Tuesday, June 17, 2014

ஆட்டு ரத்தப் பொரியல்- கிச்சன் கார்னர்

என் பசங்களுக்கு சிக்கன் தான் பிடிக்கும். மட்டன் பிடிக்காது. ஆனா, ஆட்டு ரத்தப் பொரியல் மட்டும் பிடிக்கும். அதனால, பெரியவ வீட்டுக்கு வரும்போது காலை உணவுல இது கண்டிப்பா இருக்கனும். எங்க ஊர்ல 30ரூபாய்க்கு கால் கிலோ அளவுல ரத்தம் கொடுப்பாங்க.

தேவையானப் பொருட்கள்:
ஆட்டு ரத்தம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி- 1
கடுகு - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா- சிறிது
உப்பு -  தேவையான அளவு,
எண்ணெய் தேவையான அளவு

அரைக்க:
 சோம்பு- கொஞ்சம்
பட்டை - 1துண்டு
கிராம்பு - 4
அன்னாசி பூ- 1
பூண்டு  10 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகு  - 4
காய்ந்த மிளகாய் -2

வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா நறுக்கிங்கோங்க. அரைக்க வேண்டியவற்றை விழுதா அரைச்சு வச்சுக்கோங்க. 
ஆட்டு ரத்தக் கட்டியை தண்ணி ஊத்தி கழுவி இட்லிப்பானையில் துணிப்போட்டு வேக வச்சு துண்டுப் போட்டுக்கோங்க.


கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க.


அடுத்து நசுக்கி வச்சிருக்கும் பூண்டைச் சேர்த்து வதக்கிங்கோங்க. பூண்டு சேர்க்கலைன்னாலும் பரவாயில்ல.(நாம்தான் ஏற்கனவே பூண்டை அரைச்சு வச்சிருக்கோமே. என் பொண்ணுக்கு பிடிக்குமேன்னு பூண்டு சேர்ப்பேன்.)


அடுத்து வெங்காயத்தை பொன்னிறமா வதக்கிங்கோங்க.


கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்குங்க.
தக்காளி சேருங்க.

தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.


அரைச்சு வச்சிருக்கும் மசாலாவை  சேர்த்து வதக்கி கொஞ்சமே கொஞ்சம் தண்ணி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடுங்க. 


பச்சை வாசனை போனதும் வெட்டி வச்சிருக்கும் ஆட்டு ரத்தத் துண்டுகளைச் சேர்த்து சுருள வதக்குங்க.

சுவையான ஆட்டு ரத்தப் பொரியல் ரெடி! தேங்காய்ப் பூ சேர்த்தும் கொடுக்கலாம். சின்னப் பொண்ணுக்கு பிடிக்காதுன்னு நான் சேர்க்கல. 

அடுத்த வாரம் ஈசியான ரெசிபியோட சந்திக்கலாம்....,


21 comments:

  1. அய்யோ ரத்தமுடோய்...

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலைவெறி!?

      Delete
  2. வணக்கம்
    செய்து பார்க்கிறோம் நல்ல விளக்கம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அதிக இரத்தப் போக்கு உள்ள பெண்கள் இதை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று அம்மா சொல்வார்கள். இதில் நிறைய கால்சியமும் இரும்பு சத்தும் உள்ளதாம்.
    நான் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்.

    நேரம் கிடைத்தால் “உளுந்து களி“ எப்படி செய்வது என்று எழுதுங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரை செய்ததில்லை. அம்மாக்கிட்ட கேட்டு சொல்றேன் அருணா!

      Delete
  4. ஆகா அப்பிடியே சாப்பிடலாம்/நல்ல ரெசிபி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  5. Replies
    1. ஏன்!? இதுவரை சாப்பிட்டதில்லையாண்ணா!?

      Delete
  6. ஊருக்கு வந்த உங்களை கண்டிப்பா பார்க்கணும் என்று நினைச்சேன் இப்படி பதிவை போட்டு பயமுறுத்துறிங்களே...ஊருக்கு வந்தா என்னை பெரிய வடை சட்டியில் போட்டு பொரிச்சிடுவீங்களோ என்று பயமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பயப்படாம வாங்க சகோ! வடைச்சட்டியில் பொரிக்க மாட்டேன் சகோ! எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ்

      Delete
  7. ஒரு காலத்தில் உங்களை அறியும் முன் உங்களை ஒரு ஆடு மாடு சாப்பிடதா பிராமண பெண்ணாதான் நினைச்சு இருந்தேன். ஹீ.ஹீ

    ReplyDelete
  8. http://www.kovaineram.in/2013/01/blog-post_6.html

    ReplyDelete
    Replies
    1. இது நம்ம சமையல்

      Delete
    2. பார்த்துட்டேன் சகோ!

      Delete
  9. இத...இத உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல...அவ்

    ReplyDelete
  10. Read your post ஆண் வர்க்கத்துக்கே “இவனுங்களால்” இழுக்கு;
    அப்ப ஒரு சிறுமி கிட்ட தப்பா 'இன்னொருத்த' நடந்துகிட்டா தப்பு;
    ஆட்டை 'நீங்க' கொலை பண்ணா, கழுத்த அறுத்தா, ரத்தம் குடிச்சா தப்பில்லே;
    correct ?

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்டத்துக்கு நான் வரலப்பா!

      Delete
  11. ஆட்டு ரத்தம் சாப்பிட்டால் என்ன பயன்?
    பதிலளிங்க அக்கா

    ReplyDelete