Sunday, December 29, 2013

சுடுதண்ணி, டீ போட்டு சாப்பிட்டு கழுவிய பாத்திரத்தைக் கொண்டு அடிப்பது எப்படி!?

 ஹரி பத்த வச்ச அடுப்புல ஆவி, சீனு, வச்ச சுடுதண்ணியையும், பிரகாஷ் அவிச்ச முட்டையையும் கணேஷ் அண்ணா சாப்பிட்டு கழுவப் போட்ட பாத்திரத்தை ராஜா கழுவி காய வச்சதை எடுத்து உருப்படியா பிளாக்குல எழுதாம மொக்கைப் போட்டு கொல்லும் பதிவர்கள் மேல் அவர்கள் வீட்டம்மாக்கள் பாத்திரம் எறிவது எப்படின்னுதான் இன்னைய பதிவுல பார்க்கப் போறோம். 

தேவையானப் பொருட்கள்:
கழுவி வச்ச பாத்திரம்
வூட்டுக்காரர். 

வூட்டுக்காரர்:

காலைல வாசல் தெளிச்சு கோலம் போட்டு, பொண்டாட்டியை எழுப்பி காஃபி போட்டு கொடுத்து, லஞ்ச், பிரேக் ஃபாஸ்ட்லாம் ரெடி பண்ணி வச்சு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிட்டு வீடு வாசல் கூட்டி துணியை மெஷின்ல போட்டுட்டு, டிவி சீரியல் பார்க்கும் பொண்டாட்டிக்கு நொறுக்ஸ் செஞ்சு கொடுத்துட்டு, அம்மாடி,முடிஞ்சா விளம்பர இடைவேளையின்போதோ! இல்ல கரண்ட் கட் போதோ மெஷின்ல இருக்கும் துணியை காய வச்சு எடுத்து வந்து மடிச்சு வைக்கும் கஷ்டமான வேலையை கொடுத்துட்டு.., ஆஃபீசுல போய் ஹாயா ஃபேஸ்புக், பிளாக், ட்விட்டர்ன்னு மொக்கைப் போடும் படுபாவி வூட்டுக்காரரா இருந்தா நலம்.பிளாக்கரா இல்லாம வொயிட்டரா அதாவது வெள்ளந்தியா இருக்குற வூட்டுக்காரர்லாம் இதுக்கு சரிப்பட மாட்டார்.

பாத்திரம்: 
சுடுதண்ணி, டீ போட்ட பாத்திரத்தை விட முட்டை வேக வச்ச பாத்திரம், சிக்கன், மீன் சமைச்ச பாத்திரமா இருந்தா நலம். என்னா அதான் கப்படிக்கும்!!

நேரம்: 
பொண்டாட்டி பேச்சை கேட்டு வீட்டு வேலை செய்யாம பிளாக், ஃபேஸ்புக்குன்னு கடலைப் போடும் நேரம் கடலை போட்டாலும் கூட தாங்கிக்கலாம். மொக்கைப் போட்டால் விடவே விடாதீங்க. அடி உதவினாலும் அண்ணன் தம்பி உதவ மாட்டாங்கன்ற பழமொழிக்கேற்ப அடிச்சாதான் இதெல்லாம் சரிப்பட்டு வரும்.

இனி எப்படி பாத்திரத்தால அடிப்பதுன்ற வகைகளைப் பார்க்கலாம்!!

முதல் வகை:
கம்ப்யூட்டர்ல உக்காந்திருக்கும் வூட்டுக்காரர் கவனிக்காத போது கையில் பாத்திரம் எடுத்துக்கிட்டு கிட்டக்க போய் ஆற, அமர ஓங்கி நங்குன்னு பின் மண்டையில அடிக்கலாம்.

இரண்டாம் வகை:
அடிக்க வருவதை உணர்ந்து எஸ்கேப் ஆகுற ஆள் மேல குறி பார்த்து பாத்திரத்தை எறியலாம். உடம்புல எங்க வேணுமின்னாலும் அடிப்படட்டும். நம்ம குறிக்கோள் அடிப்படனுமேத் தவிர, எங்க அடிப்படனும்ன்னு இல்ல. கண்ணை மட்டும் விட்டுடுங்க. அப்புறம் வீட்டு வேலைலாம் செய்ய முடியாதே!

மூன்றாம் வகை:
எதையும் உணராமல் இருப்பவரை பாசமா, டிவி பார்த்தவாறே, ஏங்க! இங்க வாங்களேன்! உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லனும்ன்னு கிட்ட கூப்பிட்டு பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு, ஆசையா கையை பிடிச்சு பின்னால முறுக்கி ஓங்கி நங்குன்னு குத்துங்க.

ரத்தம். வீக்கம் வரப்படாது. அதான் முக்கியம்.  ரத்தம், வீக்கம் வந்தால் நம்ம பேர் சொந்தம், பந்தங்களுக்கிடயே நாறிப்போகும் ஜாக்கிரதை அம்மணீஸ்!

24 comments:

 1. // ரத்தம். வீக்கம் வரப்படாது. அதான் முக்கியம்... //

  அப்படி போடு அரிவாளை..!

  ReplyDelete
 2. நீங்க எங்க ஊட்டுக்கு வந்து
  வூட்டுக்காரி கிழவி கிட்டே ட்ரைனிங் எடுத்திட்ட
  விசயமே இப்பதான் தெரியுது.

  கிழவி கிட்டேன் . ஏண்டி இது மாதிரி எல்லாம் சொல்லிதர்றே!

  இது க்ரேட் ஒண்ணாம் .

  இதுக்கப்பறம் க்ரேட் 2 க்ரேட் 3 இருக்குதாம் ல.

  க்ரேட் 3 லே புருஷன் மூர்ச்சை போட்டு விழுந்து
  டாகடருக்கே என்னன்னு புரியாம, கரெக்டா முப்பதாவது
  நாள் எழுந்திருச்சு, இன்னிக்கு மொக்கை போட்டாச்சா அப்படின்னு
  கேட்பாராமே ...

  சுப்பு தாத்தா..
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 3. சூப்பர்ர்ர்! இப்படித் தான் இருக்கணும்... :))) நான் உங்க கட்சி...

  ReplyDelete
  Replies
  1. சரிதான்... ராஜி தங்கச்சிதான் காண்டாகி சந்திரமுகி ரேஞ்சுக்குப் பதிவு போடுதுன்னா நீங்க வேற சப்போர்ட்டா ஆதி மேடம்...? அவ்வ்வ்வ்வ்!

   Delete
 4. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  // தேவையானப் பொருட்கள்:
  கழுவி வச்ச பாத்திரம்
  வூட்டுக்காரர். //

  அங்க நிக்கிறேம்மே நீ... (சென்னைத் தமிழில் நீ = நீங்கள்; தயவு செய்து மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...)

  ReplyDelete
 5. இதுக்கு அமெரிக்காவுல ஒரு பதிவ் தயாராகிக் கிட்டு இருக்குதாம்.... - அடி வாங்காது தப்பிப்பது எப்படின்னு! :)

  ReplyDelete
  Replies
  1. ஆதி மேடம் வேற சிஸ்டரை சப்போர்ட் பண்றாங்க... தலைநகரத் தளபதி! நீங்க முதல்ல ட்ரெய்னிங் எடுத்துக்கங்க! ஹி... ஹி... ஹி...!

   Delete
  2. வருஷக் கடைசியில் தூங்கி கொண்டிருந்த சிங்கத்தை இப்படி உசுப்பேத்தீட்டிங்க வெங்கட்

   Delete
  3. தலைநகர தளபதி மட்டுமல்ல சென்னையின் வாத்தியாரும் இந்த விஷயத்தில் டிரெய்னிங்க் எடுக்க இன்று ஒரு பதிவு போட்டு இருக்கேன் வந்து பாருங்க

   Delete
 6. நல்லா இருங்க மக்கா நல்லா இருங்க .............

  அன்புடன்,
  பனிமலர்

  ReplyDelete
 7. உங்க நேர்மை பிடிச்சிருக்கு

  ReplyDelete
 8. நல்ல ரசனையான பதிவு! உங்களுக்கு மதுரைத் தமிழன் தான் சரியான ஆள் பதில் அடி கொடுக்க! வருவார் பாருங்கள்! உங்களுக்கு இருக்கு நல்ல ஆப்பு! அதுவும் கரெக்ட்டா அவரது விருப்பமான பூரிக்கட்டையைத்தான் படமா வேற போட்டுருக்கீங்க!! காத்திருங்கள் பூமராங்கிற்கு!

  த.ம.+

  ReplyDelete
  Replies
  1. சரியான ஆளைத்தான் சொன்னீங்க! பூ(ரிக்கட்டையால்) அ(டி) வா(ங்கும்) க(ணவர்கள்) சங்கத் தலைவராச்சே அவரு! ஹா... ஹா...!

   Delete
 9. ராஜி சிஸ்...! இவ்ளோ... விரிவா ஆராய்ச்சி செஞ்சு டீட்டெய்ல்ஸ் தர்றியேம்மா... அவ்வ்வவ்வ்! மாப்ளை பாவம்...!

  ReplyDelete
 10. எனக்கு ஒரு சந்தேகம். ஒரே வீட்டில ரெண்டு பேரும் மொக்கைப் பதிவா போடுறவங்களாக இருந்தால் என்ன பண்றது????
  அடுத்த வருஷம் (ஹி,ஹி .... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு) , அலுவலகத்துக்கு லீவு போட்டாவது, இந்த பதிவுக்கு பதில் பதிவு போட்டு, என் சக நண்பர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 11. அச்சச்சோ, விளையாட்டா ஆரம்பிச்ச பதிவுகள் விபரீதத்துல கொண்டு போய் விட்டுடும் போலிருக்கே.. அதுவும் ஆண்கள் சமுதாயத்துக்கு பாதிப்பு உண்டாகும் போலிருக்கே... அட்டென்ஷன் அப்பாவி ஆண்களே, இதைத் தடுக்க ஏதாவது உடனடி நடவடிக்கை எடுக்கணும்!!

  ReplyDelete
 12. படிக்கிற என்னாலேயே வலி தாங்க முடியலே ,ஊமை அடி வாங்கும் மச்சான் நிலைமை ?பாவம்தான் !
  +1

  ReplyDelete
 13. வணக்கம்
  சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. ஆஹா.... சுடு தண்னி வச்சி இப்போ கழுவிப்போட்ட பாத்திரத்தோட வூட்டுக்காரரையும் காய வக்கிறீங்க... ம்ம்ம்ம்ம்... நல்லாருக்கு அக்கா...

  ReplyDelete
 15. தேவையானப் பொருட்களில்
  வூட்டுக்காரரையும் சேர்த்துவிட்டீர்களே
  த.ம.11

  ReplyDelete
 16. ராஜி மேடம் நீங்க அடிக்கறது போதாது என்று மத்தவங்களுக்கும் பாடம் எடுக்கிறீங்களா?

  அக்கா, மாமாவை நெனைச்சேன் ஐயோ பாவம்.

  ReplyDelete
 17. ராஜி எப்டிப்பா இப்டி?

  படிக்க படிக்க கண்ணு கட்றது போ....

  பாவம் உங்காத்துக்காரர்.

  ரசித்து வாசித்தேன்.

  ReplyDelete