Saturday, December 28, 2013

ராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா!? - கேபிள் கலாட்டா

ரசித்தது:

அது ஒரு பிஸ்கட் விளம்பரம். அம்மா தன் பிள்ளைக்கிட்ட ஒரு பால் டம்ப்ளரை நீட்டி குடிக்க சொல்றங்க. அந்த பையன் குடிக்கமாட்டேனே! இப்ப என்ன செய்வே!?ன்னு ராகமா கேக்குது. அதுக்கு அம்மா, அப்பாக்கிட்ட சொல்வேன்னு சொல்ல, குடிக்க மாட்டேனே!!ன்னு கெஞ்சலும், பாட்டுமா அம்மாவும், பிள்ளையுமா வீடு முழுக்க ஓடுறாங்க...,

பையன் எதுமேலயோ இடிச்சுக்க, திரும்பிப் பார்த்தால் அப்பா! சமர்த்தா பாலை குடிச்சுட்டு, இப்ப குடிச்சுட்டேன். மதியம் என்ன பண்ணுவீங்கன்னு கேட்டுட்டு ஸ்கூலுக்கு போய்டுறான். அம்மா புத்திசாலித்தனமா!! அவனுக்கு பிரிட்டானியா பிஸ்கட் 4 கொடுத்து விடுறாங்க. பையனுக்கு தேவையான சத்துகள் கிடைச்சுடுதுன்னு அழகான ஒரு கவிதையா விரியுது விளம்பரம்.

உறைந்தது:

க்ரைம் சம்பந்தமான நிகழ்ச்சின்னா எனக்கு பிடிக்கும். புக்ல, நியூஸ்பேப்பர்ல, டிவில வந்தால் ஆர்வமா பார்ப்பேன். ராஜ் டிவில கோப்பியம்ன்ற நிகழ்ச்சி ஒண்ணு ஒளிப்பரப்பாகுது. அதுல இப்படிதான் கொலை, கொள்ளை வழக்குலாம் எப்படி நடந்துச்சுன்னு காட்டுவாங்க. போன வாரம் அதுல வாடகைத்தாய் பத்தின புரோகிராம் ஒண்ணு போட்டாங்க. பார்க்கும்போதே கண்ணுலாம் கலங்கிட்டுது.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களொட கருமுட்டையையும், அவங்களோட கணவரின் உயிரணுக்களையும் இணைத்து வேற ஒரு பெண்ணின் கருப்பைக்குள் குழந்தையை வளர விட்டு குழ்ந்தை பெற்றுக்கொள்வதுப்பத்தி எல்லோருக்கும் தெரியும். ஆனா, அப்படி பெத்துக்கொடுக்க வரும் வாடகைத்தாய்கள் படும் அவலம் கொஞ்சம் நஞ்சமல்ல.

தங்கள் கருவை சுமக்க வரும் பெண் தீண்டின பொருட்களை யூஸ் பண்ணாம இருக்குறது, குழந்தை பிறந்த உடனே, அந்த பெண்ணுக்கு குழந்தையோட முகம் கூட காட்டாம எடுத்துக்கிட்டு போய்டுறதும், பிரசவம் வரைக்கும் ராஜ உபச்சாரம் பண்ணிட்டு பிரசவத்துக்குப்பின் சரியா கவனிக்காம விட்டுடுறதுன்னும் அந்த பெண்களுக்கு கொடுமை நடக்குதாம். அதுமில்லாம, இதுக்குன்னு இருக்குற புரோக்கர்கள் பண்ணும் அட்டூழியமும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு சின்ன ரூம்ல அஞ்சாறு கர்ப்பிணிகளை வச்சுக்கிட்டு பிசினெஸ் பண்றாங்க. அந்த பெண்கள் தங்களோட வீட்டுக்கு போன் பேசுறதை கூட தடுக்குறாங்களாம். குழந்தை வேணும்ங்குறவங்கக்கிட்ட லட்சக்கணக்குல காசு வாங்க்கிட்டு, வாடகைத்தாய்ங்களுக்கு பத்து இல்ல இருபதாயிரம் கொடுத்து துரத்தி விட்டுடுவாங்களாம். புருசனோட உயிரைக் காப்பாத்த 3 குழந்தைகளின் தாய் வாடகைத்தாயாகி ஆந்திராவுக்கு போய் வந்தப் பின், சரியான கவனிப்பில்லாம உடல்நிலை கெட்டு, அக்கம் பகக்த்து வீட்டு பேச்சால் மனம் மாறின புருசனோட டைவர்ஸ், ஒரு வருசம் பிரிஞ்சிருந்திருந்ததால குழந்தைகளின் பாசம் மறைஞ்சு போய் இப்ப எதிர்காலமே கேள்விக்குறியான ஒரு வாடகைத்தாயின் பேச்சை கேட்டதும் உறைஞ்சு போய் நின்னுட்டேன்.
அட்வைஸ்:
காலைல எல்லா சேனல்களிலும் ஆலய வழிபாடுன்னு எதாவது ஒரு கோவில் பத்தி போடுறங்க. அது நல்ல விசயம்தான். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அந்த கோவில் பேர் என்ன!? அது எங்க இருக்கு? எப்படி போகலாம்ன்னு சொல்றாங்க. எதாவது ஒரு காரணத்தால, நிகழ்ச்சியோட ஆரம்பத்தை மிஸ் பண்ணிட்டா, அது எந்த கோவில்ன்னு தெரியாம தலையை பிச்சுக்க வேண்டி இருக்கு. அதனால, நிகழ்ச்சி முடியும் வரை கோவிலோட பேரும், ஊரும் வர்ற மாதிரி ஒளிப்பரப்புனா நல்லா இருக்குமே!

எரிச்சல்:
புதிய தலைமுறை புத்தகத்தை விரும்பி படிப்பேன். அதுப்போலதான் புது யுகம் டிவியும் இருக்கும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பிச்சா, அது பொதிகை டிவியை விட மொக்கையா இருக்கு. நிகழ்ச்சிலாம் என்னமோ 80ல வந்த மாதிரி உப்பு சப்பில்லாம இருக்கு. அதைக்கூட தாங்கிக்கலாம். டயலாக் வந்து ரெண்டு நிமிசம் கழிச்சுதான் காட்சி வருது. ரெண்டுத்தையும் மேட்ச் பண்ணி இந்த மொக்கைகளை பார்க்கத்தான் வேணுமா!?டவுட்: 
ராஜ் டிவில மதியம் பெண்கள் நேரம்ன்னு ஒரு நிகழ்ச்சி ஒளிப்பரப்புறாங்க. அட! நம்ம டாபிக்காச்சேன்னு உக்காந்து பார்த்தா ஒரு மணி நேரமும் சமையல் குறிப்பு மட்டும்தான் வருது. சரி, இன்னிக்கு சமையல், நாளைக்கு வேற டாபிக்ன்னு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு டாபிக்ன்னு நினைச்சு மறுநாள் வெயிட் பண்ணி பார்த்தால்..., மறுநாளும் சமையல் குறிப்புதான்!!

பெண்கள்ன்னா சமைக்க மட்டும்தான்ன்னு ராஜ் டிவிக்காரங்க நினைச்சுட்டாங்களா!? பெண்கள் உடல்நிலை, அவங்க படிப்பு, அவங்களுக்கேத்த தற்காப்பு கலை, இன்ஷ்யூரன்ஸ்ன்னு எத்தனை விசயம் இருக்கு!! ராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா!?

அடுத்த வாரமும் கேபிள் கலாட்டா தொடரும்...,

16 comments:


 1. இருந்த நிலை மாறி
  இன்பமது சூழும்
  மறந்து விடு தோழி
  மகிழ வைக்கும் புத்தாண்டில்
  இன்பமே சூழ எல்லோரும் வாழ
  என் இனிய வாழ்த்துக்கள் .......

  ReplyDelete
  Replies
  1. மாறினா சரிதான் அக்கா!

   Delete
 2. நிகழ்ச்சிகள் பதிவின் மூலம் தான் தெரியும்...!

  சொன்ன "அட்வைஸ்" : சரிதான்...!

  ReplyDelete
  Replies
  1. சீரியல்லாம் தவிர்த்து மத்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்ண்ணா!

   Delete
 3. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது குறைந்துவிட்டது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் தப்பில்லையே!

   Delete
 4. த.ம.4

  டிவியே பாக்கறதில்லக்கா....

  ReplyDelete
 5. த.ம. +1

  டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது ரொம்பவே குறைவு.....

  ReplyDelete
 6. சரி....சரி.... நம்ம டிப்ஸ் வாழ்த்து சொல்லுது... நல்லா இருக்கு உங்க தளத்துக்கு....

  ReplyDelete
 7. இங்க டிவி எல்லாம் இல்லை... இணையத்தில் சூப்பர் சிங்கர் மட்டுமே...

  ReplyDelete
 8. உங்கள் எழுத்து விமர்சனத்துக்கு த.ம. +

  ஆனா, நிகழ்ச்சிகள் பார்ப்பது வெகு குறைவுதான்...

  ReplyDelete
 9. பெண்கள்ன்னா சமைக்க மட்டும்தானா ..நியாமான கேள்விதான் !வலைப்பூ எழுத்தாளின்னு உங்களைக்கூட பேட்டிஎடுத்து ஒளிபரப்பலாமே!
  +1

  ReplyDelete
 10. எனக்கு அந்த பிஸ்கெட் விளம்பரம் பிடித்தது...
  வாடகைத்தாய்களின் அவல நிலை, கொடூரமாக இருக்கே....
  விஜய் டிவியில் பக்தி திருவிழா தில்லியில் இருந்த போது பார்த்துக் கொண்டிருந்தோம்... இப்போ காலையில் எதுவும் பார்ப்பதில்லை..

  ReplyDelete
 11. உங்களுடைய இந்த வலைப்பூவைப் பார்த்து (படித்து!!) ராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்கொண்டாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

  ReplyDelete
 12. த.ம.11 நானும் ஓட்டுப் போட்டுட்டேன்.

  ReplyDelete
 13. அந்த விளம்பரம் எனக்கும் பிடித்திருந்தது.... அழகான கவிதை போல// உண்மைதான்

  ReplyDelete