Thursday, June 26, 2014

கீ செயின் - கிராஃப்ட் கார்னர்

அம்மா பிளாக் பைத்தியம்ன்னா பொண்ணு கீசெயின் பைத்தியம். என் சின்ன பொண்ணு இனியாக்கு கீ செயின்கள் மேல் கொள்ளை ஆசை. எந்த ஊருக்குப் போனாலும், எந்த கடைக்குப் போனாலும் ஒரு கீ செயின் வாங்கிடுவா. அவ வாங்குறதில்லாம, அவ அக்காக்கிட்டயும் கீ செயின் வாங்கி வரச் சொல்லுவா. சலங்கை வச்சது, முத்து, கல்லு வச்சது, துணி, சிப்பி, பேர் பொரிச்சதுன்னு விதம் விதமா இருக்கும்.

ஏதோ நெட்டுல மேய்ஞ்சுக்கிட்டிருந்தேன். என்னம்மா பண்றே!?ன்னு கிட்ட வந்தவ கண்ணுல, கிராஃப்ட் பக்கத்துல இருந்த கீ செயின் செய்யுறது பத்திய போஸ் பார்த்தா. மம்மி மந்திரிகளை தூக்குற மாதிரி, அம்மாவை கம்ப்யூட்டர்ல இருந்து கெட் அவுட் பண்ணிட்டு கீ செயின் செஞ்சதுமில்லாம, அம்மாக்கு பதிவை தேத்த ஃபோட்டோகளும் எடுத்துக் கொடுத்துட்டா. பூ போல அட்டையில வரைஞ்சுக் கொடுத்ததை தவிர இதில் என் பங்களிப்பு ஏதுமில்ல(இதைச் சொல்லனும்ன்னு மேடம் கண்டிஷன் போட்டாங்க. ஏன்னா, கஷ்டப்பட்டு செய்யுறது நானு! பாராட்டு உனக்கா!?ன்னு கேக்குறா!!).

தேவையான பொருட்கள்:
காலி கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் (பெப்சி, கோக், ஃபேண்டா, வாட்டர் பாட்டில் இருந்தா நல்லது. மத்ததுலாம் கலர்ல வரும். 
விருப்பமான வடிவங்களில் கிறிஸ்டல் மணிகள்
கட்டர்,
கத்திரிக்கோல், 
பெயிண்ட் இல்லன்னா நெயில் பாலிஷ்
உல்லன் நூல் இல்லன்னா எதாவது நைலான் ஒயர்
மெழுகுவர்த்தி


எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு  ஒரு அட்டைல பூ போல  பிடித்தமான டிசைன்ல கட் பண்ணிக்கிட்டா.  கூல் டிரிங்க்ஸ் பாட்டிலில் மேல், கீழ் பாகம் வெட்டி நடுவில் இருக்கும் பாகத்தை எடுத்துக்கிட்டா ஒரு தகடுப் போல கிடைக்கும்.
வெட்டி எடுத்த பாட்டில் தகட்டு மேல பூ டிசைன் வரைஞ்சு வெட்டி எடுத்துக்கிட்டா.

வெட்டிய பூக்கள் டிசைனை மெழுகுவத்தி சுடர் அனல்ல லேசாக் காட்டிக்கிட்டா. அப்பதான், முனைகளில் எதாவது பிசிறு இருந்தால் போய்டும். அனல் பட்டதும் பிளாஸ்டிக் பூ லேசா வளைஞ்சு பார்க்க அழகா இருக்கும். 
நெருப்பில் காய்ச்சிய கம்பியால பூக்கள் நடுவில் ஒரு துளைப் போட்டுக்கிட்டா.

பெயிண்ட் இல்லன்னா நெயில் பாலீஷ் அடிச்சுக்கிட்டா. பெயிண்ட் காய கொஞ்ச நேரம் பிடிக்கும். நெயில் பாலீஷ் உடனே காய்ஞ்சுடும்.


ஒரு சாவி வளையத்துல தேவையான அளவு நூல் கோர்த்து, முடிப் போட்டுக்கோகிட்டா. அடுத்து மணிகள் கோர்த்துக்கிட்டா.



அடுத்து பூ இதழை கோர்த்துக்கிட்டா.


அதுக்கடுத்து கண்ணாடி மணிகளைக் கோர்த்துக்கிட்டா. அழகான சாவி வளையம் தயார்!

பென்சில், பேனா கொண்டு போகும் பவுச்சில் கோர்த்துக்கிட்டா. சாயந்தரம் ஸ்கூல்ல இருந்து வந்து தம்பிக்கும், அக்காக்கும் ஒரு கீ செயின் செஞ்சுத் தர்றதா சொல்லி இருக்கா.

10 comments:

  1. மிக மிக அற்புதமாகச் செய்திருக்கிறார்
    நிச்சயம் கூடுதல் தனித் திறன் இருந்தால்தான்
    இப்படிச் செய்வது சாத்தியம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாவ் அருமை நானும் கூட கீசெயின் பைத்தியம் தான் ஒரு காலத்தில்... அக்காவுக்கும் தம்பிக்கும் மட்டுமல்ல அப்படியே எனக்கும் ஒன்று செய்து அனுப்ப சொல்லுங்கள் அக்கா...

    ReplyDelete
  3. அழகா இருக்கு ராஜி..இனியாகிட்ட வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.
    த.ம.3

    ReplyDelete
  4. செய்து பார்த்துடுவோம் ... தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. இனியாவுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க. அழகா இருக்கு. ரோஷ்ணியும் செய்முறையை பார்த்துக்கிட்டா...:)

    என்னவரும் எங்கே போனாலும் எப்போதும் கீ செயின் வாங்குவார். நானும் அதனால நிறைய விதவிதமான கீசெயின் வெச்சிருக்கேன்....:))

    ReplyDelete
  6. பிரமாதம்... இனியாவுக்கு இனிய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஆஹா அருமையான, எளிமையான கீ செயின்...........இனியாவிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கீ செயின் சூப்பர். உங்கள் மகளுக்கும் அதை அப்படியே லைவாக பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சாவி வளையத்தை எல்லாம் நான் காசு போட்டு தான் வாங்கியிருக்கேன். இனியா இப்படியெல்லாம் செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா, இந்த மாமாவிற்கு ஒரு பார்சல் கேட்டிருப்பேனே!!!!

    இனியாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கீ செயின் - பார்க்க அழகாய் இருக்கிறது. இனியாவிற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete