Friday, August 23, 2013

சித்தர் பீடம் திருக்கச்சூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்

இன்னிக்கு நாம பார்க்க போறது கோவில் இல்லை. ஒரு சித்தர் வாழ்ந்துட்டு போன ஒரு பீடம். அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் உடனாய மருதீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியில் வரும் போது மாலை நேரம் கதிரவன் அந்தி சாயும் வேளை, கோவில் அருகே அழகா, அமைதியான ஒருவித ஈர்ப்போடு ”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”களின் ஜீவ சாமாதியை பார்க்க நேர்ந்தது.  சாமியார், சாமி மடம்ன்றதுல நம்பிக்கை இல்லைன்னாலும், கூட வந்தவங்க போனதாலும், பதிவு தேத்தலாம்ன்னும் போனேன். 
ஆனா, சாமியார் மடம்ன்றதை தவிர மத்த எல்லாமே பிடிச்சு போச்சு. நாங்க  சித்தர் பீடத்துக்கு போன போது உள்ளூர் குழந்தைகள் அங்க வேத பாடங்களை படிச்சுக்கிட்டு இருந்தாங்க.  அங்கே, எங்களுக்கு சித்தர்களின் வாழ்க்கை வரலாறையும், பெருமைகளையும் அங்கே இருக்கிற அம்மையார் சொன்னார்.

”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமிகள்” சேக்கிழார் பிறந்த தொண்டை நாட்டில் படப்பை என்னும் ஊரில் நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் அவதரித்தாராம்.  இளமையில் குலத்தொழிலை செய்து வாழ்ந்துவந்திருக்கிறார்.  இளவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் ஞானத்தை தேடி காசிக்கு சென்றாராம். அங்கு பாம்பன் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் தங்கி இருந்து தொண்டாற்றினாராம் 
”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”களின் தத்துவமும் பக்தியும், தொண்டும் பெருமானை ஈர்க்கவே கனவில் காட்சி கொடுத்து நீ தெற்கு திசையில் உள்ள திருகச்சூருக்கு சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் அம்மை அப்பனுக்கு தொண்டு செய்து அருள் பெறுவாய் என கூறினாராம்.

 மதுரை வந்து அங்கிருந்த திருஞானசம்பந்தர் மடத்தில் தங்கி இருந்து பிறகு சிதம்பரம் சென்று அங்கிருந்து படப்பை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசித்து  திருக்கழுகுன்றம் வந்து  வேதகிரீஸ்வரரை வணங்கிவிட்டு திருக்கசூரை வந்து சேர்ந்திருக்கிறார்.

 பின்னர் தாழக்கோவிலில் தரிசனம் செய்து ஒத்தையடி பாதைவழியே  மலைகோவிலை அடைந்தபோது தாயார் காட்சி அளித்திருக்கிறார். தாயாரை தரிசித்து விட்டு நவாப் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் இல்லாத நுழைவாயில் வழியாக சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து வெளியே வரும்போது அவர் பார்வை மங்கி இருள் ஆனதாம்.  பிறகு ஆலயத்தினுள் செனற உடன் பார்வை தெரிந்ததாம்.  உடனே அங்கேயே தங்கி இருந்து முட்புதர்களை லாம் சீர் செய்து கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்து வந்தாராம்.

இவர் இரும்பை பொன்னாக்கி அதன் மூலம் கும்பாபிஷேகம் நடத்தினாராம். கதை கேட்டப்படியே,  அவருடைய ஜீவசமாதியை தொழுது பின் வெளியே வந்தோம்.

”சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமி”கள் அங்கே இருந்த அரசமரத்தை காட்டி இந்த மரத்தில் கிழக்கு நோக்கி ஒரு கிளை வரும்.  எப்போ அந்த கிளை வாடுதோ அப்போ என் விதி முடியும் என்றாராம்.  அதேபோல் அவர் பிச்சை எடுத்த அன்னத்தை சிவன் முன் வைத்து சிவனோடு கலந்து விட்டாராம்.  பின்பு கிழக்கு நோக்கிய நிலையில் அவரை பிரதிஷ்டை செய்து சாமாதி எழுப்பினார்களாம்.  வருடம் தோறும் அவர் சமாதியான நாளை குருபூஜை செய்து கொண்டாடி வருகின்றார்களாம்.
  
சுவாமிகளின் சமாதியை தரிசித்து விட்டு வெளியே வரும்போது அவருடைய சீடர் மௌன குரு வீராசாமிகள் ஜீவ சமாதி காணபடுகிறது.  அவர்தான் குழந்தைவேல் சுவாமிகளின் வாழ்க்கை சரிதத்தை தொகுத்து எழுதினாராம் .அதில் நிறைய தகவல்கள் காணபடுகின்றன. சித்தர் பீடத்தில் அவை கிடைகின்றன.

ஜீவ சமாதி வழாகத்தில் நல்ல பசுமையான காட்சியோடு சாய்பாபா சிறிய உருவமாக இயற்கை சூழலில் அருள் புரிகிறார்.
இச்சித்தர் பீடத்தின் கட்டிட பணிகள் கொஞ்ச கொஞ்சமா நடந்துக்கிட்டு வருது.
பீடத்தின் கருவறையையும், கோபுரமும தரிசித்து வெளியே வந்தோம் .
இந்த சித்தர் பீடத்தில் அன்னதானமும் ஒவ்வரு பொர்ணமி அன்றும் வழங்க படுகிறது நாமும் அதற்கு நம்மால் ஆனா உதவிகளை அளிக்கலாம் விருப்பம் உள்ள பக்தர்கள் "அருள்மிகு மருந்தீஸ்வரர் தியாகராஜர் திருக்கோவில் இறைபணி சபை" குழந்தைவேல் சுவாமி வீரா சுவாமி மடம்,74,மலைக்கோவில் தெரு ,திருகச்சூர் .மொபைல்  9445693021 என்ற எண்ணிர்க்கும் தொடர்பு கொள்ளலாம்


சித்தரின் ஆசிகள் கிடைத்த கையோடு அடுத்த கோவிலுக்கு பயணமானோம் ..அதை அடுத்த வாரம் அக்கோவிலின் விவரத்தோடு பார்க்கலாம்.

25 comments:

  1. அழகான படங்களுடன் தகவல்கள்... பதிவுகளை தேத்த இன்னும் பல சிறப்பான கோவில்களுக்கு சென்று வர வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  2. அமைதியான சூழலில் அழகான ஒரு தரிசனம் ...கோவில்களின் புண்ணியங்களும் சித்தர்களின் ஆசியும் உங்களால் எங்களுக்கு கிடைகிறது ..தொடருங்கள் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எழில் கொஞ்சும் அற்புதமான அமைதியான சூழல்
    உள்ள சித்தர்பீடம் அறிமுகத்துக்கு நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  4. பிடிக்காம போனாலும் பதிவ தேத்தறதுக்காக உள்ள போனீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க அக்கா!!

    ReplyDelete
  5. பதிவுக்காக , நம்பிக்கையில்லாத மடத்திற்குள் சென்று வந்திருக்கிறீர்கள். இந்த ப்ளாக் எழுத் ஆரம்பித்தலிருந்து நான் எதையாவது பார்த்தால் , யாராவது ஏதாவது பேசினால் அது சம்பந்தமாக எழுத முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன்.
    நிறைய பேர் என்னைப் போல் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. சித்தர் பீடங்கள் வேற சாமியார் மடங்கள் வேற இரண்டுக்கும் முதலில் வித்தியாசம் புரிந்து கொள்ளுநாள் அருள் நிறைந்த சக்திகள் ஆட்சி புரியும் பீடமே சித்தர் பீடங்கள் ..இன்றைய சில நித்தி போன்றவர்களால் நடத்த படும் வியாபார நோக்கு உள்ள மடங்களோடு ஒபிடாதீர் இவர்கள் முற்றும் துறந்த துறவிகள் ..நல்ல பதிவு கொடுத்து இருகிறீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இது சாமியார் மடமல்ல்ன்னு சொன்னதாலதான் உளயே போனேன். காஞ்சிபுரம், மருவத்தூர் செல்லும் போது எல்லோரும் அங்கிருக்கும் சாமியார்களை பார்க்க போவாங்க. ஆனா, நான் அப்படி போக மாட்டேன். அந்த காலத்தில் இருந்த மாதிரியான சாமியார்கள் இப்போ இல்ல. பால், பழம், உண்டு பஞ்சு மெத்தையில் கால் பிடிக்க சீடர் படையோடு இருக்கும் சாமியார்களைத்தான் நான் நம்புவதில்லை. வருகைக்கும் தெளிவுப்படுத்தியமைக்கும் நன்றி!

      Delete
  7. அருமையான படங்கள், அருமையான விளக்கம்..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!

      Delete
  8. எங்கேயோ போயிட்டீங்க போங்க..உங்கள யாரும் இனி அசசிக்க முடியாது அசசிக்க முடியாது..

    ReplyDelete
  9. ''நாங்க சித்தர் பீடத்துக்கு போன போது உள்ளூர் குழந்தைகள் அங்க வேத பாடங்களை படிச்சுக்கிட்டு இருந்தாங்க''

    என்னது குருகுலமா அங்க நடக்குது வேதபாடம் படிக்க..என்னா ஒரு பில்டப்பு.. கவர்மென்ட் ஸ்கூல் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதிட்டு இருக்குதுங்க..வேத பாடமாம்..பக்கத்துல ஜெயலலிதா ஸ்கூல் பேக் தெரியுது பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே! நான் குருகுலம்ன்னு சொன்னேனா?! 4 டூ 5 மணிக்கு பிள்ளைகளுக்கு சொல்லித் தராங்க. உங்களுக்கு இன்னும் டவுட் இருந்தா சொல்லுங்க. உங்களை கொண்டு போய் சேர்த்துட்டு வரேன்.

      Delete
    2. வேதம் படிக்குறவங்கள்லாம் குடுமி வச்சுக்கிட்டு பஞ்சகச்சம் கட்டிக்கிட்டுதான் இருக்கனும்ன்னு எதாவது ரூல்ஸ் இருக்கா கவிஞரே!?

      Delete
    3. 4 டூ 5 என்ன சொல்லித்தராங்க? வேதபாடமா? அப்படின்னு தெரிஞா அங்க ஆயிரம் பேரு திரண்டு வந்திருவாங்க சகோ..பஞ்சாங்கம் வேற வேதம் வேற..மிகச் சிறந்த சமாளிப்பு..இப்போ வேதம் சொல்லிக் கொடுக்கிற நாலு இடங்களை சொல்லுங்கோ பார்ப்போம் தமிழ்நாட்டு அளவில சொன்னாக்கூட மகிழ்ச்சிதான்..சொல்லுவீங்களா இந்த பின்னூட்ட்ட்தத பாக்காத மாதிரி போயிடுவீங்காளா?

      Delete
    4. வேதங்கள் ரிக்,யஜூர்.சாம.அதர்வண.. இதை இப்ப எங்கங்க சொல்லிக்கொடுக்கிறாங்க.. போற போக்குல சொல்லிக்கொடுக்கிற 10 கிளாஸ் கணக்கா என்ன?

      அதுக்குன்னு பொறந்தவன்னு சொல்லுவாங்களே அவனுக்கு சொல்லிக் கொடுக்கவே ஆளு இல்ல சகோ.. நீங்க வேற..:)

      Delete
    5. வேதம்ன்னு சொல்கிறது நீங்க சொன்னமாதிரி ரிக்,யஜூர்.சாம.அதர்வண.வேதங்கள் தான்..ஆனால் 'மறை'என்றால் வேதம்தான்.அவர்கள் தேவாரம் திருவாசகம் போன்ற திருமறை பதிகங்களையும் சில வேதங்களின் உபநிஷத்துகளை மட்டும் சொல்லி கொடுகின்றனர்.அதில நான்காம் திருமறை கொண்டது என்னுடைய பழைய பதிவுகளில் இட்ட திருவதிகை வீரட்டானம் கோவில் கவிஞரே!?

      Delete
    6. இனி உபநிஷத்துகள் என்னனு கேட்க கூடாது வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறாங்க; உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்' என்று சொல்வாங்க ...

      இனி சொல்லி கொடுக்கும் இடங்கள் சொல்லவா மயிலாடுதுறையில், சிவபுரம் வேத சிவகாம பாடசாலை இயங்கி வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள ஆதீனமடங்கள்,தீக்ஷிதர் குருகுலம் விருத்தாஸ்ரமம் கும்பகோணம் ,காஞ்சி வேத பாடசாலை போதுமா கவிஞரே!?

      Delete
    7. அடஅடஅட

      எல்லாரும் இங்க ஓடி வாங்க போர் ஆமா போர்

      ஹா ஹா ஹா

      Delete
  10. படப்பையை சுற்றி சித்தர் பீடங்கள் என்ற பெயரோடு இன்னும் நான்கு பீடங்கள் இருக்கின்றன.. பதிவு போடுவீர்கள் என சொல்லவில்லை..தகவலுக்காக.

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டீங்கல்ல, இந்த ஞாயித்துக்கிழமை கேமராவோடு கிளம்பிடுறேன்.

      Delete
    2. கேமராவை கழுத்துல மாட்டிக்கிட்டுதான் ரேஷன் கடைக்கு போறதுன்னாலும் போகனும் ஆமா..இது இந்த அன்புச் சகோதரனின் அன்பு கட்டளை..

      Delete
    3. ரைட்டுங்க

      Delete
  11. வாரம் வாரம் புண்ணியம் தேடி போறீங்களே... கிடைச்சுதா?? டவுட்டு

    ReplyDelete
  12. திருவான்மியூரில் கூட ஒரு மருந்தீஸ்வரர் இருக்கிறார்... நன் முதளில்திருவான்மியூர் என்று நினைத்தேன்.... திருகச்சூர் எந்த மாவட்டம் ...

    ReplyDelete