Tuesday, June 16, 2020

புழுங்கல் அரிசியிலும் இடியாப்பம் செய்யலாம்!!- கிச்சன் கார்னர்

எங்க வீட்டில் யாருக்கும் இடியாப்பம் பிடிக்காது.   இடியாப்ப செய்றதில்லைன்றதால இடியாப்ப மாவு வீட்டில் இருக்காது. மாமனாருக்கு  உடம்பு சரியில்லைன்னா இரவு உணவுக்கு  கண்டிப்பா  இட்லியோ இல்ல இடியாப்பமோ இருக்கனும். அவருக்கு என்ன வேணும்ன்னு முதல்லியே சொல்லமாட்டாரு. திடீர்ன்னு அரை மணிநேரத்துக்கு முந்திதான் சொல்வாரு :-(

அப்படி ஒருநாள் அவர் திடீர்ன்னு கேட்கும்போது பச்சரிசியை ஊற வச்சு மாவாக்க நேரமில்ல. அம்மாக்கு  போன் பண்ணி கேட்டேன். சோறு பொங்க இல்ல இட்லிக்கு அரிசி ஊற வச்சிருக்கியான்னு கேட்டு செய்முறையை சொன்னாங்க. அதன்படி செஞ்சதுதான். 

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி /இட்லி அரிசி
உப்பு
எண்ணெய்- 1 டீஸ்பூன்

இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வச்சு, நைசா அரைச்சு மாவாக்கனும்...
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் அரைச்ச மாவை ஊத்தி கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கனும்...
மாவு கையில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைச்சுடனும்...

பெரிய சைஸ் கொழுக்கட்டையா பிடிச்சு இட்லி பானையில் வச்சு வேக வைக்கனும்.. மாவு வெந்ததும், கொஞ்சம் சூடா இருக்கும்போதே முறுக்கு அச்சில் இருக்கும் சிறு ஓட்டைக்கொண்ட  ஓமப்பொடி தட்டை போட்டு பிழிஞ்செடுக்கனும்.

மொபைல் க்ளிக்.. சுட்டதான்னு யாராவது கேட்டால் அடுத்த முறை இடியாப்பம் செய்யும்போது இடியாப்பம் பிழிய உங்களைத்தான் கூப்பிடுவேன்.

இடியாப்பம் ரெடி, தேங்காய் பால், சிக்கன்/மட்டன் கிரேவி, மீன் குழம்பு, குருமா, வேர்க்கடலை சட்னின்னு எல்லா சைட் டிஷ்சும் இடியாப்பத்திற்கு பொருந்தும். எதுவுமே இல்லன்னாலும்,  காய்ச்சின பாலும் சர்க்கரையும்கூட தொட்டுக்கலாம். 

சின்ன வயசில் அம்மா வீட்டில் இதுமாதிரி ஒரு இடியாப்ப அச்சு இருந்தது. அதுல இடியாப்பம் பிழியுற கஷ்டமிருக்கே! அச்சுக்கு 3 கால் இருக்கும். அதில் ஒரு காலை சுவற்றில் முட்டுக்கொடுத்து, இரண்டு காலில் ஒரு காலை நானும், அம்மாவும் பிடிக்க அப்பா பிழிவார். இப்படி கஷ்டப்பட்டதால் எனக்கு இடியாப்பம் பிடிக்காமல் போயிட்டுது :-(

மாவு சூடா இருக்கும்போதே இடியாப்பம் பிழிஞ்சுடனும். இல்லன்னா அதோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கும்..

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. சூடா இருக்கும்போதே பிழியுறது ஒரு புறம்...

    இடியப்பம் சூடா இருக்கும்போதே சாப்பிடணும்...! ஐயே, எனக்கும் பிடிக்காது...

    ReplyDelete
    Replies
    1. காய்ச்சல்போது டாக்டர் பிரட், இட்லி, இடியாப்பம், கஞ்சி குடிக்க சொல்வாங்க. இட்லி மட்டும் ஓகே. மத்ததுலாம் தொடவே மாட்டேன். அதிலும் இடியாப்பம்.. ம்ஹூம்

      Delete
  2. சின்ன வயதில் நானும் இந்த இடியாப்ப அச்சில் பிழிந்திருக்கிறேன். தேங்காய்த் துருவல், சர்க்கரை கலந்து, புளிக்காய்ச்சல் கலந்து, மிளகாய்ப் பொடி கலந்து என்றெல்லாம் சாப்பிட்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அச்சில் இடியாப்பம் பிழிஞ்சு கையெல்லாம் காப்பு காய்ச்ச அனுபவமும் உண்டு...

      Delete
  3. இடியாப்பம் - இந்த அச்சில் பிழிவது கொஞ்சம் கடினம் தான்.

    இப்போதெல்லாம் இன்ஸ்டண்ட் இடியாப்பங்கள் வந்து விட்டனவே! அதை வைத்து சுலபமாகச் செய்து விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்குதான் இடியாப்பம் பிடிக்காதே! அதனால் எதையும் தெரிஞ்சுக்கலை. மாமனார் உடனிருந்தால் இடியாப்பம் செய்ய தெரிஞ்சிருக்கும் மாமனாரும் உடன் இல்லை.

      Delete
  4. இது எனக்குக் கல்யாணத்துல பிறந்த வீட்டுச் சீரா வந்துச்சு அதுவும் இரும்புல...அப்புறம் ஹிண்டாலியம்னு.

    கர்ர்ர்ர்ர்ர் ராஜி இது நாங்க சேவைன்னு சொல்லுவோம். புழுங்கரிசில செய்யறது இதே போல இது சேவை.

    பச்சரிசில செய்யறது பிழிஞ்சு ஆவில அவிக்கறது இடியாப்பம்னு சொல்லுவோம். சேவை, இடியாப்பம் எங்க வீட்டுல ஒரு மாதத்தில் கண்டிப்பா இருக்கும்.

    எங்க ஊர்ல டொப்பி அரி னு புழுங்கலரிசி கிடைக்கும் அதுல சேவை செஞ்சா செமையா மணக்கும் அதுவும் தேங்காய் எண்ணை விட்டு அந்த வாசனை செமையா இருக்கும்...ஃபேவரிட்..பிழியறதும் சிரமமா இருக்கறதில்லை. தனியாவே நாழில போட்டு பிழிஞ்சுடுவேன். ஊர்ல அப்பல்லாம் இரும்புல இருக்கும் அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா இப்பல்லாம் இல்ல...

    நல்லா வந்திருக்கு நீங்க செஞ்சது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பிடிக்காத உணவுக்கு இடியாப்பம்ன்னு இருந்தால் என்ன?! சேவையா இருந்தால் என்ன?!

      Delete