Sunday, March 01, 2020

நெருக்கமானவங்க பக்கத்திலிருக்குற மாதிரி உணரனுமா?!- பாட்டு புத்தகம்

அலைகள் ஓய்வதில்லை வெற்றிக்குப்பின் நினைவெல்லாம் நித்யா, அலைகள் ஓய்வதில்லையின் தெலுங்கு பதிப்பு என  சில ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, மீண்டும் ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்திருந்தார். விசு, மௌலி என தமிழிலும் சில தெலுங்கு படத்திலும் நடிச்சுட்டு சினி ஃபீல்டுல தனக்கான இடத்தை தக்க வச்சிக்கிட்டிருந்தார். அப்படி வந்த படங்களில் ஒன்னுதான் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சியின் அன்வேஷனா (Anveshana) படத்தில் பானுப்பிரியா ஜோடியா நடிச்சார்.  அப்படம், பின்னாளில்  பாடும் பறவைகள் ன்னு தமிழில் டப் பண்ணாங்க. 

திரில்லர் படமான இதில் வரும் ஆட்களும், இடங்களும், காட்சியமைப்பும் தமிழுக்கு அன்னியப்பட்டு இருந்ததால் படம் அவ்வளவா ஓடல. ஆனா, பாட்டுகள் ஹிட், அதிலும்  "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", பாட்டு செம ஹிட்.  அதுக்கு முக்கிய காரணம் இளையராஜா, எஸ்.பி.பி. எஸ்.ஜானகி கூட்டணிதான். வேற ஒரு டியூன் போட்டு அந்த பாட்டு ஓகே ஆனதும்  தயாரிப்பாளர் என்ன ராகம் இதுன்னு கேட்க, கீரவாணின்னு ராஜா சார் சொல்லி, அதையே பாட்டா போட்டு தரச்சொல்லி கேட்டுவாங்கி வந்த பாட்டுதான் இது. 

யாருமேயில்லாத ஏகாந்தமான ஒரு இடத்தில் தனியா இந்த பாட்டை கேட்டு பாருங்க, காபி மணத்தோடு மனசுக்கு பிடிச்சவங்க நமக்கு பக்கத்திலிருக்குற மாதிரி ஒரு ஃபீல் வரும். சட்சட்ன்னு மாறும் இசைத்துணுக்கு நம்மை சொக்க வைக்கும். பாட்டை கேட்டு சொக்கி போயிருக்கும் நேரத்தில் படத்தின் காட்சிகளை பார்த்தால் ஒட்டாத வாயசைவு கொஞ்சம் உறுத்தும். மத்தபடி பாட்டு சூப்பர்.


கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே!!
அடி ஏனடி சோதனை.... தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி?! சங்கதி சொல்லடி..
வா நீ கீரவாணி...
இரவிலே கனவிலே பாட வா நீ,,
இதயமே உருகுதே...


நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி..
நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி..
தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய்..
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்..
வருவாய்.. பெறுவாய்.. மெதுவாய்...
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததே!!
அதற்கொரு விடை தருவாய்!!

(கீரவாணி)

புலி வேட்டைக்கு வந்தவன், குயில் வேட்டைதான் ஆடினேன்..
புயல் போலவே வந்தவன், பூந்தென்றலாய் மாறினேன்..
இந்த வனம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன்..
இங்கு உனை பார்த்ததும் அதை தினம் பாடினேன்..
மனதில் மலராய் மலர்ந்தேன்..
வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவாணி)
படம் பாடும் பறவைகள்,
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
நட்புடன் 
ராஜி 

5 comments:

  1. இப்படி ரசிப்பதில் எனக்கு மூத்தவர் நீங்கள் தான்...!

    ReplyDelete
    Replies
    1. இல்லண்ணா. எல்லாத்துலயும் நீங்கதான் மூத்தவர். அதில் எனக்கு பெருமையும்கூட..

      Delete
  2. இனிமையான பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்னோடு சேர்ந்து பாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே.

      Delete
  3. நல்ல பாடல்.   இதே படத்திலேயே "ஏகாந்த வேளை..."   என்கிற எஸ் பி பி பாடலும் உண்டு.  பாதி வரி எஸ் பி பி பாதி வரி எஸ் ஜானகி என்ற முறையில் பாடும் பாடல்.  அதுவும் நன்றாயிருக்கும்.

    ReplyDelete