புதன், டிசம்பர் 04, 2013

கடலோரம் வாங்கிய காத்து, எம்.ஜி.ஆர் சமாதி - மௌனச்சாட்சிகள்

90 காலக்கட்டத்துல வெளி வந்த படங்கள்ல, கிராமத்துல இருந்து பட்டணம் வரும் ஹீரோ இல்ல ஹீரோயினை குறிப்பால் உணர்த்த எல்.ஐ.சி பில்டிங்க், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன், எம்.ஜி.ஆர், அண்ணா சமாதி, கிண்டி குதிரைவீரன் சிலையை காட்டுவாங்க. கல்யாணத்துக்கு முந்தி மெரினா போனதோடு சரி. ரொம்ப நாளாவே போய் பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டேன். எப்பவாவது, பீச்சுக்கு போனாலும் அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிக்குலாம் போக நேரமில்லாம பீச்சுல காத்து வாங்கி வருவதோட சரி.

இந்த முறை போகும்போது கண்டிப்பா சமாதிலாம் பார்த்தே ஆகனும்ன்னு ஒரு ஆசை. சமாதிலாம் பார்க்கனும்ங்குறதை விட பதிவு தேத்தனும்ங்குறதுதான் உண்மையான காரணம்.

 மௌனச்சாட்சிகள்ல போனவாரம் நாம மெரினா பீச்ல இருக்கும் கலங்கரை விளக்கத்தை பார்த்தோம். இந்த வாரம் நாம பார்க்கபோறது மெரினா பீச்ல இருக்கிற  எம்.ஜி.ஆர் சமாதி. ரொம்ப நாளா பாக்கனும் நினைச்சு போக வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு நான் சுத்திக் காட்டுறேன். வாங்க போலாம்....,
நாங்க பீச்சுக்கு போனது சாயங்கால நேரம்.  கடற்கரை மணலெங்கும் தாஜ்மாஹாலுக்கு அஸ்திவாரம்  தோண்டுறவங்களும்,  தாஜ்மஹாலுக்கே குழி தோண்டுறவங்களும் வந்துகிட்டே இருக்க, நாங்க ஒரு ஓரமா கடற்கரை பக்கம் போய்க்கிட்டு இருந்தோம். அங்க,  ஒரு கட்டுமரத்திலே இரண்டு மீனவர்கள் கருமமே கண்ணாய் மீன்பிடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்களை நம்ம கேமராவுல க்ளிக்கிட்டு கரைபக்கமா திரும்பினோம்.    

 

தூரத்துல இளசுகளின் முகம் சுளிக்க வைக்கும் செயல்களும், மிளகாய் பஜ்ஜியும், பானி பூரி, பட்டாணி சுண்டல் வியாபாரம் செய்பவர்களின் அழைப்புகுரலும், பந்து விளையாடும் சிறுவர்களும், கடலை போடும் விடலைகளும், கடலை விற்கும் சின்ன பையன்களும், தன எதிர்காலமே தனக்கு தெரியாமல கடற்கரையில் ஜோசியம் பார்க்க வற்புறுத்தும் பெண்களும், குதிரையை  சவாரி செய்ய வைத்து தன வாழ்கையை குதிரையின் முதுகில் வைத்து சவாரி செய்பவர்களும்ன்னு எத்தனை விதமான மனிதர்கள்!! எப்படிதான் தாங்குகிறதோ இந்த கடற்கரை!!
அதையும் தாண்டி வந்தா பலூனை, துப்பாகியால சுட்டுகிட்டு இருந்தாங்க. சரி நாமளும் சுட்டு பழகலாம்னு வீட்டுகாரர் கிட்ட கேட்டா முதலில் பூரி, சப்பாத்தி,தோசையை ஒழுங்கா சுடக் கத்துக்கோ.  அப்புறம் துப்பாகியால பலூனை சுடலாம்னு என்னை சுட்டெரிக்க, அந்த இடத்தில இருந்து மீ எஸ்கேப்.
 செயற்கையா அமைக்கப்பட்ட பாறையின் மேல இருந்த வாட்டர் ஃபௌண்டெய்ன் அழகா இருந்துச்சு. நிறையப்பேர் அதுக் கிட்டக்க நின்னு போட்டோ எடுத்து கிட்டாங்க. ஆனா, நான் இதுவரை இதை பார்க்காத நம்ம பிளாக்குக்கு வருபவங்களுக்காக போட்டோ எடுத்துகிட்டேன். இதுக்காக சீரணி அரங்கத்துல எனக்கு பாராட்டு விழாலாம் எடுக்க வேணாம். 
அங்க இருந்து மெதுவா நடந்து வந்தா உடம்பில் உள்ள எலும்புகள் எல்லாம் தேய உழைத்து ஓடாகிபோன உழைப்பாளர்களின் சிலை. எனக்கு நினைவுத் தெரிஞ்ச நாளி இருந்து அந்த கல்லை தள்ளிப்பார்க்குறாங்க. ம்ஹூம் ஒரு அடி கூட நகர்ந்த பாடில்லை. கவர்ன்மெண்ட் சம்பந்தப்பட்டதாச்சே! அதான்.  ராய் சவுத்தரி அவர்களால் செதுக்கிய சிற்பம். அந்த சிற்பமும் நம் மனசைவிட்டு அகலவில்லை அதையும் தாண்டி போனா நம்ம எம்ஜிஆர் (மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) சமாதி .

 இப்பதான் பல கோடி ரூபாயில் புனரமைச்சு இருக்காங்க. முகப்பில் இருபக்கமும் சுமார் 16 மீட்டர் உயரத்தில் இரண்டு தூண்களும்  12 அடி உயரத்தில் முன்கால்களை தூக்கி பறப்பதற்கு தயாராக நிற்கும் சிலை அவர் உருவாக்கிய10.2 மீட்டர் உயரமுள்ள இரட்டை இலை சின்னத்தின் பின்னணியில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சரி வாங்க உள்ள போகலாம்.

 உள்பக்கம் முழுவதும் சலவைகர்கள்ல செய்த வேலைப்பாடு. நடப்பது அவங்க ஆட்சின்றதாலயோ என்னமோ, இந்த இடத்தை தூய்மையா வச்சு இருக்கிறாங்க. நேரா உள்ளே போனா அவருடைய வாழ்க்கை வரலாறு பத்தின சிறு குறிப்பு இருக்கு.

அங்க எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை இருக்கு. சிலையோடு நின்னு நிறையப்பேர் போட்டோ எடுத்துகிட்டு இருந்தாங்க. அவர் மறைந்து 25 வருஷத்துக்கு மேல ஆகியும் அவர் புகழ் மறையலங்கிறதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

உள்ளே புல்வெளிலாம் அமைச்சு அழகுப்படுத்தி இருக்காங்க. மலர்ந்தும் மலராத பாதி மலர்போலங்கிற மாதிரி ஒரு வெண்தாமரை விரிந்து அதனுள் கருப்பு சலவைக் கல்லால் சதுரவடிவில் கட்டப்பட்ட மேடை போன்ற அமைப்பில் அவருடைய சமாதி அமைக்கபட்டு இருக்கு.  வாங்க கிட்டக்கப் போய் பார்க்கலாம். 
கீழ இருந்து பார்க்கும் போது அழகான வளைவுகளுடனும், ஒரு நீண்ட தூண்களுடனும் கொண்ட அமைப்பு. நாங்களும் வித்தியாசமா போட்டோ எடுப்போம்ன்னு நிருபிக்க இப்படி எடுத்தோம்!! :-(
இங்க ஒரு அணையாதீபம் எரிந்துக்கிட்டு இருக்கு.முன்னலாம் மக்கள் இந்த சமாதிக்கு வரும் மக்கள், அந்த கருப்பு கலர் மேடை மேல காதை வைச்சு கேட்கும்போது அவருடைய கடிகாரம் டிக் டிக்'ன்னு ஓடும் சத்தம் கேக்குமாம். இப்ப யாரும் அது மாதிரி காது வச்சு கேட்கிற மாதிரி தெரியலை. ஒருவேளை கடிகார செல் தீர்ந்துப் போய் சவுண்ட் நின்னு போயிருக்குமோ!! 24 வருஷம் ஆகபோகுது இல்ல. 

மெரினா பீச்ன்னா கடல், அலை, மணல், மீன், ஐஸ்கிரீம், சுண்டல், காத்து, கடலை, குதிரை சவாரி மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, இங்கயும் சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு போல!! நமக்குதான் நேரம் இல்ல.

சரி, அடுத்த வாரம் அண்ணா சமாதி பத்தி மௌனச்சாட்சிகள்ல பார்க்கலாம்! 

28 கருத்துகள்:

 1. கருத்து சொல்ல நேரம் இல்லை என்றாலும், உங்களது பதிவகளை தவறாமல் படித்துவிடுவேன். எல்லா இடங்களை பற்றி எழுதும்போதும் நானே சென்று சுற்றி பார்ப்பது போல அந்த உணர்வை கொண்டு வந்து விடுகிறீர்கள்..... அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க, ஜீவா லாம் எழுதும் சுற்றுலா பதிவுகள்தான் என்னை இப்படி எழுத தூண்டியது. உங்களைப்போல தகவல்களை திரட்ட முடிவதில்லை.

   நீக்கு
 2. உங்க எழுத்துநடையை ரசித்தேன். உங்க பதிவு மூலமா நாங்களும் சுத்திப் பார்க்கிறோம்...:) டெல்லியிலேயே எந்த சமாதியும் பார்க்க விடலை..:)) பார்த்து என்ன செய்யப் போற? என்கிற கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறேன்....:))தமிழ்நாட்டிலா? சான்சே இல்ல....:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை பேய், பிசாசு, ஆவின்னு பயப்படுறாரோ!!

   நீக்கு
  2. பொய் சொல்றாங்க! காந்தி சமாதி போய் பார்த்து இருக்காங்க! :(

   நீக்கு
  3. நண்பர் ஒருவருக்காக அவரின் வற்புறுத்தலின் பேரில் அவருக்காக காந்தி சமாதி சென்றோம்....:))) ப்ளீஸ் நோட் திஸ்....

   எனக்காக இல்லை...:))

   நீக்கு
 3. சென்னை வாசியா ஒரு காலம் இருந்த எனக்கு நான் பார்க்காத இடங்களையெல்லாம் சுற்றிக்காட்டியதற்கு நன்றி.

  அது சரி பூரி, சப்பாத்தி, தோசையை இப்பவாவது ஒழுங்க சுடக்கத்துக்கிட்டீங்களா அக்கா? இல்லை இன்னும் மாமோய்.........தான் சுடுறாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் பதிவுக்காக தான்! மத்தப்படி நல்லாவே சமைப்பேனுங்க. சந்தேகமிருந்தா ஒரு முறை வீட்டுக்கு வாங்க சமைச்சு போடுறேன். சாப்பிட்டு பாருங்க!

   நீக்கு
 4. வித்தியாசமாக தான் போட்டோ எடுத்துள்ளீர்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு!
  அடுத்த முறை இந்தியா வந்தால் இதைப் பார்க்கணும்!

  த. மனம் பிளஸ் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் பாருங்க. பழைய நினைவுகள்லா, திரும்பும்.

   நீக்கு
 6. ////////நான் இதுவரை இதை பார்க்காத நம்ம பிளாக்குக்கு வருபவங்களுக்காக போட்டோ எடுத்துகிட்டேன். இதுக்காக சீரணி அரங்கத்துல எனக்கு பாராட்டு விழாலாம் எடுக்க வேணாம். /////////

  நான் பாராட்டு விழா இல்ல பாரதரத்னா வையே உங்களுக்குத் தரலாமென்றிருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரத ரத்ணாவா!? நான் எந்த சர்ச்சையும் இல்லாம பிளாக்குல குப்பை கொட்டுறது உங்களுக்கு புடிக்கலியா!?

   நீக்கு
 7. ஒரு சுற்றுலா வழிகாட்டி போலவே நன்றாகவே பதிவையும் நடத்திச் செல்கிறீர்கள். இந்த பதிவின் தலைப்பில் ” எம்ஜிஆர் சாமாதி “ என்று இருப்பதை “ எம்ஜிஆர் சமாதி “ என்று மாற்றவும். ( சாமாதி > சமாதி ) கட்டுரையின் உள்ளே இந்த பிழை இருந்தால் ( Phonetic Error) கண்டு கொள்ளாமல் போய்விடலாம். தலைப்பில் இருப்பதால் சுட்டிக் காட்டினேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துப் பிழையை திருத்தி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 8. சமாதிகள் - இங்கே யமுனையின் கரையில் பல சமாதிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா, அண்ணியை ஒரு முறைக்கூட எந்த சமாதிக்கும் கூட்டிப் போகலியாமே! ஏன?

   நீக்கு
 9. எளிமையான அழகான பதிவு. சென்னை மெரினா கடற்கரைப் பக்கம் போகாத நாளில்லை என அங்கே கிடந்து ஊர்சுற்றிய நாட்களை நினைத்துக் கொண்டேன். சென்னையின் அழகே மெரினா கடற்கரை தான். அத்தோடு சென்னைப் பல்கலைகழகம், மாநிலக் கல்லூரி, அப்படியே ஜார்ஜ் கோட்டை, இப்படியே சாந்தோம் வரை கலக்கலான இடங்கள். இந்த லவ்வர்சு இன்னம் சுடுமணலில் கோலம் போடுவதை விடலையா? கொடுமை! அடுத்த முறை சென்னை வந்தால் இவ் இடத்தை விட்டுவிடக் கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாய் பாருங்கள், குப்பை, லவ்வர்ஸ் தொல்லை இருந்தாலும் பார்க்க அழகான இடம்!!

   நீக்கு
 10. அக்கா எனக்கு marina beach பிடிக்காது . besent nagar beach தான் பிடிக்கும், lovers problem இருக்காது,கூட்டமும் இருக்காது

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  பதிவைப்பார்த்த போது.. இந்த இடங்களை சுற்றிபார்த்த ஒரு நினைவு.. பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக லைட் ஹவுஸ் முதல் உழைப்பாளர் சிலை வரை தினமும் வேகமாக நடக்கும் பழக்கம் இருந்தது.. தற்போது வீடு மாறியதால் மெரீனா பக்கம் போவது குறைந்துவிட்டது...

  பதிலளிநீக்கு
 13. மெரினாவில் வீடு கட்டப் போறேன்.. லைட் ஹவுசில் ஏறி நிக்க போறேன்.. நான் மேட்ராசின் ராஜா போல வாரேன்.. பழைய நினைவுகளை கிண்டி விட்டு விட்டது.. (வேளச்சேரி விடலயான்னு கேக்கப் படாது) +1..

  பதிலளிநீக்கு
 14. நீங்கள் பீச் அழகையும் அவலங்களையும் அழகாக உங்கள் எழுத்து நடைமுறையில். சொன்னது அருமை

  பதிலளிநீக்கு
 15. நீங்கள் பீச் அழகையும் அவலங்களையும் அழகாக உங்கள் எழுத்து நடைமுறையில். சொன்னது அருமை

  பதிலளிநீக்கு
 16. Awesome Photos ... கீழேயிருந்து மேலே எடுத்தது அப்புறம் , அந்த முதல் படம் ...!

  தமிழ்த் திரை உலகுல பெண் ஒளிப்பதிவாளர்களே இல்லை ... நீங்க முயற்சி பண்ணலாம் - ச்சும்மா சொல்லி வைப்போம் :)


  இந்த இடத்துக்கெல்லாம் போனதில்ல ... சுத்திக்காமிச்சதுக்கு சீரணி ல பேரணி யே நடத்திடுவம் விடுங்க ...!

  பதிலளிநீக்கு