Thursday, March 26, 2020

பழைய புடவையை கால் மிதியடியாய் மாற்றலாம்!! -கைவண்ணம்

முன்னலாம், ஒரிரு வருசத்துல சாயம் மக்கி கிழிஞ்சு போகும். ஆனா, இப்ப அப்படியில்ல. எத்தனை வருசமானாலும் புடவையின் சாயமும் போறதில்லை. கிழியுறதுமில்ல! 
பீரோ நிறைய புடவை இருந்தும், அதுல கட்டாம வச்சிருக்கும் புடவை பல இருந்தாலும், அவற்றை  இல்லாதவங்களுக்கு கொடுக்க பெண்களுக்கு  மனசு வருவதே இல்லை.   இது என்னையும் சேர்த்துதான்... பழைய பாத்திரம் வாங்குறவங்க வந்தால் போட்டு பாத்திரம் வாங்கி வச்சோம்.ஆனா, இப்ப அப்படி புடவை வாங்க யாரும் வர்றதுமில்ல. வந்தாலும் சில்வர் பாத்திரம்லாம் கொடுக்குறது இல்ல. பிளாஸ்டிக் சாமான்கள்தான். அதுவும் ரீசைக்கிள்டு பிளாஸ்டிக் சாமான்கள்தான். அது தரமானதா இல்லன்றதால் இப்பலாம் சேர்ந்திருக்கும் துணிகளை செலவு செய்ய முடிவதில்லை. 


இப்ப பழைய புடவைகள் புது அவதாரம் எடுக்க ஆரம்பிச்சிருக்கு. கால் மிதியடியா பின்ன ஆரம்பிச்சுட்டாங்க. என் வீட்டுக்கு போட்டிருந்த கால் மிதியடியை பார்த்துட்டு என் ஓரகத்திங்க போட சொல்வாங்க. அவங்களுக்கு பின்னியது... இதான் போன வாரம் முழுக்க புடுங்கின ஆணி... 



 இது துப்பாட்டாகளை கொண்டு பின்னியது...
இது காட்டன் சேலையில் பின்னியது...  புடவை அவங்களோடது.. ஒரு மேட் பின்னி கொடுத்தால் 60ரூபா...    கொழுந்தனார் வீட்டில் பார்த்துட்டு பின்னி தர சொல்லி இருக்காங்க.. 144 முடிச்சுட்டுதான் பின்னி தரனும். ரொம்ப சுலபம்தான். புடவை மெல்லிசா கிழிக்குறது மட்டுமே இம்சையான வேலை. மத்தபடி ரொம்ப ஈசி.

நன்றியுடன்,
ராஜி


8 comments:

  1. மனதின் புதிய எண்ணங்களுக்கும், கைகளின் திறமைக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இந்த மாதிரி ஒரு முறை நானும் செய்திருக்கிறேன்! இங்கே இப்படியான மேட்களும், மெல்லிய படுக்கைகளும் செய்வார்கள்.

    தொடரட்டும் கைவண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நான் தானே பின்னினேன்..என் மாம்பழக் கலர் புடவை..யாரப்பா இது..:))

      Delete
  3. இதற்கு திறமையும் வேண்டும்... அதிக பொறுமையும் வேண்டும்... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  4. சூப்பர் ஐடியா.
    இந்த மாதிரி எல்லாம் யோசிக்க உங்களுக்கு எப்படி முடிகிறது.

    ReplyDelete
  5. நானும் டெல்லியில் இருந்த போது மாத இதழில் வந்ததைப் பார்த்து தைத்திருக்கிறேன்..மூன்றாக கிழிக்கறதும், ஒவ்வொரு சுத்துக்கும் தைக்கறதும் தான் வேலை...

    ReplyDelete
  6. Dear raaji nalamaa

    Jaleela from samaiyal attakaasam
    https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
    en channel blog support seythathu poola channel kum vaanga .

    ReplyDelete
    Replies
    1. சேனல் ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள்.. வந்துக்கிட்டே இருக்கேன்க்கா.

      Delete