Monday, April 09, 2018

கல்யாணத்தை ஆயிரங்காலத்து பயிர்ன்னு ஏன் சொல்றாங்க?! - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள யோசனை?! எதாவது கோட்டையை பிடிக்க பிளானா?!

உங்களையே பிடிச்சு வச்சுக்க முடியலியாக்கும். இதுல கோட்டையதான் பிடிக்க போறேனாக்கும்!!  கல்யாணம்ங்குறது ஆயிரங்காலத்து பயிர்ன்னு சொல்றாங்களே! அதுக்கு என்ன காரணம்ன்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். எதாவது கட்டிடம், நாடு நகரம்ன்னு சொன்னால்கூடா ஆயிரங்காலத்துக்கு தாக்குப்பிடிக்கும். பயிர்ங்குற வார்த்தை எப்படி சரியாகும்.



ம்ம்ம் நீ சொல்லுறதும் சரிதான்.,  நாம -முதல் தலைமுறை, நம்ம அப்பா அம்மா-  இரண்டாவது தலைமுறை , தாத்தா(பாட்டன்) பாட்டி - மூன்றாவது தலைமுறை,  பூட்டன்,பூட்டி - நான்காவது தலைமுறை, ஓட்டன், ஓட்டி - ஐந்தாவாது தலைமுறை, சேயோன், சேயோள் - ஆறாவது தலைமுறை, பரன்,பரை -ஏழாவது தலைமுறை. நமக்கு அடுத்த தலைமுறைகள், மகன்/ள், பேரன் பேத்தி, கொள்ளு பேரன்/பேத்தி, எள்ளு பேரன்/பேத்தி.  ஒரு தலைமுறைக்கு கிட்டத்தட்ட 60 வருடங்கள்ன்னு கணக்கு. அப்படி கணக்குப்பார்த்தா, அப்ப எழு தலைமுறைக்கு 480 வருசம், ஏழேழு தலைமுறைன்னா 960வருசம். கிட்டத்தட்ட 1000 வருசம் வந்திட்டுதா?! இதைத்தான் ஆயிரங்காலத்து பயிர்ன்னு சொல்றாங்க.  அதேமாதிரி கட்டிடம், நாடு, நகரம், சிலைன்னு பேர் வச்சிருக்கலாம்தான். ஆனா, அதுலாம் வாரிசுகளை உண்டாக்காது. பயிர்லாம் தனக்கு அடுத்து தன் இனத்தை விருத்தி செய்யும். அதனாலதான், கல்யாணத்தை ஆயிரங்காலத்து சொல்றாங்க. புரியுதா?!

ம்ம்ம் நல்லாவே புரிஞ்சுட்டுது.

ஆமா, என்ன திடீர்ன்னு ஆராய்ச்சிலாம் பண்றீங்க?! அந்தளவுக்கு மூளை வேலை செய்யுதோ! 

ம்க்கும் டிவி சீரியல்ல வந்துச்சு. அதான் கேட்டேன்.

அதானே பார்த்தேன். பொழுதன்னிக்கும் சேனல் மாத்தி மாத்தி டிவி பார்க்குறியே! அதுல எத்தனை கிருமி நாசினி விளம்பரம் வருது. நம்ம வீட்டுல எந்த பொருள்ல அதிகம் கிருமி இருக்குன்னு தெரியுமா?!

இதென்ன?! டாய்லட், அதுக்கு அடுத்ததா கிச்சன் சிங்க், அப்புறம், பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பர், ரூபா நோட்டு கடைசியாதான் செருப்பு வரும்.

இப்படி பதில் சொன்னா செருப்புதான் முதல்ல வரும். வீட்டில் இருக்கு  பொருட்களிலேயே அதிகமா கிருமி இருக்குறது டிவி ரிமோட்லதான். இதுல கிட்டத்தட்ட, 18,000 கிருமி இருக்கு.  ரிமோட்டுக்கு அப்புறமாதான் ரூபா நோட்டு, அதுக்கப்புறம் மொபைல்.. அப்புறம்தான் டாய்லட், சிங்க்ன்னு போகுது.

ஐயோ! சரி விடுங்க என்னத்த கொண்டு வந்தோம்?! என்னத்த கொண்டு போகப்போறோம். இந்த கிருமிகளையாவது கொண்டுட்டு போவோம்.

இப்படி சொல்லி உசுப்பேத்திதான் ஒருத்தன் தன்னோட சேர்த்து தன் நகைகள், மொபைல்ன்னு புதைக்கனும்ன்னு சொல்லி செத்தும் எடுத்திக்கிட்டும் போயிட்டான். 

சரி, மண்ணிலிருந்து எடுத்த தங்கத்தை மண்ணுலயே புதைச்சுட்டான் போல! பெரிய இயற்கை நல ஆர்வலரா இருந்திருப்பார்ன்னு நினைக்குறேன்.

ம்க்கும், இயற்கையெல்லாம் எப்படி பாழ்படுத்தனுமோ அப்படிலாம் படுத்திட்டு இப்ப காக்குறோமாம். இயற்கையை மெல்ல மெல்ல கொன்னுட்டு இருக்கோம்ங்குறதை இந்த படம் எம்புட்டு அழகா சொல்லி இருக்காங்க பாரு.
மீம்ஸ் நல்லாவே புரியுது. வெயில் மாதிரியே மீம்ஸ் கிரியேட்டர்களும் மும்முரமாதான் இருக்காங்க. 

அந்த வெயிலைக்கூட மீம்ஸ்க்காரங்க விடல. இங்க பாரு..
ஹாஹா! இருங்க மாமா.  வெயிலுக்கு இதமா நன்னாரி சர்பத் கொண்டாரேன்...

நன்றியுடன்,
ராஜி

18 comments:

  1. இயற்கை படம் வேதனையை தருகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. சேமிச்சு வைக்க வேண்டியதைலாம் அழிச்சுட்டு காசு பணத்தை கொடுக்க மெனக்கெடுறோம்.

      Delete
  2. வர வர உங்கள் பதிவை படிச்சு அறிவை வளர்க்கலாம்னு தோணுது சகோ.

    ReplyDelete
    Replies
    1. இங்கனயே அறிவு வளரலியாம்!

      Delete
    2. எனக்கு அறிவு வளர சான்ஸே இல்லை காரணம் களிம்ண்ணில் ஏதும் விளையாது

      Delete
    3. கரணைக்கிழங்கு உட்பட களிமண்ணில் வளரக்கூடிய பயிர்கள் இருக்குண்ணே

      Delete
  3. அருமையான அங்கதம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ

      Delete
  4. நல்ல கோர்வையாக வெவ்வேறு கருத்துக்கள் - அருமை !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. நான் இனி ரிமோட்ட தொடவே மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. அட ஆச்சர்யம்தான். உங்கக்கிட்ட ரிமோட்லாம் கொடுக்குறாங்களா உங்க வீட்டில்?! கொடுத்து வச்சவர் சகோ நீங்க!!

      Delete
  6. 7 X 60 = 420 இல்லையோ? ஆனாலும் ஆயிரம் காலத்துப் பயிர் விவரங்கள் சுவாரஸ்யம்தான் - ஏற்கெனவே படித்திருந்தாலும்.

    அடப்பாவி... எவ்வளவு நகைகள்!

    வெயிலுக்கும் வேர்வைக்கும் புயலே அடித்தாலும் போதமாட்டேன் என்கிறது!

    ReplyDelete
    Replies
    1. 7X 6 = 42.. அட ஆமாமில்ல!!

      Delete
  7. ஆயிரம் காலத்துப் பயிருக்குப் பின்னாடியான தகவல்கள் வெகு சாவாரஸ்யம். விஷயம் தெரிந்தாலும் கணக்குத்தான் போட்டதில்லை. இயற்கையை அழிக்கிறோம் என்ற படம் மிக நன்றாக இருக்கிறது ஆனால் வேதனையும்.

    துளசி: இங்கும் வெயில் சுட்டெரிக்கிறது.

    கீதா: மழை பெய்யும் இடங்கள்ல இருக்கறவங்க, ஸ்னோ பெய்யுற இடங்கள்ல இருக்கறவங்க எல்லாம் கொன்சம் இங்கிட்டு அனுப்புங்கனு கேட்டுக்கறோம்பா சென்னைவாசிங்க...ஹா ஹா

    ReplyDelete