Tuesday, September 18, 2012

அஷ்டாவதானி...,


மானத்தை மறைக்கும் உடையாய் ,
மகளுக்கு தாவணியாய்,
அரிசி உலர்த்தியாய்,

குளிருக்கு போர்வையாய்..,
தலையணை உறையாய்...,
அடுப்படியில் கைப்பிடித் துணியாய்,
விளக்குத் திரியாய்,

இப்படி...,
அவளைப் போலவே??!
 பலரூபமெடுக்கும்,
                                                     அம்மா வாங்கித் தந்த "புடவை" 

26 comments:

  1. சில சமயங்களில் தலகாணி உரையாய்!

    நிச்சயம் அஷ்டாவதானி தான்...

    ReplyDelete
    Replies
    1. அழகான ஒரு வரியை எடுத்து தந்திருக்கீங்க சகோ. சேர்த்துடுறேன். மிக்க நன்றி

      Delete
  2. இறுதி வரிகள் மிக மிக அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. குழந்தைகள் அம்மாவின் அரவணைப்போடு தூங்க... -> தொட்டில் கட்டி...

    ReplyDelete
  4. வரிகள் மிக அருமை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மறுப்பேதுமில்லை..

    ReplyDelete
  6. ம்ம்ம்... ம் (;
    உண்மையிலேயே அஷ்டாவதானி தான் சகோ

    ReplyDelete
  7. அருமை அருமை!

    ReplyDelete
  8. மிகச்சிறந்த வரிகள் ...
    நன்று

    ReplyDelete
  9. எக்ஸ்செலன்ட்

    ReplyDelete
  10. ஹி! ஹி! கணவர்கள் சார்பாக ஒரு கண்டனம்!

    துவைத்து காயவைப்பதற்குள் எங்களுக்கு மூச்சுமுட்டி விடுகிறது!
    அதேமாதிரி, காதலிலும் இல்வாழ்க்கையிலும் தோல்வியடைந்த தமிழச்சிகள் கையில் கிடைக்கக்கூடாதும் புடவை தான்!!

    ReplyDelete
  11. ஆகா.. அஷ்டாவதானி வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நிச்சயம் உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  13. தாயைப் போல் சேலை !

    ReplyDelete
  14. >>அஷ்டாவதானி...,

    kaஷ்டாவதானி...,

    ReplyDelete
  15. சேலைய வச்சி கவிதையா யக்கா .......

    ReplyDelete
  16. அம்மா அஷ்டாவதானி தான், அம்மாவின் சேலையும் அஷ்டவதானிதான் உண்மை.
    குழந்தை வளர்ந்தவுடன் அம்மாபுடவையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு கையை வாயில் போட்டு சப்பும். அதற்கும் அம்மாவின் புடவை தேவைப்படும்.
    நான் என் அம்மாவின் புடவையை பத்திரமாய் வைத்து இருக்கிறேன் அவர்கள் நினைவாய்.
    அருமை அருமை கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கவிதை மிக அருமை சகோதரி. உங்கள் கவிதை என் குட்டிகாலத்தை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
  18. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  19. இரசிக்கவைத்தன வரிகள்! ஒவ்வொருவரின் நினைவிலும் வலம்வரும் அஷ்டவதானி!

    ReplyDelete
  20. சேலைக்கும் கவிதை இங்கு அதை பட்டியலிட்ட விதம் நன்று அதற்கு தலைப்பு மிக பொருத்தம்

    ReplyDelete
  21. அருமை அருமை


    கணற்பொறி வாழ்க்கை பதிவு காணப்படவில்லையே.!

    ReplyDelete
  22. என்னுடைய வலைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா, இமைகள் எனும் தலைப்புகளில் கவிதைகள் படைத்துள்ளேன்.நேரம் கிடைக்கையில் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete