Friday, April 03, 2020

சித்தர்கள் இந்து சமயத்தில் மட்டுமல்ல! முஸ்லீம் மதத்திலும் பிறக்கலாம்!! - பாண்டிச்சேரி சித்தர்கள்

இறைவன் ஒருவனே! ஆனால் அவனை அடையும் வழிகள் பல உண்டு. அவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து, பௌத்தம், சீக்கியம்... என பல்வேறு பெயர் கொண்ட பாதைகள் இருக்குன்னு பெரியவங்க சொல்வாங்க.
இது தெரியாம என் மதம் உயர்ந்தது, எனது கடவுள்தான் சிறந்தவர்ன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம்.  சக மனுசனை அவமதிக்குறதையோ இல்ல மதத்தின் பெயரால் சக மனிதனை துன்புறுத்துவதையோ எந்த கடவுளும் ஏற்றுக்கொள்வதில்லை. கொரோனா வைரஸ் உருவாகி கொத்து கொத்தாய் மனித உயிர்களை இழந்துக்கிட்டிருக்கோம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் வீட்டை மறந்து தன்னை பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிரா போராடும்போது டெல்லி மாநாட்டில்தான் வந்ததுன்னும் , இல்ல ஈஷாவில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தின்போதும், திருப்பதி கோவில், திருவண்ணாமலை கிரிவலத்தினால்தான் பரவுச்சுன்னு இன்னொரு பக்கமுமாய் அடிச்சிக்கிட்டிருக்கோம். இப்படி நாம அடிச்சுப்போம்ன்னு தெரிஞ்சோ என்னமோ இறைவனை அடைய மத ஒரு பொருட்டல்ல, இறைவன் பெயர்தான் வேறு. மூலம் ஒன்றுதான்னு ஒரு முஸ்லீம்  மதத்தை சேர்ந்தவர் சிவசித்தராய் மாறி  நிரூபிச்சிருக்கார்.  அந்த மகா மனிதரை பற்றிதான் இன்றைய பாண்டிச்சேரி சித்தர்கள் பதிவில் பார்க்கப்போறோம். அவரது பெயர் சிவஸ்ரீ மகான் படே சாஹிப். பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல!! மிச்சம் கதையும் படிங்க!


விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில்  கண்டமங்கலம் ரயில்வே கேட் இருக்கு. இதன் இடபுறமாக கீ.மீ பயணம் செய்தால் சின்னபாபு சமுத்திரம்ன்ற ஊர்வரும்.  நகர்புறத்திலிருந்து சற்று விலகி அமைதியாக இருக்கும் இந்த இடத்தில்தான் மகாசித்த புருசரான ஸ்ரீபடே சாஹிப் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. பிறப்பால் இஸ்லாமியராக கருதப்படும் இந்த மகான்,மதம் கடந்து எல்லாவித மக்களாலும் வழிபாடு செய்யப்படுகிறார்.
புதுவையில் உள்ள சித்தர்கள் எல்லாம் 1800களில் வாழ்ந்து ஜீவசமாதியடைந்ததால் அவர்கள் யார்அவரது பூர்வீகம் என்ன?! தாய் தந்தை யார்?! அவர் எங்கிருந்து, எப்படி புதுவை வந்தார்?! மாதிரியான விபரம் ஏதும் நமக்கு தெரியலை. அதுமாதிரிதான் இந்த மகானுக்கும் தெரியல.  ரிஷிமூலம்நதிமூலம் ஆராயக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க.  மஹான் படே சாஹிப்ன்ற சொல்லப்படும் உருது வார்த்தைக்கு மகா ஞானின்னு அர்த்தமாம்.   இவர் பல வெளிநாடுகளில் வசித்து பின் இந்தியா வந்து குறிப்பாக தமிழகம் வந்துதமிழ்நாட்டில் சிலகாலம் வசித்து பின்னர் புதுச்சேரிக்கு வருகை தந்ததாக செவிவழி செய்திகள் சொல்கின்றது. அந்தகாலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் சொல்லித்தான் மகானின் உருவம் இப்படித்தான் இருக்குமென உருவகப்படுத்தி இன்றுவரை வழிபடுகிறார்கள். நடுத்தரமான உயரமும்தலையில் ஒரு குல்லாவும்கண்களில் ஒரு கருணையும் முகத்தில் நல்ல தேஜசும், சிவந்த நிறமும்இடுப்பில் ஒரு அரையாடையும், எப்பொழுதும் ஏதாவது மந்திரங்களை உச்சரிக்கும் உதடுகளும்அவரை மக்களிடம் வித்தியாசமாக காட்டினயாருடனும் எதுவும் பேசமாட்டாராம்எப்பொழுதும் மௌனமாகவே இருப்பாராம்.

சின்னபாபு சமுத்திரத்தில் தங்கி இருந்த இவர் அவ்வப்போது அருகில் உள்ள திருக்கனூருக்குச் செல்வாராம்சில சமயங்களில் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதுகூட யாருக்கும் தெரியாதாம். திருக்கனூரிலும் இல்லாமல். சின்னபாபு சமுத்திரத்திலும் இல்லாமல்  சூட்சும உடலில் உலவிக் கொண்டிருப்பார். பல்வேறு சித்துக்கள் கைவரப் பெற்ற இவர், ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களிலும் காட்சி அளிப்பாராம். இந்த மகான் எப்பொழுதும் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருப்பாராம். அவருக்கு அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்குமாம். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அவர் இருந்த இடத்திற்கு அருகே உள்ள மகிழ மரத்தை அப்பிரத்ட்சணமாகச் சுற்றி வரும்படி சாடையில் கூறுவாராம். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை கும்பிட்டு நன்றி சொல்வர்களாம். சிலருக்கு இவர் விபூதிப் பிரசாதம் கொடுத்து அதை நெற்றியிலும் உடலிலும் பூசச்சொல்லி நோயை குணப்படுத்தினாராம். மற்ற சிலருக்கோ தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை தீர்த்தமாக கொடுப்பார். அதை அருந்தியதுமே மக்களின் நோய்கள் குணமாகியதாம். சிலரை மட்டும் தன கைகளால் தொட்டு ஆசிர்வதிப்பாராம். வேறு சிலருக்கோ அவர் முன்பு இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்தபோது கண்டறிந்த பச்சிலைகளை கொடுத்து நோயை குணமாக்குவாராம். இவ்வாறு எல்லாத்தரப்பு மக்களின் நோயினையும், தன்னை  அவரை நாடிவந்த மக்களின் குறை தீர்த்து நல்லது செய்தாராம்.
இந்த மகான் யாரிடமும் பேசுவதில்லை. எப்பொழுதும்  மௌனமாகவே இருப்பாராம்அதனால் அவருக்கு எண்ணங்கள் இல்லாமல் போனதால் மனம் அமைதியாகவே இருந்தது. மனம் சிந்திக்காமல் இருந்ததினால்இவ்வுலக பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி முழு ஆன்மீக வாழ்வுக்கு மாறிவிட்டது. ஆகையால் இவருக்கு  இரவு, பகல் கிடையாது. உலக வாழ்க்கையில்  இருந்து  ஆன்மீக வாழ்வுக்கு தன்னை மாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான  காரியமல்ல. அதற்கு பஞ்சபூதங்களை அடக்கிஆளவேண்டும். அப்படி இருந்ததினால்தான் அவரால் தேக சுதந்திரத்தை விடமுடிந்தது.. போக  சுதந்திரத்தை நீக்கமுடிந்தது.. ஜீவ சுதந்திரத்தை விலக்கமுடிந்தது. தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் எல்லாம் தங்கள் குறைகளை மகானிடம் கூறி அதிலிருந்து விடுபட்டு சென்றனர். சிலர் குறைகளை கேட்டு தலையசைப்பாராம், அவர்களுக்கு குறைகள் தீர்ந்துவிடுமாம். சிலர் குறைகளை சொல்லும் போது மௌனமாகவே இருப்பாராம்.
ஒருமுறை இந்த மகான் மரத்தடியில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் பொழுதுநான்குபேர்ஒரு கட்டிலில் ஒரு சிறுவனை வைத்து தூக்கிக்கொண்டு வந்தனராம்அப்பொழுது மகானை பார்த்ததும் அவரருகே கட்டிலை இறக்கினர். அவ்வளவுதான்மகான் திடீரென கோபப்பட்டு பக்கத்தில் இருந்த ஒரு கம்பினை எடுத்து கட்டிலை தூக்கிவந்தவர்களை அடிக்க விரட்டினார். அவர்களும் பயந்துபோய் கட்டிலை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவனும் எங்கே தன்மீது அடிவிழுந்துவிடுமோ என பயந்துபோய் அவனும் வேகமாக ஓட ஆரம்பித்தான். மகானும் அவனை வேகமாக துரத்தசிறுவனும் வேகமாக ஓடிவிட்டான். உடனே மகான் அமைதியாக திரும்பி வந்து எப்பொழுதும் தான் அமர்ந்திருக்கும் மரத்தடியில் அமைதியாக அமர்ந்துவிட்டார். கட்டிலை போட்டு ஓடியவர்கள் ஓரிடத்தில் நின்று,  ஏன்?இந்த மகான் இப்படி செய்கிறார் என யோசித்தவாறே திரும்பிப்பார்க்கஅவர்கள் கூட்டி வந்த சிறுவனும் வேகவேகமாக ஓடிவருவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். அவனைப் பார்த்து சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். பிறந்தது முதல் இதுநாள்வரை நடக்கவே நடக்காத, கால்கள் செயலிழந்த சிறுவன் அவன். அவனைக் குணப்படுத்தவே அவர்கள் மகானிடம் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். மகான் தங்களை அடிப்பதுபோல் பயம்காட்டி சிறுவனின் நோயை குணமாக்கியதற்கு நன்றி சொல்லி மகானின் கால்களில் வீழ்ந்து வணங்கி நின்றனர். வழக்கம்போலமகானோ, ஏதும் அறியாதவர்போல் எங்கேயோ பார்த்துக்கொண்டு மரத்தடியில் அமைதியாக வீற்றிருந்தார். 
சாஹிப்என்றால் உயர்ந்தவர் என்று பொருள். படேஎன்றால் பெரிய என்பது பொருள். தன் பெயருக்கேற்றவாறி மிகப் பெரிய சித்தயோகியாக, தவப்புருசராக விளங்கி வந்தார் சிவ ஸ்ரீபடே சாஹிப். சிவஸ்ரீ என்னும் அடைமொழிக்கேற்ப, இமயமலையில் தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் பல ஆண்டுகளாக, பல அடிகள் ஆழத்தில் புதைந்திருந்த உளி படாத நிஷ்டதார்யம் என்னும் கல்லை தனது ஆழ்நிலை தியானத்தின் மூலம் கண்டறிந்துஅதனை இறையருளால் வெளிக்கொணர்ந்து அழகிய லிங்கமாக உருவாக்கி, தம்மை நாடி வரும் மக்கள் வழிபடுவதற்காக, தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயமாகப் பிரதிஷ்டை செய்தார்.
ஒருநாள் இந்த மகான் வனத்தாம்பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். வரும்வழியில் அவரை ஒரு கருநாகம்  தீண்டியது. இதைக்கண்ட மக்கள் இந்த மஹானுக்கு என்ன ஆகுமோ என பயந்து புலம்பினார்கள். ஆனால் இவரோ எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் போய்க்கொண்டே இருந்தார்.  மக்கள் அவர் கூடவே  ஓடி விஷமுறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக்கேட்ட மகான் ஒரு சிறிய புன்முறுவலோடு போய்க்கொண்டே இருந்தார். மக்கள் பயந்து அவர் கூடவே பண்ணைக்குப்பம் வரை போனார்கள். இரவு முழுவதும் மகானை கவனித்துக்கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது.
பகவானிடத்திலும், சர்வேஸ்வரனின் பெரிய பிள்ளையான விநாயகரிடமும் ஞானசொருபமான உள்ளாழ்ந்த பக்தியை இந்த மகான் கொண்டிருந்தார். விநாயகரின் முன்பு தியானத்தில் அமர்ந்த இவரது இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கிறது. ஏகாந்த நிலை தொடர்கிறது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்து உணர்த்துகிறது. அங்கிருந்த மக்களுக்கு பேசுவதற்கு ஏதும் இல்லை, சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை, ஏங்குவதற்கும் ஏதும் இல்லை. இத்தைகைய விவரிக்க தெரியாத தெய்வீக  நிலையில் அங்கு அமர்ந்திருந்தார் மகான் படே சாஹிப் அப்போது அவரை தீண்டிய பாம்பு (கருநாகம்) ஆனந்தமாக அங்குவந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் ஆனந்தத்தில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப்பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவர்களை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின் மேல் படம் எடுத்தது சில நொடிகள் நின்றது. பின் இறங்கி மூன்றுமுறை தன் தலையால் தரையில் கொத்தி  அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறந்தது. நிஷ்டை கலைந்து, தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் கருநாகத்தை பார்த்தார். தன் தலையை சுருட்டி தலை குனிந்து வணங்கியது. அவர் பாதத்தில் ஆடிபடியே தன் உயிரை விட்டது. அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்சம் அளித்தார். அந்த பூஉடலுக்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளை செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டனர். கொடிய விஷத்தை தந்த நாகத்திற்கு கூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது. மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணை இட்டு ஆசிர்வதித்தார். .
அவர் இருக்கும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகளிடம் செல்வார். ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார். பின் தாம் அங்குள்ள குழியில் உட்கார்ந்துக் கொண்டு மேலுள்ள மண்ணைப் போட்டு தம்மை மூடச் சொல்வார். குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து பார்க்க கையிலுள்ள மண் சர்க்கரையாக மாறியிருக்கும். குழந்தைகள் இந்த அதிசயத்தை தங்கள் பெற்றோரிடம் சொல்வார்கள். ஊர் மக்கள், திரண்டு வந்து மண்ணால் மூடப்பட்ட மகானை காப்பாற்ற மண்ணை எடுத்துவிட்டு பார்ப்பார்கள். மகான் மண்ணுக்குள் இருக்க மாட்டார்.  மகானை வேறு இடத்தில் பார்த்ததாக சிலர் வந்து சொல்வார்கள். அங்கு சென்று தேடினால் அங்கும் இருக்க மாட்டார். ஊர்மக்கள்,வருத்தமுற்று இருக்கையில் கூட்டத்தினின்று திடீரென்று வெளிவந்து காட்சி கொடுப்பார்.
தனது ஆத்ம சாதனை முடிவுக்கு வரும் நாளை இந்த மகான் உணர்ந்துகொண்டார். பரம்பொருளோடு கலப்பதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார். அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை குழி தோண்ட சொன்னார். குழந்தைகள் கையில் ஆளுக்கொருப்பிடி மண்ணை அள்ளிக்கொடுத்துவிட்டுஅவர்கள் கையை மூட சொல்லிவிட்டு குழியில் இறங்கினார். தன்மேல் மண்ணை போட்டு மூட சொல்லிவிட்டுமண்மூடிய பிறகு தங்கள் கைகளை திறந்துபார்க்கும்படி சொல்லிவிட்டு குழிக்குள் சென்று விட்டார். அந்தக்குழந்தைகளும் எப்பொழுதும் போலவே மஹான் தங்களுடன் விளையாடுகிறார் என்றெண்ணி அவர்மேல் மண்ணைப்போட்டு மூடிவிட்டு பிறகு தங்கள் கைகளை திறந்து பார்த்தபோது அவர்கள் கையில் மிட்டாய் இருந்தது. குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஊர்மக்களிடம் சென்று சேதிசொல்ல மக்களும் அங்குவந்து இம்முறை,உண்மையிலேயே மகான் சமாதியடைந்ததை உணர்ந்து கொண்டனர். மகான் படேசாகிப் சின்ன பாபு சமுத்திரத்தில் வெட்டவெளியில் கி.பி.1868 பிப்ரவரி மாதம் 12-ம் தேதி செவ்வாய்க்கிழமை சமாதியடைந்தார் என குறிப்பு உள்ளது. பிறகு சிலநாள் கழித்து பம்பாய் சுவாமி என்னும் மகானின்  சீடர் இந்த மகானின்  சமாதி மேல் கட்டிடம் எழுப்பி மக்கள்வழிபட வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.
மகானின்  மகத்துவத்தை  உணர்ந்த   மக்கள்   தினமும்    சமாதியில்
வழிபாடு செய்கின்றனர். பிரதி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சமாதிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும். என்பது இங்கு வருபவர்களின் அனுபவப்பூர்மான நம்பிக்கை..
மகான் படே சாஹிப் பிறப்பால் ஒரு இஸ்லாமிய ஞானியானாலும்பரம்பொருளே எல்லா வடிவாகவும் இருக்கின்றான் என்று உணர்ந்தவர். இவரது ஜீவ சமாதியில் அனைத்து மத மக்களும் வழிபாடு செய்கின்றனர். வியாழக்கிழமைதோறும் இந்து, இஸ்லாமிய மக்கள் இங்கே திரளாக வந்து வழிபடுகின்றனர். மனநோய், செய்வினை, ஏவல் கோளாறுகள் போன்றவை நீங்கும் தலம் என ஆலய அறிவிப்பு தெரிவிக்கின்றது. இது இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமாதி ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ஜீவசமாதி முன் அணையா விளக்கு எப்போதும் ஒளிவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. காற்றிலும், மழையிலும் கூட அணைவதே இல்லை. ஒருசமயம் விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது.விளக்கு அணையப் போகும் சமயம்அப்போது அங்கு படுத்திருந்த ஒருவரின் கனவில் சொல்லி எண்ணெய் ஊற்றச் செய்தாராம் இந்த மகான். தினம்தினம் மக்கள் தங்கள் குறைகளை சமாதிமுன் நின்று மனம் விட்டுசொல்லி அழுகின்றனர். அவர்களின் பெருந்துயர் தீர்கிறது என்பது அனுபவபூர்வமான உண்மை. சிலர், இந்த திருக்கோயிலிலேயே இரவு தங்கியிருந்து வேண்டிக் கொள்கின்றனர். சிலர் நேர்த்திக் கடனாக பிஸ்கட்டும்,அன்னதானமும் வழங்குகின்றனர்.


ஆண்டுதோறும் மகான் படே சாஹிபிற்கு குருபூஜை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றது. இந்த ஆண்டு அவரது 152-ம் ஆண்டு குருபூஜை 7-ம் தேதி மார்ச் மாதம் 2020-ம் ஆண்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது . குருபூஜையன்று ஒரு பெரிய அண்டாவை வைத்து விடுகின்றனர். மக்கள், தங்கள் வசதிகேற்ப, தங்கள் வீட்டிலேயே சாதம் கிண்டி அந்த அண்டாவில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். அச்சாதத்தை எல்லோருக்கும் அன்னதானமாக இங்கு கொடுக்கப்படுகிறது.விழுப்புரத்திலிருந்து கண்டமங்கலத்திற்கு பஸ் வசதி உள்ளது. புதுச்சேரி பஸ்ஸ்டாண்டிலிருந்து 20 கி.மீ தொலைவில்  இந்த சித்தரது ஜீவசமாதி இருக்கு. 

மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு சித்தரின் ஜீவ சமாதியின் பதிவோடு உங்களை சந்திக்கிறேன்.
நன்றியுடன்
ராஜி

24 comments:

 1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது சித்தர்கள் இந்து சமயத்தில் மட்டுமல்ல! முஸ்லீம் மதத்திலும் பிறக்கலாம்!! – பாண்டிச்சேரி சித்தர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
  Replies
  1. மிக்கநன்றி,என்னுடைய பதிவை இணைத்தமைக்கு,நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்....

   Delete
 2. சித்தர்களுக்கும் ,ஞானிகளுக்கும் ஏது சாதியும் ,மதமும் ? ஸ்ரீரடி சாய் பாபாவை பற்றி கூட மதக்கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவரும் எல்லோராலும் வணங்கப்படுகின்றார் தானே ? மனிதன் தானே மதத்தை கண்டுபிடித்து ,பணத்தை கண்டுபிடித்து சவக்குழிக்குள் விழுகின்றான் !ஏதோ மனிதன் பிறந்து விட்டான் ?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ,மதம் இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான பாதை ஆனால் சிலர் அதை வியாபாரமாக்கி விடுகின்றனர்..

   Delete
  2. சகோ,வேண்டாமே ,அண்ணன் ,அண்ணா அப்படியே பதில் அளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்!

   Delete
  3. சரிங்க அண்ணா...

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. சகோதரி ,இன்று ஆன்மிகம் வியாபார பொருளாகி விட்டது .வருத்தம் தரும் செய்திதான் !நல்ல கோயில்களையும் இப்படி சித்தர்கள் மடங்கள் கூட இந்து சமய அற நிலையத்துறை வசம் . ஆனால் நேற்று நான் முகநூலில் பதிவு செய்துள்ள படவேடு கைலாசநாதர் கோயில் கொடுமையிலும் கொடுமை !மன்னர் ராஜசிம்மன் கட்டிய தஞ்சைக்கு இணையான கற்கோயில் -மூலவர் கைலாசநாதர் கைகள் உடைந்த நிலையில் பரிதாபம் -காலப்பொக்கிஷம் கண்ணெதிரில் அழிந்து கொண்டிருக்கின்றன -அதே சமயம் புதிய புதிய கோயில்கள் உருவாகி வருகின்றன !பிரத்யங்கரா , ஸ்ரீபுரம், மேல்மருவத்தூர் ,பெரிய பெரிய ஆஞ்சநேயர் ,அம்மன் ,வராஹி (மக்களுக்கு instant coffee போல உடனே எதிரி அழியவேண்டும், பணம் காசு குவிய வேண்டும் என்ற பேராசை -சிலர் அதனை காசாக்கி வருகின்றனர்) சிலைகள் ,கல்கி ஆஸ்ரமம் ,இவை பணம் கொட்டி கொண்டு உள்ளன . நல்ல புராதன கோயில்கள் மெல்ல அழிந்து வருகின்றன ! மக்கள் அக்கோயில்களுக்கும் செல்ல வேண்டும்-ஒரு கால பூஜை,நைவேத்தியம் ,விளக்கு இவற்றுக்காவது அரசு வழி வகை செய்ய வேண்டும் ! சுவாமிகளுக்கும் சுக்கிர தசை வர வேண்டும் போல- இல்லாவிடில் எப்போதுமே ஏழரை சனி பிடித்த நிலை தான் பழைய சுவாமிகள் கோயில்களுக்கும் ! பரிதாப நிலை ,விரைவில் மாற வேண்டும் !நன்றி

   Delete
  6. உங்கள் பதிவு வேதனை தருகிறது அண்ணா,ஆனாலும் சிலவிஷயங்கள் இங்கே நாம பகிர்த்துக்கவேண்டியது அவசியமாகிறது.இந்து சமூகம் என்பது இன்றைக்கு மிகப்பெரிய சோதனைக் களத்தில் உள்ளது,காசுக்காக மதமாற்றுவது ஒருபுறம்,அறியாத பாமரமக்களிடம் இவர்தான் உண்மை,அவர்பொலி,நாங்கள் தான் உலகை வழி நடத்த வந்தோம்,அமைதிமார்க்கம் என்றெல்லாம் படிப்பறிவு கேட்டறிவு இல்லாதமக்களிடம் சென்று சுலபமாக மூளை சலவை செய்யமுடிந்தது ஒரு காலம் ,ஏன்னா அப்பொழுது விழிப்புணர்வு இந்துசமுகத்திடம் இல்லை சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில் பல்வேறு வினோதமான பழக்கவழக்கங்களை கொண்ட இவர்களை மதமாற்ற கும்பல்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வெளிநாட்டினரின் காசுக்காக இங்கு உழைக்க ஆரம்பித்தனர் பலனும் கண்டனர்.இந்த கார்போரேட் சாமியார்கள் காசுக்காக மடங்களை நடத்தினாலும் மதக்கோட்பாடுகளை பற்றிய கருத்துக்களை மிக துல்லியமாக பாமரமக்களிடம்,அவர்களுக்கு புரியும் வகையில் கொண்டு சேர்த்தனர்.அதன் பலன் இப்பொழுது யாரையும் ஏமாற்றி மதமாற்றம் செய்யமுடியாது,என்கடவுள்தான் பெரிது என்று சொல்பவரிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கின்றனர்,மதமாற்ற வியாபாரிகளிடம் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை,காரணம் விழிப்புணர்வு.

   Delete
  7. இரண்டாவது பழையகால கோவில்கள் அழிந்து போவதற்கு முக்கிய காரணம்,இந்து அறநிலைய துறை,அவர்கள் வருமானம் உள்ள கோவில்களை மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.மற்ற கோவில்களை பற்றி அவர்கள் கண்டுகொள்ளாமல் போனதால்தான் இத்தனைசிலை திருட்டு
   எல்லாமே,இதே தொல்லியல் துறையின் கீழ் சென்றுவிட்டால் எவரும் சுலபமாக கோவில் சொத்தை கொள்ளையடிக்கமுடியாது ,ஆனால் ஒருபக்தன் என்ற முறையில் பார்த்தல் மிகவும் ஆபத்தானது, நமது வழிபாட்டு தலம் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும், தொல்லியல் துறை எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பார்கள்.

   தொல்லியல் துறைக்கு செல்வதால் கோவில்களுக்கு நன்மையுண்டா என்று கேட்டால் ?ஆமாம் சில நன்மைகள் உண்டு அது நாம் வரலாற்றை மதிப்பவர்களாக இருந்தால் மட்டுமே...

   தொல்லியல் துறையினர் கோவிலின் பழமையை அப்படியே வைத்திருப்பார்கள். வழிபாட்டுத்தலமாக தெரியாது, நமது பெரியகோவில் போன்று அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் சிக்கல்கள் நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் எல்லா பழமையான கோவில்களிலும் மரமாத்து பணிகள் செய்கிறேன் என்கிற போர்வையில் பழமையான சுவர், தூண்களை அதன் உண்மையான தன்மையை சிதைத்து விடுகிறார்கள். .
   விளக்குகள் போடுவதற்கும், தண்ணீர்குழாய் பதிப்பதற்கும் கோவில் சேதப்படுத்தபடுகிறது.இப்படி எத்தனையோ கோவில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தரையில் பாதிக்கப்பட்டிருக்கும் கற்களில் சில வரி எழுத்துக்கள் உள்ளன அது என்ன என்று எங்கயாவது அறநிலைதுறை குறித்துவைத்திருக்கிறதா? மீனாட்சியம்மன் கோவில் பிரகாரத்தில் எவ்வளவு கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. திருப்பதி கோவில் சுவர்களில் எல்லாம் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறது அதை யார் பாதுகாக்கிறார்கள்?
   இந்த கோவில்கள் எல்லாம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை,ஆனால் அதிலிருக்கும் வரலாற்று குறிப்புகளை பற்றி அக்கறை கொண்டதாக தெரியவில்லை.வழிபாட்டோடு வரலாறும் அவசியம்.இல்லையென்றால் வருங்கால சந்ததியருக்கு வெறும் வழிபாடு மட்டுமே சென்றுசேரும். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டோடு தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருந்தால் நீங்கள் சொன்னதுபோல் உள்ள பிரச்சனைகள் வரவாய்ப்பு இருக்காது.

   Delete
  8. என்னவோ சகோதரி , பழமையான கோவில்கள் காப்பாற்றப்படவேண்டும் . அன்று இன்ஜினியரிங் படித்தவர்கள் இல்லை -ஆனால் தஞ்சை கோபுர கலசம் ஏற்றி நிலை நிறுத்தியதை இன்றும் உலகமே பாராட்டுகிறது-தாராசுரம் , இன்னும் எத்தனையோ கோவில்கள் =ஆவுடையார் கோயில் அதிசயம் சொல்லி முடியாது - சுரங்கபாதைகள் கோயில்களுக்குள் அமைக்கப்பட்டன.மதுரை மஹால் இல் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுரங்கப்பாதை இருந்ததாக சொல்லப்படுகின்றது-யாரிடம் வேண்டுமானாலும் நிர்வாகம் இருக்கட்டும்-நமக்கு கவலையில்லை-புராதனம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகள் அங்கே பணியில் இருக்க வேண்டும்...இதெல்லாம் எனக்கும் கூட ஆசைதான் ஆனால் உங்களை போல தலைப்பில் காணுகின்ற காணாமல் போன கனவுகளாக தான் இருக்க முடியும்- நிஜமாகுமா என்பது பெரிய கேள்வி குறி தான் என் சகோதரி -எனது ஆதங்கம் அதுதான்-திருப்பதி கோயிலுக்கு தங்க தகடுகள் பொருத்தப்பட்டது கூட நமது தமிழர்களின் தர்மத்தை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தான்-திருப்பதி கருவறையில் கொங்கண சித்தர் ஜீவ சமாதி உள்ளது -கருவறையில் சுற்று சுவற்றில் உள்ள சிலை இன்றும் நைவேத்தியம் நடக்கின்றது- 1977 ல் NT ராமராவ் காலத்தில் தான் மக்களுக்கு மறைக்கப்பட்டது - இது போல அநியாயங்கள் நிறைய நடக்கின்றன -தட்டி கேட்போர் எல்லாம் வாய் மூடி மேலோர் சொற்படி மெழுகுவத்தி அகல் விளக்கு தான் ஏற்ற வேண்டும்-மீறுவோர் சட்டம் ஒரு இருட்டறையில் மூடப்படுவர் -அங்கே நீதி எனும் அகல்விளக்கு எரியாது - தண்டனை தான் கிடைக்கும்-இதற்க்கு பயந்தே பலர் வாயை மூடி கொள்கின்றனர் -நானும் அப்படிதான் -நன்றி சகோதரி ,மேலும் நாளை இன்னும் நிறைய பேசுவோம் !

   Delete
 3. தகவல்கள் சிறப்பு. இப்படி எத்தனை எத்தனை பேர்...

  தொடரட்டும் தகவல் பகிர்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய நிறைய பேர் இருக்கிறார்கள் அண்ணா,நமக்குத்தான் தெரியவில்லை..

   Delete
 4. சித்தர் வரலாறு அற்புதம்.
  இன்று வேண்டி கொண்டேன் படேசாகிப் சுவாமியிடம் உலகமக்கள் நலமோடு வாழ வேண்டும் என்று.

  ReplyDelete
  Replies
  1. மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்,வாழும் வகை புரிந்து கொண்டான்,மனிதனாக வாழ மட்டும் ஏனோ தெரியவில்லை?அந்த விளைவு இன்று உலகையே ஆட்டிப்படைக்கிறது. உங்களுடன் சேர்ந்து நானும் உலகமக்கள் நன்மைக்கு வேண்டிக்கொள்கிறேன் சகோ..

   Delete
 5. நம்ம 'அமாவாசை'க்கு தான் இந்தப்பதிவை அனுப்ப வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. என் சார்பில் நீங்களே அனுப்பிவிடுங்கள் அண்ணா..

   Delete
 6. சுவாரஸ்யமான அறியாத தகவல்கள்.   திரு ராமநாதன் கருத்தை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அண்ணா,அறியாத தகவல்களை அறியத்தருவதே நமது பதிவின் நோக்கம்,மதங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர ,மனிதனுக்கு "மதம்' பிடிக்க கூடாது,அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன. அனைத்து மதங்களும் இறைவன் ஒருவனே என கூறுகின்றன. இதை அறியாதவர்கள் மூடர்களாகின்றனர்.நாம் பள்ளி பருவத்தில் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக ஒருவருடன் ஒருவர் பழகுகிறோம். அப்போது மதம் நமக்கு தெரிவதில்லை. வெளி உலகிற்கு வந்த பின்னர் தான் அனைத்தும் மாறுகிறது.மதங்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்."மதம்' மனிதனுக்கு பிடிக்க கூடாது; அது நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்,

   Delete
 7. இப்போதுதான் இத்தலத்தைப் பற்றி அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அப்பா,இந்த ஒரு சித்தர் மட்டுமல்ல பாண்டிச்சேரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட சித்தர் சமாதிகள் இருக்கின்றன.வாய்ப்பு கிடைத்தால் எல்லா ஜீவசம்மதிக்கும் சென்று தரிசித்து வாங்க..

   Delete
 8. நன்றி சகோதரி ,ஒவ்வொரு மாதமும் வருகின்ற ஆயில்ய நக்ஷத்திரம் விஷேசம் என்று பதிவு செய்துள்ளீர்கள் !நீங்கள் தெரிந்து பதிவு செய்தீர்களா அல்லது இந்த மகான் திருவருளால் உங்களுக்கு உணர்த்தப்பட்டதா என்று தெரியவில்லை !நேற்று மாலை முதல் இன்று மாலை 5 மணி வரை ஆயில்யம் நக்ஷத்திரம் !நாங்கள் பார்த்தது,படித்தது சித்தர் அருள் தான் ! சகோதரி,நன்றி -இறையருள் உங்களுக்கு நிரம்ப கிடைக்கட்டும் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்று அண்ணா..எழுதுவது மட்டுமே என்பணி,மீறி நடப்பவைகள் எல்லாம் இறைவன் செயல்..

   Delete
  2. உண்மை சகோதரி -தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு தெய்வங்கள் செய்வது செய்தது தெரியாமல் உதவிகள் செய்யும் . எனக்கு மிக்க ஆச்சரியமாக இருந்தது -ஆயில்ய நக்ஷத்திரம் அன்று நீங்கள் பதிவு செய்ததும் நான் ஆயில்ய நட்சத்திரம் அன்று அதை படித்ததும் அந்த சித்தர் அருட்செயலே -நமக்கு தெய்வத்தின் ஆசிகள் என்றும் உண்டு சகோதரி - நல்லதே நடக்கும் சகோதரி எதனையும் எதிர்பாராது பதிவுகள் செய்கின்ற சகோதரி உங்கள் வாழ்விலே நல்ல ஒரு திருப்புமுனை வரும் -எனக்கு நம்பிக்கை இருக்கின்றது

   Delete