Saturday, December 21, 2013

இனியாவது மாத்திக்குவாங்களா!? - கேபிள் கலாட்டா

எந்த டிவி எடுத்துக்கிட்டாலும் அழுகாச்சி சீரியல். நியூஸ் சேனல்ல 4 பேர் உக்காந்து ரொம்ப மேதாவி மாதிரி ஒரு விசயத்தை அலசுவாங்க. உலக நடப்புகள் கூட ஒவ்வொரு சேனலும் தங்களுக்கு சாதகமா சொல்லுறதைப் பார்த்து நியூசும் வெறுத்து போச்சு! கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டுகளும் பிடிக்காது. ஜிம்னாஸ்டிக் போனால் மட்டும் பார்ப்பேன்.

சன் டிவி குட்டீஸ், சுட்டீஸ், சூரிய வணக்கம். விஜய் டிவி மகாபாரதம் இந்த தொடர்கள் மட்டும் பார்ப்பேன். ஆனா, முரசு, இசையருவி, ஜெயா மேக்ஸ்ன்னு எல்லா பாட்டு சேனல்களும் ஓட விட்டு என் வேலைகளை பார்ப்பேன். 

நம்மாளுங்க எல்லோரும் சினிமா, டிவின்னு விமர்சனம் போட்டு கலக்குறாங்களே! நாம அந்த ஏரியாவையே டச் பண்ணாம இருக்கோமேன்னு போன வாரம்லாம் டிவி பக்கம் ஒதுங்கினேன். நல்லது கெட்டதுன்னு ஒரு நாளைக்கு பத்து பதிவு தேத்துற அளவுக்கு நம்ம டிவி நிகழ்ச்சிகள்ல மேட்டர் இருக்கு.

இனி, சனிக்கிழமைகளில் அந்த வாரம் முழுக்க பார்த்த டிவி நிகழ்ச்சிகள் பத்தி என் கருத்துகளை சொல்லலாம்ன்னு இருக்கேன்.

ஞாயித்துக்கிழமை மதியம்12 மணிக்கு சன் டிவில ஒளிப்பரப்பாகும் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறும் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. பரவலா எல்லோரும் பாராட்டுனாலும், எனக்கென்னமோ, அந்த நிகழ்ச்சி பார்க்கவே கொஞ்சம் பரிதாபமாதான் இருக்கு. தங்களை ரொம்ப வருத்திக்கிறாங்களோன்னு!! அதனால, அந்த நிகழ்ச்சி பார்க்குற ஆசையை விட்டுட்டேன்.

திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7  மணில இருந்து 7.30 வரை விஜய் டிவில ஒளிப்பரப்பாகும் மகாபாரதம் செம விறுவிறுப்பா போகுது. தேவையில்லாத சீன்லாம் எதுமில்லாம, ரொம்ப முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டுமே காட்சியாக்கி போகுது. கதாப்பாத்திரங்கள் தேர்வு சூப்பர்.

அதுலயும் டீன் ஏஜ் துரியோதனனை பார்க்கும் நமக்கே பயம் வரும் மாதிரி கோனல் சிரிப்பு, சகுனியோட வார்ப்புதான் துரியோதனன்ன்றதை புரிய வைக்குற மாதிரி அவரை போலவே ஒரு கண் மூடி சிரிக்கும் சிரிப்புன்னு மனசை கொள்ளை கொள்ளுறார். இப்ப வளர்ந்து இளைஞராகிட்டப் பின் துரியோதனனா வருபவர் நடிப்பை இன்னும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கலை. அர்ஜுனன்ன்னா அழகா இருப்பார்ன்னு நம்ம மைண்ட்க்குள்ள செட்டாகிட்டதுக்கேற்ப இதுல அர்ஜுனனா வர்றவரும் கள்ளச்சிரிப்போட வந்து மனசை அள்ளுறார்.


நான் சீரியல்கள் பார்ப்பதில்லை. எந்த நாடகத்தை எடுத்தாலும் ரெண்டு, மூணு கல்யாணம், பொம்பளைங்களாம் வெடிக்குண்டு, கள்ளநோட்டு, பாய்சன்னு அனாவசியமா யூஸ் பண்ணி அடுத்தவங்களை அழிக்குறது, குழந்தைகளின் வயதுக்கு மீறிய முதிர்ச்சின்னு இருக்குறதை பார்க்க சகிக்காம நான் சீரியல் பக்கமே போறதில்லை. ஆனா, விஜய் டிவில ராத்திரி 7.30 டூ 8.00 மணி வரை ஒளிப்பரப்பாகுற தாயுமானவன்ன்ற சீரியல்ல வர்ற கேரகடர் எல்லோருமே இயல்பான குணம் கொண்டவங்க.சதி பண்ணி அடுத்தவங்களை கெடுக்குறதுன்னு எதுமில்லாம இருக்குற சீரியல்ன்றதால தொடர்ந்து பார்க்குறேன். சம்பவங்கள் மட்டுமே இங்க வில்லன். அன்பான அப்பா, பாசமான மகள்கள், அவங்க கல்யாணம் அதனால வரும் பிரச்சனைகள் மட்டுமே கதைக்கரு.

வில்லன், வில்லி இல்லாம ஸ்லோவா போற மாதிரி இருக்கும் நாடகம். கடைசி ரெண்டு மகளா நடிக்கும் கல்யாணியும், ஜெனிஃபரும் டப்பா டப்பாவா மை பூசிக்கிட்டு வந்து பயமுறுத்துறது மட்டுமே மைனஸ். கொஞ்சம் குறைச்சுக்கோங்க அம்மணிஸ். அதெல்லாம் தேவிகா, சரோஜா தேவி காலத்து பேஷன்.


கனவுல கூட தெய்வம் தந்த வீடு சீரியல் பார்க்குற மாதிரி வந்துடக்கூடாதுன்னு வேண்டிக்க வைக்குது இந்த சீரியல். சேனல் மாத்திக்கிட்டு வரும்போது இந்த சீரியல் அப்பப்போ கண்ணுல மாட்டி உசுரை வாங்குது. நாடகத்துல வரும் சுதா சந்திரன் ஏன் அம்புட்டு பெரிய நகைகளா மாட்டிக்கிட்டு நடிக்குதுன்ன்னு தெரியலை. சுதா மேடம், உங்களுக்கு கழுத்து, கை, காது வலி வரப்போகுது பாருங்க.

சின்னத்தம்பி பிரபு போல இதுல ஒரு அப்பாவி பொண்ணு!! கேரக்டர் வருது. அதுக்கு லேப்டாப்ன்னா என்னன்னே தெரியாது. அந்த பொண்ணையும், அவ புருசனையும் பிரிக்க, அவ புருசனோட லேப்டாப்பை கொடுத்து. காஃபி கொட்டிடுச்சு! க்ளீன் பண்ணுன்னு வில்லி மேடம் சொல்றாங்க. உடனே அந்த அப்பாவி பொண்ணு சோப்லாம் போட்டு கிச்சன் சிங்ல கழுவி, கொடில கிளிப் போட்டு காய வைக்குது. வில்லியோட திட்டம் வெற்றி அடைஞ்சு புருசனும் பொண்டாட்டியும் பிரிஞ்சுடுறாங்க. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அபா! முடியல. ஒரு நாள் பார்த்ததுக்கே கொலை வெறி வந்துட்டுது எனக்கு.


பெரும்பாலும் எல்லா சேனல்லயும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்ன்னு ஒரு நிகழ்ச்சி வருது. குழந்தையோட படம் போட்டு,  பேர் சொல்லி, குழந்தையை வாழ்த்துறவங்க பேர்லாம் சொல்லி அது முடிஞ்சதும் ஒரு பாட்டு போடுவாங்க. நல்ல கருத்துகள் கொண்ட பாட்டுகள் எவ்வளவோ இருக்கும்போது இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாட்டுங்களையே போடுறாங்க. சினிமா பாட்டை விட, ஸ்கூல் ரைம்ஸ்லாம், மியூசிக், கார்டூனோடு இப்ப டிவிடியா கிடைக்குதே! அதுல இருந்து எதாவது ஒரு பாட்டை போடலாமே! இனியாவது மாத்திக்குவாங்களா!?

இங்க பாரு கொசு கிடைச்சுட்டுது ஒரு தாத்தா தன் மனைவிக்கிட்ட சொல்ல..., பாட்டி அதை பார்த்துக்கிட்டிருக்கும்போதே ஒரு ஃபோன்கால்..., ஆண்டி, அங்கிள் நல்லாதானே இருக்கார்! அப்புறம் ஏன் எங்க வீட்டுக்கு வந்து ஒரு கொசுவை பிடிச்சுக்கிட்டு போனார்ன்னு ஒரு குரல் சொல்ல..., பாட்டியின் முறைப்பின் அர்த்தம் உணர்ந்து தாத்தா பம்முவது சூப்பர். தாத்தாவோடு அசட்டுத்தனமான நடிப்பு சூப்பர்.

தொலைக்காட்சியில் ரசித்த, கோவப்பட்ட, எரிச்சல்பட்ட நிகழ்ச்சி பற்றிய கருத்துகள் அடுத்த வாரமும் கேபிள் கலாட்டாவாய் தொடரும்...,

23 comments:

 1. சாம்பியன்ஸ், மகாபாரதம் பார்ப்பதுண்டு... சீரியல் எல்லாம் ம்ஹீம்...

  ReplyDelete
 2. இப்போ கேபிள் கலாட்டாவுமா ?உங்களால் எப்படி பார்க்க ,பதிவெழுத முடிகிறது ?24 மணி நேரம் போதாது போலிருக்கே ..தூக்கத்தை தொலைத்து விடாதீர்கள் ,உடல்நலம் முக்கியம் சகோ !
  +1

  ReplyDelete
 3. அக்கா இந்த பிரச்சனை வேணாம்ன்னு தான் நான் cartoon networkla TOM&JERRY, chotta beem, jackie chan, donald duck,chip chup,mickymouse ணும் sony ல CIDயும்,இப்ப vijay tv இது காதலானு ஒரே ஒரு serial மட்டும் தான் பார்க்குறேன்.so no tension.
  பார்க்க ஆரம்பிச்ச தினமும் பார்க்க தோணும்.அதை விட கொஞ்சம் கஷ்டபட்டு பார்க்காமல் இருந்த எந்த பிரச்சனையும் இல்லை

  ReplyDelete
 4. சின்னத்திரை பற்றி சிறப்பாக எழுதி இருந்தீர்கள். அதிக நேரம் வலைப்பதிவிலேயே அடிமையாக இருந்து விடாதீர்கள். மேலே சகோதரர் பகவான்ஜி சொல்வதையும் கவனியுங்கள்!

  ReplyDelete
 5. சீரியலா மீ எஸ்கேப்..

  ReplyDelete
 6. டீவி பார்க்கவும் நேரமிருக்கா?

  ReplyDelete
 7. நம்ம பேவரிட் சூப்பர் சிங்கர் மட்டுமே... அதுவும் திவாகருக்காக....

  நெடுந்தொடர்கள் எல்லாமே ஆரம்பத்தில் நல்லாத்தான் இருக்கும்... போகப்போகத்தான் அழுகையையும் வில்லத் தனங்களையும் இணைப்பார்கள். அதனால் அந்த் டிபார்ட்மெண்டிற்குள் செல்வதில்லை. அக்கா...

  சிறப்பாக தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
 8. அது எப்படீங்க சீரியல்ல.பொம்பளைங்க அழுவதைப்பாத்து வீட்டுப் பொம்பளைங்கள்ளாம் ரசிக்கிறாங்க - சொல்வதெல்லாம் உண்மையா.

  கொபாலன்

  ReplyDelete
 9. அக்கா, நமக்கு நியூஸ் அதைவிட்டா காமெடி அவ்வளவுதான்...

  ReplyDelete
 10. நல்ல அலசல்
  எதைப் பதிவு செய்தாலும்
  வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்கிறீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அவள் விகடன்ல தான் "கேபிள் கலாட்டான்னு" போடுவாங்க. இப்ப நீங்களும் போட ஆரம்பிச்சுட்டீங்களா? இந்த பதிவு, எங்க வீட்டு அம்மணியை தான் நியாபகப்படுத்துது. ஏன்னா, இந்த சீரியல் பார்க்கிறது எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு வந்தவுங்க, இப்ப விஜய் டிவியில வர்ற சீரியல் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
  நான் தினமும் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருமா உட்கார்ந்து "மாகாபாரதம்" பார்ப்போம். நீங்க சொன்னபடி, இதுவரைக்கும் தேவை இல்லாத ஒரு காட்சியும் இல்லை. பார்ப்போம் எப்படி போகுது என்று.

  ReplyDelete
 12. கூடவே என் கணவன் என் தோழன் ,தெய்வம் தந்த என் தங்கை இரண்டையும் பாருங்கள் .இந்த இரண்டும் கூட உணவு நேர இடைவேளையில் அடுத்தடுத்து வருவதால் மட்டும் என்னால் பார்த்து ரசிக்க முடிந்தது .அனேகமாக நானும் தங்கள் கட்சி தான் :)) வாழ்த்துக்கள் சகோதரி ஒரு மாதிரி பதிவைத் தேற்றிவிட்டீர்கள் :)))

  ReplyDelete
 13. தொலைக் காட்சித் தொடர்களே பார்ப்பதில்லை சகோதரியாரே.
  பையனும் பெண்ணும் அனுமதிப்பார்களேயானால், செய்திகள் மட்டும் பார்ப்பதுண்டு.
  த.ம.9

  ReplyDelete
 14. நான் தேன்நிலவு நாதஸ்வரம் பார்ப்பதுண்டு

  ReplyDelete
 15. கேபிள் கலாட்டா அருமை. த.ம. 13

  ReplyDelete
 16. நல்ல அலசல்... சூப்பர் சிங்கர் தவறாமல் பார்ப்போம்..

  ReplyDelete
 17. நமக்கும் டி.வி.க்கும் ரொம்ப தூரம். பார்த்தால் சில சமயம் ஆங்கில செய்திகள், காமெடி அவ்வளவு தான்!

  ReplyDelete
 18. தெய்வம் தந்த வீடு - கொலை வெறியில இருக்கேன்... தொடரா அது.... விளம்பரத்துக்காக சேனல் மாத்தும் போது கூட அந்த மருமகள் அழுதுகிட்டும், அவளை ஏதாவது விவகாரத்தில் சிக்க வைப்பதுமாய்.... ச்சே..ச்சே.... அந்த மருமகளை அழ வைக்கணும்... அதுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமா யோசிக்கராங்கையா டைரக்டர்....

  Z tamil tv-ல உள்ளம் கொள்ளை போகுதே அவ்வப்போது ரசிச்சு பாக்கிற தொடர்....

  ReplyDelete
 19. ஆமா, தலைப்புல வர்ற இனியா என்ன செய்தா? ஏன் மாறனும்....

  ReplyDelete
 20. விஜய் டிவியின் சமீப கால நிகழ்ச்சிகள் சுமார்தான், அதை ஈடு கட்ட மகாபாரதம் வந்திருகிறது. என்னதான் போர் னு சொன்னாலும் டிவி இல்லாம இருக்கறது கஷ்டம்தான்.

  ReplyDelete
 21. தாங்கள் விமர்சித்த விதம் நன்றாக உள்ளது! நானும் என் தோழியும்தான் எங்கள் வலைப்பூவில் சேர்ந்து பேசி எடிட் செய்து எழுதுகிறோம். ஆனால், டி.வி. என்றால் இரண்டு பேருமே தொலைக்காட்சியில் பார்ப்பது சினிமாதான். இருவருக்குமே அதில் ஆர்வம். ஆங்கிலப் படங்களும். ஆனால் எபோதாவதுதான். காமெடி சில சமயம் பார்ப்பது உண்டு! ஆனால் சீரியல் நோ சான்ஸ் இருவருமே!. ஏதாவது மலையாளச் சான்ல்களில் அல்லது விஜய் சானலில் (அது கூட இப்போது கொஞ்சம் சுமார்தான்) ஏதாவது வித்தியாசமாக வந்தால்! தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பது இல்லை! நேரமும் இல்லை! ஸோ இருவருக்குமே டி.வி. கொஞ்சம் தள்ளித்தான்!

  ReplyDelete