ஸ்டாலின், தமிழிசை,அன்புமணி, சீமான், டி.ஆர், வைகோ, , மோடி, தினகரன், எடபாடியார், பன்னீர் செல்வம், கேப்டன், ரஜினி, கமல், தர்மாக்கோல் ராஜு, இவங்களை மேய்க்குறது பிக்பாஸ் நானாக்கும்.... இவங்களை எல்லாம் ஒன்னா தங்க வச்சா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை.. இது சும்மா ரசிக்க மட்டுமே! அரசியல் பதிவில்லை..
வெல்கம் ஹவுஸ் மேட்ஸ்....
தமிழிசை நமஸ்தே சொல்ல.. மற்றவர்கள் பதிலுக்கு வணக்கம் சொல்ல சீமான் மட்டும் வணக்கம் சொல்லாம இருக்கார்.
சீமான்! வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லனும்...
ஆங்க்.. என்ன கேட்டீங்க பிக்பாஸ்..
வணக்கம் சொன்னேன். நீங்க பதிலுக்கு வணக்கம் சொல்லலியே! இது மேனர்ஸ் இல்லன்னு சொன்னேன்.
சீமான்: மேனர்சை பத்தி தமிழனுக்கு வகுப்பெடுக்க நீ யார்?! பிக் பாஸ்ன்ற உன்னோட பேரை வச்சு உன் பூர்வீகம் என்ன, உன் மூத்தோர்கள் யார்ன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பமே அக்கப்போரா?!... சரி இந்த வாரம் நம்ப பிக்பாஸ் வீட்டுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கனும்... தலைவர் பதவிக்கு தகுந்த காரணத்தோடு நாமினேட் பண்ணுங்க.
ஸ்டாலின்: இந்தி போராட்டத்துல கலந்துக்கிட்டார், ஐந்து முறை முதல்வரா இருந்த என் தந்தையை தவிர யார் இதுக்கு தகுதியானவர்.
தம்பி! நீங்க கடைசி வரை செயல்தலைவராதான் இருக்கபோறீக பாருங்க. இங்க இருக்குற 15 பேர்ல ஒருத்தரைதான் சொல்லனும்.. அதைவிட்டு அப்பா, குப்பான்னுலாம் சொல்லக்கூடாது.
தமிழிசை: அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது. ஏன்னா, அவர் படிச்சது ஸ்டேட்போர்ட்ல படிச்சவரு. சிபிஎஸ்சி பாடத்திட்டத்துல படிச்சிருந்தா அவருக்கு சொந்தமா யோசிக்க வரும். சொந்தமா யோசிக்க வைக்கும் பாடத்திட்டம்தான் சிபிஎஸ்சி பாடத்திட்டம். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க உள்ளது. அதில் சேர்ந்து அண்ணன் அவர்கள் சொந்தமா யோசிக்கும் திறனை வளர்த்துக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
இந்தாம்மா! நீ பாட்டுக்கு பொசுக்குன்னு சொல்லிட்டே. அவர் ஸ்கூல்ல சேர்ந்தா பசங்கலாம் மிரளாது...
அன்புமணி: நானும், மருத்துவர் ஐயாவும் எந்த நவோதயா பள்ளியில் படிச்சு டாக்டர் ஆனோம். எங்களுக்கு சொந்தமாய் சிந்திக்கும் திறனில்லையா?! புகைப்பிடித்தலுக்கு தமிழகத்துல தடையை கொண்டு வந்தது நாந்தான் தெரியுமா?!. ஓவியாவுக்கும், பிந்து மாதவிக்கும் ஓட்டுப்போட நினைப்பிருக்கும் உங்களுக்கு இதுலாம் நினைவிலிருக்காது.
டி.ஆர். கரெக்டா சொன்னீங்க அன்புமணி. தமிழனுக்கு மறந்தது பழைய நினைவு. அவன் நம்புவது புனைவு...
ஐயா! ஐயா! நிகழ்ச்சி மொத்தமே ஒன்றரை மணிநேரம்தான்...
டி.ஆர்: என் வாய்க்கு நீ போடலாம் பூட்டு, கட்டலாம் கைகளுக்கு கட்டு,
ஐயா! ஐயா! கோவப்படாதீங்க...
டி.ஆர்: கோவந்தான்.... சிம்பு முகத்தில் காட்டுவது பலவித பாவந்தான், நீங்கலாம்...
பாவம்தான்... இல்லன்னா உங்கக்கிட்ட சிக்கி இருப்போமா?!
வை.கோ: தம்பி டி.ஆர் கோவப்படாதீக. சினம் சேர்ந்தாரை கொல்லும்ன்னு கலிங்கத்து பரணில படிச்சதில்லையா?! கிரேக்க வரலாற்றில்கூட சினத்தை பத்தி சொல்லி இருக்கு. கிரேக்க நாட்டின் தலைவன்...
ஐயா! முதல்ல பிக்பாஸ் வீட்டோட தலைவனை தேர்ந்தெடுங்க. அப்புறம் கிரேக்கத்துக்கு தலைவனை தேர்ந்தெடுக்கலாம்.
மோடி: அமாரா பாரத்.
ஐயா! இது தமிழ் நிகழ்ச்சி. அதனால நீங்க தமிழ்லதான் பேசனும்.
மோடி: ம்ம்ம்ம் எனக்கு பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போக வேண்டி இருக்குறதால என்னால இந்த வீட்டுல தலைமை ஏத்துக்க முடியாது. ஆனா, என் யோசனையை சொல்லமுடியும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஸ்வச் பாரத், கேஸ்லெஸ்ன்ற திட்டங்கள் மூலம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிய மாதிரி இந்த வீட்டையும் டிஜிட்டல் இந்தியாவாக்கலாம்ன்னு இருக்கேன். இனி சமையல் கட்டுக்கு போகனும்ன்னா ஆதார் கார்டு காட்டனும். படுக்க போகும் முன் ஒருமணி நேரம் யோகா செய்யனும்.... என்னை ட்விட்டர்ல ஃபாலோ பண்ணுறவங்களுக்கு எக்ஸ்ட்ரா மீல்ஸ்.
ஒருபய இங்க தங்க முடியாது போலயே!
தினகரன்: முப்பது வருடங்களுக்கு மேலா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சாங்க. . ஒரு வீட்டு விசயம் வெளில போகக்கூடாது, அப்படி போனா, அந்த வீட்டு கௌரவம் போய்டும், அதனால, 75 நாட்கள் அம்மாக்கு என்ன ஏதுன்னு வெளில கசியாம அப்போல்லோவுல வச்சு பார்த்துக்கிட்ட செஞ்ச சின்னம்மாவை தவிர இந்த வீட்டை நிர்வகிக்க யாருக்கு தகுதி இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.
அவங்கதான் இப்ப ஜெயில்ல இருக்காங்களே!
தினகரன்: என்னங்க இதுலாம்?! சின்னம்மாக்கு இதுலாம் தூசு. அதுலாம் நாங்க பார்த்துப்போம். அஷ்டாவதானி எங்க சின்னம்மா. அவங்க ஜெயில்ல இருந்துக்கிட்டே இந்த வீட்டையும் பார்த்துப்பாங்க.
எடப்பாடியார்: உங்க குடும்பத்தைதான் அம்மா ஒருமுறை தள்ளி வச்சாங்களே! அதை மறந்துட்டு பேசாதீக தினகரன்.
தினகரன்; அதான், மறுபடியும் சேர்த்துக்கிட்டாங்களே! அதுக்கு ஆதாரம் இருக்கு.
பன்னீர்செல்வம்; நான் தர்ம யுத்தம் செய்யப்போறேன். அம்மா சமாதிக்கு போய் அம்மாவோட ஆன்மாக்கிட்ட யார் இந்த வீட்டுக்கு தலைவராகலாம்ன்னு யோசனை கேட்டு வரேன்.
எடப்பாடியார்: இருங்க பன்னீர். இந்த வீட்டுக்கு தலைவர் போஸ்டே தேவையில்ல. நம்ம கட்சிக்கே பொதுச்செயலாளர் அம்மாவை தவிர வேற யாரும் பொதுச்செயலாளர் பதவில இருக்கப்படாதுன்னு சொல்லி முடிவெடுத்தபின் இந்த வீட்டுக்கு மட்டும் தலைவர் ஏன்?! தலைவர் இல்லாமலேயே அம்மா வழியில் நாம் இந்த குடும்பத்தை நடத்துவோம்.
கேப்டன்: இதுலாம் நல்லாவா இருக்கு மக்கழே! பிக்பாஸ் கிட்ட வாங்களேன்.
ம்ஹூம். நான் வரமாட்டேன்.
கேப்டன்: அட அடிக்க மாட்டேன் கிட்டக்க வாங்க..
ம்ஹூம்.
கேப்டன்: த்தூ நீயெல்லாம் ஒரு பிக் பாஸ்...
ரஜினி சார் நீங்க தலைவரா இருங்களேன்.
ரஜினி: கண்ணா! அந்த ஆண்டவன் கட்டளையிடட்டும்...
கடவுளுக்கு இதான் வேலை பாருங்க. இங்க நாந்தான் கடவுள். ஏன்னா நாந்தானே பிக்பாஸ்.
ரஜினி : போர் வரட்டும்...
யோவ் போர் வந்தா வீடு இருக்குமா இருக்காதான்னு தெரியாது.அதுமில்லாம போர் வந்தா வீட்டுக்குள் உக்காந்து என்ன பண்ண போறே?! அப்புறம் நீ எப்படி தலைவன் ஆவே?!
அதுவந்து....
கமல்: என் நண்பர் சொல்ல வர்றது என்னன்னா போர் வரும்போது வரும். போர்ன்னா போரில் துப்பாக்கி, குண்டு, பீரங்கி, துரோகம்லாம் இருக்கும். ஆனா சில போர் இருக்கு அதுல துரோகம் மட்டுமே இருக்கும். அதுக்கு பேர் வைக்கோப்போர்ன்னு நீங்க நினைச்சா அது அதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்...
போதும் ஆண்டவரே! என்னால முடியல. உங்க இம்சை பத்தாதுன்னு இந்த கொசுத்தொல்லை வேற! இது கடிச்சு டெங்கு வந்தா நான் போய் சேர வேண்டியதுதான்.
தெர்மாக்கோல் ராஜூ: இந்த கொசுத்தொல்லை ஒழிக்க எனக்கு ஒரு யோசனை இருக்கு. அதாவது. எல்லா பயலும் வாரம் முழுக்க எப்படியாவது கொசுவை அடிச்சு அதுக்குன்னு வேலைக்கு அமர்த்தப்படும் ஆட்கள்கிட்ட அடிச்ச சாவடிச்ச கொசுவை கொண்டு வந்து கொடுக்கனும். இப்படி வாரத்துக்கு அம்பது, நூறு கொசுன்னு எல்லாரும் அடிச்சா ஒரே நாளில் கொசு ஒழிஞ்சிடும். அப்படியும் கொசு ஒழியலைன்னா பெரிய கொசுவலையா வாங்கி ஒவ்வொரு ஊருக்கும் போர்த்தி விட்டுடலாம்...
ஐய்ய்ய்ய்ய்யா சாமிகளா! என்னை ஆளை விடுங்க... நான் சரவணன் மீனாட்சி, கலக்க போவது யாரு, அது இது எது.. சூப்பர் சிங்கர் நடத்தியே என் சேனலை ஒப்பேத்திக்குறேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473741
நன்றியுடன்,
ராஜி.

அருமை சகோ மிகவும் இரசித்தேன்.
ReplyDeleteஉண்மையில் யார் எப்படி பேசணுமோ சரியான வசனம். ஸூப்பர்.
இதேப்போல நம்மாளுங்களை வச்சும் பதிவா போடலாம்ன்னு இருக்கேன்
Deleteஇந்த நிகழ்ச்சியை அறவே தொடராதவன்.. இருந்தாலும் தங்களின் நடையை ரசித்தேன்.
ReplyDeleteநன்றிண்ணே
Deleteநல்ல கற்பனை ராஜி. :-)
ReplyDeleteநன்றி சகோ
Deleteசிம்பிளி சூப்பர் நல்ல கற்பனை ராஜீ
ReplyDeleteமுன்ன இருந்த எங்க க்ரூப் இருந்தா அவங்களைலாம் வச்சும் பதிவு போட்டிருப்பேன்
Deleteசெம கலாய்..ரசித்தேன் :)
ReplyDeleteமைனஸ் ஓட்டு போட்டு?!
DeleteSuper ka
ReplyDeleteமகாபிரபு! நீங்க இங்கயும் வந்திட்டீங்களா?!
Deleteபிக் பாஸ் பார்ப்பதில்லை. ஆனால் இப்பதிவை ரசித்தேன்.
ReplyDeleteபிக்பாஸ் பாக்கலியா?! ஐயோ ஓவியா ஆர்மி ஆரம்பிச்சதென்ன?! ஓட்டு போட்டதென்ன?! இப்ப குடிகாரன் மாதிரி பிக்பாஸ் இல்லாம புலம்பறதென்ன??! இணையமே பிக்பாஸ் பைத்தியமாகிட்டுதே!
Deleteஅருமையான பதிவு. மோடி சொல்வது போல் சித்தரித்து மிகவும் ரசித்தேன். நல்ல பதிவு நன்றி
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteநீங்க அரசியல் ஆக்களை வச்சு எழுதியிருக்கிறீங்க... நான் நம் புளொக் ஆட்களை ஐ வச்சு யோசிச்சேன்:)
ReplyDeleteஅதிரா... நல்ல யோசனை. எழுதுங்களேன்.
Deleteஇந்த ஆதிரா என் மைண்ட்ல இருக்கும் பதிவை காப்பி பண்ணிட்டாங்க
Deleteஆஹா... ரசித்துச் சிரித்தேன். மோடியும், கேப்டனும் சொல்வது போல எழுதி இருப்பது மிக அருமை.
ReplyDeleteநன்றி சகோ
Deleteசிரித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றிப்பா
Deleteபிக் பாஸ்..............அந்தக் கருமாந்திரமெல்லாம் பாக்கலை.ஆனா அங்க என்ன நடந்திருக்கும்கிறத எழுத்து மூலமா டைப்பியதுக்கு நன்றி......ரசிக்கக் கூடியதா இருந்திச்சு.....
ReplyDeleteஎன்னாது பிக்பாசை பார்க்கலியா?! எங்க வீட்டு குட்டி சாத்தான்லாம் கிட்டத்தட்ட ஒன்னரை மணிநேரம் டிவிய விட்டு நகரவே இல்ல
Deleteஆருமை
ReplyDeleteநன்றி சகோ
ReplyDelete