Showing posts with label பாட்டு கேக்குறோமாம். Show all posts
Showing posts with label பாட்டு கேக்குறோமாம். Show all posts

Sunday, August 12, 2018

குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் - பாட்டு கேக்குறோமாம்


ஒரு கடலோர கிராமமான முட்டம் அங்கு ஒரு பஸ்ஸில் இருந்து ஒரு பெண் இறங்கி புதுசாக அந்த கிராமத்துக்கு தன் பாட்டியுடன் குடியிருக்க வருது. அங்க அவளோடு படிக்கும் ஹீரோ லவ்வ, அந்த லவ், ஹீரோவோட அம்மாவுக்கு பிடிக்காம, அந்த பொண்ணை அசிங்கப்படுத்தி ஊரை விட்டு துரத்திவிட, பொழைக்கப்போற ஊர்ல ஒரு ரவுடிக்கு அந்த பொண்ணை கட்டி வைக்க, அவன் ஜெயிலுக்கு போக, லவ்வர் குடிகாரனாக,  பொழப்பை தேடி மீண்டும் கடலோர கிராமத்துக்கே வர, ஹீரோ, ஹீரோயினுக்கு உதவ, சில பல  மொக்கை சீன்களுக்கு பிறகு கட்டக்கடைசியா ஹீரோவும் ஹீரோயினும் செத்து போயி,  நம்மை காப்பாத்துறாங்க.  படம் ஃபுல்லா ஃபீலிங்கோ ஃபிலிங்கு.... 

ஹீரோ, ஹீரோயின் லவ் சீன்லாம் அந்த காலத்து லவ்வை கண் முன் கொண்டு வரும்.  ஹீரோவின் அப்பாவித்தனம் பிடிச்சுது. 90 களில் வரும் ஆம்பிள்ளை பிள்ளைகளைப்போல திட்டு திட்டா பவுடர் பூசி, எண்ணெய் தடவி படிய வாரிய தலை, விபூதி பட்டைன்னு இருக்குறதே பிடிச்சு போயி பத்து வருசத்துக்கு முந்தி இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வச்சுது. படம் சூர மொக்கைன்னாலும் ரெண்டு பாட்டு செமயா இருக்கும்.

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று
தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொட தொட மோகங்கள்
தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
கண்ணங்களை காட்டு
கை எழுது போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்
பல்லு படும் லேசா
கேலி பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது

யாரு நம்ம இங்கு தடுக்குறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ?

இருந்தும் எதற்கு எடையிலே

இருக்க நீயும் இடையிலே
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஓ பள்ளிகூட சினேகம்
பள்ளியறை பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களை பொட்டு
நட்டு வச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு

கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே நீ இன்றி நானும் இல்லையே

காத்தா இருக்க மூச்சுல

மொழியாய் இருக்க பேச்சுல
துணியா இருப்பேன் இடையிலே
துணையா இருப்பேன் நடையிலே

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று
தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொட தொட மோகங்கள்
தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு..

பாட்டு மட்டும் கேளுங்க. படத்தை தப்பி தவறியும் பார்த்துட்டு, இந்த மொக்கை படத்தை ராஜி எப்படி பார்த்தால்ன்னு என்னை திட்டாதீங்க. 

படம் : குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பி.சரண்


நன்றியுடன்,
ராஜி.

Sunday, July 29, 2018

என்ன வரம் வேண்டும்?! இந்த வரம் போதும்!! - பாட்டு கேக்குறோமாம்

ஒரு பாடல் எப்படி இருக்கனும்ன்னா, அலங்காரமில்லாத வரிகளுடனும், ஆர்ப்பாட்டமில்லாத இசையுடனும், பாடலை கேட்கும்போதே மனசை  ஒருமுகப்படுத்தி,  செவி வழியே நுழைந்து ஆத்மாவோடு கரைஞ்சுடனும். அதுமாதிரி அனுபவித்துக் கேட்கவைக்கும் ஒரு பாடலைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம். 
கிழக்குவாசல், சின்ன கவுண்டர், பொன்னுமணின்னு வெற்றி படங்களை தந்தவர், இயக்குனராகவும் பாடலாசிரியராகவும்  அறியப்பட்டவரான ஆர்.வி.உதயக்குமார்  இயக்கி தோல்வியடைஞ்ச படம் நந்தவனத்தேரு.  படம் தோல்வி அடைஞ்சிருந்தாலும் இசைஞானி குறை வைக்காத படங்களில் இதுவும் ஒன்று .   இந்த படத்தில் வெள்ளி நிலவே.. வெள்ளி நிலவே..ன்னு ஒரு பாட்டு வரும். அதான் அப்ப செம ஹிட். ஆனா, எனக்கு இந்த பாட்டுதான் பிடிக்கும். கார்த்திக் இருக்கவே மொத்த பாடலும் கேட்டாலும் இந்த பாடல் மட்டும் ஓரிரு முறை மீண்டும் கேட்பேன். 
மிகப்பெரிய ஹிட் படத்தில்கூட கெட் அப் மாத்தாத கார்த்திக், இந்த படத்தில் மீசை இல்லாம, லேசாக முளைத்த தாடி, மீசையோடு இருப்பார். கார்த்திக்க்கும் வயசாகும்ன்னு உணர்ந்த தருணம். சண்டை, டான்ஸ், கோவம்ன்னு எந்த சீனா இருந்தாலும் அனாயசமா நடிச்சு கொடுக்கும் ஆளு இந்த படத்தில் திக்கி திணறுனாப்ல. ஜாடிக்கேத்த மூடி மாதிரி ஸ்ரீநிதின்னு ஒரு பொண்ணு நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்டுக்கிட்டு குறுக்க மறுக்கா இந்த படத்துல ஹீரோயினா வந்திட்டு போச்சுது. விவேக்கும், வடிவேலுவும் இருந்தும் காமெடிக்கு பஞ்சம். 

வெக்கம், மானம், சூடு, சுரணை இருந்திருந்தா அன்னிக்கே கார்த்திக்கை வெறுத்திருக்கனும் நானு. எனக்குதான் அதுலாம் கிடையாதே! கெட்டதுலயும் நல்லது தேடி பாட்டு வச்சு ஒப்பேத்திக்கிட்டேன். எனக்கு புடிச்ச பாட்டு உங்களுக்கும் பிடிக்குதான்னு கேளுங்க. 
 
இங்கே இரண்டு ஜீவன் நனையும்.
இன்பம் என்னும் மழையில் நனையும் ஓ ஓ ஓ
துன்பம் என்னும் கனவு கலையும்
தூபம் போட்டு உறவு மலரும்..
தந்தோம் நல்வாழ்த்து....

என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!
ஜென்ம ஜென்மம்தோறும் உந்தன் கரம் வேண்டும்..
உன்னையே நினைத்தேன்.. நிழலாய் தொடர்ந்தேன்..
எனை நீ தொடவே நிஜமாய் மலர்ந்தேன்...  
(என்ன...)

மௌனமொழி நின்று போனது
உண்மை ஒன்று கேட்டது
 காதல் என்னும் வழி கண்டது
கையில் உன்னை தந்தது..

இன்றல்ல நேற்றல்ல என்றைக்கும்
இங்கு உன்னோடு என் உள்ளம் சங்கமம்
ஒன்றல்ல ரெண்டல்ல  இன்பங்கள்
அதை சொல்லிட வந்திடும் குங்குமம்.

நிலமும் இங்கு நீரும் நிலவும் அந்த வானும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த வரம் போதும்!!

நாணத்திலே பெண்மை வேர்த்தது
தென்றல் மெல்ல பார்த்தது
வானத்திலே மின்னல் வாழ்த்திட
என்னை உன்னில் சேர்த்தது

நீர் இன்றி வேரில்லை மண்ணிலே
இங்கு என் பார்வை என்றும் உன் கண்ணிலே
உள்ளத்தை உன்னிடம் சொல்லியே
அன்பு தேன் அள்ளி தந்தது மல்லியே!

நதிகள் ஒன்று சேரும், அலைகள் சந்தம் போடும்
காலம் முழுவதும் காதல் வாழும் என்று சொல்லும்
என்ன வரம் வேண்டும்?!
இந்த ஜென்மம் போதும்!!

படம் : நந்தவனத் தேரு
பாடியவர்கள் : மனோ, லேகா, குழுவினர்
இசை : இளையராஜா
எழுதியவர்: ஆர்.வி.உதயக்குமார்
நடிகர்கள்: கார்த்திக், ஸ்ரீநிதி

பாடலை கேட்டு பாருங்க. படம் பார்த்துட்டு பாட்டை  கேக்காதீங்க.  அப்புறம் வருத்தப்படுவீக..


நன்றியுடன்,
ராஜி

Sunday, July 22, 2018

நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.

படம் வெளிவர்றதுக்குள் பாட்டு வெளிவந்துடும். சில படப்பாட்டுங்க கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இருக்கும்.  சில படத்துல, குறிப்பிட்ட வார்த்தை மட்டும் கட்டாகிடும் இல்லன்னா பீப் சவுண்ட் ஒலிக்க விடுவாங்க. ஒருமுறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால...  ன்னு ஆரம்பிக்கும் பாடலில் ஒரு வார்த்தை தப்பான அர்த்தம் வருவதா சொல்லி சென்சாரில் ஏத்துக்கலைன்னு சொல்லி கஷ்டப்பட்டார். சாதாரணமாக எழுதிய பாடலைக்கூட  பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது?! என்று கேள்வி கேட்டார். 

நம்மவர் படத்துல சொர்க்கம் என்பது நமக்கு பாடலில் ஒரு வரி வரும்... நல்ல வார்த்தைக்கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனதே...ன்னு.... ஆத்தான்னா அத்தனை மரியாதை தென் மாவட்டங்களில்.. எங்க ஊரில் ஆத்தான்னு சொன்னா மேலும் கீழுமா பார்ப்பாங்க.  சித்தி, அத்தை, மாமிகளை கூப்பிடும் புனிதமான ஆங்கில வார்த்தையான ஆன்டி, இப்ப கிண்டலா, நக்கலா கூப்பிடப்படுது. நல்ல வார்த்தைகள் கெட்ட வார்த்தை ஆனதுக்கு காரணம் சமூகமா இல்ல சினிமாவான்னு தெரில.

படம் பார்த்ததே கனவு கண்ட மாதிரி மங்கலா நினைவில்  இருக்கு.  அதுல பாடல் வரிகளை எப்படி நினைவு வச்சிக்குறது.  சரியோ தப்போ சில பாட்டுகள் கேக்கும்போது மனசு உற்சாகமாகும். அதில் இந்த பாட்டும் ஒண்ணு... பயணங்களில் இந்த பாட்டு அவசியம் இடம்பெறும். அதுலயும் வண்டில போகும்போது... கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவதில் அலாதி பிரியம் எனக்கு... 


நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
என் மச்சான் மச்சான்... மல்லிய வைச்சான்
என் மச்சான் மச்சான்... தேன் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு?!

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே..


அத்தமவன் சொன்னத ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்..
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்......அத்தமவன் சொன்னத ஒத்துகனும்
சரிதான் சரிதான்அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்தென்பழநி சந்தனம்தான் இங்கு ஒரு பெண்ணாச்சோ?!
என்னென்னவோ எண்ணம்தான் என்னக் கண்டு உண்டாச்சா?!உன் முந்தானைய இழுக்கட்டுமா?!
 சும்மா இருஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா?!
 கொஞ்சம் பொறுஅடி பூவே! பொன்னே! கண்ணே இங்கே வா ஹோய்..

நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே ஓ...ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே ஹா......
ஆ.....ஆஹாஹா...ஆ.........ஆஹாஹா......
லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...
ஆ.....ஆ....ஆ..
.......
பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்சுடுதா சுடுதா?!
ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்வருதா வருதா?!
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்வருதா வருதா வருதா?!
தென்னங்கிளை தென்றலைத் தான்பின்னுவது அங்கேதான்
செவ்விளநி சேலக்கட்டிமின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறதுஉன் மேனிதான்
என்ன கண்டையில நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்


படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி
நடிகர்கள்: கமல், அம்பிகா

நன்றியுடன்,
ராஜி.

Sunday, July 15, 2018

ஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்

மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈன்னு கூவி  எல்லாரையும் மெளனராகம் படத்தில் கொஞ்ச நேரமே வந்திருந்தாலும் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்துக்கும் அன்றைய ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டாங்க.   அடடா! இம்புட்டு சில்லறை சிந்துதே! போட்டு தாக்குன்னு சொல்லி அதே பாணியில் படமெடுத்து  சம்பந்தப்பட்ட நடிகர்களை ஒழிப்பதுதானே கோலிவுட்டின்  வழக்கம்?. அதைத்தான் செஞ்சாங்க. 

1989ல  இதயதாமரை ரிலீஸ். கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் படு மொக்கை.  மிச்சமிருந்தது சில இனிய பாடல்களும், கார்த்திக், ரேவதி லவ்வுசும், நம்ம கழுத்தில் ரத்தமும்தான். படம் ஒருசில நாட்கள் ஓடுனதுக்கு முக்கிய காரணங்களில்  ஒன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது பாட்டு. கார்த்திக்கின் குறும்புத்தனமும், எதார்த்தமான நடிப்புக்கூட இந்த படத்தில் மிஸ்சிங்க்.  சங்கர் கணேஷ் இசை. அடிக்கடி கேட்ட வரிகளா இருந்தாலும் ஓரிரு பாட்டுகள்  மட்டும் ஹிட்.  சுமாரான வரிகளைக்கொண்ட இந்த பாட்டுகூட ஹிட் அடிச்சதுக்கு காரணம் எஸ்.பி.பியும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இந்த பாட்டு  தீர்த்தது. மெளனராகம் ஒளிப்பதிவு செய்த பிஸி ஸ்ரீராம்தான் இதிலும் ஒளிப்பதிவு. இந்த பாட்டு ஹிட் அடிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். அழகான ஊட்டியை, அதோட பனிமூட்டத்தை அப்படியே படமாக்கி இருப்பார்...


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூறும்  காலை வேளையில்..


பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா?!
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடுதந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்

யாருக்கு யார் உறவு யாரறிவாரோ?!
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ?!
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ.?!
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ?!
கல்லூரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது?!
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது?!
இயல்பானது!!

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூறும் காலை வேளையில்...



படம் : இதய தாமரை (1989)
இசை :சங்கர் கணேஷ்
பாடியவர்:  S.P.பால சுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடலாசியர் :  வைரமுத்து
டிகர்கள்  கார்த்திக், ரேவதி

பாட்டு புத்தகம்லாம் வாங்கி மனப்பாடம் பண்ண பாட்டு வரிகள் இது. பாட்டு கேக்கும்போதெல்லாம்   படம் பார்த்திட்டு  ட்யூசன் போறேன்னு சொல்லிட்டு, கார்த்திக், ரேவதி மாதிரி ரயில் தண்டவாளத்துல நடக்க ஆசைப்பட்டு நடந்து முட்டிலாம் பேத்துக்கிட்ட வரலாறுலாம்  கார்த்திக்கோடு  சேர்த்து கண்முன் வந்து போகும். 

நன்றியுடன்,
ராஜி

Sunday, July 08, 2018

அன்புள்ள சந்தியா.... - பாட்டு கேக்குறோமாம்

ஒருதலைக்காதல், சொன்ன காதல், சொல்லாக்காதல் வரிசையில் பொருந்தா காதல் பத்தி வந்த படம். காலேஜில் சீனியர்  பொண்ணு மேல காதல் சொல்ல வந்தேன் படம். அதென்னமோ அம்மாவாகிட்டதாலோ இல்ல வயசாகிட்டதாலோ இதுமாதிரி காலேஜ், பள்ளிக்கால காதல் படங்களும், சின்ன பிள்ளைங்க ஹீரோவா நடிக்கும்  படங்களை பார்க்க பிடிப்பதில்ல. 

எனக்கு பிடிக்கலைன்றதுக்காக பசங்க பார்க்காம இருக்காதுல்ல!. அதுங்க பார்க்கும்போது இந்த படத்தின் பாடலை கேட்டிருக்கேன். பாடல்லாம் செமயா இருக்கும்.  தன் காதலை சீனியர் பொண்ணு ஏத்துக்கலைங்குறதுக்காக ஹீரோ பாடும் பாடல் இது.... 

யுவன் சங்கர் ராஜா  நல்லா இசையமைச்சிருப்பார் இந்த பாடலை... நா. முத்துக்குமார் நல்லா எழுதி இருப்பார். 

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்..
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்..
என்னை எனக்கு தருவாயா?!
இல்லை காட்டில் விடுவாயா?!
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்

நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்


எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே

தூறல் வந்தால் கோலங்கள் அழியும்,

காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்,
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே!
அடி கோயில் மூடினால்கூட

கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம்மீது
அதன் காதல் குறைவதே இல்லை..
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி




அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்


தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப்போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா?!…
என்றோ யாரோ உன் கையை தொடுவார்

இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாகக்கூடாதா?!
உன் காதல் என்னிடம் இல்லை

நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி?!


அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா?!
இல்லை காட்டில் விடுவாயா?!
உன் பதிலை எதிர்ப்பார்த்து…

அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்

நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
ஓ….

பாடலை கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
நன்றியுடன் 
ராஜி

Sunday, May 27, 2018

ஆக்சிஜன் தந்தாளே ! - பாட்டு கேக்குறோமாம்

சினிமா நடிகனுக்கு உடல் அழகு முக்கியம். அதை உணராம உடலை சரிவர கவனிக்காம திறமை இருந்தும் வீணாப்போனவங்க பட்டியலில் இதுவரை கார்த்திக்கும், அஜீத்தும்தான் இருந்தாங்க. அந்த வரிசையில் விஜய் சேதுபதி வந்திடுவாரோன்னு பயமா இருக்கு.  கார்த்திக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச நடிகரா விஜய் சேதுபதிய சொல்லலாம்.  அவரது நடிப்பா?! இல்ல சமூக வலைத்தளங்களில் அவரை பத்தி பகிரப்படும் விசயமா?! இல்ல நட்புக்கும், நன்றிக்கடனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடத்தையான்னு தெரில.  கார்த்திக்கு அப்புறமா முகத்துலயே குறும்பு கொப்பளிக்குறது விஜய் சேதுபதிக்காகத்தான் இருக்கும். அதேமாதிரி, அதிகமா உடலை ஏத்தி இறக்காம, கெட் அப் மாத்தாம அழகா எல்லா கேரக்டருக்கும் பொருந்தி போறார். அதனால், இப்பலாம் விஜய் சேதுபதி படங்களைக்கூட போற போக்குல பார்க்குறேன். 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவன்னு ஒரு படம் வந்திச்சு. லாஜிக் மிஸ்டேக் நிறைய இருந்தாலும், படம் பிடிச்சுட்டுது. என்னமோ இப்ப வரும் பாட்டுகள் மனசுல எதுமே ஒட்டலைன்னாலும் இந்த படத்தில் வரும் பாட்டு அடிக்கடி கேட்க வைக்கும். 
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே!!
கனாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்!!
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்?!
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே...
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
உலா உலா கல்லூரி மண்ணிலா?!
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா?!
முயல் இடை திரை நீங்கும்போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ?!
என் சேலை சிண்ட்ரெல்லா...
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
காலமதை தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்.
பாவை நீ பிரியும்போது
பாதியில் கனவை கொன்றேன்.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது!!
நிழலோடும் உரசாத தன்மானம் எனது!!
இணையில்லா பொருளல்ல
அடி காதல் மனதில்.
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு.
ஆண்ட கதையில் கூட
அநியாய தூரம் தொல்லை.
உன் இதயம் அறியாது அழகே
என் இதயம் எழுதும் சொல்லை.
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை.
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!


 பாடியவர்கள்: ஹிப் ஹாப் தமிழா, சுதர்ஷன் அசோக்
எழுதியவர்: கபிலன் வைரமுத்து.
இசை: ஹிப்  ஹாப் தமிழா.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின்
நன்றியுடன், 
ராஜி

Sunday, May 20, 2018

கண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்

அழகான தமிழில் டூயட் பாடல்...

இன்னொரு டூயட்..

அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்..

சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டுது. அதும் 2000களில் படம் பார்ப்பதே குறைஞ்சு போச்சுது. படத்தோட சில காட்சிகளை டிவியில் போக வர பார்ப்பதோடு சரி.  பாடலுக்காக இந்த படத்தை பார்க்கனும்ன்னு தோனிச்சுது. படத்தை பார்த்ததும் மாதவனோடு, பாவனாவோடு படமுமே பிடிச்சுட்டுது. இப்ப படத்தில் வராத அழகானதொரு கூட்டு குடும்பம், ஆங்கில கலப்பில்லாத தமிழ் வார்த்தைகளை மட்டுமே பேசவிட்டு படம் எடுத்திருக்காங்க.  ஆனா படம் வெற்றி பெறலைன்னு நினைக்குறேன். 
யுவன் சங்கர் ராஜா இசையில்.. நா.முத்துக்குமார் வரியில் ஒரு சோகப்பாட்டு...

கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!

காதல் சொன்னதும் நீதான்..
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!

நினைவை தந்ததும் நீதான்...

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!

உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்ததும் நீதான்....

உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா?!
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா?!
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா?!
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா?!
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்!!
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்...
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்!!
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்..
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...

கண்ணில் வந்ததும் நீதான்..
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!
காதல் சொன்னதும் நீதான்...
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!
நினைவை தந்ததும் நீதான்...
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!!
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே!!

கண்ணில் வந்ததும் நீதான்...
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி..

கலங்கடிக்கும் குரலில் ஏற்ற இறக்கத்தோடு ஹரிசரண் குரலை கேட்கும்போது நமக்கும் நம்ம லவ்ஸ் ஞாபகம்லாம் வந்து போகும். வரலைன்னா ரசனையும், காதலும் இல்லா ஜென்மம்ன்னு அர்த்தம்.

சீமான் இயக்கம்ன்னு நினைக்குறேன்.
நன்றியுடன்,
ராஜி(காந்திமதி)