Monday, November 13, 2017

7 வயது பெண்மீது காதல் கொண்ட மன்னன் - ஐஞ்சுவை அவியல்.

என்னங்க மேடம் யோசனை?!

நம்மாளுங்கக்கிட்ட சிக்கி இந்த காதல் சின்னா பின்னம் ஆகுதே! ஒருத்தன் புனிதம்ங்குறான், ஒருத்தி ஹம்பக்ன்னு சொல்றா. ஒருத்தர் ஹார்மோன் செய்யும் வேலைன்னு ஆளுக்காள் பிச்சி எடுக்குறாங்களே! அதான் யோசனையா இருக்கு மாமா. 

காதல்ங்குறது புனிதமும் இல்ல.  புண்ணாக்கும் இல்ல.  பசி, தூக்கம் போல அது ஒரு உணர்வு.  அதேமாதிரி ஆசிட் அடிக்கும் அளவுக்கு வெறிக்கொள்ளவும் வேணாம்.  தாடி வளர்த்து தண்ணி அடிக்குமளவுக்கு உன்னதமும் இல்ல. நிலா, பூமி, ஆகாயம்ன்னு கொண்டாடி தீர்க்க வேணாம். புடிச்சிருந்தா சேர்ந்து வாழலாம். இல்லியா?!  ஓகே பைன்னு சொல்லி பிரிஞ்சு போகும் அளவுக்கு பக்குவம் வரனும் நம்ப பசங்களுக்கு. அதேமாதிரி ரெண்டு பேரும் ஆசைப்பட்டாதான் அது காதல், ஒருத்தருக்கு மட்டும் வந்தா அது ஆசை. அந்த ஆசையை கொண்டாடி தீர்க்கனும். இல்ல அழிச்சுக்கனும். அதை விட்டு கைய கிழிச்சுக்குறது, தாடி வளர்த்துக்கிட்டு சுத்துறதுலாம் வேஸ்ட்.

கேரளாவை சேர்ந்த பிரியதர்ஷிணி கதையை பாரு. இந்த மாதிரி பைத்தியமாகுமளவுக்கு காதல் தேவையா?!

பூட்டான் இளவரசன் கேசர் டூர் போன இடத்துல  ஜெட்சன்ன்ற 7 வயது பெண்ணை பார்த்து காதல் வயப்பட்டிருக்கார்!!!!! ஜேட்சனின் அழகிலும், அறிவிலும், தன்னடக்கத்தையும் கண்டு அவள்மீது ஆசைப்பட்டு, நீ என் மனைவியாக வரனும்ன்னு ஆசைப்படுறேன். வளர்ந்து பெரிய பொண்ணாய் ஆனப்பின் உன்னையே கட்டிப்பேன்னு சொல்லி வந்தாராம். ஜெட்சனின் அப்பா, பூட்டான் நாட்டில் ஃபைலட்.  ஜெட்சன் பள்ளிப்படிப்பை  முடித்து,  மனோதத்துவம் மற்றும் கலைத்தொடர்பான பாடத்தை கல்லூரியில் படித்துக்கொண்டே, கலை, விளையாட்டு என அனைத்திலயும் சிறந்து விளங்கி வந்தார். இதற்கிடையில் கேசர் பூட்டான் மன்னனார். இவர்கள் இருவருக்கும் 2010ல் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. போன வருசம் இவங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு.  இவங்க கல்யாணம் முடிக்கும் வரை வெளி உலகுக்கு இவங்க லவ், டேட்டிங் போன மேட்டர்லாம் தெரியாது...

7 வயசு பொண்ணு மேல காதலா?! ஆச்சர்யம்தான். அதும் அழகு, அறிவு, தன்னடக்கம் பார்த்து வந்த காதல்ன்னு சொல்றதுலாம் நம்புற மாதிரி இல்ல. இருந்தாலும் வெளிநாடுங்குறதாலயும், கல்யாணம் ஆனதாலயும்  இதை ஏத்துக்குறேன்.

நாம ஒருத்தங்களை பெருசா நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா, அவங்க மனசுல நாம இருக்கோமா??! இல்ல வேற எந்த நினைப்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்?! அதுக்கு இந்த படம்தான் சிறந்த உதாரணம்....

சரி, போன வாரம் கேட்டதுக்கே நீ இன்னும் பதில் சொல்லல. இன்னிக்காவது சொல்றீயான்னு பார்க்கலாம்... இரண்டு இலக்கங்களைக் கொண்டு எழுதக்கூடிய மிகச் சிறிய முழு எண் என்ன?

யோசிச்சுக்கிட்டே இரு..  நான் வெளில போய் வரேன்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1477780
நன்றியுடன்,
ராஜி.

20 comments:

  1. காதல் என்பது பொதுவுடைமை. கஷ்டம் மட்டும்தான் பொதுவுடைமை!

    ReplyDelete
    Replies
    1. ஸாரி கஷ்டம் மட்டும்தான் தனி உடைமை! காதல் கண்ணை மறைத்து விட்டது!

      :)))

      Delete
    2. உங்களுக்குமா காதல் கண்ணை மறைச்சிட்டுது?!

      Delete
  2. வணக்கம்
    படித்த போது உணர்ந்து கொண்டேன் காதல் மீது இவ்வளவு பைத்தியமா என்று பல ஆதாரங்களுடன் எடுத்துசொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மேல பைத்தியங்கள்லாம் நம்மோடு உலாத்துது சகோ

      Delete
  3. நல்லதொரு அவியல். இந்த முறை கொஞ்சம் விஷயங்கள் குறைவோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. எதும் எழுத வரல. மனசு முழுக்க இருண்டு கிடக்கு... என்னன்னு தெரில

      Delete
    2. பதிவில் சம்திங்க் ராங்க்ன்னு புரியுது. சுவாரசியமில்லைன்னு எனக்கே தெரியுது, இனி இப்பிழை நேராம பார்த்துக்குறேன். சாரி

      Delete
  4. ரயில் தொடர்பு இந்த அளவிற்கு அவரை ஆக்கியுள்ளது வேதனையைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ரயிலுக்கு பதில் இப்ப ஃபேஸ்புக்

      Delete
  5. இருவர் தம் உள்ளத்தில் ஏற்படும் உண்மையான, காலம் கடந்தாலும் காத்திருக்கிற அன்பே காதலாகும் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. ரெண்டு பேர் மனசுல வந்தாதான் அது காதல்,. இல்லன்னா அது ஆசை இல்லன்னா ஒருதலை காதல்

      Delete
  6. காதல் பைத்தியமாக்கியிருக்கிறதே...
    இன்று ஒரு செய்தி வாசித்தேன் காதலியை தீவைத்துக் கொன்றான் என...
    இதுபோல கொலைகாரர்களைவிட அன்பின் அதீதத்தால் பைத்தியமாவது மேல்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஒன்னு எங்கிருந்தாலும் வாழ்கன்னு தியாகி வேசம் போடுவானுங்க. இல்லன்னா ஆசிட் அடிப்பாங்க. ஆகமொத்தம் பேலன்ஸ் பண்ணிட்டு போகத்தெரியாது

      Delete
  7. காதல் பைத்தியமாகியதோ போகட்டும் வன்முறையாகாமல் இருந்தால் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. வன்முறைக்கும் பல காதல் வித்திட்டிருக்குப்பா

      Delete
  8. காதல் உணர்வுகள் எல்லாம் சொல்லித் தெரிவதில்லை அனுபவிக்கோணம்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் அதேதான்ப்பா, கெஞ்சி, மிரட்டிலாம் வரவைக்க முடியாது. அதை உணரனும்

      Delete
  9. அவியல் நல்லாருக்கு

    கீதா: ஆனா ஒரே காய்தான் போல!!ஹிஹிஹிஹிஹி!!! அதான் காதல் மட்டுமே!!! ஐஞ்சுவை அவியல் காதல் அவியல் அல்லது காதல் தீஞ்சுவை அவியலானதோ!!!

    எல்லாத்துக்கும் காரணம் மண்டைக்குள்ள இருக்கற மசாலாவில் ஏற்படும் வேதியியல் மாற்றம் தான். நாம் ஈசியா சொல்லிடலாம் இப்படியா செய்வாங்க அப்படியா செய்வாங்க...இப்படி செஞ்சுருக்கலாம் செய்யக் கூடாது என்று அப்படி இப்படி என்று...ஆனால் ஒவ்வொருவரின் மூளையும் ஒவ்வொரு மாதிரி. அந்த கெம்ஸ்ட்ரியை புரிஞ்சுக்கறது அவ்வளவு எளிதல்லதான். கேரளாவை சேர்ந்த பிரியதர்ஷிணி கதையை பாரு.// இந்த மாதிரி பைத்தியமாகுமளவுக்கு காதல் தேவையா?!// இது உட்பட...கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் அந்த மாற்றத்தை யாராலும் அத்தனை எளிதில் அணுகிட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம். இங்கிட்டும் ஏதோ கோளாறுப்போலண்ணே. அதான் ஐஞ்சுவையில் ஒரு சுவை மட்டுமே இருக்கு. மிச்ச காய்கறிலாம் போட மறந்துட்டேன்

      Delete