Friday, March 30, 2012

வாழ்ந்து காட்டடி வண்ண மயிலே...,


 
பொன்னை விரும்பும் பூமியிலே...,
பெண்ணை விரும்பினான்!?

பெண்ணை விரும்பியவன்...,
இன்னும் பிற பின்னர் விரும்பினான்!?

பெண்ணை மட்டும் விரும்பியவன்...,
பிறவற்றை மறைத்தானா? மறந்தானா?

இன்ன பிறவற்றையும் விரும்பியவன்..,
இதயம் கொண்டவளை கொன்றுவிட்டானே,

இன்ன பிற நிறைந்த மனத்தவனை...,
மறைத்தவனை மனம்கொண்டு மரிப்பதைக் காட்டிலும்,...

தன்னிதயம் தகர்த்த, நெறிகெட்ட மானிடனை..,
களையெடுத்து கன்னி அவள் மீண்டு...,

மீண்டும் வசந்தம் வர,
காத்திருப்பதே...,

பொன்னான, கண்ணான கன்னியவளுக்கு நன்றென புரியும் - 
காலம் பதில் சொல்லும் காத்திரம்மா,
அன்பெனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவனே வாத்தாவான்,  
வாத்து மடயனாவான்,  
பார்ப்பாயடி, வாழ்ந்து காட்டடி.



Wednesday, March 28, 2012

ப்ளஸ் டூ மாணவர்களின் பேச்சு


(ஐ,  எனக்கு பரிட்சை முடிஞ்சு போச்ச. நான் இனி ஜாலியா ஊர் சுத்துவேன்...,)
 

















(பாட்டனி கொஸ்டின் பேப்பர் செம ஈசிப்பா. நான் செண்டம் வாங்குவேனே....)

















(பிஸிக்ஸ் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணவன் கைக்கு கிடைச்சான் அவனை....,)













(ஏப்ரல் 2 ல இருந்து பேப்பர் திருத்த போறாங்களாம்?! ...,)


















(நான்  மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எழுதப்போறேன்...., டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை பண்ணா போறேன்.)
















(நான் ஐஐடிக்கு எண்ட்ரன்ஸ் எழுதப்போறேனே...., இஞ்சினியராகி தரமான பொருட்களை தயார் பண்ண போறேன்.)

 

















 (நான், டீச்சர் ட்ரெயினிங் படிக்க போறேன். டீச்சராகி நல்ல குடிமக்களை உருவாக்க போறேன்....,)













 (நான் எக்கனாமிக்ஸ் படிச்சு அரசியலுக்கு போய் நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டை  நல்ல நிலமைக்கு கொண்டு வரப் போறேன்...,)














(இன்னியோட இந்த ஆட்டம் பாட்டம் முடிஞ்சுது.....,இனி நாமலாம் காலேஜ் போகப்போறோம்..,பொறுப்பா நடந்துக்கனும்...,)
















(பசுமை நிறைந்த நினைவுகளே...., பாடி திரிந்த பற்வைகளே! பழகி திரிந்த தோழர்களே பறந்து செல்கிறோம்..., நாம் பறந்து செல்கிறோம்...,) 

 
 
















   (பரிட்சைதான் முடிஞ்சு போச்சே. இனி ஜாலியா இருக்கலாம்ன்னு பார்த்தால்  எண்ட்ரன்ஸ், கோச்சிங் கிளாஸ்ன்னு மறுபடியும் சாவடிக்குறாங்களே..., அவ்வ்வ்வ்வ்வ்வ்)



















டிஸ்கி: என் பொண்ணுக்கு 26ந்தேதி எக்ஸாம் முடிஞ்சுது அவ எக்ஸாம் முடிச்சுட்டு கூட்டி வரும்போது காய்கறிகள் வாங்கிட்டு வந்து நெட்டுல உக்காந்தா இந்த படம் கண்ணுல பட்டு, கமெண்டும் தோணுச்சு. பொருத்தமா இருக்கா?

Monday, March 26, 2012

கடவுள் பக்தி என்றால் என்ன? - ஐஞ்சுவை அவியல்

                                 narada
          பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.  செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

      ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார்.  அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?” என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார். போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்,’ என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள். அவர் ‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் “தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று கேட்க, நாரதரும், நாராயணன் ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார். அதற்கு அந்த செல்வந்தர் “அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?” என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார் நாரதர்.  கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று  பற்றுவதே ”உண்மையான பக்தி” இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.

**************************************************************
சிரிக்க...,

                                 
அப்பா: பரிட்சையில் எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன்: ஒண்ணே ஒண்ணுதான்!

அப்பா: ஒண்ணே ஒண்ணுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!
****************************************************************** 
பசிக்குதா?
என் சின்ன பொண்ணு இனியாக்கு அப்போ 4 வயசு. எங்க வீட்டுல நாங்கலாம் சாப்பிடுறதுக்கு முன் காக்காவுக்கு ஒரு பிடி வச்சுட்டு, காக்கா சாப்பிட்டுடுச்சான்னு பார்த்துட்டு நாங்கலாம்   சாப்பிடுறது எங்க பழக்கம். டான்னு 8 மணிக்கு காக்காவுக்கு சாப்பாடு வச்சுடுவோம். அன்னிக்கு எதோ காரணத்துனாலே சமைக்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு.

பசிக்குதுன்னு இனியா சொல்லிக்கிட்டே இருந்தா. இன்னும் சமைக்கலைம்மா லேட்டாகிடுச்சுன்னு, ரொம்ப பசிச்சா பெரியம்மா வீட்டுல போய் சாப்பிடுன்னு சொன்னேன்.  மணி எட்டு தாண்டிடுச்சு. தற்செயலா  ஒரு காக்கா வந்து எங்க வீட்டு வாசல்ல “கா கா கா”ன்னு கத்தினதை பாப்பா பார்த்துட்டு, ஹலோ காக்கா! இங்க இன்னும் சாப்பாடு ரெடியாகலை, ரொம்ப பசிச்சா எங்க பெரியம்மா வீட்டுக்கு வான்னு சொல்லி வேகமா எங்க அக்கா விட்டுக்கு போய்ட்டா.
*********************************************************
சிந்திக்க..., 
                                       
விரிச்ச தலை முடியத் தெரியாத பொம்பளைக்கு, அவள் பெற்ற பிள்ளைகள் விதத்தாலே ஒரு பெயர். அவள் யார்?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்...,
*****************************************************
தோட்டம் அமைக்க.....
முத‌லி‌ல் தோ‌ட்ட‌ம் அமை‌க்க‌ப்பட வே‌ண்டிய இட‌‌ம் சூ‌ரிய ஒ‌ளி படு‌ம் இடமாக இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
தோ‌ட்ட‌ம் அமை‌ப்பத‌ற்கு மு‌ன்பு, அ‌ப்பகு‌தி‌க்கு‌ள் கா‌ல்நடைகளோ, கோ‌ழி போ‌ன்றவையோ வ‌ந்து ‌விடாம‌ல் தடு‌க்கு‌ம் வே‌லி அமை‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.
செடிகளை நடுவத‌‌ற்கு மு‌ன்பு ம‌க்‌கிய தொழு உர‌ம் போ‌ட்டு ம‌ண்ணை‌க் கொ‌த்‌தி‌வி‌ட்டு ம‌ண்ணை இள‌க‌ச் செ‌ய்து வை‌த்‌திரு‌ங்க‌ள்.

Friday, March 23, 2012

நீயின்றி நானில்லை...,



என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்??!!

நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்....

என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்....,

என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரித்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………

ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….