Saturday, March 21, 2020

காத்து வாங்க மட்டும்தானா டேபிள் ஃபேன்?! - கிராமத்து வாழ்க்கை

70, 80களில் பால்யத்தை கழித்தவர்கள் பெரும்பாக்கியசாலிகள். கைகளில் காசு இல்லாவிட்டாலும் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தவர்கள். அதனால்தான், இன்னமும் அந்த நினைவுகளில் மூழ்கி ,அந்த வாழ்க்கைக்காக ஏங்கி தவிக்கின்றனர். கிணற்று குளியல், திண்ணை தூக்கம்.... என பழமையையும், ஸ்மார்ட் போன், இணையம், எல்.சி.டி டிவின்னு புதுமைகளையும் ஒருசேர அனுபவிச்ச பாக்கியசாலிகள்... 


ரெண்டு ரூபாக்கு வெங்காயம்,  1 ரூபாக்கு தக்காளி, நாலணாக்கு பச்சைமிளகாய், தேங்கா பத்தை ரெண்டு, கறிவேப்பிலை கொசுறுன்னு வாங்கின கால கட்டமது... அழுகிப்போச்சுன்னு திரும்ப வந்த தேங்காயில் நல்ல பகுதியை கொடுப்பாங்க. நல்ல தேங்காயை உடைச்சும் கொடுப்பாங்க. நாம அன்னிக்கு நரிமுகத்துல முழிச்சிருந்தா உடைச்ச தேங்காய் காலி ஆகிட்டு, புது தேங்காய் உடைக்கும்போது. தேங்காயை உடைச்சு அப்படியே வாயில் ஊத்துவாரு கடைக்காரர்.. ம்ம்ம் அதுலாம் ஒரு காலம்!!!

ஊருக்குள் திடீர்ன்னு ஒருநாள்  லாரி லாரியாய் ஜல்லி கொண்டு வந்து கொட்டுவாங்க. தார் டின்னு வந்து இறங்கும். ரோடுக்கு பக்கவாட்டில் இருக்கும் மண்ணை சுத்தம் செய்வாங்க. ரோடு ரோலர் வந்து நிக்கும். யானை மாதிரி ஆடி அசைஞ்சு இஞ்சு பை இஞ்சா அது நகரும் அழகை பார்க்க அத்தனை ரம்மியமா இருக்கும். ஊருல மொத்த ரோடும் நம்ம மேற்பார்வையிலதான் போடுறதா ஒரு நெனப்பு. பொழுதன்னிக்கும் அங்கதான் இருக்குறது.  சுடச்சுட இருக்கும் தாரை கொட்டாங்குச்சியில் கொண்டுபோய், ஒழுகும் வாளி, குடம், அண்டாவோட ஓட்டையை அடைச்சு வைப்போம். அந்த தார் வாசனை...   மழை வாசனை, பெட்ரோல் வாசனை மாதிரி அது ஒரு போதை...
இப்ப மாதிரி ரூமுக்கு ரூம் ஃபேன் இல்லாத காலம்... எங்கோ சில வீட்டில் லொட லொடன்னு சத்தம் கேட்கும் பேன்  இருக்கும்.  டேபிள் பேன் சில வீட்டில் இருக்கும்.  அப்பா, தாத்தா, பெரியப்பா, மாமான்னு குடும்பத்தலைவர் படுக்கும் இடத்துக்குலாம் இது போகும். நாம அவங்க செல்லமா இருந்தால் நமக்கும் ஃபேன்ல படுக்கும் யோகம் கிட்டும். இது காத்து வாங்குனதைவிட, அது முன்னாடி உக்காந்து பேசி ரசிச்சதுதான் அதிகம்.  ரகுவரன் வாய்ஸ்தான் அதிகம் வந்ததா நினைப்பு..

இது நட்டு போல்ட்ன்னு தெரியும். ஆனா, இது எந்த மெஷினோடதுன்னு தெரியாது. இதோட பயன் அதுல என்னன்னு தெரியாது, ஆனா, தீபாவளி அன்னிக்கு பொட்டு வெடி வெடிக்க இதை பயன்படுத்துறது மட்டும் தெரியும்
எத்தனை விலைவாசி வந்தாலும் அளவிலும், விலையிலும் மாறாத ஒரே பொருள் இந்த பூமர் சூயிங் கம்.   ஆரம்பத்துல இனிக்கும். போகப்போக கசக்கும்... மென்னு மென்னு வாய் வலிச்சாலும் துப்ப மாட்டோம். கிரிக்கெட்  வீரர்கள் மென்னு துப்பினதை பார்த்துட்டு ஊரே இதை மென்னுச்சு. இந்த பூமரை கண்ட இடத்தில் துப்பு செருப்பு, துணின்னு ஒட்டிக்கிட்டு வீட்டில் திட்டு வாங்கினதும் உண்டு. 






ஒரு ரூபா பூமர் சூயிங் கம் வாங்க கையில் காசு இல்லாத போது இந்த மிட்டாஇயை வாங்குவோம். பூமர் மாதிரிதான் இதுவும்... ரெண்டுத்துக்கும் இருக்கும் வித்தியசம் என்னன்னா?! பூமர் ஆரம்பத்துலயே சாஃப்டா இருக்கும். ஆனா, இந்த மிட்டாய் ஆரம்பத்துல கரகரப்பா இருக்கும். போகப்போக சாஃப்டாகிடும். பூமர் ஒரே கலர்ல கிடைக்கும். இது பச்சை, வெள்ளை, ரோஸ்ன்னு கலர்கலரா கிடைக்கும்...

கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி


7 comments:

  1. நினைவுகள்... இனிமையானவை.

    ReplyDelete
  2. மறக்க முடியாத இளமை நினைவுகள்.

    ReplyDelete
  3. அது ஒரு இனிய காலம்.

    ReplyDelete
  4. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது காத்து வாங்க மட்டும்தானா டேபிள் ஃபேன்?! – கிராமத்து வாழ்க்கை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  5. பழமையில் மூழ்கடித்து விட்டீர்கள் சகோ.

    ReplyDelete
  6. பழமையை மூழ்கடித்து'ம் விட்டார்கள் சகோ.

    ReplyDelete