Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts
Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts

Monday, February 10, 2020

காதல் என்னவெல்லாம் செய்யும்?!- பாட்டு புத்தகம்


ஒரு பாட்டு என்னவெல்லாம் செய்யும்?! பாட்டு யோசிக்க வைக்கும், அழ வைக்கும், திருந்த வைக்கும், கண்மூடி தூங்க வைக்கும், எரிச்சல்பட வைக்கும், சங்கடப்பட வைக்கும்.... இன்னும் சொல்லப்போனா அதனுடனே வாழவைக்கும் என இந்த பாட்டை கேட்டப்பின் தான் உணர்ந்தேன். காதல்ன்னா என்ன?! அது மனசுல இருக்கா?! இல்ல மூளையில் இருக்கா?! அதோட பலம் எது?! பலவீனம் எதுன்னு அரிதான தமிழ் வார்த்தைகளை வச்சு அற்புதமா வந்திருக்கும் பாட்டு இது,

எப்பயும்போல ரொம்பவே லேட் நான்.. அதான் இந்த பாட்டை இப்போதான் கேட்க நேர்ந்தது.வசீகரமான இசைதான். ஆனா, சிலருக்கு இரைச்சலாகூட இருக்கலாம்.  நாசர் பன்முக கலைஞர்ன்னு தெரியும் ஆனா, காதலை பற்றி எளிமையாய் இப்படி புரிய வைப்பார்ன்னு தெரியாது. பாடலின் பிற்பாதியில் வரும் ம்ம் தேடவேண்டாம் என தொடங்கும் காதலை பற்றிய வர்ணனையில் நவரசத்தையும் குரலில் காட்டி இருப்பார். 

காதலை கொண்டாடும் இந்த வாரத்தில் காதலை பத்தின பாட்டை கேட்டு பாருங்க..



பேரன்பே காதல்..
 உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சதா…
ஆறாத ஆவல்

 ஏதேதோ சாயல் ஏற்று
திரியும் காதல்
 பிரத்யேக தேடல்

 தீயில் தீராத காற்றில்
புல் பூண்டில் புழுவில்
உளதில் இளதில்

 தானே எல்லாமும் ஆகி
நாம் காணும் அருவமே

 இத்யாதி காதல்
இல்லாத போதும்
தேடும் தேடல்
சதா…
மாறாது காதல்
மன்றாடும் போதும்
மாற்று கருத்தில் மோதும்
மாளாது ஊடல்


 நாம் இந்த தீயில்
வீடு கட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில்
ஊஞ்சல் கட்டும் தூசி

நாம் இந்த நீரில்
வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில்
காமத்தின் ருசி

 காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டைரி

காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிறி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

 ஓர்… விடைக்குள்ளே…
வினாவெல்லாம்… பதுங்குதே…
நாம்… கரைந்ததே…
மறைந்ததே… முடிந்ததே…

கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் எழிலிசையே
பஞ்ச வர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்… காதலடி…

 காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ... 

திகம்பரி…
வலம்புரி…
சுயம்பு நீ...
நீ…


பிரகாரம் நீ...
பிரபாபம் நீ...
பிரவாகம் நீ...
நீ…

ஆ ஆ...
சிருங்காரம் நீ…
ஆங்காரம் நீ…
ஓங்காரம் நீ...
நீ…

நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
அந்தாதி நீ…
நீ…

காதல் என்னவெல்லாம் செய்யும்?!

 ம்ம்…
தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும்..
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்..

காதல்…
காதல் 11ஒரு நாள் உங்களையும்
வந்தடையும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்...
அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள்...
காதல் தங்கும்...
காதல் தயங்கும்...
காதல் சிரிக்கும்...
காதல் இனிக்கும்...

காதல், கவிதைகள் வரையும்...
காதல் கலங்கும் ...
காதல் குழம்பும்..
காதல் ஓரளவுக்கு புரியும்..
காதல் விலகும்..
காதல் பிரியும்..

கதவுகளை மூடாமல்
வழி அனுப்புங்கள்..
காத்திருங்கள்..
ஒரு வேளை காதல் திரும்பினால்?!
தூரத்தில் தயங்கி நின்றால்?!
அருகில் செல்லுங்கள்!!
அன்புடன் பேசுங்கள்...

போதும்…
காதல் உங்கள் வசம்..
உள்ளம் காதல் வசம்..
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்…
படம்:  96
இசை: கோவிந்த் வசந்தா
எழுதியவர்: கார்த்திக் நேத்தா 
பாடியவர்: சின்மயி, கோவிந்த் வசந்தா, பத்ரா ராஜின், நாசர் 
நடிப்பு: திரிசா, விஜய் சேதுபதி

நன்றியுடன்,
ராஜி.

Sunday, May 12, 2019

வாழா என் வாழ்வை வாழவே..... - பாட்டு புத்தகம்

வாழ்க்கை பயணத்தில் அம்மா, அப்பா, பிள்ளைங்க, உற்றார், உறவினர்கள்ன்னு எல்லாருமே சக பயணியே! அவரவர் இடம் வரும்போது சொல்லாமகொள்ளாம இறங்கி போய்க்கிட்டே இருப்பாங்க.   என்னதான் கூட்டுக்குடும்பம், நண்பர்கள், சமூக வலைத்தளம், குடும்பம்ன்னு இருந்தாலும் தனிமை மட்டுமே நிரந்தர நண்பன். அவன் மட்டுமே நம்மோடு கடைசி வரை இருப்பான். 

அப்பா அம்மா ஆசைப்படி படிச்சு, கல்யாணம் கட்டி, அதுக்கப்புறம் வீட்டுக்காரர், மாமனார் மாமியார் பேச்சை கேட்டு, மச்சினர் ஓரகத்தின்னு கட்டுப்பாடா இருந்து, பிள்ளைகளுக்காக பலதை விட்டுக்கொடுத்து  திரும்பி பார்த்தா என் வாழ்க்கையை என் உறவுகள்தான் வாழ்ந்திருக்கு. என் விருப்பம் எதாவது நிறைவேறி இருக்கான்னு அடிக்கடி யோசிச்சு பார்ப்பேன்...ம்ஹூம்... சாப்பாடு, உடைகள் உறவுகள், அதனால் நேர்ந்த பிரிவுகள்ன்னு எல்லாமே எனக்கு திணிக்கப்பட்டவையே! எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா..ன்ற வடிவேலு காமெடிக்கு தகுந்தமாதிரி இந்த திணிப்புகள் இன்னும் தொடருது....  இந்திய பொண்ணுகளுக்கே உண்டான சாபக்கேடு இது...

எனக்கு ஒரு ஆசை இருக்கு. பிள்ளைகளுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்து, அம்மா அப்பாக்கான கடமைகளை முடித்து...  உறவுகளைலாம் விட்டு தூரமாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு நீர்நிலைக்கு பக்கத்துல வீடு பார்த்து அங்க இருந்திக்கிட்டு,  ஹோம் தியேட்டரோடு ஒரு ரூம்ல ஒரு சுவத்தில்  பிடிச்ச பாட்டு கேசட்(இப்ப பென் ட்ரைவ்), இன்னொரு சுவத்தில்  புத்தகங்கள், ஒரு கம்ப்யூட்டர், அதில் நெட் கனெக்‌ஷன்... மாசம் ஒருக்கா ஊர்ப்பயணம், அதை பகிர்ந்துக்க என் வலைப்பூன்னு இருக்கனும்ன்னு ஆசை.... வீட்டில் சண்டை வந்தால், எப்ப என் கடமை முடியப்போகுதோன்னு அடிக்கடி சொல்வேன்.... 

நான் ஆசைப்பட்டபடி வாழ நினைச்சதை 96 படத்துல  கதாநாயகன் ஒரு பாட்டுல வாழ்ந்திருப்பார். அந்த பாட்டை பார்க்கும்போதெல்லாம் என்னை பார்க்குறமாதிரியே இருக்கும். பிடிச்ச மாதிரி வாழுறதா காட்டினாலும், வாழ்வின் வெறுமையை விஜய் சேதுபதியின் முகம் காட்டிக்கொடுக்கும். பாட்டை கேட்கும்போதெல்லாம் அழாம இருந்ததில்லை..

இந்த பாட்டு முழுக்க அழகான தமிழ்வரிகள் தாண்டவமாடும்...  கார்த்திக் நேத்ரா பாடி  கலக்கி இருப்பார். 


கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை..
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே!!
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே!!

வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்...
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்!!
இங்கே இன்றே ஆழ்கிறேன்!!

ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்.
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்!!
நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்..
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்!!

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா!!
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நானே நானாய் இருப்பேன்..
நாளில் பூராய் வசிப்பேன்..
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்..
வாகாய் வாகாய் வாழ்கிறேன்..
பாகாய் பாகாய் ஆகிறேன்..

தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே!!
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்..
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே..
ஓசை எல்லாம் துறந்தே!!
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்..

திமிலேரி காளைமேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்..
புவி போகும் போக்கில்
கைக்கோர்த்து
நானும் நடப்பேன்..
ஏதோ ஏகம் எழுதே!!
ஆஹா ஆழம் தருதே!
தாய் போல் வாழும் கணமே!
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை!!
நரை வந்த பிறகே.
புரியுது உலகை!!

நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே!!
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே!!

படம் : 96 

பாடியவர்: பிரதீப் குமார்
இசை: கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா
நடிகர்: விஜய் சேதுபதி

நன்றியுடன்,
ராஜி


Sunday, January 13, 2019

ஏன் கூறாமல் போனானோ?! - பாட்டு புத்தகம்

எந்த உறவும் பிறப்பு முதல்  மரணம்வரை சேர்ந்திருப்பதில்லை. அப்படியே சேர்ந்திருந்தாலும் மரணம் யாரையாவது ஒருத்தரை பிரிச்சு கொண்டுபோயிடும். அதனால், உறவின் வருகையும், உறவின் பிரிவும் சகஜம்.  ஆனா, சில பிரிவுகள் இருக்கே. அது கொடும. எங்க போச்சு?! என்ன ஆச்சுன்னு தெரியாம கிணத்துல போட்ட கல்லாட்டம் இருக்கும். 

இன்ன காரணத்துக்காக பிரிவுன்னா, நியாயமான காரணம்ன்னா ஏத்துக்கிட்டு மனசை தேத்திக்கலாம். இல்ல தப்புன்னு மனசுக்கு தோணினா, அழுது, புரண்டி, திட்டி, சாபம் விட்டு, மண்ணை வாரி தூத்திப்புட்டு, நாலு நாள் கழிச்சு தலைமுழுகிட்டு நம்ப பொழப்ப பார்க்கலாம். ஆனா, மூணாவதா ஒரு ரகம் இருக்கு, என்ன ஏதுன்னு சொல்லாம கொள்ளாம டக்குன்னு போய்டுவாங்க, நாம இங்க தலையை பிச்சுக்கிட்டு பைத்தியமாகனும்.
அந்தமாதிரி என்ன ஆனாங்க, என்ன சேதின்னு தெரியாம படும்பாட்டை சொல்லும் பாட்டே.. 96 படத்துல வரும் பாட்டு... முழு பரிட்சை எழுதிட்டு போன பையன் திரும்ப வரலை. ஆஃபீஸ்ல விசாரிச்சா டிசி வாங்கிட்டு போயிருப்பான். என்னன்னு வீட்டுக்கே போய் பார்க்கலாம்ன்னு போனால், வீடு பூட்டி இருக்கும். ஏன் போனான்?! திரும்ப ஏன் தன்னை வந்து பார்க்கலைன்னு அந்த பொண்ணு நினைப்பு காலத்துக்கும் மாறாம அப்படியே இருக்கும். உடல் ஊனம் மாதிரி மனதின் ஊனமது. எதாலும் சரிப்பண்ண முடியாது.
ஏன்...
ஏதும்
கூறாமல் போனானோ?!
ஏன் , நேற்றை
பூட்டாமல் போனானோ?

சாம்பலாய் வனம்
எங்கே என் மேகம்?!
விடுகதையாய் கணம்.
கண்ணீரில் போகும் பாதம்...
தூரமாய் போனதே...
காதலின் கீர்த்தனை.
வீழ்ந்திடும் நீரெல்லாம்
தேடுதலின் பிரார்த்தனை...

ஊரை தாண்டி
போனான் என்றேன்...
அங்கும் இங்கும்
கண் தேடும்.
வேறை தாண்டி
போனான் என்றால்
உண்மை உள்ளே பந்தாடும்.

தீர்ந்ததே கணம்
எங்கே உன் வானம்.
தடையெனவே வரும்
கண்ணீரின் தீரா பாரம்
வேகுதே நாளை
எங்கே உன் பாதை.
சிறகுகளே பாறை
தரையினில்
சாகும் நாரை.
படம்: 96
இசை: கோவிந்த் வசந்தா
பாடியவர்: கௌரி

நன்றியுடன்,

Sunday, May 27, 2018

ஆக்சிஜன் தந்தாளே ! - பாட்டு கேக்குறோமாம்

சினிமா நடிகனுக்கு உடல் அழகு முக்கியம். அதை உணராம உடலை சரிவர கவனிக்காம திறமை இருந்தும் வீணாப்போனவங்க பட்டியலில் இதுவரை கார்த்திக்கும், அஜீத்தும்தான் இருந்தாங்க. அந்த வரிசையில் விஜய் சேதுபதி வந்திடுவாரோன்னு பயமா இருக்கு.  கார்த்திக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச நடிகரா விஜய் சேதுபதிய சொல்லலாம்.  அவரது நடிப்பா?! இல்ல சமூக வலைத்தளங்களில் அவரை பத்தி பகிரப்படும் விசயமா?! இல்ல நட்புக்கும், நன்றிக்கடனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடத்தையான்னு தெரில.  கார்த்திக்கு அப்புறமா முகத்துலயே குறும்பு கொப்பளிக்குறது விஜய் சேதுபதிக்காகத்தான் இருக்கும். அதேமாதிரி, அதிகமா உடலை ஏத்தி இறக்காம, கெட் அப் மாத்தாம அழகா எல்லா கேரக்டருக்கும் பொருந்தி போறார். அதனால், இப்பலாம் விஜய் சேதுபதி படங்களைக்கூட போற போக்குல பார்க்குறேன். 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவன்னு ஒரு படம் வந்திச்சு. லாஜிக் மிஸ்டேக் நிறைய இருந்தாலும், படம் பிடிச்சுட்டுது. என்னமோ இப்ப வரும் பாட்டுகள் மனசுல எதுமே ஒட்டலைன்னாலும் இந்த படத்தில் வரும் பாட்டு அடிக்கடி கேட்க வைக்கும். 
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே!!
கனாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்!!
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்?!
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே...
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
உலா உலா கல்லூரி மண்ணிலா?!
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா?!
முயல் இடை திரை நீங்கும்போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ?!
என் சேலை சிண்ட்ரெல்லா...
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
காலமதை தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்.
பாவை நீ பிரியும்போது
பாதியில் கனவை கொன்றேன்.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது!!
நிழலோடும் உரசாத தன்மானம் எனது!!
இணையில்லா பொருளல்ல
அடி காதல் மனதில்.
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு.
ஆண்ட கதையில் கூட
அநியாய தூரம் தொல்லை.
உன் இதயம் அறியாது அழகே
என் இதயம் எழுதும் சொல்லை.
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை.
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!


 பாடியவர்கள்: ஹிப் ஹாப் தமிழா, சுதர்ஷன் அசோக்
எழுதியவர்: கபிலன் வைரமுத்து.
இசை: ஹிப்  ஹாப் தமிழா.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின்
நன்றியுடன், 
ராஜி