கல்யாணத்தப்போ என் கால்ல விழுந்தது. அதுக்கப்புறம் என் கால்ல விழவே இல்லன்னு புலம்பும் ஆண்கள் நிறைய உண்டு. ஆனா, ஒருசில சமுகத்தாருக்கு இந்த ஏக்கம் வருடத்துக்கு ஒருமுறை தீரும். ஒரு சில ஆண்களின் ஏக்கத்தை தீர்க்கும் நாள் வரலட்சுமி விரதமாகும். இன்றைய தினம் , வீட்டுக்காரர், குழந்தை, குடும்பம்லாம் நல்லா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு விரதமிருந்து அம்பாளை கும்பிட்டு வீட்டுக்காரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் நன்னாளே இந்நாள். ம்ம்ம்ம் என் ஏக்கம் தீர்க்காத நாளும் இந்நாளே!
பத்ரச்வரஸ்ன்ற மன்னன் சிறந்த விஷ்ணுபக்தன். அவன் மனைவி சுரசந்திரிகா, இவர்களின் மகள் சியாமபாலா. தங்கள் மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தனர். காலங்கள் ஓடின. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி வேடத்தில் பத்ரச்வரஸ் அரண்மனைக்கு மகாலட்சுமி வந்தாள். அவளை யாரோ என்று கருதிய சுரசந்திர்கா அரண்மனையைவிட்டு விரட்டி அடித்தாள்.
தன்னை அவமதித்த காரணத்தால் சுரசந்திரிகா அரண்மனையை விட்டு அகன்ற மகாலட்சுமி நேராய் அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். தாயைப்போல உதாசீனப்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் கேட்டு, பயபக்தியுடன் வரலட்சுமி பூஜையை செய்து வழிப்பட்டாள். விரதத்தின் மகிமையால் மலைப்போல செல்வம் குவிய துவங்கியது.. பெற்றோர் வறுமையில் இருப்பதை அறிந்த சியாமபாலா ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அனுப்பித்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே! அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது!! இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த
முன் ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், நீங்கி நாம் நலமோடு வாழ தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் . ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.
வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைத்து, ஒரு மனையில் கோலம் போட்டு, லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
ஒருமுறை பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் விளையாடி கொண்டிருந்தனர். அவ்விளையாட்டுக்கு பரமசிவனின் பணிப்பெண்ணான சித்திரநேமி என்ற தேவர்குலப்பெண் நடுவராய் இருந்தாள். ஆட்டத்தின் முடிவில் பரமசிவன் வெற்றி பெற்றதாய் அறிவித்தாள். தன் எஜமானுக்கு சாதகமாய் சிவன் வெற்றி பெற்றதாய் சித்திரநேமி மீது கோவம் கொண்ட பார்வதிதேவி, சித்திரநேமிக்கு தொழுநோய் வருமாறு சபித்தாள். தன்மீதுள்ள பாசத்தால் சித்திரநேமி அப்படி நடந்துகொண்டாள், அவளுக்கு சாபவிமோசனம் கொடு என பரமசிவன் பார்வதிதேவியை சாந்தப்படுத்தியபின், தேவ கன்னிகைகள், எப்போது குளக்கரையில் வரலட்சுமி விரதமிருப்பார்களோ, அப்போது உன் சாபம் நீங்குமென சொன்னாள். சித்திரநேமி பூமிக்கு வந்து, யாருமில்லாத ஒரு குளக்கரையில் தன் வாழ்நாளை கழித்து வந்தாள். அக்குளக்கரைக்கு தேவக்குல பெண்கள் வரலட்சுமி விரதமிருக்க வந்தனர். அவர்கள் வரலட்சுமி விரதமிருப்பதை கண்டதும் சித்திரநேமியின் சாபம் நீங்கியது. அன்றிலிருந்து சித்திரநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கலானாள்.
உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
பக்தியோடு நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் மாதிரியான அன்னதானம் செய்யலாம். . எளியோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தர, சாருமதி கனவில் தோன்றி, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க அறிவுறுத்தினாள். இறை வழிப்பாட்டோடு, கணவனையும், மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வணங்கி நீண்ட ஆயுளோடு, செல்வ செழிப்புடனும், சுமங்கலியாய் வாழ்ந்தாள். சாருமதியின் செயல்பாட்டை பொருத்தே இன்றும் விரதமிருப்பவர்கள் கணவன், மாமியார், மாமனார் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவதும் உண்டானது..
வெறும் செல்வச்செழிப்புக்கு மட்டுமில்லாம மாமனார், மாமியார் உறவு மேம்படவும் இவ்விரதம் வழிவகை செய்யுது. ஆன்மீக காரணங்களுக்காகவும், செல்வத்துக்காகவும் நோன்பு இருக்கோமோ இல்லியோ! மாமியார், மாமனார் மனசு மகிழவும், புகுந்த வீட்டாரின் அன்பு கிடைக்கவும், கணவன் நெஞ்சில் நீங்கா இடம்பிடிக்கவும் விரதம் இருக்கலாமே!
புரியாத மந்திரங்களை சொல்லி, கடவுள் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர்ன்னு சொல்லி, மாற்று மதத்து கடவுளை தாழ்த்தி பொது வெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆன்மீக சொற்பாழிவாளர்களுக்கு மத்தியில், திருக்குறள், திருவாசகம், வினாயகர் அகவல் மாதிரியான தமிழ் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி எளிய தமிழில் அனைவரும் ரசிக்கும்படி ஆன்மீக சொற்பொழிவாற்றி எம்பெருமான் பாரெங்கும் பரமகுருவின் புகழை பாடியவர் திருமுருக. கிருபானந்த வாரியார். அறுபத்து நாலாவது நாயன்மாராய் இவரின் பேரை சேர்க்கனும்ன்னு சொல்லி பெரும்பாலும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதன்படி, சில கோவில்களில் இவரை நாயன்மார்கள் வரிசையில் சேர்த்து இருக்காங்க.
கிருபானந்த வாரியார் சுவாமிகள் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் பிறந்தார். இவருக்கு, முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரைச் சூட்டினார்.
’கிருபை’ன்னா கருணை என்றும், "ஆனந்தம்"ன்னா இன்பம், "வாரி"ன்னா பெருங்கடல்ன்னு அர்த்தம். தன் பேருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித்திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவரின் மூன்று வயதிலிருந்தே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமான அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக்கவிகள் முதலியவைகளை இயற்றினார்.
சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தையாருக்கு வழக்கமாய் செல்லும் இடத்துக்கு சொற்பொழிவுக்கு போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியாரை அனுப்பி வைத்தார். சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், "மல்லையதாசர் தான் வராமல் சின்ன வயசான தன் மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே"ன்னு வருத்தம். ஆனாலும் வெளிக்காட்டாமல் வாரியாரை கூட்டி போனாங்க. வாரியாரின் சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போயினர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போய், இனி தங்கள் ஊருக்கு கிருபானந்த வாரியாரையே அனுப்பனும்ன்னு கேட்டுக்கொண்டனர்.
தன் வாழ்நாள் முழுக்க உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அந்த கிராமத்துக்கு தைப்பூசம் அன்னிக்கு சொற்பொழிவாற்ற வந்திடுவார். அந்த ஊர் வேலூர் மாவட்டம் வளைகுளம் என்கிற வளர்புரம். இது அரக்கோணம் டூ திருத்தணிக்கு இடையில் இருக்கு. நாங்க கொஞ்ச நாள் அங்க இருந்தோம். என் பத்து வயசு வரைக்கும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்டிருக்கேன். தன் சொற்பொழிவின் ஊடாக சிறுவர்கள்கிட்ட கேள்விகள் கேட்பார். சரியாய் சொன்னால், கந்த சஷ்டி, ஸ்கந்தகுரு கவசம் புத்தகம் கொடுத்து விபூதி கொடுப்பார். அவர் தன்னோடு ஒரு பெட்டியை எப்பவும் வச்சிக்கிட்டிருப்பார். அதுக்குள் வெள்ளியிலான வள்ளி, தெய்வானை சமேத முருகன், மயில், வேல், பூஜைப்பொருட்கள்லாம் இருக்கும். காலை மாலையில் தான் இருக்க்கும் இடத்திலேயே பூஜை செய்வது அவர் வழக்கம்.
பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால், படிப்பறிவே இல்லாதவர்கங்ககூட புரிஞ்சிக்கிட்டாங்க. சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் சிறுசிறு கதைகளை சொல்வதால் சிறுபிள்ளைகள்கூட இவருடைய சொற்பொழிவை கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். இவரின் புகழ் மெல்ல மெல்ல பாரெங்கும் பரவ ஆரம்பித்தது. தமிழகம், இந்தியா மட்டுமில்லாம, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா மாதிரியான நாடுகளுக்கும் சுவாமிகளின் ஆன்மீக பயணம் தொடர்ந்தது.
வாரியார் சுவாமிகள் உரையின்போது கூட்டம் கலைவது அபூர்வம். அப்படி கூட்டம் கலையும்போது தன் பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தை தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார். வாரியார் ஒருசமயம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டம் கலைய ஆரம்பிக்க ஆரம்பித்தது. அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனுக்கு "சொல்லின் செல்வர்"ன்னு பேரு. இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்று நிறுத்தினார், கலைந்த கூட்டம் என்னவென பார்த்தனர். ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார். இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.
தனது பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். பெண்களை மதிக்காத ஆண்களை எச்சரிக்கும் விதமா "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது" என தனது உரையில் அடிக்கடி சொல்வார். குழந்தைகளுக்கு தாயின் பெயரை இன்சியலா போடனும்ன்னு முதன்முதலாக சொன்னது வாரியார்தான். அதனால், இவர் பேச்சை கேட்க பெண்கள் அதிகளவில் வருவாங்க.
முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த சபையில் ஒருமுறை, நாமெல்லாம் பெண்பிள்ளைகள். ஆண்பிள்ளைகள் அல்ல என சொல்லி பேச்சை நிறுத்தினார். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் நிலையோ சங்கடமானது. ஆண்களால் கருத்தறித்து, குழந்தை பெறலாகாது. ஆனால், சிவனின் கண்களிலிருந்து தோன்றியதால் ஆணால் பிரசவிக்கப்பட்டவன். அதனால், முருகன் மட்டுமே ’ஆண்’பிள்ளை. பெண்ணால் வந்த நாமெல்லாம் ’பெண்’ பிள்ளைகள்தானே?!ன்னு கேட்க, கூட்டத்தினர் ஆமாமென ஒப்புக்கொண்டனர்.
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க...
என்று உருகி வேண்டிய வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. குழந்தைகள்மீது வாரியார் சுவாமிகள் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன்வரிசையில் இடமளிப்பது அவரின் வழக்கம். "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை குழந்தைகளுக்காக சுவாமிகள் எழுதினார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அதில் சொல்லி இருக்கிறார்.
சுவாமிகளின் 21 வது வயதில் மைசூரில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து வீணை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் 23 வயதில், சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
வீணை வாசிப்பதில் நல்ல தேர்ச்சி அடைஞ்சதும் சொற்பொழிவின்போது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி"
சிவப்பெருமான் வீணை வாசிப்பதில் வல்லவராம். அதேப்போல், முருகனுக்குரிய இசை வாத்தியமாய் யாழினை சொல்வதுண்டு. முருகன் மலையும் மலையும் சேர்ந்த குறிஞ்சி நிலத்துக்கு சொந்தக்காரன். யாழ் செயற்கை கருவி. மலையிலே வாழ்ந்த ஒருவன் எப்படி செயற்கை கருவியை இசைக்க முடியும்?! ஆனா புல்லாங்குழல் இயற்கை கருவி. மலையிலே கிடைத்த குழல்தான் முருகனுக்குரிய இசைக்கருவியாய் இருக்க வேண்டும் என சொல்வதோடு, தன் கருத்துக்கு ஆதாரமாய், "குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்" என திருமுருகாற்றுப்படையையும், குழல் இனிது, யாழ் இனிது என்ற குறளையும் சொல்கிறார். எது முக்கியமோ முதன்மையோ அதையே முதன்மையாய் சொல்லிவிட்டு யாழினை இரண்டாவதாய் சொல்றதாய் சொல்கிறார்.
வாரியார் சுவாமிகளின் இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என அறிஞர்கள் புகழ்ந்தார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பாடல்களை தனது உரையில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவது இவர் வழக்கம்.
ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் சொற்பொழிவுக்கு சென்றபோது, திருப்பரங்குன்றத்துக்கு சிக்கந்தர் மலைன்னு பேர் வைக்கனும்ன்னு இஸ்லாமியர்கள் சொல்றாங்கன்னு வாரியாரிடம் சொல்லி வருத்தப்பட்டனர். முருகனுக்கு கந்தன் என பேருண்டு. இறைவனை ன் போட்டு அழைப்பது மரியாதையா இருக்காது அதனால் கந்தர். முருகனின் தந்தை பெயர், சிவப்பெருமான். அப்படி பார்த்தால் முருகனின் இன்சியல் சி. சி+கந்தர். சிக்கந்தர். சிக்கந்தர் வாழும் மலைன்னு பொருள் வருமாறு சிக்கந்தர் மலைன்னு பேர் வைப்பதில் தவறில்லைன்னு வாரியார் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஒருமுறை கவியரசு கண்ணதாசன், வாரியார் சுவாமிகளை சந்தித்தார். அப்போது "தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என கண்ணதாசன் கேட்டார், அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என வாரியார் சுவாமிகள் விளக்க கவியரசர், சுவாமிகளின் தமிழ் ஞானத்தை எண்ணி வியந்தார்.
வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.
பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும், 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளி வந்திருக்கு. தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" ன்ற படத்துக்கு வசனங்கள் எழுதியதுடன், முருக பக்தரான தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப "துணைவன்", "திருவருள்", "தெய்வம்", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல்ன்ற பட்டத்தை அளித்தது வாரியார் சுவாமிகள்தான்.
ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுகூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தன் உபதேசங்களின்படியே வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் இருக்கச் செய்தார்.
எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் "வயலூர் எம்பெருமான்…" என கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். , "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்ற வாக்கியத்தையே ஆட்டோகிராபில் எழுதுவதை வழக்கமாய் கொண்டிருந்தார்.
லியோ டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?"ன்ற நூலை படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம்ன்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேயநல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறையில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் ஆண்கள், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள் இருப்பதை காணலாம்.
வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன. சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவரான பாம்பன் சுவாமிகளை சென்னையில் ஒரு கீற்றுக்கொட்டைகையில் தரிசித்து ஆசிப்பெற்றார். சொற்பொழிவுக்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் சுயசரிதையில் எழுதி உள்ளார்.
இவரின் தமிழ்தொன்றிற்கும், ஆன்மீக சேவைக்குமாய் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே விமானத்திலேயே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. முருகனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தவரின் உயிர், முருகன் வாகனமான மயில்மாதிரியான விமானத்திலேயே முருகன் காலடி நிழலில் இளைப்பாறியது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.
இணையத்திலிருந்து எடுத்தது
"ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்" என வாரியார் இறந்தபோது, நாத்திகரான கலைஞர் கருணாநிதியே போற்றினார்.
இணையத்திலிருந்து எடுத்தது..
"முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்புவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மீகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும் என ஜெயலலிதா இரங்கல் தெரிவித்திருந்தார்.
கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே "சரவண பொய்கை குளம்" என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது "திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்" ஆகியிருக்கிறது. காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.
காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலுக்கு எதிரில் சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது. மண்டபத்தின் முகப்புக் கோபுரத்தில்(அந்நாளில் சுவாமிகள் எழுப்பியது) தமது தாய் தந்தையரின் மார்பளவுச் சிலைகளை பதித்திருக்கிறார். பெற்றோர்மீது அவர் கொண்டிருந்த பக்தியை காட்டுகிறது. அந்தக் கோபுர வாயில் வழியாக நுழைந்ததும் எதிரில் தெரிவது, சுவாமிகள் எழுப்பிய சரவணப் பொய்கை, இடப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் தெரிவது வாரியார் சுவாமிகள் கையில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் ஒரு மண்டபம்.(இது சுவாமிகளின் முத்து விழாவில் எழுப்பப்பட்டதாகும்). வலப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் குழந்தை அறுமுகன் எழுந்தருளியிருக்கும் ஒரு மண்டபம்.
இணையத்திலிருந்து எடுத்தது
பிரம்மாண்டமான மண்டபத்தை கடந்தால் அறுமுகனை உணர்த்தும் அறுகோணம் ஆறுபட்டைகள் கொண்ட அமைப்பில் கருவறை அமைந்திருக்கு. சுவாமிகளின் சமாதியை 6'x3' என்ற நீள அகலத்தில் அமைந்த சலவைக்கல் அடையாளம் காட்டுகிறது. எந்நேரமும் மலரில் சிவலிங்க அலங்காரத்துடன் விளங்குகிறது. சிரசுப் பகுதியில் வடக்கு நோக்கிய வண்ணம் அணையா விளக்கொன்று ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. சமாதியை ஒட்டிச் சுவாமிகளின் திருவுருவம் பீடத்துடன், சுவாமிகள் ஆஜானுபாகுவாக அமர்ந்த கோலத்தில், ஆசீர்வாதம் செய்கின்ற பாவனையில், புன்னகை சிந்தும் பூமுகத்துடன் எழுந்தருளி இருக்கின்றார். பார்த்த கண்கள் அப்புறம் இப்புறம் அகல மறுக்கின்றன.
ஏறத்தாழ 36 அடி உயரங்கொண்ட விமானம் 5 அடி அளவுள்ள தங்கக் கலசம், வலம் வர தூய நடைபாதை சுற்றிலும் பசும்புல் தரைகள், அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள் இவை அனைத்தும் சென்னை சரவண பவன் ஹோட்டல் உரிமையாளரான ராஜகோபாலன் அவர்கள் ஏற்பாட்டின்படி கட்டியதோடு சுத்தமாக பராமரித்து வருகின்றனர் .
திருக்கோயிலுக்குப் பின்புறம் சகல வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகை சேவார்த்திகள் தங்குவதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தென் பகுதியில் பிரம்மாண்டமான "அறுபடை வீடு முருகன் கலையரங்கம்" அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6.00 டூ 12.00 வரையும், மாலை 4 டூ 9வரையும் கோவில் திறந்திருக்கும். காலை 7.30, பகல் 11.30, இரவு 7.00 என மூன்றுவேளை வழிபாடு தப்பாது நடந்து வருகிறது. தினமும் இரவு 8 மணிக்கு அன்னதானம் நடக்கின்றது. சரவண பவன் ஹோட்டல் முதலாளி ராஜகோபாலன் கிருபானந்த வாரியார் பக்தர். அவரே இந்த கிருபானந்த வாரியாரின் ஜீவசமாதியை கவனித்து வருகிறார்கள்.
இணையத்திலிருந்து எடுத்தது..
பேருந்து, ரயில் மார்க்கமா வேலூர் வரை வந்து, வேலூரிலிருந்து 6கிமீ தூரத்திலிருக்கும் காங்கேயநல்லூருக்கென செல்லும் பேருந்தில் வரலாம். இல்லன்னா ஷேர் ஆட்டோக்களிலும் வரலாம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருக்கோவில், அதன் எதிரே இருக்கும் முருகன் திருக்கோவில் மட்டுமில்லாம ஊரே சுத்தமா இருக்கு.
மாத சஷ்டி, கார்த்திகை விரதம், ராஜகோபாலன், வாரியார் சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திரத்தன்று சிறப்பு யாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், கார்த்திகை தீபம், கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள், ஜீவ சமாதி ஆன தினம்ன்னு இந்த கோவிலில் விழக்களுக்கு பஞ்சமில்லை. கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஜெயந்தி நாளைய தினம் வேலூர் காங்கேயநல்லூரில் விமர்சையாக கொண்டாடப்படும். வாய்ப்பு கிடைத்தால் போய் வாங்க.
எங்கும் எய்தும் காங்கேய நல்லூர் சேவற் கொடியான் செங்கை வேல்ஒன்றே கலங்கும் அடியோர்க்கு ஓர் பங்கம் வாராது காக்கும் அரணாகுமே. - அடியார்க்கும் அடியேன்..
25/8/1906ஆம் ஆண்டு சுவாமிகள் பிறந்தார். அதனால் நாளைக்கு அவரது ஜென்ம ஜெயந்தி. நாளைக்குதான் பதிவு போடலாம்ன்னு இருந்தேன் நாளைக்கு ஓணம் பண்டிகை. ரெண்டு பதிவா போட்டா உங்களுக்கு கஷ்டம்தானே?! அதான்.
நாகர்கோவில்ல நாகர்கோவில்காரங்க இருப்பாங்க. மதுரைல மதுரைக்காரய்ங்க இருப்பாங்க.. தூத்துக்குடில தூத்திக்குடிக்காரங்க மட்டும்தான் இருப்பாங்க. ஆனா, சென்னைல எல்லா ஊர்க்காரங்களும் இருப்பாங்க. சென்னைக்கு பல முகம், பல மொழி, பல கலாச்சாரம்ன்னு ’எங்கேயும் எப்போதும்’ படத்து டயலாக். இந்த டயலாக் உண்மைதான். பல ஊர்க்காரய்ங்க மட்டுமில்ல பல நாட்டுக்காரங்களும் சென்னைல இருக்காய்ங்க.
குடிசைக்கூட இல்லாம பிளாட்பாரத்துல தூங்கும் மக்கள் ஒருபக்கம்.... அரண்மனை போல வீடிருந்தும் பொழுது போகாம அதே பிளாட்ஃபார்ம் பக்கம் உலாவும் மக்கள் மறுபக்கம். ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு பக்கம்..., கால்வாய், குப்பை மேட்டில் பிளாஸ்டிக் கவர்ல செஞ்ச வீடுகள் மறுபக்கம். சர்வதேச உணவுகள் விற்கும் உயர்தர ஹோட்டல்கள் ஒருபுறம், பாரம்பரிய உணவான களி, கூழை விற்கும் தள்ளுவண்டி கடை மறுபக்கம். சாமி, பூதம் இல்லன்னு சொல்லி விஞ்ஞான போக்கில் போகும் மக்கள் ஒருபக்கம், அலகு குத்துறது, குறி பார்க்குறது, சாமியார் ஆசிரமம்ன்னு மூடநம்பிக்கைகள் மறுபக்கம். லிவிங்க் டூ கெதர்ல வாழும் வாழ்க்கை ஒருபக்கம்... கூட்டுகுடும்பம் மறுபக்கம்... ஹோலி பண்டிகை ஒரு பக்கம்... ஓணம் பண்டிகை மறுபக்கம்... நெதர்லாந்துக்காரன் ஒரு பக்கம்ன்னா... ஆப்பிரிக்காக்காரி இன்னொரு பக்கம்... சர்வதேச விமான நிலையம், சர்ச், கோவில், தியேட்டர், மருத்துவமனைகள், கல்வி, கலை, தொழிற்சாலைகள்ன்னு எல்லா துறையினருக்கும் சென்னைதான் மையப்புள்ளி...
தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னை, தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்திய அரசியல், மருத்துவம், சுற்றுலா பொருளாதாரம்ன்னு பலவிதத்தில் முக்கிய பங்கு வகிக்குது. ஆங்கிலேயர்கள் காலூன்ற அடித்தளமிட்டது சென்னைதான். சோழ, பல்லவ, விஜய நகர பேரரசுகளுக்கும் முக்கிய இடமா சென்னை இருந்திருக்கு. இத்தனை சிறப்பு வாய்ந்த சென்னை இன்னிக்கு ஆரம்பம் எது முடிவெதுன்னு தெரியாம இருந்தாலும் ஒருகாலத்தில் ஒரு சிறு கிராமமாதான் இருந்திருக்கு. இன்னிக்கு கால்வைக்க இடமில்லாம ஜன நடமாட்டம் மிக்கதா இருக்கும் சென்னை சொற்ப மக்கள் வாழ்ந்த இடமாவும் இருந்திருக்கு.
தங்கள் வணிகப்பொருட்களை சேமிச்சு வைக்கும் கிடங்கு அமைக்க ஒரு இடம் ஆங்கிலேயருக்கு தேவைப்பட அப்படி வாங்கிப்போட்ட இடம்தான் இன்றைய சென்னை. இந்த இடத்தை ஆங்கிலேயர் வாங்க கூவம் ஆறும், அடையாறும்தான் காரணம். இன்னிக்கு மூக்கை சுளிக்க வைக்கும் இடமா இருந்தாலும் ஒருகாலத்தில் தெளிவான நீரோட்டத்தோடு கூடிய அழகிய நதியா இருந்துச்சு. அந்த அழகில் மயங்கியும், சரக்குகளை கொண்டு செல்ல படகு போக்குவரத்துக்கு வசதியாகவும் இருக்கும்ன்னுதான் இந்த இடத்தை ஆங்கிலேயர் வாங்கினாங்க.
1639 ம் ஆண்டு ஆக 22ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோதன் ஆகியோர் இணைந்து ஐய்யப்பன், வேங்கடப்பன்ன்றவங்கக்கிட்ட இப்பத்திய செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கினாங்க. அந்த நாளைதான் சென்னைக்கு பிறந்த நாளாய் கொண்டாடுறாங்க. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிய பிறகுதான் சென்னை பிரம்மாண்டமாய் வளர ஆரம்பிச்சது. அப்படி வளர்ந்த நகரம் திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் மாதிரியான நூற்றாண்டு புகழ்வாய்ந்த ஊர்களையும் இணைச்சுக்கிட்டது. வடக்கே இருந்த பகுதிகள் மதராசப்பட்டிணமாகவும், தெற்கே இருந்த பகுதிகள் தங்களோட அப்பா பேரான சென்னப்பநாயக்கன் பேருல இருக்கனும்ன்னு கேட்டதால சென்னைபட்டணம்ன்னு பேர் உண்டாச்சு. 1688ல இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் நகராட்சியாய் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் நகராட்சி அப்போதைய சென்னை பட்டனம். அதேப்போல, இந்தியாவின் முதல் மாநகராட்சி இப்போதைய சென்னை. லண்டன் மாநகராட்சிக்கு அடுத்து இப்போதைய சென்னை அந்த இடத்தை தட்டிக்கிட்டு போச்சு.
பாங்க் ஆஃப் மெட்ராஸ் 1935
சென்னை பட்டினம் பின்னாளில் ஆங்கிலேயர்களால் மதராசப்பட்டினமானது. சென்னை மட்டுமல்ல அப்போதைய மதராசப்பட்டினத்தில் தமிழ்நாட்டோடு இன்னும் பல மாநிலத்தின் இடங்கள் சேர்ந்திருந்தது. 1969ல மொழிவாரியாக எல்லை பிரிக்கப்பட்டு தமிழ்நாடு தனியாய் பிரிந்து வந்தது. இந்திய சுதந்திரத்திற்குபின் சென்னை மாகாணமானது. அதன்பின் 1956ல மதராஸ்ன்னு பேர் வைக்கப்பட்டு இப்ப சென்னையா விஸ்வரூபமெடுத்து நிக்குது.
1880 காலத்தைய பாரீஸ்
சென்னைன்னா நமக்கு நினைவுக்கு வர்றதுல மெரினா பீச்சும் ஒன்னு. உலகத்துல நீளமான பீச்சுல இதும் ஒண்ணுன்னாலும் உலகின் நீளமான பீச்சுல மெரினாக்கு இரண்டாவது இடம். கிட்டத்தட்ட 13கிமீ தூரம் நீண்டுக்கிட்டிருக்கும். பேரும் புகழோடும் இருக்கும் இந்த மெரினா பீச் அன்னிக்கு களிமண் பகுதியா இருந்துச்சுன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா பாருங்க. அதான் உண்மை. 1880ல ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப்தான் முதன்முதலில் அழகாக வடிவமைத்தார் `1881 ம் ஆண்டு சென்னை துறைமுகம் உருவாச்சு. 1884ல மெரினான்னு பேர் வச்சாங்க. மெரினா பீச் லைட் அவுஸ் பத்தி ஒரு பதிவு ஏற்கனவே போட்டிருக்கு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போய்ட்டு வந்திருங்க.
கொத்தவால்சாவடி சந்தை 1939
அடையாறுங்குற ஆறு கடலில் கலக்கும் பகுதியின் வடக்கு பகுதியும், சாந்தோம் சர்ச்சுக்கும் இடைப்பட்ட பகுதியே சாந்தோம் பீச். சாந்தோம் சர்ச் என்னும் புனித தோமையார் தேவாலயம் இங்கதான் இருக்கு. இந்த இடம் மீனவமக்கள் நிறைந்த பகுதியாகும். இங்க மீன் விற்பனை களைக்கட்டும்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான LIC கட்டிடம்
வர்த்தகம் பெருக பெருக போக்குவரத்தை கட்டமைப்பதில் ஆங்கிலேயர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். 1856இல் முதல் ரயில் நிலையம் ராயப்பூரில் உருவானது. அதன்பின்னர் பார்க் டவுன்(பூங்கா நகர்), செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டது
மாட்டு வண்டியும், குதிரைவண்டியுமாய் ஓடிக்கொண்டிருந்த சென்னை வீதிகளில் 1895 மே 7ல்தான் ட்ராம் வண்டி ஓட ஆரம்பிச்சது. மணிக்கு 7கிமீ வேகத்துல சென்ற இந்த வண்டி, தங்கச்சாலை(மின்ட்) , கடற்கரை சாலை, மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), பாரீஸ் கார்னர் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ட்ராம் வண்டிகள் ஓடியது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சென்னை வீதிகளில் ட்ராம்தான் முக்கிய போக்குவரத்து சாதனம். இன்னிக்கு தினத்தந்தி ஆஃபீஸ் இருக்கும் இடம்தான் ட்ராம் வண்டிகளின் பணிமனை இருந்ததாம்.
அன்றைய சென்னையில் துறைமுகம் இல்லாத காரணத்தில், வர்த்தக பொருட்களை சுமந்து வரும் கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி, சரக்குகளை இறக்கி, படகுகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வந்தனர். இதனால், பொருள், நேரம், உயிர்சேதம் அடிக்கடி நிகழ்ந்தது. அதனால் சென்னையில் துறைமுகம் அமைக்க வேண்டி சூழல் உண்டானது.
இப்ப துறைமுகம் இருக்கும் அதே இடத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியால் 1881ல துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியது. ஆனா, போக்குவரத்து தொடங்கிய ரெண்டு மாசத்துலயே அந்த துறைமுகம் உருக்குலைந்து போனது. ஆனாலும் மனசை தளரவிடாம வேற மாதிரி துறைமுகம் கட்டி முடிச்சு 1896ல பயன்பாட்டுக்கு வந்தது. அன்றைக்கு தொடங்கிய கப்பல் போக்குவரத்து இன்றும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு.
பெசண்ட் நகர் பீச்ன்னு சொல்லப்படும் எட்வர்ட் எலியட் பீச்தான் மெரினாவின் கடைசி முனை. காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த எட்வர்ட் எலியட்ன்ற ஆங்கில அதிகாரியின் நினைவாக இந்த பீச் அழைக்கப்படுது. மெரினா பீச்சுலயே இந்த பீச் ரொம்ப சுத்தமா இருக்குமாம்! நீரில் மூழ்க ஒருவரை காப்பாற்றி தன் உயிரை இழந்த டச்சு மாலுமியான கார்ல் இசுபிட் நினைவாக இங்க ஒரு நினைவு சின்னம் இருக்கு. இங்கதான் அஷ்டலட்சுமி கோவில், ஆரோக்கியமாதா கோவில், அறுபடைவீடு கோவிலும் இருக்கு. அஷ்டலட்சுமி கோவில் நம்ம பிளாக்குல வந்திருக்கு. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க.
இன்னிக்கு சென்னைல புதுசு புதுசா கட்டிங்கள் பல வந்தாலும் 200, 300 வருட கட்டிடங்களும் சென்னைல இன்னும் இருக்கு. அதுல ஒரு சிலது பார்ப்போம்.. 1892 ல ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி இண்போ- சர்ச்சியனிக் கட்டடக்கலையின்படி கட்டப்பட்டது இன்றைய உயர்நீதிமன்ற வளாகம். இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம்ன்ற பெருமை கொண்டது இக்கட்டிடம். மிக உயரமான கூம்புகளால் நிற்கும் அழகிய கட்டிடம் இது. முழுக்க முழுக்க சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த கட்டிடம் கலங்கரை விளக்கமாவும் இருந்திருக்கு. சென்னைமீது எம்டன் கப்பல் வீசியதில் அந்த லைட் அவுஸ் சேதமாகிட்டதால இன்றைய லைட் அவுஸ் கட்டப்பட்டது. இதற்கான நினைவுக்கல் ஒன்னு வச்சிருந்தாங்க. இப்ப இருக்கா?! இல்லியான்னு தெரில.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் இடமான தலைமைச்செயலகம் இருக்கும் கட்டிடத்தோட பேரு புனித ஜார்ஜ் கோட்டை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். 1644 ஏப்ரல் 23ம் நாளில்தான் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. சுத்திலும் அகழி சூழ்ந்த இக்கட்டிடத்தின் சுவர்களும், கதவுகளும் இதன் பழமையை பறைச்சாற்றுது. காலமாற்றத்தில் எத்தனை மாற்றம் இக்கட்டிடத்தில் செய்தாலும் பழமை மாறாம இருப்பது ஆச்சர்யமே!
எனக்கு சென்னைன்னா ரொம்ப பிடிக்கும். அங்க படிக்கனும்ன்னு நினைச்சேன். அங்கதான் வாக்கப்படனும்ன்னு நினைச்சேன்.. அங்கதான் செட்டில் ஆகனும்ன்னு நினைச்சேன். ஆனா எதும் நடக்கல. பார்க்கலாம் எதிர்காலத்துலயாவது செட்டில் ஆகுறேனான்னு. சென்னைமேல் இருந்த மோகமே சென்னை பத்தி எழுதிய பதிவு இன்னிக்கு உதவுது. சென்னை தின கொண்டாட்டம் ஆக 20 முதல் 27 வரை கொண்டாடப்படுது. அதுக்காக தமிழக அரசு சார்பா பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், மாரத்தான் ஓட்டம், விளையாட்டு போட்டி, பேச்சு போட்டின்னு நிறைய போட்டிகள் களைக்கட்டுது.
சென்னையின் முகத்தை காட்டும் மெரினா படப்பாடல்... ஹாப்பி பொறந்தே டே சென்னை......................