Wednesday, October 10, 2012

அன்பும் நஞ்சுதானடி.....,


ஊற்ற, ஊற்ற...,
உளவாங்கியபடியே
நிரம்ப விரும்பாத...,
மது கோப்பை!

எனை மீட்டும் உன் அன்பும்..,
அது மீட்கும் உன் நினைவும்...,
மதுவை விடவும்??!!
 மயக்கமாய்...,

எப்போது தொடங்கினாய்..,
என்னென்ன பேசினாய்..,
என்ன சொல்லி முடித்தாய்!!??
எந்த பிரக்ஞையுமின்றி நான்.....

மூச்சுத் திணறுகிறது...,
மூச்சு விட முடியவில்லை..., 
மூழ்கி கொண்டிருக்கிறேன்...,
 உன் அன்பிற்குள்??!!

நீந்தி கரசேரும் நிலையில் நானில்லை..,
நினைவும் எனதாயில்லை..,
கரம் நீட்டி கேட்கிறேன்..,
கரையேற்றி விடும்படி....,

”நீயாய் நீந்தி .., கரை சேர்”!
எனச்சொல்லி ...,
தேய்ந்து புள்ளியாய்..., 
போய் கொண்டேயிருக்கிறாய்!!??

”அன்பும் நஞ்சுதானடி”
அசரீரி காதில் விழ...,
 அண்ணாந்து...,
வானத்தை  பார்க்கிறேன்...,

விடியும் வானில்..,
சிரித்தபடி..,
மேக மூட்டத்திலிருந்து விலகி..,
கண் சிமிட்டுகிறது “விடிவெள்ளி”

16 comments:

  1. அருமையான கவிதை
    உணர்ந்து ரசிக்கும் படியான அருமையான
    படிமங்கள்.இறுதியில் நம்பிக்கையூட்டி முடித்த விதம்
    மனம் கவர்ந்தது.
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  2. ம்ம்ம்ம் .. ஆஹா அற்புதம் அருமை சகோ

    ReplyDelete
  3. எனை மீட்டும் உன் அன்பும்..,
    அது மீட்கும் உன் நினைவும்...,
    மதுவை விடவும்??!!
    மயக்கமாய்...,
    அருமை

    ReplyDelete
  4. கவிதையானி இல்லா கவித ஞானி போல இருக்குன்னேன்

    ReplyDelete

  5. // அன்பும் நஞ்சுதானடி //

    நஞ்சைக் கண்டு அஞ்சும் உள்ளம்
    அன்பை அணைக்க கெஞ்சுவதேன் ?

    அன்பைக்குறை சொல்லாதீர்.
    வம்பு அது. வேண்டாம் நமக்கு.

    பாலும் பாயசமும் பிடிக்கும் என்றாலும்
    பத்து லிட்டர் குடி என்றால் முடியுமோ ?

    எதுவும் எங்கும் எகிறிப்போனால்
    எதிரி ஆகிடும் ஐயமில்லை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. ரொம்ப நன்னா இருக்கு கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அன்பும் நஞ்சுதானடி. நல்ல பஞ்ச் வரிகள்.

    ReplyDelete
  8. அருமையான கவிதை
    ரசித்தேன்

    ReplyDelete
  9. நல்ல கவிதை...அதிக .மதுவும் அன்பும் எளிதில் ஆளை கவுத்துவிடும்.அதானல் எப்போதுமே நான் இந்த இரண்டிலும் அளவைதாண்டுவதில்லை

    ReplyDelete
  10. ஆஹா... மனதில் பதிந்தன வரிகள். அருமையான கவிதைம்மா.

    ReplyDelete
  11. அட்டகாசம் ... தொடருங்கோ ...

    ReplyDelete
  12. அருமையான கவிதை
    நேரமிருந்தால் இங்க வாங்க‌
    http://alakinalaku.blogspot.com/

    ReplyDelete
  13. தலைப்பே ஆழ்ந்த வரிகளை மனதில் அழுத்தமாய் பதித்தன.

    ReplyDelete
  14. மேக மூட்டத்திலிருந்து விலகி..,
    கண் சிமிட்டுகிறது “விடிவெள்ளி” அருமை!

    ReplyDelete