Monday, November 06, 2017

தொப்புள் கவர்ச்சிப்பொருளா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா!  ஆதாம் ஏவாள் இப்ப உயிரோடு நம்மோடு இருந்தா ஈசியா கண்டுப்பிடிக்கலாம். அது எப்படின்னு கேட்டாங்க...

ஆதாம், ஏவாள் ட்ரெஸ் இல்லாம இருப்பாங்க. அதானே?!ன்னு சொன்னேன். ம்ஹூம் தப்பு யோசி. காலேஜ் போய்ட்டு வந்து பதில் சொல்றோம்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

ஆதாம், ஏவாளுக்கு தொப்புள் இருக்காது.  முதன்முதலாய் ஆணை படைத்து, அவன் முதுகெலும்பை எடுத்து பொண்ணை படைச்சதால அவங்க ரெண்டு பேருக்கும் தொப்புள் இருக்காதுன்னு சொல்வாங்க. அது உண்மையா பொய்யான்னு எனக்கு தெரியாது. தமிழர் பண்பாட்டில் தொப்புள் ஒரு உன்னதமான உறுப்புன்னு சொல்வாங்க. அம்மாவையும் பிள்ளையையும் சேர்த்து வைக்குறதால இந்த புனிதம் வந்துச்சு.  குழந்தை தன் வயித்திலிருக்கும் குழந்தைக்கு இந்த தொப்புள் வழியாதான் அம்மா  சோறுட்டினா...  ஆனா, இன்னிக்கு அந்த உறுப்பு வெறும் கவர்ச்சிக்குன்னு ஆகி ஆம்லேட் பாட்டு, பம்பரம் விட்டு, மணலைக்கொட்டி.. சினிமாவுலதான் அசிங்க படுத்துறாங்கன்னா  தொப்புள் தெரியுற மாதிரி ட்ரெஸ் பண்ணி இந்த பொண்ணுங்களும் இப்பலாம் அசிங்கப்படுத்துறாங்க. 







தொப்புள் பத்தி சில விசயம் சொல்றேன். கேட்டுக்க...  நம்ம உடம்புலயே அதிகமான அழுக்கான பகுதின்னா அது தொப்புள்தான்.  சராசரியா 67 வகையான பாக்டீரியா நம்ம தொப்புள்ல இருக்காம்.. கைரேகை, கண், நாக்குலாம் எப்படி ஆளுக்காள் வேறுபடுதோ அதுமாதிரி தொப்புளும் ஆளுக்காள் வேறுபடுமாம்..  தொப்புள்கொடி உடலின் நடுப்பகுதியில் சரியாய் அமைந்த பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெத்தெடுப்பாங்க.  நூறில் ஒருவருக்குதான் தொப்புள் வெளியே எம்பியப்படி (Outie Belly Button Type) இருக்கும். அதாவது, உலகில் 4% பேரை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் தொப்புள் உள்ளிருக்கும் படி குழி போலதான் இருக்கும்.  தொப்புள் வெளியே எம்பியது மாதிரி இருக்குறதை பத்தி தப்பான கருத்து இங்குண்டு. குழந்தை பிறக்கும்போது மருத்துவர்கள் சரியாக தொப்புள்கொடியை அறுக்காததால் இப்படி ஆகுது. ஒருசில நேரத்தில்  காலைல நாம  எழும்போது தொப்புளில் பஞ்சு மாதிரி ஒண்ணு இருக்கும். பெண்களைவிட ஆண்களுக்குதான் இது அதிகமாக உருவாகும். இதுக்கு காரணம் தொப்புளை சுற்றி இருக்கும் முடிதான். ஆண்களுக்கு இருப்பது மாதிரி அதிகமாக வயிறு பகுதியில் பெண்களுக்கு முடி இருப்பதில்லை இதான் காரணம்.


 தொப்புள்கொடி பாலூட்டி இனத்துக்கு மட்டும்தான் இருக்கும்.   தொப்புள் பகுதியில் துளையிட்டு ரிங் மாட்டிக்குறது இப்ப்ப பேசனாகிட்டுது. இதுப்போல குத்தும்போது உண்டான   காயம் ஆற ஒன்பது மாசமாகும். சிலநேரம் உயிரையும் படிக்கும்  T வடிவிலான தொப்புள் தான் உலகிலேயே மிகவும் செக்ஸியான தொப்புள்ன்னு சொல்லப்படுது.

அட ஆண்டவா! தொப்புள் பத்தி இத்தனை விசயமிருக்கா?!

ஒவ்வொரு சாமிக்கும் ஒரு வாகனம் உண்டு,. முருகனுக்கு மயில், சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடன், சரஸ்வதிக்கு அன்னம், சக்திக்கு சிங்கம்,  வினாயகருக்கு எலின்னு வாகனம் இருக்கு. மயில், சிங்கம், யானை, கருடனை பத்தி உனக்கு தெரியும். ஆனா எலிய பத்தி எதும் தெரிஞ்சிருக்காது.   மனுசனுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் அத்தனையும் எலிகள் மேலதான் டெஸ்ட் செய்யுறாங்க.  250 அடி உயரத்திலிருந்து கீழ விழுந்தாலும் அடிபடாத மாதிரி லேண்டிங்க் ஆகுற சாமர்த்தியம் எலிக்கு உண்டு.  எலிய வச்சு  டெஸ்ட் செஞ்ச ஆராய்ச்சிகள்ல 30 நோபல் பரிசு இதுவரை கிடைச்சிருக்கு. எலிக்கு  பித்தப்பை, சிறுநாக்கு கிடையாது. ஆனா, மனுசங்க மாதிரி தொப்புள் உண்டு. இது பாலூட்டி இனத்தை சேர்ந்தது.  இதோட பல்லு வருசத்துக்கு 4 1/2 இருந்து 5 1/2 இன்ச் வரை வளரும். இதை குறைக்கதான் எலி எதையாவது கொறிச்சுக்கிட்டே இருக்கும். 

 ஒரு பெண் எலியால் 6 மணி நேரத்தில் பல ஆண் எலிகளுடன் 500 முறை வரையிலும் உறவுக் கொள்ள முடியும்.  ஒரு எலியின் சராசரி வாழ்நாள் 2-3 வருசங்கள்.  2-3 நாட்கள் வரையிலும்கூட எலி நீரில் தாக்குப்பிடிக்கும். அமெரிக்காவில் ஒரு மனுசனுக்கு ஒரு எலின்னு இருக்கு.  56 வகையிலான எலிகள்  மனுசங்க வாழும் இடங்களில் வாழுது. மத்ததுலாம் காடுகள், மலைகள்ன்னு இருக்கு.  எலிகள் தங்கள் கழிவுகளை தானே உண்ணும். இதன் மூலமாக அவை தனக்கு தேவையான சத்துக்கள் பெறுதாம்.  எலிகளுக்கு வியர்காது. தனது இரத்த நாளங்கள் மற்ற வாலை பயன்படுத்தி உடல் வெட்ப நிலை சீராக்கி கொள்ளுமாம். 

அப்பாடா! போதும் இதுக்கு மேல லெக்சர் அடிக்காதீங்க. 

சரி சிந்திக்குற மாதிர் ஒரு படம் காட்டுறேன் பாரு...


மனத்திருப்திக்கும், புண்ணியத்துக்குலாம் பெரும்பானமையான ஆட்கள் உதவுறது இல்ல. விளம்பரத்துக்காக உதவுறதுதான் இங்க அதிகம்.

காயப்படுத்துறவங்கக்கிட்டயே ஆறுதல் தேடுவது என்ன மாதிரி டிசைன்னு தெரில..

நீங்க பேசுன வரைக்கும் போதும். நான் ஒரு கேள்வி கேக்கேன்., அதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்...

ரெண்டு டிஜிட்ல வரும் மிகச்சிறிய நம்பர் என்ன?!

இதுக்கு ஆன்சர் சொல்லுங்க பார்ப்போம்.....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..

நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. தொப்புளில் தொடங்கி எலி வழியாக பயணம்! ரெண்டு டிஜிட்ல வர்ற மிகச்சின்ன நம்பர்... இவ்வளவு ஈஸியான கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்பா...!

    ReplyDelete
    Replies
    1. இருங்க தனபாலன் அண்ணா சொல்றாரான்னு பார்த்துட்டு சொல்றேன்/

      Delete
  2. உண்மைதான் விளம்பரத்திற்காக உதவுபவர்கள்தான் அதிகம்
    தம +1

    ReplyDelete
  3. அருமையான அவியல்.......எலி ல இவ்ளோ விசியம் இருக்கா...ரைட்டு.புள்ளையார் கரெக்டா தான் செலக்ட் பண்ணியிருக்கார்............///அந்தக் கேள்வி....புரியவே இல்ல,அதால பதில் தெரியல......

    ReplyDelete
    Replies
    1. இரண்டு இலக்க எண்ன்னா என்னனு தெரிலயா?!

      Delete
  4. தொப்புளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியனவற்றை அறிந்தேன்.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி. அவியல் பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. சிறப்பு இந்த பதிவு

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ சகோ

      Delete
  8. எலிபுராணத்துக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  9. தலைப்பு கவர்ச்சி!!!ஹிஹிஹிஹி....சோதனை எலி தகவல்கள் சிறப்பு...

    கீதா: ரெண்டு டிஜிட் ல சிறிய நம்பர் ..ம்ம் ஈசியா கேக்கமாட்டீங்கனு தெரியும்....மைனஸ்லயும் வரலாமோ ..??

    ReplyDelete
    Replies
    1. மைனஸ்லலாம் வராது. தலைப்பு கவர்ச்சியாவா இருக்கு?!

      Delete
  10. தொப்புள் புராணமும் அருமை!

    ReplyDelete