Thursday, May 03, 2012

உன் மடியில் நான் உறங்க, கண்களிரண்டும் தான் மயங்க....,

   
 உன் தோளினில் சாய்ந்து
உன் கொஞ்சும் வாய்மொழியை
ரசித்திட ஆசை...!

உன்னுடன் நனைந்து
உன் ஒருவிரல் பிடித்து
மழைத்தூரலில்
ஒரு குடையில் உன்னுடன்
நடந்திட ஆசை...!

என் சிறிய கோபத்தின்
ஊடலில்
சமாதானமாய்பேசிடும்
உன் கொஞ்சும் வார்த்தைகளை
கேட்டிட ஆசை...!

உன்மடி சாய்ந்து
உலகம் மறந்து...
'
நீயே' உலகமென்று
உறங்கிட பேராசை எனக்கு...!

24 comments:

  1. ஆசை.. ஆசை... எத்தனை ஆசை... நிறைவேறினால்கூட மீண்டும் மீண்டும் தோன்றக் கூடிய ஆசைகள். பட்டியலிட்ட ’பா’ அருமை.

    ReplyDelete
  2. தலைப்பா வெச்சிருக்கற ‘கண்ணன் ஒரு கைக் குழந்தை’ பாட்டுகூட என் ஆல்டைம் பேவரைட் தாம்மா. ரொம்பவே ரசிச்சேன்...

    ReplyDelete
  3. ம்..... ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான கவி ..!

    ReplyDelete
  5. சின்ன சின்ன ஆசைதான் பேராசை எல்லாம் இல்ல .

    ReplyDelete
  6. சின்ன சின்ன ஆசைதான் பேராசை எல்லாம் இல்ல .

    ReplyDelete
  7. மிகவும் அருமையாக இருந்தது

    ReplyDelete
  8. கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை
    கையிரண்டில் நானெடுத்து
    பாடுகின்றேன் ஆராரோ……
    மைவிழியே தாலேலோ……
    மாதவனே தாலேலோ…….

    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை…..

    உன் மடியில் நானுறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ

    உன் மடியில் நானுறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ

    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தம் இந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

    அன்னமிடும் கைகளிலே
    ஆடிவரும் பிள்ளையிது
    உன்னருகில் நானிருந்தால்
    ஆனந்தத்தின் எல்லையது

    காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
    கேட்கும் வரம் கிடைக்கும் வரை

    கண்ணுறக்கம் மறந்ததம்மா
    மஞ்சள் கொண்டு நீராடி
    மைக்குழலில் பூச்சூடி
    வஞ்சிமகள் வரும்போது
    ஆசை வரும் ஒரு கோடி

    மஞ்சள் கொண்டு நீராடி
    மைக்குழலில் பூச்சூடி
    வஞ்சிமகள் வரும்போது
    ஆசை வரும் ஒரு கோடி

    கட்டழகன் கண்களுக்கு
    மையெடுத்து எழுதட்டுமா
    கண்கள் படக் கூடுமென்று

    பொட்டு ஒன்று வைக்கட்டுமா

    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதை
    கொண்டு செல்லும் என் மனதை
    கையிரண்டில் நானெடுத்து
    பாடுகின்றேன் ஆராரோ……
    மைவிழியே தாலேலோ……
    மாதவனே தாலேலோ…….

    ஆராரிரோ……..ஆராரிரோ…….. ஆராரிரோ………. ஆராரிரோ……. ஆராரிரோ

    ReplyDelete
  9. கணேஷ் சொல்வது போல் நிறைவேறிய பின்பும் மீண்டும் மீண்டும் நிறைவேறத் துடிக்கும் ஆசைகள். பொல்லாத ஆசைகள் எந்நாளும் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நியாயமான ஆசை.எனக்கும்முன் ஒரு அற்புதமான பாடலை முழுமையாகத்தந்த அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஓஓஓஓஓ அருமையான தலைப்பு அக்கா..நல்ல கவிதை.

    ReplyDelete
  12. ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்...Where is CP?

    ReplyDelete
  13. குழந்தையின் மன நிலையில்
    சொல்லப் பட்ட ஆசை என நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஆசை கவிதையை அருமையாக எழுதிய உங்களை ஆசை ஆசையாய் வாழ்த்த எனக்கு ஆசை

    ReplyDelete
  15. எல்லா ;லல்லவர்ஸும் மடில தூங்க ஆசைன்னே சொல்றாங்க.. அய்யோ பாவம் எப்போ பாரு தூங்கு மூஞ்சிங்க போல ஹி ஹி

    ReplyDelete
  16. சின்ன சின்ன ஆசைகள், நிறைவேறினாலும் மீண்டும் மீண்டும் தோன்றும் அலுக்காத ஆசைகள்.

    நல்ல கவிதை ராஜி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மந்தாரச் சோலையில்
    மதிநிறை நன்னாளில்
    மனம்கொண்டவரின்
    மடிபரவி நித்திரை
    நித்திலமாய் கிடைத்திட
    வரம் என்றும் வேண்டுமே....

    அழகிய கவிதை சகோதரி..

    ReplyDelete
  18. ஆசைகள் அருமை என்ரால் அதைச்சொன்னவிதம் ரொம்பவும் அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. சின்னச் சின்ன ரசிக்கும் ஆசைகள் !

    ReplyDelete