Showing posts with label விஷ்னு. Show all posts
Showing posts with label விஷ்னு. Show all posts

Friday, August 16, 2013

திருக்கச்சூர் மருந்தீசர் கோயில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

போன வாரம் தாழக்கோவிலில் தரிசனம் செய்தோம். இன்னிக்கு  மலையடிவாரத்தில் இருக்கும் மருந்தீசர் கோவிலை பார்க்கலாம். கோவிலுக்கு போகும் வழியெங்கும்  பச்சை பசேல்ன்னு சீனரிலாம் செமயா இருக்கு. அதெல்லாம் கேமராவுல கிளிக்கிட்டே கோவிலுக்கு போயாச்சு.


கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபத்துடன் அழகாக காட்சி தருது இராஜகோபுரம் இல்லாத கோவிலின் நுழைவாயில் .. 



கோவிலின் முகப்பில் அதன் அமைவிடம், தொடர்புகொள்ளும் நம்பர்,  நடை திறக்கும் நேரம் முதலியவை அடங்கிய குறிப்பு பலகை இருக்கு.



அதை தாண்டி ”மண்ணே மருந்தான” மருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே,  நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம்!!

இக் கோவில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஒவ்ஷதை” என்கிற சக்தி பீடமாகும்.

தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே போனதும் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கு. .இத்தூண்களில் துவார பாலகர்கள் உருவங்களும் ,இலிங்கோர்பவர் மாவடி சேவை பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின்  சிற்பங்கள் அழகுற காணப்படுது.


மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணபடுகிறது.

சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் ரம்மியான அமைதியான இடம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி காணபடுகிறது. சுவாமி மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான அமைப்பில் வீற்றிருக்கிறார் .இங்கே வழிபட்டால் திருவண்ணமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். அதனால, அவருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு கோவிலுக்குள் போகலாம்.

 விநாயகரை வழிபட்டு வரும்போது,  சுவாமி சன்னதிக்கு எதிரில் சாரளம் உள்ள.து இதன் எதிரே வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் லாம் காணபடுகின்றன.


இங்கே வந்து சுவாமியிடம் வேண்டிகொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். அம்பாளிடம் வேண்டிகொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும்,  குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எதிரே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் காணபடுகின்றன 
இந்திரன் தன்னோட தீராத  வியாதிக்காக நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும்  பலை ,அதிபலை என்ற மூளிகை  வேண்டி  சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம் . அதனால,  நாரதரிடம் உபாயம் கேட்க,  அன்னையை மறந்து தவம் இயற்றியதால்,  அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம், தன் தவறை உணர்ந்த இந்திரன்,  அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம்.  பிறகு அன்னை மனம்குளிர்ந்து மூலிகையை அருளினாராம்.  இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே ”மருந்தீஸ்வரர்” என்றும்,  மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் ”இருள் நீக்கி அம்மையார்”என்றும் அழைக்க படுகிறாரார்களாம்!!.

இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறனும்ன்னு  சிவபெருமான்  வரம் அருளினாராம். இந்த மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளருமாம் ..

வெளியே சுபிரமணியர் அவ்வளவா பராமரிப்பில்லாத கோலத்தில் காட்சி தருகிறார் .அகத்தியர் காண்டம் ,காக புஜண்டர் காண்டத்திலும்  மருந்தீஸ்வரர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். மேலும்,  அகத்தியரும்,  அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம் .

  மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது.  சுப்பிரமணியரின் அருகில் இருந்து பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்யமாக காட்சி அளிக்கிறது.

அவரை வழிபாட்டு செல்லும் போது இக்கோவிலில் அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஓஷததீர்த்த குளம்” காணபடுகிறது. அவை பராமரிப்பில்லாமல் காணபடுகின்றன.

கிணற்றின் உள்பக்கம் அழகாக படிகளால் அமைக்கப்பட்டு காணபடுகிறது.

பக்கத்தில் நவகிரக சன்னதியும்  கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மூர்த்தங்கள் உள்ளன .பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு.

சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்மமுக சண்டிகேஸ்வரராக சேவை செய்கிறார்.  இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம்.  சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில்  அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார்.  பைரவர் சன்னதியும் காணபடுகிறது.

மேலும்,  விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகம் அமைந்து இருப்பது இகோவிலின் விஷேசம்.  இங்கு கிரிவலம் விஷேசம் எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் கிரிவலம் வரலா. ம் மருந்தீஸ்வரர் இருள் நீக்கி அம்மையாரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் பித்ரு தோஷங்கள் முதலியவையும் நீங்கிவிடுமாம்.

 பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.  மேலும், சஞ்சீவி மலையை அனுமன் கொண்டு செல்லும் போது வீழ்ந்த சிறிய துண்டு என்றும் சொல்ல படுகிறது.

 காலை 7:30 மணி முதல் நண்பகல் 11:00 மணிவரை ,மாலை 4:30 முதல் 7:30 மணிவரை கோவில் திறந்திருக்கும்.

அடுத்த வாரம் வேறொரு கோவிலோடு பார்க்கலாம். 

Friday, June 07, 2013

கல்வி வரம் அளிக்கும் ”ஹயகீரீஸ்வர்” -ஸ்கூல் ரி ஓப்பன் ஸ்பெஷல்

 
                       
பசங்களுக்குலாம் ஸ்கூல் திறக்குற நாள் கிட்ட வந்துடுச்சு. அவங்க நல்லா படிக்கனும்ன்னு செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்குற  செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோயில் ஹயக்ரீஸ்வரர் கோவிலுக்கு போய் வந்தோம். 

ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்துல, இந்த உலகத்தையும், மக்களையும் தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தாராம் மகாவிஷ்ணு. பிறகு, புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து (தொப்புள்) பிரம்மனை படைத்து, நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தாராம். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தாராம்.
இதன்பின், மது, கைடபன் என்ற அசுரர்கள் பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனராம். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அபகரித்தனராம்... தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டு, பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனராம்...,

இதனால்  படைப்புத்தொழில் நின்று போனது. மது, கைடபரால் உலகில் அசுரர்கள் அதிகரிப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டது. பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தராம்.., பெருமாள் பாதாள உலகம் வந்த போது, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டு,  உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்ததாக இந்த புண்ணிய தளத்தோட வரலாறு.

கடலூருக்கு பக்கத்திலிருந்து “திருவஹீந்திரபுரம் தேவநாதன்” கோயிலில் இருந்து, அழகான பெருமாள் விக்ரகம் மற்றும் யோக ஹயக்ரீவர் ஒன்றை செட்டிப்புண்ணியத்துக்கு எடுத்து வந்து,  அவற்றை வைகாசி,  மகம் நட்சத்திரத்தில் செட்டிப்புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிறகு தாயார் ஹேமாப்ஜவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஆண்டாள், ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  மூலவரை வரதராஜர் என்றும், உற்சவரை தேவநாத சுவாமி என்றும் அழைக்கின்றனர்.
இங்கு ”வித்யாதோஷ நிவர்த்தி”  ”சங்கல்ப ஆராதனை” என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகிறது.  இந்த சிறப்பு பூஜை தேர்வு வேளையில் செய்யப்படுகிறது. கல்வியாண்டு துவங்கும் வேளையிலும்,  மாணவர்களின் புத்தகம் மற்றும் எழுதுபொருட்களை எடுத்துச்சென்று பூஜை செய்தும் வரலாம். திக்குவாய் உள்ளவர்கள், பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகிறது. இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள்.

செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வழியிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் மகேந்திராசிட்டி ஸ்டாப்பில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் செட்டிப்புண்ணியம்ன்ற இத்திருத்தலம் இருக்கு.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 4.30 முதல் இரவு8 வரை. நங்க நட்ட நடு மத்தியானத்துலதான் போனோம். வெயில் கொளுத்தி படுத்தி எடுத்திட்டுது.

இன்னொரு மனதை நெருடலான ஒரு விசயம்.., வண்டியை விட்டு இறங்கியதும் பத்து வயது  கூட நிரம்பாத குழந்தைகள் துளசி மாலையும்.., கற்பூரத்தையும் விற்க ஓடி வந்து போட்டி போடுதுங்க. உலகத்தாருக்குலாம் கல்வி வரம் அளிக்கும் அந்த ”ஹயகீரீஸ்வர்” கண்ணுக்கு இக்குழந்தைகள் புலப்படவே இல்லியோ!?

 படம் கூகுள் ல இருந்து சுட்டது...,