர், இவருக்கு
குருவாக இருந்தார் சொல்றாங்க. வேலாயுதம் என்ற வைத்தியரும் இவரிடம்
நெருக்கமாகவும், இருவரும் நல்ல நட்பு
கொண்டவராக இருந்தனர் என்றும் சொல்லப்படுது.
இந்த கம்பளி சித்தர் நிறைய கல்வி அறிவு
பெற்றவர். சுத்த பிரம்மச்சாரி. மாயையை வென்றவர் என்றும்
தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகளை இந்த சுவாமிகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய நோய்
வந்துவிட்டால் அவர்களுக்கு பச்சிலையும்
விபூதியும் தந்து குணமாக்குவாராம். மேலும், இவரைப்பற்றி செவிவழியாக
சொல்லப்படுவது என்ன்னா, இவர் நினைத்த இடத்தில் மறைந்து, நினைத்த
இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவராக இருந்துள்ளார். சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை
ஸ்தூலத்திற்கு அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர் என்றும் இதை அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவங்க பார்த்திருக்காங்கன்னும் பார்த்தவங்க வழிவழியா வந்தவங்க சொல்லி கேட்டவங்க சொல்றாங்க.
வீதியில் நடமாடும்போது இவரது தோற்றத்தை கண்டு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை
விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச்
சித்தரிடம் மன்னிப்பு கேட்டப்பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம்.
இதுவும் செவிவழியா பரவி இங்கு சொல்லப்படுது. சிலசமயம் சாலையில் நின்று
.வாயில் ஒரு சுருட்டை வைத்துக்கொண்டு போவோர், வருவோரிடம் நெருப்பு கேட்பாராம். அவர்கள் கண்டும் காணாமல் சென்றால் தன் ஆட்காட்டி விரலை சுருட்டுக்கு முன்னால்
பத்த வைப்பதுபோல் நீட்டுவாராம் . சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளுமாம். அதேபோல் சுவாமிகள் ஒருமுறை கள்ளுக்கடைக்கு சென்றார். கையை நீட்டினார்.
கடைக்காரர், இன்னும் போணியாகலை போ” ன்னு கள்ளுக்கடைக்காரன் விரட்டினானாம். உடனே, சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில் உட்கார்ந்து
விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவே இல்லை. கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி
ஓடினார். வெகு சிரமத்திற்குபின் சுவாமிகளை கண்டுப்பிடித்து கடைக்கு
கூப்பிட்டார். சுவாமிகள்,”நான் வருகிறேன் நீ முன்னால்
போ” என்று சொல்லி அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை
வண்டியில் வேகமாக கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே
வந்து அங்கு உட்கார்ந்திருந்தார். அதுவும் இவரது சித்துவிளையாட்டுகளில் ஒன்று என
சொல்லப்படுகிறது.
மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை நீட்டினார் சுவாமிகள். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று சுவாமிகளுக்கு சாராயம் கொடுக்கவில்லை. சுவாமிகளும் அங்கிருந்து போய் விட்டார். அன்று முழுதும் அந்த கடையில் எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க முடியவில்லை. அதேபோல் பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய் கேட்டார். வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார். சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து பார்க்கும்பொழுது ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது. உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்புகேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது. ஒரு சமயம், சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது. உடன் வந்தவர்கள் சுவாமிகள் இறந்திருப்பார், என்று நினைக்க,காட்டில் அந்த பாம்பு இறந்து கிடந்தது. இவருக்கு பாதரசத்தை தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையும் தெரியும். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை என்றுமே கொண்டதில்லையாம்
சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தண்ணீரில்தான் செய்து வந்தாராம். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம். நீரின் மேலேயே படுத்துக் கிடப்பார். சுவாமிகள் ஏதோ ஒரு காரணத்தால்தான் எப்பொழுதும் ஜலத்தில் ஸ்தம்பனம் செய்து கொண்டிருந்தார்.அப்படியே சில நாட்களில் ஜல சமாதியடைந்தார். அந்தநாள் சரியாக 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் உள்ள குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர் இதை கவனிக்கவில்லை. மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே கம்பளி தண்ணியிலே“. இக்குரல் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தது. மக்கள் ஒன்றுகூடி அவரது திருவுடலை, நீரிலிருந்து வெளிக்கொணர்ந்து அங்கயே சமாதி எழுப்பி ஊர்மக்கள் அந்த சமாதியின்மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்தனர். சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள் ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர். கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு பெரியவர் என்னும் மகானின் சமாதியும் இருக்கிறது.
இப்பழுது இந்த சித்தர் சமாதிக்கோவில், வெளிநாட்டிலிருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரிப்பில் உள்ளது.அவர் மேல்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது மனைவியும், மருமகளும் தமிழ்ப்பெண்மணிகளாவர். இவரது மகன் ஒரு தமிழ் மகனாகவே வளர்க்கப்பட்டவர். அவர்கள்தான் இங்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த கம்பளிச் சித்தர் சமாதி கோவில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோவிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதியும் உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேர் வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச்சந்நிதிகளில் விநாயகர் முருகப் பெருமானும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிலைகள் எல்லாம் கலைநயமும், புதுமையும் மிக்கவை. இங்கிருக்கும் முருகன் சந்நிதிக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து கஜலட்சுமி தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இந்த சந்நிதியில் கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகளுக்கு பதிலாக எதிரில் ஒரேயொரு யானை மட்டுமென இதிலும் வித்தியாசம் காணப்படுகிறது. அதுவும் புதுமையாக- அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், சக்தியும் அருள்பாலிக்கின்றனர். வெண்கலத்தினாலான திருஉருவங்கள் பார்ப்பதற்கு பரவசமாக இருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் விநாயகர், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
கூடவே கம்பளிச் சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் இங்குள்ளது. அகத்திய முனிவருக்கும் ஒரு சிலை இருக்கு. இந்த சித்தர் சமாதியில் குழந்தை பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுத்து அதை கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். சித்தரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதும், சமாதிக்கோவிலின் முகப்பில் உள்ள சிவசக்தி ரூபம் நம்மை பரவசமடைய செய்கிறது. ஒரு அக்கினி வளையத்தின் நடுவே சிவனும் சக்தியும் ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல் நுனிபூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை, உயரத்தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம், கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம் என சிலாரூபம் மிக அழகு. மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன்- சக்தி உருவங்கள் சுமார் முப்பது அடிஉயரம் கொண்டதாய் இருப்பது மிக அழகு.
இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அந்த கதவை வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்களாம். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு மகாசிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்வாராம். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணிநேரம் பூஜை நடக்குமாம். பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குவாராம். சிவன்- சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. கடந்த சிவராத்திரியில் பக்தர்கள் இவ்வட்டத்தைச் சுற்றி நின்று தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லியபடி சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளை ஏந்தி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்வது பார்ப்பதற்க்கே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குமாம்.
அதைவிட முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் பூஜை முடிந்தவுடன் அன்றுமட்டும் பக்தர்கள் பாதாளலிங்கத்தை சென்று தரிசிக்கலாம். வருடத்திர்ற்கு ஒருமுறை மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். இதேபோல், குப்பம்மாள் என்பவர் மகோதர நோயால் கடும் அவதிப்பட்டு கொண்டிருந்தார். வேதனை தாங்காது ஒருநாள் சித்தரின் சமாதியில் விழுந்து அழுதாராம். சிலநாட்களில் எந்த மருந்துமில்லாமல் அந்த நோய் குணமாகியது. என்றும் செல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோவிலுக்கு சென்னையில் இருந்து ECR வழியாக புதுச்சேரி சென்று அங்கிருந்து , தட்டாஞ்சாவடி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்று, அங்கிருக்கும் ருத்திரபூமி பகுதியில் உள்ள இந்த சித்தரின் சமாதிக்கு செல்லலாம். அல்லது ஆட்டோக்காரர்களிடம் சொன்னால் சரியாக சித்தர் சமாதியில் கொண்டு இறக்கி விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் இந்த சித்தரை வழிபட்டால் மனதில் ஆனந்தமும் நிம்மதியும் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணரலாம் .இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறைவனின் அருளும் சித்தரின் ஆசியும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து அடுத்தவாரம் வேறு ஒரு சித்தர் சமாதியில் இருந்து உங்களை தரிசிக்கிறேன்
நன்றியுடன்,
ராஜி Friday, February 14, 2020
ஓம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.
பாண்டிச்சேரி சித்தர்கள் தொடரில் ஸ்ரீபாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மற்றும் ஸ்ரீஅக்கா பரதேசி சுவாமிகள் பற்றி பார்த்தோம். சரி அடுத்து எங்க போலாம்ன்னு யோசனையா இருந்தப்ப லேசா கண் அசந்துட்டேன். திடீர்ன்னு முழிச்சு
பார்க்கிறேன். என்கூட வந்த அப்பா,அம்மா.அப்பு,பெரியவள், சின்னவள்ன்னு யாரையும் காணோம்.
எங்கே போய்ட்டாங்கன்னு மெதுவா சுத்திலும் தேடுறேன். அங்க ஒரு
இடத்தில கூட்டமா இருந்துச்சா?! சரி அங்க இருப்பாங்களோன்னு நினைச்சு அந்த இடத்தை நோக்கி
நடந்தேன். அந்த கூட்டத்தில் இருந்த ஆட்களும்,ஆடைகளும் வித்தியாசமாக இருந்தன. ஷாம்பு காணாத சிகைக்காய் வாசனையுடனான தலைகள், பருத்தியிலான
ஆடைகள், மொபைல், கார், பைக்ன்னு எதும் இல்ல. முக்கியமா எல்லா மனிதர்களும் எளிமையா இருந்தது என அந்த இடமே வித்தியாசமா இருந்தது.
அந்த கூட்டத்துல ஒருவர் ஓலைச்சுவடியிலான
பஞ்சாங்கத்தை வச்சு படிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப, அவரிடம் இன்னைக்கு தேதி என்ன?! ஏன் இவ்வளவு
பேர் கூடி இருக்கிறாங்க அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவர், இன்று வைகாசி மாசம் 15ம் தேதி 1837ம் ஆண்டு என பதில் சொன்னார். ஏன் இவ்வளவு கூட்டம் என மீண்டும் அவரிடம் கேட்டேன். என்னமா உனக்கு
விஷயமே தெரியாதா?! இன்று காலைல இருந்தே நாங்கள் இங்க காத்திருக்கோம். நீயும் இங்க என்ன நடக்குதுன்னு பாருன்னு சொல்ல, அவங்களோடு நானும் காத்திருக்க ஆரம்பித்தேன்.
மொத்த மக்களும் காத்திருந்தது ஒரு சித்தர் ஜீவசமாதி அடையும் வைபவத்துக்காக.. ஆறடிக்கு மூன்றடியிலான ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. அருகில் இளநீர், பால், தயிர், எண்ணெய், அரப்புப்பொடி, பூ என ஒரு அபிஷேகத்துக்கான அனைத்து பொருட்களையும் வைத்துக்கொண்டு காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு சாமியார் அங்கு வந்தார். யார் அவர்ன்னு அருகிலிருந்த ஒரு பெரியவர்கிட்ட கேட்டேன். அவர்தான் சுவாமி சித்தானந்தர், சுவாமி அவர்கள், எங்களுக்கெல்லாம், வெகுநாட்களுக்கு முன்பே எங்களிடம் .வைகாசி மாசம் 15ம் தேதி, நான் பரம்பொருளை சென்றடைந்து விடுவேன். நீங்கள் எல்லோரும்
பரம்பொருள் கொடுத்த இந்த பூத உடலுக்கு எல்லாவித அபிஷேகங்களும் செய்து நான் ஜீவ
சமாதியாகும் குழிக்குள் வைத்து மூடிவிடுங்கள் என்று சொன்னார். இன்றுதான் அந்த தினம், அதனால்தான்
நாங்கள் எல்லோரும் இன்று காலைலையில் இருந்து இங்கு ஒன்றுக்கூடி இருக்கிறோம் என சொன்னார்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த சித்தருக்கு எல்லாவிதமான
அபிஷேகங்களையும் செய்து முடித்து சுவாமிகள் ஜீவ சம்தியாகும் இடத்திற்கு சென்று அவரை அந்த
குழிக்குள் இறக்கி சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அதை பலகைகளால் மூடினார்கள். எல்லாவித சடங்குகளும்
வழிபாடுகளையும் முடித்தவுடன் கூடி நின்ற மக்கள் அனைவரும் கண்ணீர் மல்க
நிற்கின்றனர். அப்பொழுது ஒருவர் கூட்டத்தில் சத்தமாக பேசினார். யாரும்
கவலைப்படாதீங்க!! சுவாமிகள் ஜீவ சமாதி ஆனாலும்கூட, என்னை நாடிவரும் மக்களின் குறைகளை
அந்த இறைவனின் அருளால் தீர்த்து வைப்பேன்
என அவர் ஜீவ சமாதி அடைவதற்கு முன்னர் நமக்குலாம் வாக்கு கொடுத்திருக்கிறார். அதனால இனி நாம் அவருக்காக அழக்கூடாது. அவருக்கு நாம இங்க ஒரு ஜீவ சமாதி கோவில் எழுப்பி வழிபடுவோம்
என்றார். அதைக்கேட்டதும் கூட்டத்தினர் இருகைகளையும் கூப்பி சுவாமி
சித்தானந்தர் வாழ்க! என பக்தியுடன் கோஷம் எழுப்பினர். நானும் சுவாமி
சித்தானந்தர் வாழ்க என்று சொல்லும்போது, மை டாடியின் குரல் கேட்டது...ஏய்!! கழுதை!! எப்பயும்போல இங்க வந்தும் பகல்லயே தூங்குறியா?! வண்டியிலிருந்து இறங்கு. அடுத்த சித்தர் ஜீவ சமாதி வந்துடுச்சின்னு ஆசையா!! சொன்னார். நானும் காரில் இருந்து இறங்கி பார்த்து ஆச்சர்யபட்டுட்டேன். நான் நின்று
கொண்டிருந்தது காருவடிக்குப்பத்தில் இருக்கும் சுவாமி சித்தானந்தரின் ஜீவ சமாதி
கோவிலின் முன்பு....
பயபக்தியுடன் அவரது சந்நிதி படிகளை
தொட்டுவணங்கி, ஜீவசமாதி கோவிலுக்குள் நுழைந்தோம். இனி யார் இந்த சித்தானந்த சுவாமிகள்ன்னு தெரிஞ்சுக்கலாம். 18 -ம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டத்தில் இருக்கிற வண்டிப்பாளையம் என்னும்
ஊர்லதான் நம்ம சித்தானந்த சுவாமி பிறந்திருக்கிறார். அவரது இயற்பெயர் சித்தானந்தன். பிறக்கும்போதே இறையருளுடன்
பிறந்ததால் இவர் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருந்தது. அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு” ன்னே சொல்வாஞ்களாம்.சிறு வயது முதற்கொண்டே இவர், திருப்பாதிரிப்புலியூரில்
எழுந்தருளியுள்ள ஸ்ரீபாடலீஸ்வரரை-வழிபட்டு வந்தாராம். இந்த ஆலயத்திற்கு இவரது தாயார்
பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால், ஆலயத்திற்கு மாலையை கொண்டு சேர்க்கும்
பணியை சிறுவன் சித்தானந்தன் செய்து வந்தார். அத்துடன் ஆலயப்பணியையும் செய்து
வந்தார். அப்ப தினமும் தாயார் கட்டிக்கொடுக்கும் மாலையினை எடுத்துக்கொண்டு
சிறுவன் சித்தானந்தன் பாடலீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு சென்று கொடுத்து வருவது
வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள், திடீர்ன்னு
மழைபெய்து தெருலாம் வெள்ளக்காடா மாறிடுச்சாம். சிறுவனும் பூவை எடுத்து கோவிலுக்கு
சென்று கொடுப்பதற்கு நேரமாகிடுச்சு. அப்ப கோவில் பூசாரி பூஜையை முடிச்சுட்டு கோவிலை
பூட்டிட்டு போய்ட்டார். சிறுவன் சித்தானந்தனுக்கு என்ன செய்வது என தெரியலியாம். உடனே மனம் தளராது, இறைவா! நான் உனக்கு மாலை எடுத்துட்டு
சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனா, வழியெங்கும் வெள்ளக்காடு. நான் அதை தாண்டி வருவதற்குள் நேரமாகிடுச்சு. இதுல என் தவறு
ஏதுமில்லை. உனக்கு தெரியாதது ஏதுமில்லை அதனால இந்த மாலையை நீயே வந்து எடுத்துக்கோ
என சொல்லிட்டு பூட்டியிருந்த கோவில் கதவில் தொங்கவிட்டுட்டு போய்விட்டான் சிறுவனான சித்தானந்தன்.
காலையில் கோவில் பூசாரி, சிறுவன் சித்தானந்தனை கூப்பிட்டு ஏன் நேற்று இறைவனுக்கு மாலை கொண்டுவரலை எனக் கேட்டார். ஐயா! நேற்று மழை பலமா பெய்து, வழியெல்லாம் வெள்ளக்காடு. நான் மழைக்கு ஒதுங்கி ஒதுங்கி வருவதற்குள் நீங்க கோவில் கதவை பூட்டிட்டு போய்ட்டிங்க. நானும், இறைவனுக்காக தொடுத்த மாலை வீணாகிட கூடாதுன்னு கோவில் கதவில் மாட்டிட்டு இறைவனிடம் சொல்லிட்டு வந்திட்டேன். நேற்றே அதை இறைவன் எடுத்திருப்பாரே என சிறுவன் சித்தானந்தான் பதில் சொன்னான். அதை கேட்ட பூசாரி, இவன் நேற்று வராம இருந்ததற்கு ஏதோ கதை சொல்கிறான் என எண்ணியபடியே, சிறுவனை அழைத்துக்கொண்டு சிரித்தவாறே கோவில் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு, இறைவனது கழுத்தில் முதல்நாளிரவு கதவில் தொங்கவிட்டு சென்ற பூமாலை வாடாமல் கிடந்தது. சிறுவன் சித்தானந்தனிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை பூசாரி உணர்ந்து, சிறுவனது காலில் விழுந்து வணங்கினார். பூசாரியின்மூலம் சிறுவனது புகழ் அக்கம்பக்கம் பரவ ஆரம்பித்தது. அவர் வளர்ந்து வரவர இத்தலத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு. அனுதினமும் அவரையே வழிபட்டு வந்தார் எவரொருவர் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு ”அவனே கதி” என அவன் பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ, அவரிடமே இறைவன் நிரந்தரமாய் தங்கி இருப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும் என்பதை உணர்ந்த சித்தானந்தர். அதை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுவார்.
காலையில் கோவில் பூசாரி, சிறுவன் சித்தானந்தனை கூப்பிட்டு ஏன் நேற்று இறைவனுக்கு மாலை கொண்டுவரலை எனக் கேட்டார். ஐயா! நேற்று மழை பலமா பெய்து, வழியெல்லாம் வெள்ளக்காடு. நான் மழைக்கு ஒதுங்கி ஒதுங்கி வருவதற்குள் நீங்க கோவில் கதவை பூட்டிட்டு போய்ட்டிங்க. நானும், இறைவனுக்காக தொடுத்த மாலை வீணாகிட கூடாதுன்னு கோவில் கதவில் மாட்டிட்டு இறைவனிடம் சொல்லிட்டு வந்திட்டேன். நேற்றே அதை இறைவன் எடுத்திருப்பாரே என சிறுவன் சித்தானந்தான் பதில் சொன்னான். அதை கேட்ட பூசாரி, இவன் நேற்று வராம இருந்ததற்கு ஏதோ கதை சொல்கிறான் என எண்ணியபடியே, சிறுவனை அழைத்துக்கொண்டு சிரித்தவாறே கோவில் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு, இறைவனது கழுத்தில் முதல்நாளிரவு கதவில் தொங்கவிட்டு சென்ற பூமாலை வாடாமல் கிடந்தது. சிறுவன் சித்தானந்தனிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை பூசாரி உணர்ந்து, சிறுவனது காலில் விழுந்து வணங்கினார். பூசாரியின்மூலம் சிறுவனது புகழ் அக்கம்பக்கம் பரவ ஆரம்பித்தது. அவர் வளர்ந்து வரவர இத்தலத்தில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு. அனுதினமும் அவரையே வழிபட்டு வந்தார் எவரொருவர் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு ”அவனே கதி” என அவன் பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ, அவரிடமே இறைவன் நிரந்தரமாய் தங்கி இருப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத் தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும் என்பதை உணர்ந்த சித்தானந்தர். அதை மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுவார்.
தீராத தவத்தினால் ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள் கிடைத்தது கடும் தவப்பயனினால் .அஷ்டமாசித்திகளையும் பெற்றார். அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின் அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது. காலங்கள் ஓடின, இதனிடையே பாண்டிச்சேரியில் முத்துக்குமாரமிப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார். அவருடைய மனைவி பெயர் கண்ணம்மாள். இவங்க பாண்டிச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டையில வசித்து வந்தாங்க. முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் மனைவியான கண்ணம்மாள் கடுமையான வயித்துவலியினால அவதிப்பட்டு வந்தாங்க. அவங்க, பார்க்காத வைத்தியம் இல்ல. போகாத கோவிலும் இல்ல. ஆனா வயித்துவலி மட்டும் குணமாகலை.அந்த
சமயத்துலதான் மிகுந்த துயரத்தில் வாடிய
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரு பெரியவர் ஒருவர், அந்த தம்பதிகளிடம், கடலூரிலுள்ள ஸ்ரீசித்தானந்த
சுவாமிகளின் அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று அவரை பார்க்க சொன்னார். அடியார்க்கு தொண்டு
செய்வதை தன் பாக்கியமாக கருதும் முத்துக்குமாரசாமிப்பிள்ளையும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு தன் தம்பியையும் கூட்டிட்டு கோவிலுக்கு சென்று, சித்தானந்த சுவாமிகளுக்காக அவருக்காக கோவிலில் காத்திருந்தனர். அங்கு அவருக்கு முன்னே ஒரு 15 பேர் சித்தானந்தரின் தரிசனத்திற்காக
காத்திருந்தனர். அந்த சமயத்தில்தான் சித்தானந்தர்
தலையை சாய்த்து முத்துக்குமாரசாமிப்பிள்ளையை பார்த்து, வாங்க! பாண்டிச்சேரியிலிருந்து வந்த யாத்திரை
சௌகரியமா இருந்துச்சா எனக்கேட்டார். முத்துகுமாரசாமிப்பிள்ளைக்கோ ஆச்சர்யம் தாளலை. நாம முன்னபின்ன அவரை பார்த்ததுகூட கிடையாது. அப்புறம் எப்படி நம்மை சரியாக அடையாளங்கொண்டு, பேரோடும், ஊரோடும் சொல்கின்றாரே என திகைத்தார். பிறகு, சுதாரித்துக்கொண்டு, தன்னுடைய மனைவி கண்ணம்மாளின் தீராத வயிற்றுவலியை பற்றி
சொல்கிறார். உடனே,சித்தானந்தர் அவருடன் பாண்டிச்சேரிக்கு செல்கிறார்.
சித்தானந்தர் பாண்டிச்சேரியை நெருங்க
நெருங்க முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் துணைவியாரின் தீராத வயிற்றுவலி மெதுவாக குணமடைந்துக்கொண்டே வந்து, சிறிது நாளில் முழுவதுமாக குணமடைந்தது. இந்த அதிசயம் மீண்டும் பாண்டிச்சேரி முழுவதும் பரவ
ஆரம்பித்தது. சித்தானந்தரின் திருவருளை உணர்ந்து, அவரை தங்கள்
இல்லத்திலேயே தங்கும்படி தம்பதியினர் வேண்டிக்கொண்டனர். அதன் பிறகு சித்தானந்தர்
அங்கேயே தங்கி, தம் ஆன்ம ஞானத்தை மேற்கொண்டார். சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு
அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்றும், நோய்களை குணமாக்கியும்
கஷ்டங்களுக்கு தீர்வும் பெற்று சென்றனர். ஒருநாள் முத்துக்குமார சாமிப்பிள்ளை கருவடிக்குப்பத்தில் உள்ள தன்னுடைய தோப்பிற்கு சித்தானந்தரை அழைத்து
சென்றார். அப்பொழுது ஒரு இடத்தை சுட்டிக்காட்டி சித்தானந்தர் “இது இங்கதான் இருக்கப்போகிறது- இது இங்கதான் இருக்கப்போகிறது” என தம் உடலையும், அந்த இடத்தையும் மூன்று முறை தம் விரலால் சுட்டி காண்பித்தார்.
முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய்யா முதலியார், சொக்கலிங்க முதலியார் போன்றோர் சுவாமிகள்மேல் தீராத பக்தியுடன் பூஜித்து வந்தனர். சித்தானந்தரும் அவர்தம் இல்லங்களுக்கு சென்று ஆசி வழங்குவார். ஒருமுறை முத்தைய முதலியாரின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதைக்கண்டு பொறுக்கமாட்டாமல், முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார். சுவாமிகளிடம் முறையிடும் முன்பே, முதலியாரின் உணர்வை புரிந்துக்கொண்ட சுவாமிகள், ”கவலைப்படாத! உனக்கு ஆனந்தம் தரும் ஆனந்தன் பிறந்து விட்டான். நீ வீட்டுக்கு உடனே சென்று பார்” என ஆசிர்வதித்து அனுப்பினார். சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனந்தக்கண்ணீர் மல்கினார். சுவாமிகளின் ஞானவாக்கு அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின் திருவாக்குப்படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக்கண்ணால் காணும் ஆற்றல் பெற்றவராக திகழ்ந்தார்.
சித்தானந்தர் சிலமாதங்கள் சாப்பிடாமல்கூட இருப்பாராம். சிலசமயம் பசிவந்தால் கல்லைக்கூட கடித்து சாப்பிடுவாராம். சித்தானந்தர் எதை சாப்பிடுகிறார், எப்ப சாப்பிடுகிறார் என்று யாருக்கும் தெரியாது. முத்தையா முதலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அது அம்மிக்கல் போல சற்று சமதளமாக இருக்கும் கல், அதை கழுவி அதில் சாப்பாடு போடச்சொல்வார். உளுந்துவடை, சுண்டல் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார். சித்தானந்தர் சாப்பிட பயன்படுத்திய அந்த கல்லுக்கு தனி விஷேசம் இருந்தது. பிரசவ காலத்தில் அந்தக்கல்லில் உட்கார்ந்து சென்ற தாய்மார்களுக்கு பிரசவவலி இல்லாமல் இருந்ததாம். சித்தானந்தரின்மேல் ஒரு குயவனுக்கு தீராத பக்தி இருந்தது. அவன் சுவாமிகள் உபதேசம் செய்யும் இடமெல்லாம் தவறாது வந்து கேட்பான். அவன் சுவாமிகளை தன்வீட்டுக்கு சாப்பிட அழைத்தான். அவன் சித்தானந்தர் உபதேசம் செய்யும்போது இருக்கும் நிலையை மனதில் கொண்டு அதேபோல் அழகாக மண்ணில் ஒரு சிலை செய்தான். சுவாமிகளும் ஒருநாள் தான் வருவதாக ஒப்புக்கொண்டார். அந்த நாளும் வந்தது குயவன் வீட்டில் நல்ல விருந்து உண்டார். சுவாமிகள் அவ்வளவு உணவு உண்டதை அன்றுதான் பக்தர்கள் பார்த்தனர். உணவு உண்டு முடித்தபின் குயவன் தான் செய்த மண்ணால் ஆன சுவாமிகளின் திருஉருவ சிலையை கொடுத்தான். அதை ஆவலோடு திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார் சித்தானந்தர். தன் உடலைப்பார்த்து இது தோல் போர்த்தப்பட்ட கூடு . கையிலிருந்த குயவன் கொடுத்த சிலையை பார்த்து ,இது மண்ணினால் ஆன கூடு எனக்கூறி நான் விரைவில் இந்த சிலைக்கு மாறிவிடுவேன் என்றார்.
ஆண்டுகள் பல கடந்தன. சித்தானந்தரின் ஆத்மீக சாதனை முடியும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார் ஸ்ரீபாடலீஸ்வரரின் அழைப்புக்காக காத்திருந்தார். திடீரென்று ஒருநாள் முத்துக்குமாரசாமிப்பிள்ளையை அழைத்து “விளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது- இதை எல்லோரும் அறியும்படி செய் “ என்றார். இந்நிகழ்ச்சி சித்தானந்தர் சமாதி அடைய பத்து நாட்களுக்கு முன் நடந்தது. நாட்கள் நகர்ந்தன. தாம் உபயோகித்த பாத குறடையும், கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார். அன்றைய தினம் பத்தாம் நாள். சித்தானந்தருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்து, கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெகஜ்ஜோதியாக உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சித்தானந்தர் சிவபழமாகவே காட்சியளித்தார். மக்கள் அவரை கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார். அவரது பிராணன் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள் சிலர் சித்தானந்தரின் சூக்கும சரீரத்தை தரிசித்தார்கள். தங்களையே மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில் முத்துகுமாரசாமிப்பிள்ளை தோட்டத்தில் சித்தானந்தர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஜீவசமாதி கட்டப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும், பக்தர்கள் மன அமைதி வேண்டியும் இங்கு வருகின்றனர். நியாயமான வேண்டுகோள்கள் யாவும் நிறைவேறுவதை இங்கு வரும் பக்தர்கள் கண்கூடாக காண்கிறார்கள்.
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலகட்டமாக 1908ல் இருந்து 1918 வரை இந்த சித்தனத்தாரின் ஜீவசமாதிக்கு வர தவறுவதில்லையாம். அவருடைய நிறைய இலக்கியங்கள் இந்த கோவிலில் இருந்துதான் படைச்சாராம். காணிநிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் என்ற பாடலை இந்த இடத்தில இருந்துதான் பாரதியார் எழுதினாராம்!! இங்கிருக்கும் குளத்தை பாரதியார் ஞானக்கேணி எனக் குறிப்பிடுகிறார். பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, மணக்குளவிநாயகர் துதி, தேசமுத்துமாரியம்மா, இப்படி நிறைய இலக்கண படைப்புகளை இந்த இடத்திலிருந்துதான் எழுதினார் என சொல்லப்படுகிறது. இந்த கோவில்ல அவருடைய கால்தடம் பதியாத இடமே இல்லைன்னு சொல்லலாம். அதனாலதான் அவருடைய நினைவாக இங்க கோவில் வளாகத்திலையே பாரதியாருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கு.
இந்த கோவிலில் இருக்கும் சித்தானந்தரின் உருவம் கோவிலின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் மிகப்பழமையான மணியில் பொறிக்கப்பட்டு இருக்கும் சித்தானந்தரின் உருவ மாதிரியை வச்சுதான் இப்ப இருக்கிற படம் வரைஞ்சிருக்கிறாங்க. அவர் ஜீவன் முக்தியடைஞ்ச நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குருபூஜை தினமாக சிறப்பாக கொண்டாடுறாங்க, அவர் ஜீவ சம்மதியடைஞ்சு 180 வருஷம் பூர்த்தியடைஞ்சாச்சு. இங்க இருக்கும் தியானமண்டபத்தில் இருந்து தியானம் பண்ணினா நல்ல மனநிம்மதி கிடைப்பதாக இங்க வந்து தியானம் செய்பவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறாங்க. இங்கு சித்தானந்தரின் சமாதிக்கு வலது பக்கத்தில் முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் சமாதியும் (இப்பொழுது இருக்கும் விநாயகர் சந்நிதி),அவருடைய மனைவி கண்ணம்மாளின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு பின்புறத்திலும், முத்துக்குமாரசாமிப்பிள்ளையின் தம்பி சோமசுந்தரத்தின் சமாதி சித்தானந்தரின் சமாதிக்கு இடப்புறத்திலும் சித்தானந்தரின் விருப்பப்படி வைக்கப்பட்டது.
இந்த ஜீவ சமாதிக்கோவில் தினமும் காலை 7 :30க்கு காலசாந்தி, 10:30 மணிக்கு காலைபூஜை, 11 மணிக்கு உச்சிகால பூஜை மாலை 7:30 மணிக்கு தேசசாந்தி, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷகமும், சிவராத்திரி திருவிழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாசம் அன்னாபிஷேகமும் அன்று அன்னதானமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமணத்தடை நீக்க நாகப்பிரதிஷ்டை வைக்கும் வழிபடும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு எப்படி செல்வதுன்னா, பாண்டிச்சேரியில் உள்ள ECR ரோடுல இருக்கிற சிவாஜி சிலைக்கு பக்கத்தில தெற்கு நோக்கிய ராஜகோபுரம் இருக்கும். அதுதான் சித்தானந்தர் ஜீவசமாதி கோவில்.
மீண்டும் வேறு ஒரு ஜீவ சமாதி கோவிலில் இருந்து உங்களை சந்திக்கிறேன்,
நன்றியுடன்
ராஜி
Subscribe to:
Posts (Atom)









































