Wednesday, December 25, 2013

மதராசப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஒரு பயணம் -மௌன சாட்சிகள்

நான் சென்னை வரும்போதுலாம், பட்டிக்காட்டான் மிட்டாய்க்டையை முறைச்சுப் பார்க்குற மாதிரி, சென்னையோட பளப்பளப்பைப் பார்த்து வாயைப் பிளப்பதுண்டு. எத்தனை முறை பார்த்தாலும் சென்னைல இன்னும் பல இடங்கள் என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்குற இடங்கள் பல உண்டு. அதைலாம் சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.

அதுல சில முக்கியமான இடங்களை மட்டும் பாப்போம் அதைபார்க்கும் போது பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட மதராசப்பட்டினம் எப்படி இருந்திருக்கும்? அந்த சமயத்தில் அவர்கள் கட்டிய கட்டிடங்கள் இல்ல அவங்க ஆஃபீசா இயங்கி வந்த கட்டிடங்கள் எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும்ன்னு இன்றைய மௌன சாட்சிகளில் பார்க்கலாம்!!  

முதலில் நாம பார்க்க போறது சென்னை சென்ட்ரல். பழைய படங்களாகட்டும், புதிய படங்களாகட்டும் நாயகன், நாயகி சென்னை வந்துட்டாங்கன்னு சொல்ல முதல்ல காட்டுறது சென்னை சென்ட்ரலாகத்தான் இருக்கும். ஆனா, அது உருமாறி பல்வேறு காலங்களில் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மாற்றங்களை அடைந்து இப்ப இருக்கும் நிலைக்கு வந்திருக்கு.
  
இந்த படம் பக்கிங்காம் ஓடையின் மேற்கு பக்கத்திலிருந்து 1880 ல எடுக்கப்பட்டது. 1856 ல முதல் ரயில்வே ராயபுரத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் நெட்வொர்க் மெட்ராஸ் ரயில்வே நெட்வொர்க் ஆக மாறியபோது இரண்டாவதா 1873 பக்கிங்காம் கால்வாய் பக்கத்துல கட்டப்பட்டது. அதுதான் இன்றைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.

இந்தப்படம் 1905 ல எடுக்கப்பட்டது அதன்பிறகு 1907 ல இந்த ஸ்டேஷன் மெட்ராஸ் ரயில்வே கம்பெனியின் முக்கிய இடமாக விளங்கியது
.
  அதன் பிறகு எல்லா வண்டிகளுமே இங்க இருந்துதான் புறப்பட்டது. பின்னர் 1908 ல அது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில்வே கம்பனியின் கண்ட்ரோலின் கீழ வந்தது. பின்னர் சௌதர்ன் ரயில்வேயாக  1922 ல செயல்பட தொடங்கியது.  இந்தப்படம் 1925 ல எடுக்கப்பட்டது. பின்னர் பீச் தாம்பரம் எலெக்ட்ரிக் ட்ரைன் 1931 ல தொடங்கப்பட்டது.
   

அதன் பிறகு 1953 ல பல புதிய வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக விளங்கியது. இந்த ரயில்வே ஸ்டேஷனின் கட்டிட அமைப்பு இங்கிலாந்தின் கோதிக் ரிவைவல் கட்டமைப்பை கொண்டது. இதை முதன்முதலில் ஜார்ஜ் கர்டிங் என்பவர் நான்கு பிளாட்பர்ம்களுடன் தான் வடிவமைத்தார். இது முடிக்க ஐந்து வருடமாகிட்டது. அதன்பிறகு ராபர்ட் பெல்லொவ்வெஸ் சிஸ்லோம் என்பவர் இதில் கூடுதலாக 136 அடி உயரத்தில்  மணிகூண்டு அமைத்து வடிவமைத்தார். அதில் திருவிதாங்கூர் கட்டிடகலையின் கோபுர அமைப்பும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகுதான்  சில மாறுதல்களுடன் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் முழுமை பெற்றது.
  
இது இன்றைய நிலை.  பெரிய பாலங்களும் ரயில்வே ட்ராக்களும், வாகன இரைச்சல்களும், மக்களின் கூட்டமும், டிராபிக் நெருக்கடியும் இதன் அமைதியான வரலாற்றை இரைச்சல்கள் மிக்கதா மாற்றிவிட்டது.


மதராஸ் ரயில்வே கம்பனின் மற்றுமொரு முக்கியமான கட்டிடம் சதர்ன் ரயில்வே தலைமையகம். ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன்னுக்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் இந்தோ சரசெனிக் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தை காண்டிராக்ட் எடுத்து கட்டியவர் சமயநாத பிள்ளை என்னும் பெங்களூரை சார்ந்த காண்டிராக்டர். இதை கட்ட அப்பவே 2 மில்லியன் இந்திய ரூபாயில் செலவானதாம். இவர் எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை சிறப்பாக கட்டி முடித்ததை பார்த்து இவருக்கு இந்த கட்டிட வேலை கொடுக்கப்பட்டதாம்.  இதை வடிவமைத்தவர் மெட்ராஸ் ரயில்வே கம்பனியை சார்ந்த ஆர்கிடெக் கிரேசன் என்பவராகும்.  இதை கட்டி முடிக்க ஒன்பது வருஷங்களானாதாம். இதைக் கட்டி முடிக்க இந்திய ரூபாயில் மூன்று மில்லியன் பணம் செலவானதாம். இந்த கட்டிடம் டிசம்பர் 11 1922 ல திறக்கபட்டது.


அடுத்து நாம பார்க்க போறதும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் இது டவுன் ஹால். விக்டோரியா மகாராணியின் கோல்டன் ஜூப்ளி ஆட்சிக்காலத்தின் நினைவா கட்டப்பட்டக் கட்டிடம். இது விக்டோரியா  பப்ளிக் ஹால் ன்னு அழைக்கப்பட்டது. இந்தியாவில் கட்டப்பட்ட பிரிட்டிஷ் கட்டமைப்பு கொண்ட கட்டிடத்தில் இதுதான் முதலில் தோற்றுவிக்கப்பட்டதாம். இது கூட்டங்கள் நடத்தவும் டிராமா நடத்தவும் பயன்பட்டதாம்.


இந்த கட்டிடம் 1886 ல கட்டிட வேலைகள் தொடங்கபட்டது. மொத்த பரப்பளவு மூணேகால் ஏக்கர்ஸ். விஜயநகரத்து மன்னர் ராஜா பசுபதி ஆனந்த  கஜபதி ராஜு இதற்கு 1883 ம் வருஷம் டிசம்பர் மாசம் 17 ம் தேதி அடிக்கல் நாட்டினார். மேலும், 35 பேர் இதற்கு நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். அதுல முக்கியமானவங்க திருவிதாங்கூர் மகராஜா 8000 ரூபாயும், மைசூர் மகராஜா மற்றும் பட்டுகோட்டைராஜா அப்ப இருந்த நீதிபதி முத்துசுவாமி ஐயர் இவங்களெல்லாம் 1000 ரூபாயும் நன்கொடை வழங்கினராம். மேலும் பி .ஆர் அண்ட் சன்ஸ் வாட்ச் கடையினர் 1400 ரூபாயும் மேலும் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி, எட்டயபுரம் ஜமீன்தார் ஹாஜி அப்துல் பாட்சா சாஹிப் முதலானோர்களும் இந்த கட்டிடம் கட்ட உதவி பண்ணிருக்கிறாங்க. இதைக் கட்டி முடிக்க ஐந்து வருடங்கள் ஆனதாம். இதற்கான மொத்த செலவு 16,425 ரூபாய்.

இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ராபர்ட் பெல்லொவ்வெஸ் சிஸ்லோம். இவர் இதை இந்திய சரேசெனிக் கட்டிடகலை அமைப்பில் கட்டினார். 1888 முதல் 1890 வரை நம்பெருமாள் செட்டி என்பவர் இதை கான்ட்ராக்ட் எடுத்து கட்டினாராம். இது 1887 ல லார்ட் கன்னிமரா இதை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். அதற்கு பிறகு சர் மௌன்ட்ச்தோர்ட் எல்பின்ஸ்டோன் கிரான்ட் டப் மெட்ராஸ் கவர்னரா இருந்தார். அவர் 1889 ல பொதுமக்களுக்காக அர்ப்பணித்து பொதுகூட்டத்தில் இதற்கு விக்டோரியா மகராணி பெயர் வைக்கப்பட்டது 

இந்த ஹாலில் பல முக்கியமான தலைவர்கள் உரையாற்றி இருக்காங்க. சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி இவங்களெல்லாம் இங்கு வருகை தந்து இருக்காங்க. சுப்ரமணிய பாரதியார், கோபால கிருஷ்ண கோகலேசர்தார் வல்லபாய் படேல் முதலியவர்களெல்லாம் இங்க சொற்பொழிவாற்றி இருக்காங்க.  இங்கே நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதி சொற்பொழிவு நடத்தி இருக்கிறார். 

முதன் முதலில் சினிமா திரை இடப்பட்ட இடமாகவும் இது இருந்திருக்கு. இந்த விக்டோரியா  பப்ளிக் ஹால் இவ்வளவு சிறப்பு மிக்கது.இது இப்போதைய அதன் தோற்றம் இந்த கட்டிடத்தில் இப்ப தெனிந்திய அத்தெலெடிக் கூட்டமைப்பு இயங்குது. இங்க சுற்றிலும் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடப்பதால இந்த கட்டிடம் தனிமைப் படுத்தபட்டதுப் போல காட்சியளிக்குது. எவ்வளவு வரலாறுகள் எவ்வளவு நிகழ்வுகள்லாம் தாங்கிக்கிட்டு அதை தாண்டி போகும் இன்றைய தலைமுறையினருக்கு மௌன சாட்சியாய் நிற்கிறது இந்த விக்டோரியா  பப்ளிக் ஹால் 


அடுத்து நாம பார்க்கப்போறது சென்னை மாநகராட்சி கட்டிடம்  என அழைக்கப்பட்ட ரிப்பன் மாளிகை. இது விக்டோரியா  பப்ளிக் ஹாலின் அருகில் இருக்கு.  இந்தக் கட்டிடம் 1913 ம் ஆண்டு லோகநாதன் முதலியார் என்பவரால் 4 வருடங்களாக கட்டப்பட்டது. அப்ப அதற்கான கட்டுமான செலவு  7,50,000, ரூபாய். 1909 ம் ஆண்டு அப்போதிருந்த வைஸ்ராய் மின்டோ என்பரால் அடிக்கல் நாட்டப்பட்டது.  இது பிறகு அப்போதிருந்த பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் ரிப்பன் என்பவரது பெயரால் அழைக்கப்பட்டது.

அவர்தான் முதன் முதலில் உள்ளூர் சுயாட்சி முறையை ஏற்படுத்தியவர் அவர் மிகவும் நல்லவராக இருந்ததால அந்தக் காலத்தில அவரை ரிப்பன் எங்கள் அப்பன்னு சொல்லுவாங்களாம். பல்வேறு இடங்களில் இயங்கி வந்த அலுவலகங்கள் மற்றும் வேறு இடத்தில இயங்கி வந்த மெட்ராஸ் முனிசிபல் கார்பரேசன் 1913 ம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு மாற்றபட்டதாம். அப்ப மெட்ராஸ் முனிசிபல் கார்பரேசனின் தலைவராக P .L  மோர் என்பவர் இருந்தார். இந்த திறப்பு விழாவிற்கு 3000 திற்கு மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் உயரதிகாரிகள் கலந்து கொண்டனராம்.


வெள்ளை நிறத்தில் அமைந்த இந்த கட்டிடம் இந்தோ சரசெனிக் கட்டிட அமைப்பில் கட்டப்பட்டதாகும்.  மேலும் இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை பாணியிலும் கட்டபட்டுள்ளது. 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடம் எலுமிச்சை சாறுகலந்த கலவையும், தேக்குமர உத்திரங்களும், கடப்பாகற்களாலும் கட்டப்பட்ட கட்டிடமாகும். இதன் தனித்தன்மை இதன் உயரத்தில் இருக்கும் கடிகாரம் இதை நிறுவியவர்கள் ஓக்ஸ் அண்ட் கோ. 1913 ல் அமைத்தனர். இது நான்கு பெண்டுலங்களுடன் இயங்கும் இயந்திர அமைப்பைக் கொண்டது இதற்கு 1913 ல உதவியவர்கள் ஜில்லெட் அண்ட் ஜோன்ஸ்டன்.


இப்ப ராட்சச எந்திரங்களும், கட்டுமான பணியாளர்களும், தூசும் தும்புமாக சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு பணிகளும். மெட்ரோ ரயில் பணிகளும் நடப்பதால இதுவும் ஒவ்வொரு காலங்களிலும் அது கண்ட மாற்றங்களை உள்ளில் கொண்டு மௌன சாட்சியாய் நிற்கிறது.

மீண்டும் அடுத்த வாரம் வேற ஒரு இடத்திலிருந்து மௌனச்சாட்கள் பகுதிக்காக சந்திக்கலாம். வணக்கம்.

40 comments:

 1. சிறப்பான தகவல்களுடன் சென்னையின் சிறப்பான இடங்களை பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 2. படங்களும் பதிவும் மிக அருமை சபாஷ் சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச

   Delete
 3. Replies
  1. த ம வாக்கிற்கு நன்றி!

   Delete
 4. எனக்கொரு சந்தேகம் இது எல்லாம் நீங்க எழுதியதுதான அல்லது உங்க அண்ணண் எழுதி நீங்கள் வெளியிடுகிறீர்களா என்று அல்லது ஆள் வைத்து எழுதுகிறீர்களா

  ReplyDelete
  Replies
  1. என்னடா பாராட்டுறாரேன்னு நினைச்சேன். அதுக்குள்ள சந்தேகம் கேட்டு ஒரு கமெண்ட். பதிவு தேத்த மாவட்ட வாரியா ஆளுங்களை சம்பளம் போட்டு வேலைக்கு ஆள் சேர்த்திருக்கேனாக்கும். அதான் இப்படிலாம் பதிவு வருது. போதுமா!?

   உண்மையைச் சொல்லனும்ன்னா, கடந்த ரெண்டு வருசமா டூர் போகும்போது எடுத்த படங்கள்லாம் பென் ட்ரைவ்ல தூங்குது. தூயாவோட கோர்ஸ்க்காக அந்தப் படங்களை வச்சு தமிழ்நாட்டுல இருக்குற சுற்றுலா போகக்கூடிய இடங்களைப் பத்தி ப்ராஜக்ட் வொர்க் செய்ய ஆரம்பிக்கும்போது நாம ஏன் இதை பதிவாப் போடக்கூடாதுன்னு வந்த ஐடியாவுலதான் பதிவு.

   Delete
 5. நல்ல தகவல்களுடன், அருமையான படங்களுடன் சென்னை பற்றிய பதிவு சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பதிவை பற்றிய கருத்துக்கும் நன்றி!

   Delete
 6. த.ம. போட்டாச்சு!!

  ReplyDelete
  Replies
  1. த ம வாக்கிற்கு நன்றி

   Delete
 7. யக்கோவ், உண்மையிலேயே மதராசபட்டிணம் படம் பார்த்தது போலவே இருக்கு.... பழையதும் புதியதுமாய் அழகான படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்தீங்களா ஸ்பை!?

   Delete
 8. படங்களுடன் கூடிய தகவல்கள் அருமை! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 9. படங்கள் அதன் ஒப்பீடு அருமை இந்த இடங்களை எல்லாம் பலமுறை கடந்து சென்று இருக்கிறேன் ஆனால் அதை பத்தின விபரம் தெரிவதில்லை எனிவாய்ப்பு கிடைக்கும் போது அந்த பக்கம் போகும் போது உங்கள் பதிவு ஒரு வழியாகட்டியாக இருக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நம்மை சுற்றி இருக்கும் பல முக்கிய இடங்களின் வரலாற்றை தெரிந்துக் கொள்ளாமதான் நாம இருக்கோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. மிக நல்ல ஐடியா. பதிவு அருமையாக இருந்ததினால் முதலில் பாராட்டு... சும்மா பாராட்டினால் அது டெம்ளேட் கமென்டாக போயுவிடும் என்பதால் வழக்கம் போல கலாய்த்து ஒரு கமெண்ட். கலாய்க்காவிட்டால் மதுரைத்தமிழனுக்கு அழகு அல்ல..

  ReplyDelete
  Replies
  1. நீங்க கலாய்க்கலாம் சகோ! நானும் சும்மாதான் உங்களைக் கலாய்ச்சேன்

   Delete
 11. Replies
  1. படங்களும் பதிவும் அருமை சகோதரியாரே
   நன்றி

   Delete
 12. நல்லதொரு பகிர்வு... ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வளவு மாற்றங்களுக்கு ஆட்கொண்டுள்ளது இந்த மெளனசாட்சிகள்...

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்களோடு பல கதைகளையும் தாங்கி நிக்குது இந்த மௌனச்சாட்சிகள்

   Delete
 13. ரிப்பன் ,அப்பன் எல்லாம் அன்னைக்கே பேமஸ் ஆயிடுச்சா?
  +1

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே ரிப்பீட் ஆகுறதுதான். அப்பத்திய படங்களைப் பார்த்தாலே இப்ப இருக்குற பசங்கலாம் வேஸ்ட்ன்னு தோணுற மாதிரிதான் கலாய்ச்சிருக்காங்க

   Delete
 14. பதிவுக்கேற்ற படங்கள் அருமை... பழைய படங்களையும் தேடிப் பிடித்து போட்டமை சிறப்பு... பதிவுக்கான உழைப்பு அப்பட்டமாய் தெரிகிறது தொடருங்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. இந்த உழைப்பை படிக்கும்போது காட்டி இருந்தா மாநில அளவுல பர்ஸ்டா வந்திருப்பேன்!!

   Delete
 15. சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி இவங்களெல்லாம் இங்கு வதிருக்காங்க. சுப்ரமணிய பாரதியார், கோபால கிருஷ்ண கோகலேசர்தார் வல்லபாய் படேல் முதலியவர்களெல்லாம் இங்க சொற்பொழிவாற்றி இருக்காங்க. அப்படிங்கிற செய்தியை உங்க பதிவு மூலம் தெரிந்து கொண்டப்ப இவ்வுளவு சிறப்பு மிக்க இடத்தை பத்தி இதுவரை தெரியாமலே கடந்து போயிருக்கமேன்னு நினைச்சா வருதாமா இருக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நம்மை சுற்றி நாம் அறியாத பல சிறப்புகள் இருக்கு. அதை எப்போதான் உணரப் போகிறோமோ தெரியலை.

   Delete
 16. மிக முக்கியமான பதிவு. பழைய சென்னை உண்மையில் அழகான ஒரு நகராய் திகழ்ந்தது, அதன் எச்சங்களாக நிற்கும் இன்றைய சாட்சிகளைப் போற்றி பாதுகாக்கவும் மக்களிடையே அதன் வரலாறுகளை எடுத்துரைக்கவும் வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சென்னையின் இயற்கை அழகுகளையும், எழில் மிகு எச்சங்களையும் அழித்து வருவது வேதனை தருகின்றது.

  --- விவரணம். ---

  ReplyDelete
  Replies
  1. நிஜமாகத்தான். எந்த ஒரு கட்டிடத்தையும் காலத்தின் அவசியம் கருதி அதன் பழமை மாறாமல் புதுப்பிச்சா நல்லா இருக்கும்.

   Delete
 17. ஆச்சரியமாக இருக்கு. இழை போல பின்னி இருக்குறீங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜோதிஜி!

   Delete
 18. நீங்கள் கல்லூரியில் வரலாற்றை முக்கியப் பாடமாக எடுத்து படித்தீர்களா?
  மிகவும் அருமையான தகவல்கள். பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 19. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.....

  ReplyDelete
 20. மிக அருமையான தகவல்கள் ..நன்றி ..
  revmuthal.com

  ReplyDelete