42 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம், எங்க பூர்வீக கிராமத்து தெருவுல, சொந்தங்களின் பூரிப்பில், உறவினர்கள் புடைச்சூழ. ஒரு மணப்பெண் ஊர்வலம் நடந்துக்கிட்டு இருக்கு. சரியாய் அதேநேரம் மணப்பெண் வீட்டில் மணமகனுக்கும், மணமனோட அப்பாக்கும் பெரிய வாக்குவாதம்.
அப்பா, நான் இந்த பொண்ணை கட்டிக்க மாட்டேன்.
ஏண்டா?
அந்த பொண்ணு நல்ல சிவப்பா கொழுக், மொழுக்குன்னு அழகா இருக்கு. என்னை பாருப்பா. ஒல்லியா, கருப்பா இருக்கேன். அதுமில்லாம பியூசி படிச்சுட்டு வேலைவெட்டிக்கு போகாம, நானே தண்டச்சோறு சாப்பிடும்போது கூட இன்னோரு பொண்ணை ஏன்ப்பா கஷ்டப்படுத்தனும்?
டேய்! அது என் மச்சான் பொண்ணு, அதை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு போறேன்னு வாக்கு குடுத்துட்டேன்.
அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாத்தானே வருனும்??!!அப்படின்னா, நீயே கட்டிக்கோயேன்.
அப்புறம் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சி அந்த கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சுது. இப்படி கலாட்டாவா நடந்த கல்யாணம் வேற யாருடையதுமில்லை. என் அப்பா, அம்மாவோட கல்யாணம்தான்.
தாத்தா அப்பாவை வற்புறுத்தி கட்டி வெச்சுட்டு, மனசுக்குள் வருத்தப்படுவாராம். கட்டாய கல்யாணம் பண்ணிட்டோம். இதுங்க எப்படி இருக்க போகுதோன்னு??!!
ஆனா, எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா அப்பா, மனசு கோணாம அம்மா நடந்துப்பாங்க. அம்மாவோட விருப்பத்துக்கு மாறாக அப்பா எதுவுமே செய்ய மாட்டார்.
எவ்வளவோ கஷ்டத்தை இருவரும் ஒன்றாய் சேர்ந்து சமாளிச்சு இருக்காங்க. மனமொத்த தம்பதிகளுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்திருக்கும் நினைக்குறீங்களா?!
நான் மகளா பொறந்திருக்கேனே?! இதைவிட வேறென்ன கஷ்டம் வாழ்க்கையில் வேறென்ன வேணும்?!
கடந்த வருடம் அப்பாக்கு உடம்பு முடியாம, படுத்த படுக்கையாய் ஆன போது, படிப்பறிவு ஏதுமின்றி, தனியாய் சென்னையில் யார் துணையுமின்றி, 1 மாதம் வைராக்கியத்துடன் போராடி, அப்பாவை நல்லபடியாய் தேற்றி நடக்க வைத்து திரும்ப அழைத்து வந்தவள். படிப்பறிவு இல்லைன்னாலும் தன்னம்பிக்கை மிகுந்தவள் அம்மா.
இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!!
இப்பவும், தனக்கு முடியாம ஹாஸ்பிட்டலில் இருந்தாலும், நானே சமாளிச்சுக்குறேன். நீ பிள்ளைகளையும், அப்பாவையும், வீட்டையும் பார்த்துக்கோ! ஆப்ரேஷன் போது வந்தால் போதும்ன்னு தன்னந்தனியாய் இருக்கும் இரும்பு மனுசி!! எனக்குலாம் அம்புட்டு தைரியம் இல்ல. பொசுக்குன்னா அழுதுடுவேன்! ஆனா, அம்மா அழுது அதிகம் பார்த்ததில்ல!!
பார்க்க கரடு முரடாக இருந்தாலும், பாசக்கார அப்பா. விளையாட்டுக்கு கூட குழந்தைகளிடத்தில் கூட பொய் சொல்லாதவர். மனதில் தோன்றுவதை வார்த்தை ஜாலமின்றி பேசும் குணம் படைத்தவர், செய்வன திருந்த செய்ன்னு அறிவுரை சொல்லும், பெற்ற மகளே ஆனாலும் காசு விசயத்தில், கணக்கு வழக்கு வேணும்ன்னு நினைக்கும் அப்பா..., எனக்கு தெரிஞ்சு வருமான வரிக்காக திடீர்ன்னு இன்சூரன்ஸ் போடுறது, அதை இதை வாங்குறதுன்னு இல்லாம எத்தனை ஆயிரம் வந்தாலும் அப்படியே வரி கட்டும் நேர்மையானவர். ஒரு ரூபாய் செலவழித்தாலும் நோட்டில் எழுதி வைக்கும் பழக்கத்துக்கு சொந்தக்காரர்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்!!.
மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து...,
முந்திய அறங்கள் எல்லாம் சிறக்க...,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி...,,
உணர்வுகளை மதித்து ,உரிமைக்கு இடம் அளித்து...,
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி...,
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி...,
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி...,
வந்து விழுந்த துன்பங்களை வளைத்தெடுத்து வாளிப்பாக்கி...,
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து....,
வாழ்வின் நோக்கத்தை தேர்ந்தெடுத்து...,
மனம்போல் மகிழ்வோடும்,அழகான மகவோடும்??!!
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி...,
வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி
இல்லறத்தில் மகத்தான வாகை சூடி....
இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும்
வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றேன்!!!!!
இதுபோலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க...,
வாழ்த்த வேண்டுமென...,
அகம் மகிழ்ந்து அன்பாலே
உண்மையான உள்ளத்தாலே..,
வாழ்க நீவிர் பல்லாண்டு என
வாழ்த்த வாருங்கள் உறவுகளே!!!!!!
அகம் மகிழ்ந்து அன்பாலே உண்மையான உள்ளத்தாலே வாழ்க நீவிர் பல்லாண்டு என நாங்களும் உங்களோடு சேர்ந்து அன்போடு வாழ்த்துகிறோம் உங்கள் பெற்றோரை.வாழ்கவளமுடன்!!
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழி!!
Delete// எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்...! //
ReplyDeleteவணங்குகிறேன் சகோதரி...
வருகைக்கும், வணக்கத்துக்கும் நன்றிங்கண்ணா!
Deleteதங்கள் பெற்றோருக்கு என் அன்பு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவர்கள் ஆசிர்வாதத்தையும் வேண்டுகிறேன்
ReplyDeleteஉங்க வாழ்த்துகளை அவஙக்கிட்ட சேர்ப்பிச்சுடுறேன். அவங்க ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டுங்க சகோ!!
Deleteஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅம்மா சுகத்துடன் இன்னும் உறசாகமாக திரும்பி வர அண்ணனின் பிரார்த்தனைகள்...
பிரார்த்தனைகளுக்கு நன்றிண்ணா!
Deleteஉங்கள் பெற்றோரை வாழ்த்த வயதில்லை... அவர்களின் நீண்ட நல் ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்...
ReplyDeleteபிரார்த்தனைக்கு நன்றி தம்பி!
Deleteஅருமையான தாய் தந்தையரைப் பெற்றதற்கு நீங்களும், உங்களை மகளாய் அடைந்ததற்கு அவர்களும் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான். எங்கள் வாழ்த்துக்களையும் அவர்களுக்குச் சொல்லுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாய் சொல்லிடுறேன்மா!
Deleteமிருதுவான இதயம் படைத்த தங்களின் பெற்றோர்கள் புண்ணியம்
ReplyDeleteசெய்தவர்களே உங்களை மகளாய் அடைந்ததற்கும் :) வணகுகின்றேன்
தோழி வளமான வாழ்வு வாழ்ந்த தங்களின் பெற்றோரை எனது தாய்
தந்தை போல் மதித்து .அவர்களுக்கு இறைவன் மென்மேலும் நன்மையை
அருளட்டும் என்று இந்த மகிழ்வான தருணத்தில் வணங்குகின்றேன் தோழி ...
நல்ல தம்பதி. என் வாழ்த்துக்கள சொல்லிடுங்க...
ReplyDeleteஅப்பா அம்மா கிட்ட நீங்க காட்டற பாசம்
ReplyDeleteபாசம் இல்ல, அது
பாயசம்
அனுபவிச்சு குடிப்பவங்களுக்குத்தான் புரியும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
அப்பா அம்மாவுக்கு அன்பான இனிய வாழ்த்துக்கள் ..
ReplyDeleteAngelin.
YOUR PARENTS ARE REALLY EXEMPLARY.
ReplyDeleteMY REGARDS AND RESPECTS TO THEM.
I SEEK THEIR BLESSINGS ON THIS WEDDING ANNIVERSARY.
தாய் தந்தையை சிறப்பிக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக்கொண்டீர்கள்! தங்கள் அன்னை நலமுடன் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்! திருமண நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்தி வணங்குகிறேன் தோழி !
ReplyDeleteகலாட்டா கல்யாணம் தான்.
அப்பா,அம்மாவுக்கு அன்பான இனிய திருமணநள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஉங்கள் பெற்றோர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
ReplyDeleteஅப்பா அம்மாவுக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்!
ReplyDeleteதன்னம்பிக்கை தரும் தங்களுடைய தாய் தந்தைக்கு தித்திப்பான திருமண நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிமையான குடும்பம் அக்கா ...
ReplyDeleteஉங்கள் பெற்றோர்.வாழ்கவளமுடன்!!
ReplyDeleteராஜி அவர்களுக்கு!
ReplyDeleteநன்றி! ஒரு நல்ல செய்தியை அழகாக பகிர்ந்ததற்கு! நன்றாக எழுதுகிறீர்கள். இந்த கவிதை உங்கள் கவிதையா? பிராமாதம். மிக மிக நன்றாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
உங்கள் கவிதயைப் படிக்க படிக்க, படிக்கும்போதே, நான் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து நானும் ஒரு கவிதையை தேத்தி விட்டேன். ஆம் உண்மை தான். படிக்கும் நேரத்தில் தான்--அந்த நாள் பள்ளிக்கூடம் நியாபகம். திருவள்ளுவர், நாலடியார், அவ்வையார் இவர்கள் எங்கள் கையில் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா?
இதை சொல்லியே ஆக வேண்டும்:
// 42 வருடங்களுக்கு முன், இதே நாள், இதே மாதம்//
நீங்கள் எனக்கு தங்கச்சியே தான்! அந்த பஞ்சாயத்து முடிந்ததா? யார் அக்கா என்று? அதான் மற்றொறு மேலை நாட்டு கவிதாயினி!?
இது ஒரு தாமஷ் தான்...எனக்கு இப்படி எழுதித் தான் பழக்கம். மனிதில் ஒன்றும் இல்லை.
___________
பின்குறிப்பு:
உங்களைப் பற்றி விரைவில் ஒரு இடுகை எழுதப் போகிறேன்..!
வாழ்த்த வயதில்லை... அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க அருள் செய்யுங்கள்...
ReplyDeleteஅப்பா அம்மாவுக்கு எங்கள் வணக்கங்களும்..
ReplyDeleteதங்கள் அப்பா அம்மாவுக்கு வாழ்த்துகள் . வாழ்க பல்லாண்டு.
ReplyDeleteஅன்பு ராஜி,உங்கள் அம்மா அப்பாவிற்கு என் இனிய மணநாள் வாழ்த்துகள். அதேசமயம் தங்கள் அம்மா பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅன்பு மகளான உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
அவர்களுக்கு இறைவன் எல்லா நலமும் வளமும் அருளட்டும்,
ReplyDelete(இன்றுதான் என் மகளின் திருமண நாளாகும்!----1997.)
தங்களது பெற்றோர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.....
ReplyDeleteஅப்பா அம்மா நீடுடி வாழ பிராத்திகிறேன்
ReplyDeleteவாழ்த்த வயது இல்லாததால் வணங்கி பிராத்திக்கிறேன்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கே மகளாய் பிறக்கும் வரம் தர வேண்டுமென இந்த இனிய நாளில் வணங்குகிறேன்!!./// மகா உன்னதமான கோரிக்கை..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் வணகுகிரோம்ம். பல்லாண்டு வாழ்க.
ReplyDeleteஅன்பின் ராஜி - பெற்றோருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபகிர்வு அருமை. தங்களின் பெற்றோர்களுக்கு எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிறைவான வாழ்வு வாழும் தங்கள்
ReplyDeleteதாய் தந்தையர்கள் நீடூழி வாழ
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
பெற்றோருக்கு வாழ்த்துகளையும், அம்மா நலம் பெற பிரார்த்தனை செய்துக் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல!!
ReplyDeleteதங்களது பெற்றோருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஅம்மா அப்பா மேல் இத்தனை பாசம் வைத்திருக்கும் ராஜியைப்போல் ஒரு பிள்ளைப்பிறக்க அந்த பெற்றோரும் எத்தனை பாக்கியம் செய்திருக்கவேண்டும். இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்க ராஜி நீங்களும் வரம் தான் வாங்கி வந்திருக்கிறீர்கள்...
ReplyDeleteஅம்மாவும் அப்பாவும் என்றும் சௌக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்பா.. அப்பா அம்மாவுக்கான கவிதையில் இழை இழையாய் அன்பை பார்க்கிறேன். பாசத்தை பார்க்கிறேன்பா...
அழகான அம்மா அன்பான அப்பா கைக்கோர்த்து தொடங்கிய இல்லற வாழ்க்கைக்கு சாட்சியாய் இதோ இந்த அன்புப்பிள்ளை ராஜி.. இன்னும் வேறென்ன வேண்டும்....
அம்மா அப்பாவின் ஆசி வேண்டிடும் ராஜியின் அக்கா மஞ்சு....
மனம் நிறைந்த அன்பு திருமண நாள் நல்வாழ்த்துகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்... அன்று வேண்டாம் என்று போயிருந்தால் இத்தனை அன்பான மனைவி கிடைத்திருக்கமாட்டார் அப்பாவுக்கு...
ReplyDeleteதாத்தாவும் பாட்டியும் (உங்கள் அப்பாவும் அம்மாவும்) நிரம்பவும் அழகு :) உள்ளேயும் வெளியேயும் :)
ReplyDelete