Tuesday, October 30, 2012

சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை





மழை பெய்யும்போது
அதில் நனைந்து பார்
என் கண்ணீர்
துளிகள் அதில் கலந்திருக்கும்..,
உன்னை பிரிந்திருக்கும்
சோகம் எனக்கு
இப்போது இல்லை??!!
ஆனால், தயவு செய்து
என் கனவில்
வருவதை மட்டும்
நிறுத்திவிடாதே.!

இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
எனக்கு வேண்டும்,.. என் உயிரை
எடுத்துக் கொள், உன் கண்ணில் நான்
இருக்கும்போது இந்த உடல் எதற்கு?


நான்  என்ன சொன்னாலும்.....,
 நீ கேட்பாய் என்று தெரியும்!!!. 
ஆனால், இந்த அளவிற்கு!
கேட்பாய் என்று தெரியாது!!,

ஏதோ கோபத்தில் வாய் தவறி
”என்னை மறந்துவிடு"
 என்று சொன்னால்...,
 இப்படி ஒரேயடியாகவா
மறந்துவிடுவது??!!


15 comments:

  1. இந்த Photo கிளி எங்கள் வீட்டு கிளி போலவே இருக்கு

    ReplyDelete
  2. தலைப்பும் இறுதி வரிகளும் அருமை
    வித்தியாசமான சிந்தனை
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  4. என்வலைப்பூவில் இன்று தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்! வருகை தாருங்கள்

    ReplyDelete
  5. மறந்து போவதும்,ஞாகபங்களில் துளிர்த்து எழுவதும் நன்றாகயிருக்கும்தான்.

    ReplyDelete
  6. கலக்கலான கவிதை நன்றி பகிர்வுக்கு

    http://www.amarkkalam.net

    ReplyDelete
  7. ஒவ்வொரு பந்தியையும் மீண்டும் மீண்டும் படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
  8. கவிதை நீங்க எழுதியதா அல்லது யாரிடமாவது சொல்லி எழுதி வாங்கியதா எப்படி இருந்தாலும் மிக மிக நன்றாக இருந்தது.. தென்றல் சசிக்கும் உங்களுக்கும் கவிதை போட்டி வைக்கலாமா என்று நினைக்கிறேன் என்ன சொல்லுறீங்க

    ReplyDelete
  9. ம்ம்ம் ..வலி
    ரெம்க நாசுக்காக சொல்லிடீங்க சகோ

    ReplyDelete
  10. அருமையான கவிதை.

    ReplyDelete
  11. கவிதை ரொம்ப நல்ல இருக்கு..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  12. யார் மறந்தாங்கன்னு ஒரே confusion
    நீங்க மறக்கமா இருந்தாவாது கனவுல வந்திருக்கலாம்

    எப்படியோ
    மறதி
    கொஞ்சம் கஷ்டம்தான்

    ReplyDelete