Sunday, May 27, 2018

ஆக்சிஜன் தந்தாளே ! - பாட்டு கேக்குறோமாம்

சினிமா நடிகனுக்கு உடல் அழகு முக்கியம். அதை உணராம உடலை சரிவர கவனிக்காம திறமை இருந்தும் வீணாப்போனவங்க பட்டியலில் இதுவரை கார்த்திக்கும், அஜீத்தும்தான் இருந்தாங்க. அந்த வரிசையில் விஜய் சேதுபதி வந்திடுவாரோன்னு பயமா இருக்கு.  கார்த்திக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச நடிகரா விஜய் சேதுபதிய சொல்லலாம்.  அவரது நடிப்பா?! இல்ல சமூக வலைத்தளங்களில் அவரை பத்தி பகிரப்படும் விசயமா?! இல்ல நட்புக்கும், நன்றிக்கடனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடத்தையான்னு தெரில.  கார்த்திக்கு அப்புறமா முகத்துலயே குறும்பு கொப்பளிக்குறது விஜய் சேதுபதிக்காகத்தான் இருக்கும். அதேமாதிரி, அதிகமா உடலை ஏத்தி இறக்காம, கெட் அப் மாத்தாம அழகா எல்லா கேரக்டருக்கும் பொருந்தி போறார். அதனால், இப்பலாம் விஜய் சேதுபதி படங்களைக்கூட போற போக்குல பார்க்குறேன். 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கவன்னு ஒரு படம் வந்திச்சு. லாஜிக் மிஸ்டேக் நிறைய இருந்தாலும், படம் பிடிச்சுட்டுது. என்னமோ இப்ப வரும் பாட்டுகள் மனசுல எதுமே ஒட்டலைன்னாலும் இந்த படத்தில் வரும் பாட்டு அடிக்கடி கேட்க வைக்கும். 
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே!!
கனாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்!!
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்?!
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே...
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!
உலா உலா கல்லூரி மண்ணிலா?!
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா?!
முயல் இடை திரை நீங்கும்போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ?!
என் சேலை சிண்ட்ரெல்லா...
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
காலமதை தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்.
பாவை நீ பிரியும்போது
பாதியில் கனவை கொன்றேன்.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது!!
நிழலோடும் உரசாத தன்மானம் எனது!!
இணையில்லா பொருளல்ல
அடி காதல் மனதில்.
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு.
ஆண்ட கதையில் கூட
அநியாய தூரம் தொல்லை.
உன் இதயம் அறியாது அழகே
என் இதயம் எழுதும் சொல்லை.
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை.
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை.
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?!


 பாடியவர்கள்: ஹிப் ஹாப் தமிழா, சுதர்ஷன் அசோக்
எழுதியவர்: கபிலன் வைரமுத்து.
இசை: ஹிப்  ஹாப் தமிழா.
நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின்
நன்றியுடன், 
ராஜி

10 comments:

 1. வணக்கம் தங்கச்சி........உண்மை தான்......உடலழகு முக்கியம் தான்......ஒவ்வொரு ஆணுக்கும்/பெண்ணுக்கும் வயது ஏறிக் கொண்டே போக உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே....சிலர் அதனை உடற்பயிற்சி/யோகாசனம் மூலம் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.//உங்கள் பதிவைப் படித்து சில வேளை விஜய் சேதுபதி கூட உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கக் கூடும்............. நன்றி பாடலுக்கும் பதிவுக்கும்........///ஆமா,பாட்டு கூட எழுதுவீங்களா?

  ReplyDelete
  Replies
  1. படுற பாட்டைதான் பாட்டா எழுதனும்...

   திறமையான நல்ல நடிகர்கள்லாம் இப்படி வீணா போறதாலதான் செத்தவன் கைல வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி மூஞ்சை வச்சிருக்கவன்லாம் நடிச்சு இம்சை பண்றான்

   Delete
 2. Sivakarthikeyanum oru thiramayana nadigar comedy kalandu expression kattuvadhil naditha ovvoru Padamum arumai aanaal avarai TVyil parthapodhu migavum dull aaga irundar avarukku .PADA vaayppu kodukkavendum

  ReplyDelete
  Replies
  1. சிவகார்த்திகேயன்லாம் காமெடிக்குதான்ப்பா செட் ஆகும். ஓரளவுக்கு லவ்வுக்கு செட் ஆகலாம். மத்தபடி, நவரசத்தில் மிச்சம் ஏழு இருக்கே! அதுக்குலாம் சிகா செட் ஆக மாட்டார்.

   Delete
 3. //கனாபமே எனைக் கீறினாய்/

  இந்தப் பாடல் கேட்டதில்லை. கனாபமா? கலாபமா? விஜய் சேதுபதியை எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கனாபம்ன்னுதான் பாட்டுல வருது. ஆனா அர்த்தம் தெரிலயே!

   Delete
 4. பாடல் நல்லாயிருக்கே...!

  ReplyDelete
  Replies
  1. கேட்க நல்லா இருக்கும்ண்ணே. பார்க்கவும் நல்லா இருக்கும்.

   Delete
 5. எனக்கும் பிடிக்கும்...


  இந்த பாட்டும் .. விஜய் சேதுபதியும்...நல்ல நடிகர்...

  ReplyDelete
 6. விஜய் சேதுபதி செம கேஷுவல் நடிகர். பிடிக்கும். பாடல் கேட்டதில்லை. நல்லாருக்கு...

  கீதா : அவரும் வெயிட் ரொம்பவே போடறாரு....

  ReplyDelete