Tuesday, December 31, 2013

சத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்

பொண்ணுக்கு பத்தாவது பப்ளிக் எக்சாம் வருது. அதனால, ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன், வீட்டுப் பாடம்ன்னு ஏகப்பட்ட டென்சன். அக்கா டியூஷன் போகும்போது அவளுக்கு செக்யூரிட்டி கார்ட் போல அவக்கூடவே டியூஷனுக்கு போகனும்ன்னு அப்புக்கு கவலை. தூயா ஹாஸ்டல்ல இருக்குறதால அந்த சாப்பாடு பிடிக்காம அவளுக்கொரு கவலை. மத்தவங்க போல நம்ம பொண்டாட்டி சமைக்கலியேன்னு என்னவருக்கு ஒரு கவலை. ஆளுக்கொரு கவலையில சரியா சாப்புடுறது இல்ல. சரியா சாப்பிடாம இருந்தா ஆரோக்கியம் என்னாகுறது!?

அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு சத்து மாவு அரைச்சு வந்து வச்சிருக்கேன். இப்பலாம் காஃபிக்கு பதில் இதான் எல்லோருக்கும். என்ன சர்க்கரைதான் முன்னை விட கொஞ்சம் அதிகம் செலவாகுது! இனி கொஞ்சம் கொஞ்சமா பசங்களுக்கே தெரியாம சர்க்கரையை குறைச்சுக்கனும்.

சத்து மாவு அரைக்க தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு - 1  கப்
கம்பு - 1கப்
சோளம் - 1 கப்
கோதுமை - 1 கப்
புழுங்கலரிசி அ சிகப்பரிசி - 1 கப்
பார்லி - 1 கப்
ஜவ்வரிசி - 1கப்
பச்சைப் பயறு - கப்
சோயா பீன்ஸ் - 1 கப்
வெள்ளைக் கொண்டைக் கடலை - 1 கப்
சிவப்பு கொண்டைக்கடலை - 1 கப்
முழு மக்காச்சோளம் - - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
உடைச்ச கடலை - 1 கப்
முந்திரி - 100கிராம்
பாதாம் - 100 கிராம்
ஏலக்காய் -50கிராம்

கஞ்சி காய்ச்ச தேவையானப் பொருட்கள்
சத்து மாவு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு, 
பால் - ஒரு டம்ப்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை

கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, சிவப்பு கொண்டைக்கடலை, மக்காச்சோளம்லாம் முதல் நாள் நைட்டே ஊற வைங்க. மறுநாள் நல்லா கழுவி, கல்லுலாம் போக அரிச்சு தண்ணி வடிக்கட்டி ஒரு துணில மூட்டைக் கட்டி வைங்க. ஈரம் காய, காய தண்ணித் தெளிச்சுக்கிட்டே வாங்க. ஒரு நாள் முழுக்க இருக்கட்டும். மறுநாள் பிரிச்சுப் பார்த்தால் தானியங்களில் முளை விட்டிருக்கும். அதை வெயிலில் நல்லா காய வாங்க.

மறுநாள் மீதம் இருக்கும் பொருளையும் சேர்த்து வெயிலில் காய வச்சு மெஷின்ல கொடுத்து அரைச்சு வச்சுக்கோங்க.
காத்து புகாம டப்பாவுல வச்சுக்கோங்க

ஒரு பாத்திரத்துல ரெண்டு டம்பளர் தண்ணி காய வச்சுக்கோங்க.

அதுல ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து தண்ணியை கொதிக்க விடுங்க.

தண்ணி கொதிக்கும் முன் சத்து மாவை ஈரமில்லாத கிண்ணத்துல போட்டுக்கோங்க.

பால் விட்டு கட்டியில்லாம கரைச்சுக்கோங்க.

அடுப்பிலிருக்கும் தண்ணி நல்லா கொதிச்சதும், அடுப்பை சிம்முல வச்சுட்டு கரைச்சு வச்சிருக்கும் சத்து மாவுக் கரைசலை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க.
அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நல்லா கரைச்சுக்கோங்க.சூடான சுவையான சத்துமாவு கஞ்சி தயார். கைக்குழந்தை முதற்கொண்டு பல்லுப்போன தாத்தா வரை சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருக்குறவங்க உப்பு மட்டும் போட்டு குடிக்கலாம். எண்ணெய் , கலர்லாம் எதும் சேர்க்கலை. 

பால் பிடிக்காதவங்க சத்து மாவை தண்ணில கூட கரைச்சுக்கலாம். நல்லா தண்ணியா கரைச்சுக்கனும். இல்லாட்டி கட்டி, கட்டியாகிடும். நான் இல்லாட்டி என் பையனே கூட கலந்து சாப்பிட்டு ஸ்கூல் போய்டுவான்.

22 comments:

 1. எங்க வீட்டுல கொஞ்ச நாளைக்கு ரெடிமேடா கிடைக்கிற கஞ்சி போட்டாங்க...அத குடிச்சி இருந்த சத்தும் இல்லாம போச்சு...
  புல்லா பொட்டுகடல மாவு....வாயு தொல்ல ...இப்ப கஞ்சினா...காத தூரம் ஒடுறேன்.........ஸ்...அப்பாடா

  ReplyDelete
 2. ரொம்ப சத்தான சத்துமாவு.குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
  அக்கா தேவையான பொருட்களில் camera இல்லையே!ஏன்கா???

  ReplyDelete
 3. சகோதரி ராஜி தங்கள் கஞ்சி மாவு பொருட்களுடன் இவற்றையும் சேர்த்துப் பாருங்கள்! நான் வருடங்களாக செய்து வரும் ஒன்று! (குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஓகே! பெரியவர்களுக்கு வேர்க்கடலையைத் தவிர்க்கலாம். இது ஒரு ஆங்கில மருத்துவரின் அறிவுரை)
  அளவு அதேதான். வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வேர்க்கடலைக்கு பதில் கொள்ளு, பனிவரகு (பனிவரகு கிடைக்கவில்லையென்றால் பனிவரகு அவல் கூட கிடைக்கிறது.)
  இவற்றையும் சேர்த்துப் பாருங்கள். நன்றாக இருக்கும் சுவை!

  அதே போன்று பெரியவர்களுக்கு என்றால் முந்திரியை தவிர்த்து பாதாம் சிறிது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்! வால்நட்டும் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் நல்லதுதான்! இவை எல்லாம் காதியில் கிடைக்கின்றன. இல்லையென்றால் நல்ல நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கின்றன.

  சென்னை அன்பர்களுக்கு : சென்னையில் மௌன்ட் ரோடில் இருக்கும் காதிபவனில் எல்லாமே கிடைக்கின்றன. அடையாறிலிருந்து பெசன்ட் நகர் செல்லும் ரோடில் உள்ள நாராயணா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

  நன்றி! சகோதரி!

  கீதா. (எனது நண்பர் துளசிதரனும், நானும் சேர்ந்துதான் தில்லைஅகத்தில் எழுதுகிறோம். அதனால் ID பார்த்து குழப்பம் வேண்டாம்)

  ReplyDelete
 4. சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் எங்கள் மனமார்ந்த (சத்தான) புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete

 5. நன்றி! அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  சகோதரி ராஜிக்கு அடிக்கடி கிச்சன் கார்னர் பக்கம் வராதீர்கள்!

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு சகோதரி... நன்றி... வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

  ReplyDelete
 9. வணக்கம்
  சகோதரி.

  செய்முறை விளக்கம் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. வணக்கம்
  சகோதரி

  த.ம7வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. எங்கள் குடும்பத்தின் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. சோக்கா கீதும்மே...
  அப்பால... நம்ப சுக்கா வறுவல்...? ரிமைண்டு பண்ணிக்கினேம்மே...

  ReplyDelete
 17. ரொம்ப ரொம்ப தேவையானா சமையல் குறிப்பு சகோ. மிக்க நன்றி.
  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அனைவருக்கும்பயன்படும் பதிவு
  புகைப்படத்துடன் சொல்லிப்போனவிதம்
  மிக மிக அருமை

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. சிறுவயதிலிருந்து நான் சாப்பிட்டு வந்த கஞ்சி... கெட்டியாக கிளறி ஒரு கிண்ணம் சாப்பிடாமல் நகர மாட்டேனாம்....:))) அம்மா எல்லாவற்றையும் நன்றாக வறுத்து மிஷினில் அரைப்பாங்க... இந்த மாவுடன் வெல்லம் தேங்காய்துருவல், கொஞ்சம் நெய் சேர்த்து பிசறி தண்ணீரோ அல்லது பாலோ தெளித்து பிசைந்து உருட்டி சாப்பிட்டு பாருங்க... சூப்பராக இருக்கும்... பள்ளியிலிருந்து வந்தவுடன் சாப்பிடுவோம்...:))

  தில்லியில் மிஷினில் கோதுமைத் தவிர எதுவுமே அரைக்க மாட்டாங்க... அதனால மன்னா ஹெல்த் மிக்ஸ் கொஞ்ச நாள் குடித்தேன்...

  உங்க பதிவை பார்த்த பிறகு தான் ரோஷ்ணிக்கும் செய்து கொடுக்கலாம்னு தோணுது...

  ReplyDelete

 20. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  ReplyDelete
 21. நல்ல பகிர்வு......

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete