Monday, June 15, 2020

கவலைகளை மறக்க இந்த பாப்பாவோட சிரிப்பை பாருங்க -ஐஞ்சுவை அவியல்

போர்க்கால அவசரத்துக்கு உதவும்ன்னு கோவில்,  அரண்மனைகளிலிருந்து கோட்டைக்கு வெளியில் அல்லது காடு, மலைகளுக்கோ போற மாதிரி சுரங்கப்பாதை  அமைச்சிருப்பாங்களே! அதுமாதிரி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் சுரங்கப்பாதை அமைக்கலாமில்ல!!

சுரங்கப்பாதை அமைக்குறது அம்புட்டு ஈசியா என்ன?! வீடு  மாதிரியோ இல்ல கிணறு மாதிரியான அமைப்பிலோ தோண்டமுடியாது. போகப்போக பாதை குறுகும்.  குறிப்பிட்ட ஆழம் போனதும் குனிஞ்ச வாக்கிலே பூமியை தோண்டி மண்ணை வெளியில் கொட்டனும்,  பாறைகள் இருந்தால் அதை உடைச்சு அதையும் வெளியில் கொண்டு வரனும். ஊற்றுகளிலிருந்து கசியும் நீரை உள்ள தேங்க விடக்கூடாது. கூடவே மண் சரிஞ்சுடாம இருக்க கற்கள், அல்லது மண் கொண்டு பூசனும். அத்தனையும் குனிஞ்ச வாக்கிலே வேலை செய்யனும். சுரங்கப்பாதையின் முடிவு வெளியிலிருந்து பார்க்குறவங்களுக்கு தெரியக்கூடாது. சுரங்கப்பாதை வழியா உள் நுழையும் அந்நியர்கள் அரண்மனையிலிருந்து வெளியிலோ, அல்லது வெளியிலிருந்து அரண்மனைக்குள்ளோ ஊடுருவ முடியாம சுத்தல்ல விடனும்..  சுரங்கத்தின் ரகசியங்கள், சுரங்கம் தோண்டும் தலைமை சிற்பிக்கும், மன்னர் குடும்பத்தார், நம்பிக்கையான  ஒருசில  ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த மாதிரிதான் அமைப்பாங்க. 

எல்லாம் சரி, திடீர்ன்னு எதுக்கு சுரங்கப்பாதை பற்றி யோசிச்சுக்கிட்டிருக்கே!

ராஜியோட மூத்தார் பொண்ணு அமெரிக்காவில் இருக்கா. அவளுக்கு இது 9வது மாசம். கையில் ஒரு குழந்தை 3 வயசில் இருக்கு. கொரோனாவினால் டெலிவரிக்கு அவளும் இங்க வரமுடில, ராஜியின் ஓரகத்தியும் போகமுடில. மகளோட நிலை என்னாகும்ன்னு அவங்க யோசிச்சு உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. அவங்களை பார்க்கப்போகும்போதுதான் டோட்டல் ரீகால்ன்ற படத்து ஹீரோ ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டனுக்கு போறமாதிரி, இந்தியாவிலிருந்து ஒரு துளை போட்டா அமெரிக்காவுக்கு போயிடலாமே. ஏன்னா, நமக்கு நேர் எதிரில்தான் அமெரிக்கா இருக்குன்னு படிச்சிருக்கோமே! அப்படி ஒரு வசதி இருந்தால் அக்கா இப்ப ஊருக்கு போய் இருப்பாங்கன்னு ராஜி சொன்னா. அதான் அவ சொன்னது சரியா இருக்குமோன்னு யோசிச்சேன்...

உன் ஃப்ரெண்டுக்கு மூளை வளர்ச்சி குறைச்சல்ன்னு அடிக்கடி நிரூபிப்பா. அவ சொல்ற மாதிரி பூமியை துளையிட முடியாது. அப்படியே துளையிட்டாலு ம்நேரா அமெரிக்காவுக்கு போகமுடியாது. குவாத்தமாலான்ற நாட்டுக்குதான் போக முடியும்.  ஏன்னா, பூமி லேசா 25.5டிகிரி சாய்ஞ்சு இருக்கு. 

பூமி ஏன் மாமா சாய்ஞ்சிருக்கு?!

பூமியின் வடக்கு பாகம், தென் பாகத்திலிருந்து வித்தியாசப்பட்டிருக்கு. அதனால்தான் பூமி சாய்வா இருக்கு. இதுக்கு Obliquity (சரிவு)ன்னு பேரு. இப்படி இருக்குறதால்தான் நேரம், காலம், பருவக்காலங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடக்கும். இப்படி சரிவா இல்லன்னா ஒரு குளிர் காலத்திற்கும், கோடைக்காலத்திற்கும் இடைப்பட்ட கால அவகாசம் 41,000 ஆண்டுகாலம். 

41 ஆண்டுகாலமும் வெயில் இல்லன்னா மழை இல்லன்னா பனியில்தான் வாழனுமா?! நாடு தாங்குமா மாமா?!

தாங்காது. அதான் இயற்கையின் சிறப்பம்சம். எல்லா பிரச்சனைக்கும் அதனிடமே தீர்வு இருக்கு. அதை அதன்போக்கில் விட்டாலே நாம் நல்லா வாழலாம்... சரி, பூமியை தோண்டும் டாபிக்குக்கு வரலாம்.

12,642 கிமீ விட்டம் கொண்ட பூமியை தோண்ட ஆரம்பிக்கிறோம். பாறை, மண் எல்லாம் வாரி வெளியில் கொட்டியாச்சுது. கடல் நீர் வருமே அப்ப என்ன செய்வாங்க. இதுவரை அதிக ஆழம்ன்னு கண்டுபிடிக்கப்பட்ட 12கிமீ ஆழம்கொண்ட மரியானா கடல்பகுதியே பூமியின் மொத்த விட்டத்தில் 0.01 சதவிகிதமாகும் சரிம்மா, அதையும் மோட்டார் வச்சு உறிஞ்சி வெளியில் ஊத்தி மையப்பகுதிக்கு போயாச்சு. அதுவரை நிலத்தில் நின்னுக்கிட்டு இருந்த நாம தலைக்கீழ் ஆகிடுவோமே அதுக்கு என்ன தீர்வு?!  இவ்வளவு நேரம் உங்க காலடியில் இருந்த மண் இப்ப உங்க தலைக்குமேல் இருக்கும். சரிப்பா, தலைக்குமேல் இருந்தாலும் நாங்க வெட்டுவோம்ன்னு சொல்றீங்க. அப்படி வெட்டும்போதே  மண் சரிஞ்சு உங்க தலையில் விழும்.... இதுலாம்  பூமியை துளையிட ஆரம்பிச்சா நடக்கும் நிகழ்வுகள். ஆனா, அப்படி முயற்சியில் எந்த நாடும் இறங்காது. ஏன்னா,
பூமியை தோண்டிக்கிட்டே போகும்போது வெப்பநிலை உயர்ந்துக்கிட்டே போய் 6000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குமேல் போகும். இதுல மனுசங்க தாக்குபிடிக்க முடியாது. சரி, உலோகத்திலான ரோபோ, கட்டுமான கருவிகள்ன்னு தயாரிச்சாலும், இந்த வெப்பநிலையில் எந்த உலோகம் தாக்குப்பிடிக்கும்?! எல்லாமே உருகிடும், சரிப்பா, மிகுந்த்த்த்த்த பொருட்செலவில் எதாவது கருவிகளை கண்டுபிடிச்சாலும் 12,600கிமீக்குமேல் தோண்ட எத்தனை கருவிகளை செய்யமுடியும்?!  8,000 மைல்களுக்குமேல் பாறையும், எரிமலை குழம்பும் இருக்கும்.  பூமிக்கு கீழ போகப்போக 30கோடி மடங்கு அழுத்தம் அதிகமா இருக்கும். விண்வெளிக்கு போறவங்களுக்கு நாம பயிற்சி கொடுத்து அனுப்புற மாதிரி பயிற்சி கொடுத்து மனிதர்கள் பூமியை தோண்டவிடலாம்ன்னு வச்சுக்கலாம்.  பூமியின் மேற்பரப்பு, மணிநேரத்திற்கு 1000 மைல்களுக்கு குறையாம சுழலுது. பூமிக்குள்ளயும் சேர்த்து பூமி சுழலும். அந்த சுழற்சியில் நம்ம தலைசுத்தி மயக்கம்தான் வரும். இதுக்கு கோரியோலிஸ் விளைவுன்னு பேரு.  இந்த கோரியோலிஸ் விளைவுப்படிதான்  சூறாவளி இடப்பக்கமோ இல்ல வலப்பக்கமோ சுழலுது. ஆனா, இந்த தத்துவம்  பூமியின் துருவங்களுக்கு பொருந்தாது.  அதனால் துருவங்கள் வழியா தோண்டினால் நீ சொல்ற மாதிரி இந்த பக்கம் துளையிட்டு அந்த பக்கம் போகலாம்..
பூமில சுரங்கப்பாதை தோண்டியாச்சுது. இங்கிட்டிருந்து அந்த பக்கம் எப்படி போறது?! கார், பஸ், கப்பல், ப்ளைட் மாதிரி எதாவது ஒரு வண்டி கண்டுப்பிடிக்கனும்?! அந்த வண்டி எப்படி பூமிக்குள் போகும். அப்படி போகும் வாகனம் சாதரணமா போகாது. ரோலர் கோஸ்ட்ல மேலிருந்து கீழ வர்றமாதிரி  தொபுக்கட்டீர்ன்னுதான் விழனும். வினாடிக்கு 6மைல் வேகத்துல, நல்லா கவனி மணிக்கு இல்ல வினாடிக்கு.....  இது ஒலிவேகத்தைவிட 2800 மடங்கு அதிக வேகம். இந்த வேகத்துல விழுந்தால் என்னாகும்?! பூமியின் மையத்தை நெருங்கும்போது எல்லா திசையிலும் புவி ஈர்ப்பு விசையால் இழுக்கப்படுவோம். விண்வெளியில் இருக்குற மாதிரி எடையை உணரமுடியாது. ஈர்ப்பு விசையை உணரமுடியாது. எப்படியோ பூமிக்கு இந்த பக்கமிருந்து அந்த பக்கம்  42 நிமிசம் 12 நொடிகளில் போயிடலாம். மறுமுனையை எட்டும்போதே புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மீண்டும் மீண்டும் அதே துளையில்தான் விழுவோமே தவிர, துளிகூட நகரமாட்டோம். ஆக, பூமியை துளையிட முடியாது. அப்படியே துளையிட்டாலும் இங்கிட்டிருந்து அங்கிட்டு போக இப்போதைக்கு சாத்தியமில்ல. 

இந்த பூமி தோண்டும் சிந்தனை  சோவியத் யூனியன் ஆராய்ச்சியாளர்களுக்கு உருவாகி, 1870ல பள்ளம் தோண்ட ஆரம்பிச்சு, 40,000 அடியிலேயே  நிறுத்திட்டாங்க. காரணம் 356டிகிரி செல்சியஸ் வெப்பநிலை... அந்த வெப்பத்தையே தாங்கமுடில 6000டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எப்படி தாங்குவோம்?! நாம கனவிலும் நினைக்காத பல விசயங்கள் கண்டுபிடிச்சு இருக்காங்க. பூமிக்கு துளையிட்டு இங்கிருந்து அங்க போறதும் நடக்கலாம். ஆனா, அது இப்ப இல்ல. அதுக்கு பல நூறு, ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

ஓ இத்தனை ரிஸ்க் இருக்கா?! சரி மாமா, ரொம்ப சீரியசா பேசிட்டோம். இந்த வீடியோவில் இருக்க மாதிரி பாசக்கார புள்ளைகளை பெத்துக்கனும். எனக்கும் இருக்கே! அப்பன்கிட்ட போட்டு கொடுக்குதுங்க. 

நீ சின்ன வயசில் என்ன செஞ்சியோ அதைத்தான் உன் பசங்களும் செய்யும்.  இப்ப ஊர்ப்பேரையெல்லாம் தமிழ்படுத்தின யாரோதான் இந்த போர்டையும் எழுதி இருக்கனும்..
வெளியில் எங்கயும் போக முடியாத சூழல், பிள்ளைகள் படிப்பு, மாதத்தவணை, தொழில் பாதிப்புன்னு பல கவலைகள் இருக்கு நமக்கு. ஆனா, இது எதுவுமே இல்லாத இந்த குழந்தையின் சிரிப்பை பார்த்துதான் நம்ம கவலைகளை மறக்கனும்...

இந்த வீடியோவை பார்த்து சிரிச்சுக்கிட்டே இரு. நான் கொஞ்சம் வெளியில் போய் வரேன்...

நன்றியுடன்,
ராஜி

9 comments:

  1. இயற்கையின் சிறப்பம்சம் ஆகா...

    இன்றைய மதவாத அரசு உட்பட பலரும் உணர வேண்டிய பல தகவல்களை வியப்பூட்டும் அளவிற்கு சொல்லி விட்டீர்கள் சகோதரி...

    தெய்வத்தின் சிரிப்பை ரசித்தேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என் பையனை செல்லமா அப்புன்னு சொல்வோம். பேரன் பிறந்தால் பப்புன்னு கூப்பிடனும்ன்னு இந்த வீடியோவை பார்த்துட்டு முடிவு செஞ்சிருக்கோம்.

      Delete
  2. தகவல்கள் நன்று.

    குழந்தையின் சிரிப்பு - ஆஹா...

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்தோடு பார்த்து பார்த்து ரசிச்சிக்கிட்டிருக்கோம்.

      Delete
  3. பூமியைத் துளை போடும் தகவல் எப்பவுமே தலை சுத்தற வைக்கற சப்ஜெக்ட்!  இப்பவும் அப்படியே!

    ReplyDelete
    Replies
    1. இம்புட்டு நீளமா சொல்லவே தேவையில்லை. பூமிக்கு கீழ இருக்கும் வெப்பநிலை, அழுத்தம் இவை இரண்டும் பூமியை துளை போடும் எண்ணத்தில் மண்ணைப்போடும்ன்னு சுருக்கமா சொல்லலாம்

      Delete
  4. தகவல்கள் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். வீடியோவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    ராஜி, நல்ல ஆழமான! தகவல்கள்.

    பாப்பா க்யூட்! அதன் சிரிப்பும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைப்புரிந்த இருவருக்கும் நன்றிகள்

      Delete
  5. தகவல்கள் சிறப்பு. வீடியோ கியூட்

    ReplyDelete