Friday, December 13, 2013

சொர்ணாகர்ஷன கிரிவலம் 2 - புண்ணியம் தேடி ஒரு பயணம்


 சொர்ணாகர்ஷன கிரிவலம்ன்னா என்ன? அதன் பலன், கிரிவலம் வரும் முறைகள் எப்படின்னு போன வாரம் பார்த்தோம். நம்ம கிரிவலத்தைபோன வாரம் நிறுத்திய இடமான எம லிங்கத்துல இருந்து மீண்டும் நம் கிரிவலத்தை ஆரம்பிக்கலாம். வாங்க!!

 கிரிவலத்தில் 3-வது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி இருக்கு. எமலிங்கத்தில் தென் திசையில் எம தீர்த்தம் இருக்கு.  செவ்வாய் கிரகத்தின் ஆட்சிக்கு  உட்பட்ட இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியவாறு எமதர்மனால் நிறுவப்பட்டதாக புராணம் சொல்லுது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சணம் வந்தப்போஎமன் பாதம் பட்ட அடிச்சுவடுலாம் தாமரைப் பூக்களாய் மாறின. ஓரிடத்தில் செம்பொன் பிரகாசமாய் ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம்ன்னு சொல்றோம்.

பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுத்துச் செல்ல வரும் எமதூதர்கள், இங்கு வந்து வழிப்பட்ட பின்னே தங்கள் கடமையை செய்வதாய் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.இதை தரிசனம் செய்பவர்கள் பண நெருக்கடி ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்ன்னு நம்பப்படுது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கிறது இந்த மஹாநந்தி சன்னதி. நந்தியின் அனுமதி பெற்று தான் சிவனை வழிபடவேண்டும் என்பது சிவாலய விதி. சிவன் ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பதால் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்திருப்பர்.

மேலும், இங்கே ஒரு ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால்மலையானதுநந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'ன்னு சொல்றாங்க.

குந்திக்கு 5 பிள்ளை வரங்கள் உபதேசித்த இடம் இந்த துர்வாசர்கோவில் ன்னு சொல்லபடுது. இங்க, துர்வாச முனிவரின் காலடி பதிந்த தடம் இருக்கு.  சிறிய பீடத்தில் நான்கு தூண்களுடன் சிறியதாக இருக்கு.  நாமும் அவரது பொற்பாதங்களை வணங்கி கிரிவலம் போவோம். இந்த துர்வாசர் கோவிலின் எதிரில் தான் அடிமுடி சித்தர் ஜீவசமாதி இருக்கு. அடிமுடி சித்தர் தினமும் மலையை வலம்வரும் பழக்கத்தை கொண்டவராம் தன்னுடைய வயதான காலத்திலும் நடக்கமுடியாதபோது வைக்கோல் போரில் திரி செய்து அதை உருண்டையாக உருட்டி அதை கிரிவலம் வருபவர்கள் உதவியோடு, இழுத்து செல்ல வைத்து கிரிவலம் செய்வாராம். சுமார் 150 வருடங்களுக்கு முன்னரே ஜீவசமாதியான இவர் அருபமாக இன்னும் அவரது சிஷ்யர்களுக்கு அருள் புரிகின்றாராம்.
  
இங்கே ஒரு தீர்த்தம் காணப்படுது. அதன் கரையில் நந்திபெரிய திருவுருவ சிலையாக  இருக்கு இந்த தீர்த்தத்தின் பெயர் குறிப்புகள் ஒன்றும் இல்லை கிழக்கில் - இந்திர தீர்த்தம் தென் கிழக்கில் - அக்னி தீர்த்தம் தெற்கில் - யம தீர்த்தம் நாம் இந்த மூன்று தீர்த்தங்களை தான் தாண்டி வந்துள்ளோம் அதனை அடுத்து காலிங்கநர்த்தன கண்ணன் கோவிலும் தீர்த்தமும் இருக்கு.
அடுத்து நாம பார்க்க போறது நிருதிலிங்கம். கிரிவலப் பாதையில் 4-வதாக இரூகு இந்த லிங்கம்.  மண்ன்ற வார்த்தையின் தூய தமிழ் சொல்லே நிருதிஆகும். தென்கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் நிருதி லிங்கம் ஆகும். ராகுவின் பார்வையில் உள்ள இந்த லிங்கம் ராகு,சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளம் இதன் அருகில் இருக்கு. இதை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் பிரச்சனைகள் குறையும் என நம்பப்படுது.

பிரம்மாவின் மகன் தாணு. இந்த தாணுவின் மகன்தான் நிருதி. சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து உலகின் தென்மேற்கு திசைக்கு அஷ்டதிக்பாலகர்களில் ஒருவரானார். அவர் பூஜை செய்த லிங்கமே இந்த நிருதி லிங்கமாகும். விபூதி பிரியரான நிருதிக்கு இங்கே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுது. இந்த விபூதி ஏவல், பில்லி, சூன்யம் முதலியவற்றை நீக்கும் தன்மையுடையதாகும்.

மேல இருக்கும் படத்தில் இருப்பதே ராகு சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளம்.  மேலும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் சிரிப்பொலியும்பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று அண்ணாமலையாரை வணங்கினார். நிருதீஸ்வரருக்கு காட்சி அளிக்க அண்ணாமலையார் தோன்றிய இடமே இப்போ நிருதிலிங்கம்ன்னு அழைக்கப்படுது. 

இந்த இடத்தில்தான் சிவன் பார்வதிக்கு காட்சி அளித்தார். இங்கிருந்து மலையின் வடிவம் ரிஷபம் போல காட்சி அளிக்கும். நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மக்கட்பேறு கிடைக்கும். ஜென்ப சாபம் நீங்கும். புகழ் நிலைக்கும். இதை  வணங்கும்   பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.


நிருதி லிங்கத்தை வழிபட்ட பின்பு தெற்கிலிருந்து மேற்காக திரும்பும் வளைவில் இருபபது திருநேர் அண்ணாமலை திருக்கோவில். இந்த இடம் பார்வதிதேவி தன் பரிவாரங்களுடன் கிரிவலம் வரும்போது சிவபெருமான் ரிஷபவாகனத்தில் தரிசனம் கொடுத்த ஸ்தலம். ஆகையால் இந்த இடத்திலிருந்து பார்க்கும் போது அண்ணாமலையின் முகப்பு நந்தி போல் காட்சியளிக்கும்.   இந்த திருநேர் அண்ணாமலை திருக்கோவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நேர் எதிரில் அமைந்து இருப்பதாலும் இந்தப் பெயர் வந்தது.

இதன் அருகில் உண்ணாமுலை அம்மன் திருகோவில் இருக்கு. கோவில் அருகிலேயே புண்ணிய  தீர்த்தம் இருக்கு. அதையும் வணங்கி கிரிவலம் போகனும். கார்த்திகை மாதம் நடைபெறும் தீப திருவிழாவின்போதும்,  அண்ணாமலையார் கிரிவலம் சுற்றும் போது ம் இங்கேயும் பூஜைகள் நடைபெறும்.

அடுத்து,  கிரிவலப் பாதையில் வீர ஆஞ்சேநேயர் கோவில் இருக்கு.  மக்கள் எல்லாம் வெளியே விற்கும் துளசிமாலை, வெண்ணெய்லாம் வாங்கி ஆஞ்சேநேயர்க்கு நைவேத்யமாகவும், வேண்டுதலுக்காவும் சாத்துகின்றனர்.

அடுத்து கிரிவலபாதையில் வருவது ஸ்ரீராகவேந்தர் ப்ருந்தாவனம். ராகவேந்தருடைய திருஉருவ  சிலையும் இருக்கு. முன்பை விட கொஞ்சம் கொஞ்சமாக இது அழகுப்படுத்தபட்டு இருக்கு. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றது. அவருடைய புண்ணிய இடத்துல அவரை வணங்கிஅவருடைய அருளாசியைப் பெற்று வரலாம் வாங்க!!

வழியில் ஒரு தீர்த்தம் இருக்கு. ஆனா, அதன் பெயர் தெரியலை. முன்னலாம் திருநேர் அண்ணாமலை திருகோவிலின் அபிஷேகத்திற்கு  இந்த தீர்த்தத்திலிருந்து தண்ணீர் எடுத்து செல்வார்களாம். அது இப்ப கவனிப்பாரற்று இருக்கு.

தீர்த்த குளத்தின் பின்புறம் இருந்து பார்க்கும் போது புதர் மண்டி காணப்படுது. இரண்டு அடுக்குள்ள குளமாக இக்குளம் இருக்கு. தண்ணீர் கொஞ்சம் இருக்கு.  தீர்த்தகுளத்தில தீர்த்தம் எடுத்து தலையில் தெளிச்சு நம்மை சுத்தமாக்கிட்டு கிரிவலம் தொடரலாம். வாங்க!!


அடுத்து,  நாம பர்ர்கபோறது கௌதம மகரிஷி ஆலயம். இந்த ஆலயத்தை பற்றி எந்த வரலாறும் தெரியாத நிலையில் நம் கூட வந்த குழுவினரில் ஒருவர் அதன் பெருமைகளை கூறினார். திருக்கயிலாயத்தில் அன்னை பார்வதிசிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடஉலகமே இருளில் மூழ்கியது. சூரிய-சந்திரர்களாகவும், அக்னியாகவும் உள்ள அக்கண்களை, அன்னை பார்வதி மூடியதால் உலகெங்கும் இருள் சூழ்ந்தது. ஜீவராசிகள் துன்பமடைந்தன. இதையுணர்ந்த அன்னை  பார்வதிதனது கரங்களை விடுவித்துக் கொண்டாள். என்றாலும் இதற்குப் பரிகாரமாக காஞ்சி மாநகரம் சென்ற அன்னை அங்கேமணலில் லிங்கத்தை உருவாக்கி வழிபட்டு வந்தாள். அங்கு தோன்றிய இறைவன்பார்வதியைத் திருவண்ணாமலை சென்று தவமிருக்குமாறு ஆணையிட்டார். 

அதன்படியே, திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்றின் மீது யாகசாலை அமைத்து தவம் செய்து வந்தாள். திருவண்ணாமலையில் கௌதம முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவர் பார்வதி தவம் செய்ய கௌதம மகரிஷி அனைத்து  உதவிகளையும் செய்தார். பார்வதியின் தவத்தின் பயனால் சிவன் தோன்றி, ‘என் இடப்பக்கம் உனக்குத் தருகிறோம்’ எனக் கூறி பெண்ணொரு பாகனாக மாறி அர்த்தநாரீஸ்வரரானார். கார்த்திகை மாதப் பௌர்ணமியும் கிருத்திகையும் கூடிய ஒரு நாளில் இந்த அற்புதம் நிகழ்ந்தது.ஆகையால் தான் அடிஅண்ணாமமலையில் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு பக்கத்தில் கௌதம மகரிஷி எழுந்தருளியுள்ளாராம்.
அடுத்து நாமப் பார்க்கப் போறது சூரியலிங்கம். இது நிருதி லிங்கத்துக்கும்,வருண லிங்கத்துக்கும் இடையே  இருக்கு. இது அஷ்ட லிங்கத்தின் வரிசையில் சேராதுசூரிய லிங்கத்தை வழிப்பட்டால் அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும்.

இதன் நுழைவாயில் குறுகலான அமைப்பில் இருக்கிறது இந்த லிங்கம். சூரியபஹவானால் இல்லிங்கம் வணங்கபட்டது. சரி, நாமும் இந்த லிங்கத்தை வணங்கிவிட்டு அடுத்த அஷ்ட லிங்கத்திற்கு போலாம்.

இங்கே,  ஒரு பெருமாள் கோவில் இருக்கு. அதில் பெரிய திருவடிகள் இருக்கு. இந்தக் கோவிலின் வரலாறும் தெரியலை. பெருமாளையும் பெரியத் திருவடியையும் வணங்கிவிட்டு  போலாம், வாங்க!!
மேல இருக்கும் படத்தில் இருப்பதுதான் அந்த பெரிய திருவடி. மிகவும் பெரிய புண்ணிய பாததரிசனம். அதற்கு பக்கத்திலே ராமர் திருவுருவ சிலைகள் இருக்கு. அதையும் வணங்கிக்கலாம் வாங்க. இனி அஷ்ட லிங்கங்களில் அடுத்து வரும் லிங்கத்தை பார்க்கலாம்.

இங்க இருக்கிறதுதான் வருண லிங்கம். கிரிவலப்பாதையில் 5வதா உள்ள லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் இருக்கு. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார்.வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.

அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான் இங்குமுட்டிக்கால் போட்டும்ஒற்றைக்காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்படி வரும்போது வானத்தை தொடும் அளவுக்கு நீரூற்று ஒன்று தோன்றி இருக்கு. அந்நீரை தலையில் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட அங்கு வருண லிங்கம் தோன்றியது. வருண லிங்கத்தை வழிப்பட்டால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும். சர்க்கரை நோய்நீர் சார்ந்த நோய்கள் நீங்கும் . செல்வம் கொழிக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

மனசுக்குள் சிவனும், அவன்மேல் பக்தியும் இருந்தாலும், கிரிவலம் வந்ததுல கொஞ்சம் டயர்டாகிப் போச்சு! கொஞ்சம் எனர்ஜி ஏத்திக்கிட்டு  வாயு லிங்கத்தை தரிசனம் பண்ணலாம்.

வாங்க எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு கிரிவலம் போகலாம்!! 


21 comments:

 1. தமிழ்மனம் முதல் ஓட்டு

  ReplyDelete
 2. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? உங்களை போல வயசான பின் போய் பார்க்கிறேன் (!!!!)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் இளமை ஊஞ்சலாடுதுன்னு நினைப்பு வாத்திக்கு.. இந்த ஜெனரேஷன்ல முப்பதை தாண்டிட்டா வயசானவங்க தான் அப்பு!

   Delete
  2. ராஜாவுக்கு, தன் காதோரம் எட்டிப்பார்க்கும் நரை முடியை வெட்டிட்டா யூத்துன்னு நினைப்பு போல ஆவி!!

   Delete
 3. வணக்கம்
  பதிவு அருமையாக உள்ளது.. வாழ்ததுக்கள் தெரியாத இடங்களை இப்போ படித்த போதுஅறிந்துள்ளோம்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 4. சிறப்பான பகிர்வு சகோதரி... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

   Delete
 5. சிறப்பான பகிர்வு... என்னுடைய கல்லூரி நாட்களில் எங்கப்பா எங்களைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார்... ரமணர் ஆசிரமமும் சென்று வந்தோம்... கிரிவலம் நாங்கள் சென்றது இல்லை... அப்பா தொடர்ந்து சென்றிருக்கிறார்...

  ReplyDelete
  Replies
  1. ஆன்மீக காரணங்கள் ஒரு புறமிருந்தாலும், கிரிவலம் வரும்போது அண்ணாமலை மீது இருக்கும் மூலிகைகள் காற்றில் கலந்து நம் சுவாசத்துள் புகுந்து உடல் நோயை நீக்கும் மற்றொரு காரணமும் உண்டு. நமக்கே அறியாம மூலிகை காத்து நமக்குள் இறங்கட்டுமே! அதனால, கிரிவலம் வர திருவண்ணாமலை வாங்க!!

   Delete
 6. ஒருகிரிவலம் செல்வது போவது போல படங்களும் வர்ணனைகளும் அருமை தொடருங்கள் ..உண்மையில் நல்ல விஷயங்கள் சொல்வதற்கு வயதாகும் போது முடியாமல் போய்விடும் நம் இளமையில் தான் கிரிவலமும் மலை ஏறி தீபம் பார்ப்பது முடியும் நீங்கள் சொன்ன அடிமுடி சித்தர்தகவல் அருமை அதேபோல் மலையடிவாரத்தில் குகை நமசிவாயம் உண்ணாமுலை தீர்த்தம் எல்லாம் போய்வந்தால் அந்த ஆஷ்ரமம் குகை பத்தி எல்லாம் பதிவு இடுங்கள் ..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாய் நான் பார்த்தவற்றை பதிவாய் போடுவேன் அமிர்தா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. ஒவ்வொரு இடங்களையும் படத்துடன் சிறப்பாக விவரித்தமை மிகச்சிறப்பு! கிரிவலம் வந்த உணர்வை தரும் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. எவ்வள்வு சிறப்பா சொல்லிருக்கீங்க,தெரியாத தகவல்களை தெரிந்துக் கொண்டேன்,நன்றி சகோ!!

  ReplyDelete
 9. அக்கா நான் இது வரை திருவண்ணாமலை போனதே இல்லை.ரொம்ப ஆசை அங்க போக.பார்போம்.உங்க புண்ணியத்துல இப்படிஎல்லா இடங்களையூம் பார்கிறேன்

  ReplyDelete
 10. உங்களால் இன்றைக்கு நிறைய விஷயத்தை தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரி

  ReplyDelete
 11. மீண்டும் செல்ல ஆசை. பார்க்கலாம் எப்போது முடிகிறது என!

  ReplyDelete
 12. அருமையான பகிர்வு...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 13. சிறப்பான பதிவு
  தொடருங்கள்
  சகோதரியாரே

  ReplyDelete
 14. படங்களுடன் கிரிவலப்பதிவு
  மிக மிக அருமை
  தொடர்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. பல புதிய தகவல்கள்! சிரத்தையுடன் தகவல்களைத் திரட்டி படங்களோடு வெளியிடுவது சிறப்பு. பாராட்டுகள் ராஜி.

  ReplyDelete