Thursday, October 04, 2012

காதலில் சொதப்புவது எப்படி?

                                                              
டேய், மச்சான், நான் ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்றேன். அது என்னை திரும்பிகூட பார்க்கலை. அதை நம்ம பக்கம் திருப்பி விட எதாச்சும் ஐடியா சொல்லுடான்னு கேட்டா போதும், டீக்கா டிரெஸ் பண்ணு, சத்தமா பேசாத, முடி வெட்டு, இந்த போனை வாங்கு, இந்த வண்டி ஓட்டுன்னு ஒரு லிஸ்டே அடுக்குவானுங்க.

ஆனா, அந்த பொண்ணுக்கும் அவனுக்கும், செட்டாகி, காதல்ல கசிந்துருகி..,  தீஞ்சு ..., அந்த பொண்ணை விட சூப்பர் ஃபிகர் கிடைச்சுட்டா காதலியை எப்படி கழட்டி விடுறதுன்னு தெரியாம நம்ம பசங்க முழிப்பானுங்க..., ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டா ”ஙே”ன்னு முழிப்பானுங்க..., 

நம்ம பசங்களோட எதிர்கால நலன் கருதி நான் பொண்ணுங்களை கழட்டி விடுறதுக்கு சில ஐடியாக்கள்லாம் தர்றேன்.  யூஸ் பண்ணி பாருங்க. ஹெல்ப்ஃபுல்லா இருந்தா மாலை மரியாதை  பண்ணுங்க. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.


1.  போன்ல பேசிக்கிட்டு இருக்கும்போது...,   முதல்ல, இந்த ம்ம்ம் போடுறதை  விடுங்க. ரெண்டு நிமிசமா   எதுவும் பேசலேன்னா “என்ன, ரொம்ப போர் அடிக்குதா?”ன்னு கேள்வி வரும், கொஞ்சம் கூட பயப்படாம டக்குன்னு ஆமான்னு பதில் சொல்லிடுங்க. (  நேருல பார்க்கும்போது மூஞ்சை தூக்கி வச்சுக்குவாங்க.)   

2. காலைல எழுந்து பொறுப்பு வெளக்கெண்ணெய் போல Good Morning, ராத்திரி க்குGood Night எஸ்எம்எஸ் அனுப்புறதை நிறுத்துங்க. நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)     

3. “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் பொய்யா கொஞ்சுறதை நிறுத்துங்க. “நீ இன்னிக்கு போட்டிருக்குற மஞ்சள் சுடிதார் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி உண்மையை சொல்லிப் பழகுங்க.(சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்றது? தாதலில் தோற்பது அம்புட்டு ஈசியில்லீங்கோ.)

     4.  என்னதான் காஞ்சு போய் கிடந்தாலும், “ஒண்ணே  ஒண்ணு  கொடேன். ப்ளீஸ்!”ன்னு  தப்பித்தவறிக்கூட கேட்டுடப்படாது.  அப்பாலிக்கா கழட்டி விடுறது கஷ்டம்.


5. உங்க ஆள் மற்றும் அவங்க  ஃப்ரெண்ட்ஸ் கூட  (கேர்ள்ப்பா அபுறம் பாய் ஃப்ரெண்டை பார்த்துக்கிட்டிருந்தா தப்பா நினைச்சுக்குவாங்க.)  இருக்கும்போது, அவங்களையே பார்த்துக்கிட்டிருங்க. அவங்களோடயே பேசிக்கிட்டிருங்க. இடையில உங்க ஆளு பேச வந்தாலும் கண்டுக்காதீங்க. (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) உங்க ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரியறதாம்??!!

   6. சும்மா சும்மா அப்பா பர்சுல ஆட்டையை போட்டு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேணாம்! பிசினாறித்தனமா கேட்டா கூட நானே உனக்கொரு கிஃப்ட்; அப்பௌறம் ஏண்டி இன்னொரு கிஃப்ட்ன்னு சமாளிங்க!

 7. சுடுகாட்டுக்கு கூப்பிட்டாலும் சொன்ன நேரத்துக்கு டான்னு போய்  நான்  அரிச்சந்திரன் பேரன்னு  நிரூபிக்க வேணாம். ஒரு மணி நேரம் கழிச்சு போங்க இல்லாட்டி  போகாமலயே  கடுப்பேத்துங்க.

8.எப்ப தண்ணியடிசாலும் மறக்காம, அம்மணியை  போன்ல கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” ன்னு கேட்டா ரொம்ப தெகிரியமா  ஆமா, இப்ப அதுக்கென்னன்னு கேளுங்க.

9.ரெண்டு பேரும் ஒண்ணா எங்காவது வெட்டியா ஊர் சுத்தும்போதும் சரி, மொக்கையா கடலை போடும்போதும் சரி..,  அங்க பார்க்குற பொண்ணுங்களைலாம் பார்த்து மறைக்காம ஜோள்ளுங்க. அப்பாலிக்கா, அன்னிக்கு ஃபுல்லா ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

10.    அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை லாம் அடியோடு நிறுத்துங்க. அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுட்டு நான் ரெம்ம்ம்ம்ம்ப நல்லவன்னுலாம்  நடிக்க வேணாம். அந்தாள் பார்க்கும் போதுதான் புகையை ஊதணும்.  கண்டிப்பாய் நம் சாரி உங்க ஆள்கிட்ட  சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே அப்புறம் என்ன இதுக்கோசரம் மரியாதை?)     

11. அவங்க பர்த் டேக்கு , உங்க செல், அப்பா, அம்மா, பாட்டி செல்போன்,  டி.வி, கம்ப்யூட்டர், வாட்ச்ன்னு எதிலெல்லாம், அலாரம் வைக்குற வசதி இருக்கோ அதிலெல்லாம் அலாரம் வச்சு டான்னு  12 மணிக்கு எழுந்து, “ஹாப்பி பர்த்டே”ன்னு  சொல்றதையெலாம் விட்டுடுங்க.  அன்னிக்கு சாயந்தரம் 7 மணிக்கு போன்ல  கூப்பிட்டு “ஆமா, உனக்கு இன்னிக்கு பர்த் டே இல்ல! முக்கியமான வேலை நிறைய இருந்துச்சா சுத்தமா இதை மறந்தே போய்ட்டேன்! ஹாப்பி பர்த்டே!”ன்னு சொல்லி பாருங்க.....,

ரெண்டு பேரும்  பிரியரதுக்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.      அம்மண்ணி காண்டாகி காச் மூச்சுன்னு கத்தும். அப்போ,  இதை மட்டும் மறக்காம சொல்லுங்க. ஏன்னா இதான் ஃபினிஷிங் டச்   “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது நம்ம வேலை! மிச்சம்லாம் அம்மணியே பார்த்துக்குவாங்க...

 டிஸ்கி: எல்லாத்தையும் விட இப்ப நான் சொல்றதுதான் முக்கியம்.   இதை உங்கள் ஆளும் படிக்ககூடும். உங்களைக் கழட்டிவிட அவகங்களும் இதையே யூஸ் பண்ணிக்கலாம், கவனம் தேவை சகோ!   தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! என்ன நான் சொல்றது சரிதானே?!

19 comments:

 1. இந்த ஐடியாவை எல்லாம் நான் அந்த காலத்திலேயே முயற்சி பண்ணியும் காதலி என்னையை விட்டுபோகாமல் இப்போது மனைவியாகி கூடவே வருகிறாள், முடிந்தால் மனைவிக்கு அல்வா கொடுப்பது எப்படி என்று போடுங்களேன்

  ReplyDelete
 2. அனுபவம் புதுமை.....

  ReplyDelete
 3. எப்படியெல்லாம் யோசைனகளை சொல்றீங்க...!!!

  இருந்தாலும் முடிவில் "உங்க கடமை உணர்ச்சி எனக்கு பிடிச்சிருக்கு...!" (/// தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்! ///)

  நன்றி...

  ReplyDelete
 4. அருமையான யோசனையா இருக்கே
  ஆப்பில் மாட்டிய வாலை எடுக்க இதை விட
  சிறந்த ஐடியாவை யாரும் தர முடியாது
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. என்னா யோசனைகள்... யப்பா... பட், உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 6. நமக்கு தான் கொஞ்சம் லேட். ஜஸ்ட் 16 வருஷம் :)

  ReplyDelete
 7. யோசனைகள் அருமை! என்னுடைய வலைப்பூவில் "மீட்டிட வருவானா?" பதிவு.
  வருகை தர விழைகிறேன்! நன்றி1

  ReplyDelete
 8. ம்ம்ம் ..நல்ல ஐடியாக்கள்

  ReplyDelete
 9. என்னதான் அயராத பணிகள் இருந்தாலும் கன நேரத்தில் உதித்தது இந்த மகாசிந்தனை...!?

  ReplyDelete
 10. ஹி ஹி ஹி..........
  இதையே மாத்திப் புது பிகருக்கிட்ட செஞ்சிட்டு இருப்பான் பக்கிப் பயல்.....
  சூப்பர் டிப்ஸ்

  ReplyDelete
 11. தோற்பது எப்படின்னு தெரிந்தால்தான் வெற்றி பெற முடியும்

  இது சூப்பர்

  ReplyDelete
 12. பதிவு போடும்போது , டைட்டில் வைக்கும்போது ,திரட்டிகளில் இணைக்கும்போது சொதப்புவது எப்படி?ஹி ஹி

  ReplyDelete
 13. நல்லாக் கொடுக்கறீங்க ஐடியா!
  த.ம.9

  ReplyDelete
 14. வர வர இந்த அக்கா கொஞ்சம் வில்லங்கமாவே போடுறாங்க ..
  சரி விடுங்க புதுசா என்னை மாதிரி லவ் பண்ண போகும் யூத்துகளுக்காக ஒரு பதிவை போடுங்க ,, வைட்டிங்

  ReplyDelete
 15. அருமையான பதிவு. கழட்டி விடறதுக்கு ஐடியா கொடுக்கற நீங்க, பிக்கப் பன்றதுக்கும் ஐடியா கொடுத்தா எங்கள மாதிரி ஆட்களுக்கு உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
 16. நான் சொல்ல வந்த விசயத்தை டிஸ்கியில சொல்லிப்புட்டீங்களே..சிறப்பு..அருமை..பிரமாதம்..

  ReplyDelete
 17. ஒன்னுந்தெரியாத பிள்ளைகளை எல்லாம் கெடுக்குறீங்க... அப்படின்னு உங்க பின்னாடி கொடிபிடித்து பெண்கள் கத்துறது காதுல கேக்கலையா ராஜி அக்கா...

  ReplyDelete
 18. இப்படியா ரகசியங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறது ராஜி

  ReplyDelete
 19. ஹாஹாஹா! போஸ்ட்டு சூப்பர், அதவிட கடைசி பஞ்ச்சு செம!

  ReplyDelete