Monday, November 27, 2017

வாட்ஸ் அப்ல விளைந்த நற்செயல் - ஐஞ்சுவை அவியல்

மாமா! இந்த போன்ல இருக்கும் வாட்ஸ் அப் ஆப்பை முதல்ல டெலிட் செய்யனும்.

ஏன்?! வாட்ஸ் அப்ல  பார்வார்ட் பண்ணுற மெசேஜ்ல எது உண்மை?! எது பொய்ன்னு தெரியாம குழப்பமா இருக்கு. அதான்.. 

அப்படிலாம் சொல்லாத. வாட்ஸ் அப்பால சில நல்லதும் நடந்திருக்கு..


கேரளா, தாம்பனூர் ராயில்நிலையத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த உணவை ஒரு வயதான பெண்மணி சாப்பிடுறது வாட்ஸ் அப்ல பரவி இருக்கு. அவங்க, மலப்புரத்திலிருக்கும் ஒரு ஸ்கூல்ல கணக்கு டீச்சரா இருந்தவங்களாம். பேரு வத்ஸா. டீச்சர் வேலைல இருந்து ரிட்டையர்ட் ஆனப்பின், பசங்க வீட்டை விட்டு துரத்திவிட, சாப்பாட்டுக்கு வழியில்லாம பிச்சை எடுத்து இருக்காங்க. வாட்ஸ் அப்ல இவங்களை பார்த்த முன்னாள் மாணவர்கள் இவங்களை அடையாளம் கண்டு இப்ப தங்கள் பராமரிப்புல வச்சிக்கிட்டு இருக்காங்க. இதுமாதிரி நல்லதும் வாட்ஸ் அப்ல நடக்குது. அதேமாதிரி, இன்னொரு நல்லதும் கேரளாவில் நடந்திருக்கு...

கேரளாவின் கண்ணூர் மாவட்ட, பரியாரம்ன்ற ஊரில் இருக்கும் ஆஸ்பிட்டல்ல ஆம்புலன்ஸ் டிரைவரா ஹமீம்ன்னு ஒருத்தர் இருக்கார். ஒரு புதன்கிழமை நைட்டு, பிறந்து முப்பது நாளான, பாத்திமான்ற குழந்தைக்கு ஹார்ட் ஆப்ரேஷன் செய்ய வேண்டி, திருவனந்தபுரத்திலிருக்கும் ஸ்ரீசித்ரா ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போக அழைப்பு வந்திச்சு, இரண்டு ஹாஸ்பிட்டலுக்கும் இடையில் சுமார் 500கிமீ தூரம். விமானத்துல பாப்பாவை கொண்டு போக பாப்பாவின் உடல்நிலை இடங்கொடுக்கல. அதனால, ஆம்புலன்சை கூப்பிட்டிருக்காங்க. பொதுவா 500கிமீ தூரத்தை சாலை வழியா கடக்க 14 மணிநேரம் ஆகும். ஆனா, ஹமீம் 6 மணி நேரம், 45 நிமிசத்துல இந்த தூரத்தை கடந்து வந்திருக்கார். இதுக்காக, இவர் கேரள மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கார். இவருக்கு உதவியா கேரள போலீசும் போக்குவரத்தை இவர் போகும் பாதையில் சீர் செஞ்சு கூட்ட நெரிசலில்லாம பார்த்துக்கிட்டாங்க. இப்ப, பாப்பா ரொம்ப நல்லா இருக்கா.

ம்ம்ம் சரி, இந்த மாசம் சம்பளம் வந்ததும்.....

சம்பளம்ன்னு சொல்லுற வார்த்தை எப்படி வந்திச்சுன்னு தெரியுமா?! செய்த வேலைக்கு கூலியா சம்பான்ற வகை அரிசியையும், அளத்தில் விளைந்த உப்பைய்உம் கொடுத்ததால சம்பளம்ன்னு பேர் வந்திச்சு. அதேமாதிரி, காய்கறின்னு சொல்லுறதுல கறிங்குறது மிளகை குறிக்குது. முன்னலாம் காரத்துக்கு மிளகு சேர்ப்பதுதான் வழக்கம்,. அதனாலதான் காய்+ கறி= காய்கறின்னு ஆனது. கறின்ற வார்த்தைக்கு ஆட்டு இறைச்சின்னும் ஒரு அர்த்தம் உண்டு...

சம்பளத்துக்கான அர்த்தம் தெரியும். ஆனா, காய்கறிக்கான அர்த்தம் இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம். மூணு பேர் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டாங்க. பில் 75ரூபா வந்திச்சு, ஆளுக்கு 25 ரூபான்னு போட்டு சர்வர்கிட்ட பில்லையும் பைசாவையும் கொடுத்துவிட்டாங்க. சர்வர் கொண்டு போய் முதலாளிக்கிட்ட கொடுக்க, 5 ரூபாயை தள்ளுபடி பண்ணி, 70 ரூபாயை எடுத்திக்கிட்டு மிச்ச 5 ரூபாயை சர்வர்கிட்ட கொடுத்து விட்டிருக்கார். சர்வருக்கு டிப்சா 2 ரூபாயை கொடுத்துட்டு மிச்சம் 3 ரூபாயை ஆளுக்கு 1 ரூபான்னு பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க.

அதான் கணக்கு சரியாகிட்டுதே! இதுல என்ன கேள்வி?! என்ன சாப்பிட்டாங்கன்னு கேணைத்தனமா கேக்கப்போறியா?!

பொறு மாமா... ஆளுக்கு ஒரு ரூபா திரும்பி வந்ததால, சாப்பாட்டுக்குன்னு ஒவ்வொருத்தரும் 24 ரூபா செலவழிச்சிருக்காங்க. சரியா?!

ம் சரிதான்.. மூணு பேரும் செலவழிச்சது  24 * 3 = 72 ரூபா.  சர்வருக்கு டிப்ஸ் 2 ரூபா.. மொத்தம்  72 + 2 = 74 ரூபா. ஆனா, ஆரம்பத்தில அவங்க சர்வர்கிட்ட கொடுத்தது 75 ரூபா. அப்படின்னா மிச்சம் 1 ரூபா எங்க மாமா?! அந்த ஒரு ரூபாதான் இதுன்னுலாம் சொல்லக்கூடாது. 

அடிப்பாவி கொஞ்சம் நஞ்சம் வேலை செஞ்சிக்கிட்டிருக்கும் மூளையையும் குழப்பி விட்டுட்டியே!
யோசிச்சு நல்லா பதில் சொல்லு. இல்லாட்டி உனக்கு சாப்பாடு கட்.. யோசிச்சுக்கிட்டே இந்த படத்தை பாரு. மனிதாபிமானம் எப்படி இருக்கனும்ன்னு.. பார்த்ததும் பிடிச்சுட்டுது...
மாமா பதில் சொல்லுறதுக்குள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க சகோஸ்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டைக்கு
செல்லும் வழி..

நன்றியுடன்,
ராஜி.

17 comments:

 1. சம்பளம், காய்கறி விடயம் அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்பதானா தெரிஞ்சுக்குறீங்க??! ஆச்சர்யம்தான்

   Delete
 2. இந்தக் கணக்கை முன்பே கேட்டிருக்கிறேன் பதில் நினவுக்கு வரவில்லை

  ReplyDelete
  Replies
  1. பதில் யாராவது சொல்லட்டும் இல்லன்னா நாளைக்கு சொல்றேன்பா

   Delete
 3. அருமை......///கணக்கே தப்பு.......அதெப்புடி.........70 ரூபா சாப்பாடு+2 ரூபா சர்வருக்கு டிப்ஸ்.மொத்தம் எழுபத்திரெண்டு ரூபா..........அப்போ ஆளுக்கு 24 ரூபா பில்லு/முடியுது.சர்வருக்கு கொடுத்தது போக மீதம் மூணு ரூபா....ஆளுக்கு 1 ரூபா எடுத்துக்கிட்டாங்க,கணக்கு சரியாப் போச்சா.......ஆரு கிட்ட........

  ReplyDelete
  Replies
  1. ஆருக்கிட்ட///
   யோகா அண்ணாக்கிட்டதான்

   Delete
 4. இங்கேருடா அதிசயத்த!.
  நம்ம ஒடம்பொறப்பு அறிவாளித்தனமா எழுதிருக்கறத.

  ReplyDelete
  Replies
  1. எப்பப்பாரு ஒடம்பொறப்பை கிண்டல் செஞ்சிக்கிட்டிருந்தா மாப்ள எப்படி தங்கச்சிய மதிப்பார்ன்னு தோணுதா?!

   Delete
 5. முதல் ரெண்டு செய்தியும் எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்தில பார்த்து இங்கயும் மீண்டும் வாசிச்சாச்சு..நல்ல விஷயங்கள்...பாராட்டப்பட வேண்டிய விஷயம்...

  கணக்கு பதில் தெரியுது ஆனா தெரியலை ஹிஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. நான் போன வாரம்லாம் கொஞ்சம் பிசிண்ணே., அதான் எங்கள் பிளாக்ல வந்த விசயம் தெரில.

   பதில் சொல்லாம இங்கிருந்து போகக்கூடாது

   Delete
 6. ​நல்ல உள்ளங்கள், நல்ல மனிதர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.​

  ReplyDelete
 7. பாராட்டிற்குரியவர்கள்
  தம +1

  ReplyDelete