Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Sunday, April 28, 2019

வா! வா! என் வீணையே! - பாட்டு புத்தகம்

ஆர்பரித்து கொட்டும் அருவியை ரசித்து பார்க்கிறோம். ஆனால் சலனமின்றி  நகரும்  ஓடையையும்  நின்று ரசிப்போம். பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ரான்னு எத்தனையோ பாடகிகளின் குரலை கேட்டு ரசித்திருப்போம். இவங்க பாடிய மெல்லிசைப்பாடல்களை ரசித்தாலும் அவங்க குரலில் கொஞ்சம் கடினத்தன்மை இருக்கும். ஆனா,  குயில் மாதிரியான மெல்லிய குரல் இருக்கும் பாடகி யார்ன்னு பார்த்தா வாணி ஜெயராமினை சொல்லலாம். அவங்க பேட்டிகளை கேட்கும்போது இதை உணரலாம்.

தன்னோட  முதல் பாடலான குட்டி படத்துல வரும் போலேரே பப்பீ ஹரா என்ற பாட்டுக்காக தான்சேன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட குரல் இவருடையது.  நித்தம் நித்தம் நெல்லுச்சோறு,  மல்லிகை என் மன்னன் மயங்கும், நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன், என்னுள் ஏதோ ஏங்கும் ஏக்கம்.. ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்", "பாரதி கண்ணம்மா... இப்படி அவரோட ஹிட் பாடல்களை சொல்லிக்கிட்டே போகலாம்... இவரோட குரலில் வந்த பாடலை கேட்கவே நல்லா இருக்கும்.  எஸ்.பி.பியோடு இணைஞ்சு பாடிய பாடல்கள் அத்தனையும் முத்தானது. இந்த ஜோடிக்குரலுக்கு இளையராஜா, கங்கை அமரன் மாதிரியான ஆட்கள் இசையமைத்திருந்தால் இன்னும் சூப்பர்.
இன்னிக்கு நாம பார்க்கப்போறது ஒரு டூயட் பாட்டு. எஸ்.பி.பியுடன் இணைந்து, கங்கை அமரன் இசையில் வந்த வா.. வா.. என் வீணையே! விரலோடு கோபமா?!.... குரலிலே நவரசம் காட்டும் இவர்களின் குரலுக்கு கமலும், அழகான மாதவியும் நடிச்சிருப்பாங்க. மாதவியை பார்க்கும்போதெல்லாம் பதிவர்  ரூபக் ராமின் நினைவு வரும். அவனுக்கு மாதவின்னா ரொம்ப பிடிக்கும். இன்னமும் அந்த கண்களை காதலிக்கிறேன்னு சொல்வாப்ல. 

பயணங்களில் கேட்க பிடிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாட்டை கேட்கும்போதே ஒரு உற்சாகம் மனசுக்குள் வருவதை மறுக்கமுடியாது...

வா வா என் வீணையே!
லலா
விரலோடு கோபமா?!
லலா

மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா ஆஆஆஆ
கிள்ளாத முல்லையே!
காற்றோடு கோபமா?!
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா ஆஆஆஆ?!

தண்டோடு தாமரையாட..
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்த்ததும் நெஞ்சிலே
உன் ஞாபகம் கூட..

தண்டோடு தாமரையாட..
வண்டோடு மோகனம் பாட...
நான் பார்த்ததும் நெஞ்சிலே..
உன் ஞாபகம் கூ..ட

துணை தேடுதோ தனிமை..
 துயர் கூடுதோ?!
தடை மீறுதோ 
உணர்ச்சி அலை பாயுதோ
நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தாஆஆஆஆனோ

வா வா உன் வீனை நான்
தனனா
விரல் மீட்டும் வேளைதான்
தனனா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமோ ஓஓஓஒ
கிள்ளாத முல்லையே
வந்தாடும் பிள்ளையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமோ ஓஓஓஓ


சந்தோசம் மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகமாக...
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட...

சந்தோசம் மந்திரம் ஓத...
சந்தர்ப்பம் சாதகமாக...
நாள் பார்த்ததோ இன்னமும்
இந்த நாடகம் போட..

இரவாகலாம் இளமை அரங்கேறலாம்!!
உறவாடலாம் இனிய ஸ்வரம் பாடலாம்!!
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்க்கையில் ஆசைகள் தீ..ரு..ம்

வா வா வீணையே
லலா
விரலோடு கோபமா
லலா
படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: வாலி
நடிகர்கள்: கமல், மாதவி

நன்றியுடன்,
ராஜி

Sunday, July 22, 2018

நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.

படம் வெளிவர்றதுக்குள் பாட்டு வெளிவந்துடும். சில படப்பாட்டுங்க கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இருக்கும்.  சில படத்துல, குறிப்பிட்ட வார்த்தை மட்டும் கட்டாகிடும் இல்லன்னா பீப் சவுண்ட் ஒலிக்க விடுவாங்க. ஒருமுறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால...  ன்னு ஆரம்பிக்கும் பாடலில் ஒரு வார்த்தை தப்பான அர்த்தம் வருவதா சொல்லி சென்சாரில் ஏத்துக்கலைன்னு சொல்லி கஷ்டப்பட்டார். சாதாரணமாக எழுதிய பாடலைக்கூட  பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது?! என்று கேள்வி கேட்டார். 

நம்மவர் படத்துல சொர்க்கம் என்பது நமக்கு பாடலில் ஒரு வரி வரும்... நல்ல வார்த்தைக்கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனதே...ன்னு.... ஆத்தான்னா அத்தனை மரியாதை தென் மாவட்டங்களில்.. எங்க ஊரில் ஆத்தான்னு சொன்னா மேலும் கீழுமா பார்ப்பாங்க.  சித்தி, அத்தை, மாமிகளை கூப்பிடும் புனிதமான ஆங்கில வார்த்தையான ஆன்டி, இப்ப கிண்டலா, நக்கலா கூப்பிடப்படுது. நல்ல வார்த்தைகள் கெட்ட வார்த்தை ஆனதுக்கு காரணம் சமூகமா இல்ல சினிமாவான்னு தெரில.

படம் பார்த்ததே கனவு கண்ட மாதிரி மங்கலா நினைவில்  இருக்கு.  அதுல பாடல் வரிகளை எப்படி நினைவு வச்சிக்குறது.  சரியோ தப்போ சில பாட்டுகள் கேக்கும்போது மனசு உற்சாகமாகும். அதில் இந்த பாட்டும் ஒண்ணு... பயணங்களில் இந்த பாட்டு அவசியம் இடம்பெறும். அதுலயும் வண்டில போகும்போது... கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவதில் அலாதி பிரியம் எனக்கு... 


நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
என் மச்சான் மச்சான்... மல்லிய வைச்சான்
என் மச்சான் மச்சான்... தேன் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு?!

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே..


அத்தமவன் சொன்னத ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்..
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்......அத்தமவன் சொன்னத ஒத்துகனும்
சரிதான் சரிதான்அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்தென்பழநி சந்தனம்தான் இங்கு ஒரு பெண்ணாச்சோ?!
என்னென்னவோ எண்ணம்தான் என்னக் கண்டு உண்டாச்சா?!உன் முந்தானைய இழுக்கட்டுமா?!
 சும்மா இருஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா?!
 கொஞ்சம் பொறுஅடி பூவே! பொன்னே! கண்ணே இங்கே வா ஹோய்..

நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே ஓ...ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே ஹா......
ஆ.....ஆஹாஹா...ஆ.........ஆஹாஹா......
லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...
ஆ.....ஆ....ஆ..
.......
பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்சுடுதா சுடுதா?!
ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்வருதா வருதா?!
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்வருதா வருதா வருதா?!
தென்னங்கிளை தென்றலைத் தான்பின்னுவது அங்கேதான்
செவ்விளநி சேலக்கட்டிமின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறதுஉன் மேனிதான்
என்ன கண்டையில நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்


படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி
நடிகர்கள்: கமல், அம்பிகா

நன்றியுடன்,
ராஜி.

Thursday, October 05, 2017

பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொரு கற்பனை


எல்லா வசதியும் இருக்குற வீட்டுக்குள்   காலண்டர், கடிகாரம், தொலைத்தொடர்பு வசதியான டிவி, மொபைல், ரேடியோன்னு எதும் இல்லாம  ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமில்லாதவங்க 15 பேரை 100 நாள் தங்க வைக்குறதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட்.

ஸ்டாலின், தமிழிசை,அன்புமணி, சீமான், டி.ஆர், வைகோ, , மோடி, தினகரன், எடபாடியார், பன்னீர் செல்வம், கேப்டன், ரஜினி, கமல், தர்மாக்கோல் ராஜு, இவங்களை மேய்க்குறது பிக்பாஸ் நானாக்கும்.... இவங்களை எல்லாம் ஒன்னா தங்க வச்சா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை.. இது சும்மா ரசிக்க மட்டுமே! அரசியல் பதிவில்லை..

வெல்கம் ஹவுஸ் மேட்ஸ்....

தமிழிசை நமஸ்தே சொல்ல.. மற்றவர்கள் பதிலுக்கு வணக்கம் சொல்ல சீமான் மட்டும் வணக்கம் சொல்லாம இருக்கார்.

சீமான்! வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லனும்...

ஆங்க்.. என்ன கேட்டீங்க பிக்பாஸ்..

வணக்கம் சொன்னேன். நீங்க பதிலுக்கு வணக்கம் சொல்லலியே! இது மேனர்ஸ் இல்லன்னு சொன்னேன்.

  சீமான்: மேனர்சை பத்தி தமிழனுக்கு வகுப்பெடுக்க நீ யார்?! பிக் பாஸ்ன்ற உன்னோட பேரை வச்சு உன் பூர்வீகம் என்ன, உன் மூத்தோர்கள் யார்ன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பமே அக்கப்போரா?!...  சரி இந்த வாரம் நம்ப பிக்பாஸ் வீட்டுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கனும்... தலைவர் பதவிக்கு தகுந்த காரணத்தோடு நாமினேட் பண்ணுங்க.

ஸ்டாலின்: இந்தி போராட்டத்துல கலந்துக்கிட்டார்,  ஐந்து முறை முதல்வரா இருந்த என் தந்தையை தவிர யார் இதுக்கு தகுதியானவர்.

தம்பி! நீங்க கடைசி வரை செயல்தலைவராதான் இருக்கபோறீக பாருங்க. இங்க இருக்குற 15 பேர்ல ஒருத்தரைதான் சொல்லனும்.. அதைவிட்டு அப்பா, குப்பான்னுலாம் சொல்லக்கூடாது.

தமிழிசை: அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது.  ஏன்னா,  அவர் படிச்சது ஸ்டேட்போர்ட்ல படிச்சவரு. சிபிஎஸ்சி பாடத்திட்டத்துல படிச்சிருந்தா அவருக்கு சொந்தமா யோசிக்க வரும். சொந்தமா யோசிக்க வைக்கும் பாடத்திட்டம்தான் சிபிஎஸ்சி பாடத்திட்டம். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க உள்ளது. அதில் சேர்ந்து அண்ணன் அவர்கள் சொந்தமா யோசிக்கும் திறனை வளர்த்துக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்தாம்மா! நீ பாட்டுக்கு பொசுக்குன்னு சொல்லிட்டே. அவர் ஸ்கூல்ல சேர்ந்தா பசங்கலாம் மிரளாது...

அன்புமணி: நானும், மருத்துவர் ஐயாவும் எந்த நவோதயா பள்ளியில் படிச்சு டாக்டர் ஆனோம். எங்களுக்கு சொந்தமாய் சிந்திக்கும் திறனில்லையா?! புகைப்பிடித்தலுக்கு தமிழகத்துல தடையை கொண்டு வந்தது நாந்தான் தெரியுமா?!.  ஓவியாவுக்கும், பிந்து மாதவிக்கும் ஓட்டுப்போட நினைப்பிருக்கும் உங்களுக்கு இதுலாம் நினைவிலிருக்காது.

டி.ஆர். கரெக்டா சொன்னீங்க அன்புமணி. தமிழனுக்கு மறந்தது பழைய நினைவு. அவன் நம்புவது புனைவு...

ஐயா! ஐயா! நிகழ்ச்சி மொத்தமே ஒன்றரை மணிநேரம்தான்...

 டி.ஆர்: என் வாய்க்கு நீ போடலாம் பூட்டு, கட்டலாம் கைகளுக்கு கட்டு,

ஐயா! ஐயா! கோவப்படாதீங்க...

 டி.ஆர்: கோவந்தான்.... சிம்பு முகத்தில் காட்டுவது பலவித பாவந்தான்,    நீங்கலாம்...

பாவம்தான்... இல்லன்னா உங்கக்கிட்ட சிக்கி இருப்போமா?!

வை.கோ: தம்பி டி.ஆர் கோவப்படாதீக. சினம் சேர்ந்தாரை கொல்லும்ன்னு கலிங்கத்து பரணில படிச்சதில்லையா?! கிரேக்க வரலாற்றில்கூட சினத்தை பத்தி சொல்லி இருக்கு. கிரேக்க நாட்டின் தலைவன்...

ஐயா! முதல்ல பிக்பாஸ் வீட்டோட தலைவனை தேர்ந்தெடுங்க. அப்புறம் கிரேக்கத்துக்கு தலைவனை தேர்ந்தெடுக்கலாம்.

மோடி:  அமாரா பாரத்.

ஐயா! இது தமிழ் நிகழ்ச்சி. அதனால நீங்க தமிழ்லதான் பேசனும்.

மோடி: ம்ம்ம்ம் எனக்கு பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போக வேண்டி இருக்குறதால என்னால இந்த வீட்டுல தலைமை ஏத்துக்க முடியாது. ஆனா, என் யோசனையை சொல்லமுடியும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஸ்வச் பாரத், கேஸ்லெஸ்ன்ற திட்டங்கள் மூலம் டிஜிட்டல்  இந்தியாவை உருவாக்கிய மாதிரி இந்த வீட்டையும் டிஜிட்டல் இந்தியாவாக்கலாம்ன்னு இருக்கேன். இனி சமையல் கட்டுக்கு போகனும்ன்னா ஆதார் கார்டு காட்டனும். படுக்க போகும் முன் ஒருமணி நேரம் யோகா செய்யனும்....   என்னை ட்விட்டர்ல ஃபாலோ பண்ணுறவங்களுக்கு எக்ஸ்ட்ரா மீல்ஸ்.

ஒருபய இங்க தங்க முடியாது போலயே!

தினகரன்: முப்பது வருடங்களுக்கு மேலா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சாங்க.   . ஒரு வீட்டு விசயம் வெளில போகக்கூடாது, அப்படி போனா, அந்த வீட்டு கௌரவம் போய்டும், அதனால, 75 நாட்கள்  அம்மாக்கு என்ன ஏதுன்னு வெளில கசியாம அப்போல்லோவுல வச்சு பார்த்துக்கிட்ட செஞ்ச சின்னம்மாவை தவிர இந்த வீட்டை நிர்வகிக்க யாருக்கு தகுதி இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.

அவங்கதான் இப்ப ஜெயில்ல இருக்காங்களே!

 தினகரன்: என்னங்க இதுலாம்?! சின்னம்மாக்கு இதுலாம் தூசு. அதுலாம் நாங்க பார்த்துப்போம். அஷ்டாவதானி எங்க சின்னம்மா. அவங்க ஜெயில்ல இருந்துக்கிட்டே இந்த வீட்டையும் பார்த்துப்பாங்க.

எடப்பாடியார்: உங்க குடும்பத்தைதான் அம்மா ஒருமுறை தள்ளி வச்சாங்களே! அதை மறந்துட்டு பேசாதீக தினகரன்.

தினகரன்; அதான், மறுபடியும் சேர்த்துக்கிட்டாங்களே! அதுக்கு ஆதாரம் இருக்கு.

பன்னீர்செல்வம்; நான் தர்ம யுத்தம் செய்யப்போறேன்.  அம்மா சமாதிக்கு போய் அம்மாவோட ஆன்மாக்கிட்ட யார் இந்த வீட்டுக்கு தலைவராகலாம்ன்னு யோசனை கேட்டு வரேன்.

எடப்பாடியார்: இருங்க பன்னீர். இந்த வீட்டுக்கு தலைவர் போஸ்டே தேவையில்ல. நம்ம கட்சிக்கே பொதுச்செயலாளர் அம்மாவை தவிர வேற யாரும் பொதுச்செயலாளர் பதவில இருக்கப்படாதுன்னு சொல்லி முடிவெடுத்தபின் இந்த வீட்டுக்கு மட்டும் தலைவர் ஏன்?! தலைவர் இல்லாமலேயே அம்மா வழியில் நாம் இந்த குடும்பத்தை நடத்துவோம்.

கேப்டன்: இதுலாம் நல்லாவா இருக்கு மக்கழே! பிக்பாஸ் கிட்ட வாங்களேன்.

ம்ஹூம். நான் வரமாட்டேன்.

 கேப்டன்: அட அடிக்க மாட்டேன் கிட்டக்க வாங்க..

ம்ஹூம்.

கேப்டன்: த்தூ நீயெல்லாம் ஒரு பிக் பாஸ்...

ரஜினி சார் நீங்க தலைவரா இருங்களேன்.

ரஜினி: கண்ணா! அந்த ஆண்டவன் கட்டளையிடட்டும்...

 கடவுளுக்கு இதான் வேலை பாருங்க. இங்க நாந்தான் கடவுள். ஏன்னா நாந்தானே பிக்பாஸ்.

ரஜினி : போர் வரட்டும்...

யோவ் போர் வந்தா வீடு இருக்குமா இருக்காதான்னு தெரியாது.அதுமில்லாம போர் வந்தா வீட்டுக்குள் உக்காந்து என்ன பண்ண போறே?! அப்புறம் நீ எப்படி தலைவன் ஆவே?!

அதுவந்து....

 கமல்: என் நண்பர் சொல்ல வர்றது என்னன்னா போர் வரும்போது வரும். போர்ன்னா   போரில் துப்பாக்கி, குண்டு, பீரங்கி, துரோகம்லாம் இருக்கும். ஆனா சில போர் இருக்கு அதுல துரோகம் மட்டுமே இருக்கும். அதுக்கு பேர் வைக்கோப்போர்ன்னு நீங்க நினைச்சா அது அதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்...

போதும் ஆண்டவரே!  என்னால முடியல. உங்க இம்சை பத்தாதுன்னு இந்த கொசுத்தொல்லை வேற! இது கடிச்சு டெங்கு வந்தா நான் போய் சேர வேண்டியதுதான்.

தெர்மாக்கோல் ராஜூ:  இந்த கொசுத்தொல்லை ஒழிக்க எனக்கு ஒரு யோசனை இருக்கு. அதாவது. எல்லா பயலும் வாரம்  முழுக்க எப்படியாவது  கொசுவை அடிச்சு அதுக்குன்னு வேலைக்கு அமர்த்தப்படும் ஆட்கள்கிட்ட அடிச்ச சாவடிச்ச கொசுவை கொண்டு வந்து கொடுக்கனும். இப்படி வாரத்துக்கு அம்பது, நூறு கொசுன்னு எல்லாரும் அடிச்சா ஒரே நாளில் கொசு ஒழிஞ்சிடும். அப்படியும் கொசு ஒழியலைன்னா பெரிய கொசுவலையா வாங்கி ஒவ்வொரு ஊருக்கும் போர்த்தி விட்டுடலாம்...


ஐய்ய்ய்ய்ய்யா சாமிகளா! என்னை ஆளை விடுங்க... நான் சரவணன் மீனாட்சி, கலக்க போவது யாரு, அது இது எது.. சூப்பர் சிங்கர் நடத்தியே என் சேனலை ஒப்பேத்திக்குறேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473741
நன்றியுடன்,
ராஜி.