Sunday, March 22, 2020

இன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுதா?! - பாட்டு புத்தகம்

சமீபத்துல கேப்டன் டிவியில் தே.மு.தி.க கட்சி மீட்டிங்க் போய்க்கிட்டிருந்துச்சு. கடைசியில் விஜயகாந்த் பேசினார். 
அப்ப அவரை பார்க்க, அவர் பேச்சை கேட்க பாவமா இருந்துச்சு. சினிமாவில் நடிச்சவரை கேப்டன் நல்லாதான் இருந்தாரு. சிறந்த குடிமகன் விருது வாங்குனதா சொன்னாங்க. நடிகர் சங்க கடனை அடைச்சாரு. கார்கில் போருக்கு பெரிய நிதி திரட்டி கொடுத்தாருன்னு கேப்டனை பத்தி எல்லாருமே நல்லவிதமாதான் சொல்றாங்க. ஆனா, யாரு பேச்சை கேட்டாரோ தெரில. கட்சி ஆரம்பிச்சாரு. கட்சி ஆரம்பிச்சு தனிச்சு நின்னவரைக்கும் நல்லாதான் இருந்தாரு.  கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல் தலமையா, முதல்வரா வந்திருக்க வாய்ப்பிருந்தது. பிறகு... தப்பான முடிவெடுத்து கூட்டணி வச்சு, அங்கிருந்து வெளியில் வந்துன்னு அவர் வைத்த அடிகள் எல்லாமே தப்பாகிட்டுது.

இடையில் உடல்நிலை மோசமானது. கிட்டத்தட்ட 70 வயசை நெருங்கும்போது உடல்நிலை மோசமாவது சகஜம். குடின்னு ஒரு காரணம் சொல்றாங்க. குடிப்பழக்கம் வர மனைவியும், மச்சானும்தான் காரணம்ன்னு சொல்றாங்க. அது உண்மையான்னு தெரியாது. ஆனா, அரசியலில் அவர் சறுக்கினதுக்கு மனைவியும், மச்சானும்தான். இப்ப புதுசா அவர் பிள்ளையும் சேர்ந்திருக்கு.    தப்பான ஆட்களை நம்பி இந்நிலைக்கு ஆளாகிட்டாரு. இதை உணர்ந்துதானோ என்னமோ, அன்னிக்கே பாடி வச்சிட்டார்.... பாட்டை கேளுங்க... கேப்டன் நிலைக்கு பொருந்துதான்னு சொல்லுங்க!

இந்த பாட்டு கேப்டனுக்கு மட்டுமில்ல. எல்லாருக்குமே பொருந்தும். அதனால் கூடியமட்டும் தன்னை மட்டுமே நம்பனும். அடுத்தவங்களை மதிக்கனும். 


மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றமில்லை..
என் மனதில் பாவம் சுமக்கவில்லை..
மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றமில்லை..
என் மனதில் பாவம் சுமக்கவில்லை..
இதுதான் உறவு என்றால்...
இதுதான் உலகம் என்றால்..
போடா எதுவும் தேவையில்லை...

மகத்தான உறவுகளை...

வீடு வரை உறவென்று சொன்னவனே!
பாசம் வைத்தால் மோசம் என்று சொல்லிவிட்டான்..
யாரை நம்பி நான் பொறந்தேன் என்றவனே!
உன்னை நம்பி வாழ்க வென்று சொல்லி வைத்தான்!
நல்லதையே செய்கிறேன்.. நல்வழி போகிறேன்...

என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான்..
வழிமாறிப் போனவன் ..
தன்னையே மறந்தவன்..
அவன் வாழ்க்கை என்றுமே இரண்டுதான்..
உண்மை என்ன?! போலி என்ன?! புரியாத மனிதனே!
நல்லவர் காணவில்லை..
 இந்த உலகில் நன்றியில்லை...

மகத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றமில்லை..

வாழையடி வாழை என வாழ்கவென்று,
வாழை வைத்தே வாள் எடுத்து வீழ்த்தி விட்டான்..
சபலமெனும் சஞ்சலத்தில் சாய்ந்து விட்டான்..
சத்தியத்தின் வாசலை சார்த்தி விட்டான்..

வாழ்வெல்லாம் அநித்தியம்..  உண்மை நிரந்தரம்..
அறிந்தவனோ என்றுமே ஞாநிதான்..
சுய நலங்கள் பெரிதென சுகங்களை மதிப்பவன்..
மண்ணுலகில் என்றுமே பாவிதான்!

உண்மை என்ன?! போலி என்ன?! புரியாத மனிதனே!
நல்லவர் காணவில்லை..
 இந்த உலகில் நன்றியில்லை

கத்தான உறவுகளை மனதார நம்பியது குற்றமில்லை...


படம்:எஙக முதலாளி
பாடியவர்: எஸ்.பி.பி,
நடிகர்: விஜயகாந்த்
இசை:இளையராஜா
எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்

நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. பாவம் குடும்பம் அவரை டம்மி ஆக்கிடுச்சு.

  ReplyDelete
 2. பாடல் வரிகள் அவருக்காகவே எழுதப்பட்டுள்ளது போல் உள்ளது...

  ReplyDelete
 3. காணொளி வரவில்லை... காப்புரிமை பெற்றது போல...

  https://www.youtube.com/watch?v=5-wlox8n4KM

  ReplyDelete
 4. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது இன்றைய கேப்டன் நிலைக்கு இந்த பாட்டு பொருந்தி போகுதா?! – பாட்டு புத்தகம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  ReplyDelete
 5. கேப்டனை நானும் ரசிப்பேன்.   காவல்துறை அதிகாரி வேடத்தில் கம்பீரமாக நடிப்பவர்.  பாடல் கேட்ட நினைவு இல்லை.  வரிகளை ரசித்தேன்.

  ReplyDelete
 6. அருமையான தகவல்

  ReplyDelete