Saturday, August 19, 2017

ஓவியாவை விரும்பிய மனது வேற யாரையும் ஏத்துக்காது போல! - கேபிள் கலாட்டா

அது ஒரு நகை விளம்பரம்.. புருசனும் பொஞ்சாதியுமா கடைக்கு போய், பொண்டாட்டிக்கு நகை வாங்குறங்க. கூடவே தன் அம்மாக்குன்னு ஒரு செயினை புருசன் எடுத்துக்குறான். ஒரு வளையலை பொண்டாட்டி எடுத்து பில் போட சொல்றா. இது யாருக்குன்னு புருசன் கேட்க என் அம்மாக்குன்னு சொல்றா. புருசனுக்கு மூஞ்சி அஷ்டக்கோணலாகுது. வீட்டுக்கு வந்து தான் வாங்கி வந்த செயினை அம்மாக்கிட்ட கொடுக்குறான். அம்மா சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கும்போதே பொண்டாட்டி தான் வாங்கி வந்த வளையலை தன் மாமியார்கிட்ட கொடுக்குறா. கூடவே உன் அம்மா என் அம்மா இல்லியான்னு கேக்குறா. மாமியார் மருமகள் உறவை அழகா சொல்லி செல்லும் விளம்பரம் அழகு.


பெப்பர்ஸ் டிவில காலைல 8 மணிக்கு மனசே மனசேன்ற நிகழ்ச்சி. காந்திமதின்றவங்க உளவியல்ரீதியான பிரச்சனைகளை அழகா சொல்வாங்க. கையை காட்டி, கண்ணை உருட்டி, நீட்டி முழக்கின்னு அவ்வளவ் அழகா சொல்வாங்க.  நம்ம பக்கத்து வீட்டு அக்கா நம்ம மனசை தேத்துற மாதிரியே இருக்கு...


பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிச்சாங்குறானாம்ங்குற கதை விஜய் டிவி பிக்பாசுக்குதான் பொருந்தும். ஓவியா இல்லாத குறைய போக்க ஆண்களை கவர கவர்ச்சிக்கு சுஜா, பெண்களை கவர ஹரீஷ்.. சண்டைக்கு காஜல்ன்னு இறக்கி இருக்காங்க. ஓவியா கேமரா முன்னாடி பேசுனதாலதான் ரீச் ஆச்சுன்னு சுஜா மனசுல ஆழமா பதிய வச்சிருக்காங்க போல... அதும் கேமரா முன்னாடி பேசுது. இந்த சீசனில் ஓவியாவை விரும்பிய மனசு அது இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்காதுப்போல! காயத்திரிக்கு போட்டியா காஜல்ன்னு நினைக்குறேன் . வந்ததும் ஆரவை வம்புக்கிழுக்குது. அத்தனை கேமரா இருக்குன்னு தெரியும். அவனைப்பிடிச்சு, உலகமே விரும்பும்  ஓவியாவை நீ ஏன் ஏத்துக்கலை.. உனக்கு கமிட் ஆகிடுச்சான்னு கேக்குது. ஆரவ் தப்பே செஞ்சிருந்தாலும் இதுமாதிரி வம்புக்கிழுப்பது தேவையா?! . என்ன பிடிக்கலைன்னாலும் காயத்ரி தெளிவா பேசும். இது தண்ணியடிச்ச மாதிரி பேசும். இதுங்க மூஞ்சியும் முகரக்கட்டையும்(உபயம்: காயத்ரி) பார்க்காம சனி, ஞாயிறு கமலுக்காக பார்க்கலாம்.. அதுக்கு பதிலா எப்பயும்போல பாட்டு கேப்போம்...


சினிமா, இலக்கியம், சுற்றுலா, செய்திகள், சீரியல்ன்னு மனிதர்களை சுற்றியே சுழலும் ஊடங்களின் மத்தியில் விலங்குகளை பத்தி சங்கரா டிவியில் ஒளிப்பரப்பாகுது. விலங்குகளின், குணம், அதன் சுபாவம், அது சந்திக்கும் பிரச்சனை, விலங்குகளுக்கான மருத்துவம், விலங்குகளுக்கான அமைப்புன்னு விலங்குகளை மையப்படுத்தின நிகழ்ச்சி அருமை. இது சங்கரா டிவியில் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிப்பரப்பாகுது...

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வியப்பூட்டும் விஞ்ஞானம்ன்னு அறிவியல் சார்ந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. அறிவியல் சோதனைகளையும், இணையதளத்தில் உலாவும் விஞ்ஞான கருத்துகளும், வாரம் ஒரு விஞ்ஞானியின் நேர்க்காணலையும் ஒளிப்பரப்புறாங்க... பாருங்க...தமிழ்மணம் ஓட்டு பட்டை....

நன்றியுடன், 
ராஜி


16 comments:

 1. உபயம் - நல்ல வார்த்தையை படிச்சுக்கிட்டீங்க...

  மாமியார் - மருமகள் பாசத்தை நம்பிட்டீங்களாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சும்ம்ம்ம்ம்மாண்ணே. பதிவுக்காக போட்டது. அதுலாம் அப்படிலாம் யாரையும் திட்ட மாட்டேன்

   Delete
 2. பொழுது போக்கு புரிகிறது! த ம 2

  ReplyDelete
 3. #அதுக்கு பதிலா எப்பயும்போல பாட்டு கேப்போம்...#
  இதுவே பெட்டர் :)

  ReplyDelete
 4. நானும் படிச்சுடேன்....வேற என்ன சொல்ல...

  ReplyDelete
  Replies
  1. ஒன்னும் சொல்லுறதுக்கில்ல

   Delete
 5. நல்லவேளை, நான் பிக்பாஸ் பக்கமெல்லாம் போவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை தப்பிச்சுட்டீங்க

   Delete
 6. ஓவியாவோ, காவியாவோ எதையும் ஒருமுறைதான் ரசிக்கலாம்! ஒரிஜினல் ஒரிஜினல்தான். அங்கிருந்து எல்லோரும் வெளியேறும்போது பாதி பைத்தியங்களாகத்தான் வரப்போகிறார்கள்! நகைக்கடை விளம்பரம் பார்க்கவில்லை. டச்சிங்.

  ஐந்தாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. அருமை
  பிக்பாஸ் நிகழ்ச்சியெல்லாம் பார்ப்பதே இல்லை
  நகைக்கடை விளம்பரம் அருமை

  ReplyDelete
  Replies
  1. தப்பிச்சுட்டீங்கண்ணே

   Delete
 8. த ம வாக்கு நேற்று ,ஏற்கனவே சேர்க்கப் பட்டுள்ளது என்று பொய் சொன்னது ,இப்போது வாக்கு விழுந்து விட்டது :)

  ReplyDelete
  Replies
  1. அப்பப்ப தமிழ்மணம் கண்ணாமூச்சி காட்டுது

   Delete