Saturday, July 21, 2018

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்


"ஒத்தைக் கல் மந்து 'ன்ற பெயரே உதகமண்டலம் ஆனதா இங்க வாழும் மலைவாழ் மக்கள் சொல்றாங்க. மூங்கில் காடு இருந்ததாலும், நீர் அதிகம் இருந்ததாலும் அந்த பெயர் வந்ததா இன்னொரு தகவலும் உண்டு. உதகம் என்றால் தண்ணீர் என்று பொருள். மண்டலம் என்றால் வட்ட வடிவம். அதாவது, வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்பதுதான் உதகமண்டலத்தின் பொருள். இப்படிப் பார்த்தால் உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் இது அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி ஆகிவிட்டது.

தக்கோலம்...

தக்கன் என்ற அரக்கன் தான் கொண்ட ஆணவத்தால் தன் தலையை இழந்து, ஆட்டுதலை பெற்றவனாய் இறைவனை வழிபட்ட நிகழ்ச்சியின் வாயிலாக அருள்புரிய வேண்டி இறைவன் ஒரு திருத்தலத்தையும் தோற்றுவித்தார்.

அந்தத் திருத்தலம் இருக்கும் இடம்தான் தக்கோலம்... தக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது. இந்த காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் இருக்கு .


சேலம்....

மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக சொல்லப்படுது.கடையம்...
கடையம்ன்ற இனமக்கள் வசித்ததால் கடையர் பட்டி" ன்னு அழைக்கப்பட்டு இப்ப "கடையம்"ன்னு ஆனது.

செய்யாறு.....
பார்வதி தேவியின் பூஜைக்காக அவளின் சேயான முருகன் உண்டாக்கியதால் 'சேய் ஆறு' என அழைக்கப்பட்டு இப்ப செய்யாறு ஆனது. சேய் ஆற்றின் கரையில் இருப்பதால் இதற்கு செய்யாறுன்னு பேர் உண்டானது. இந்த ஊருக்கு "திருவத்திபுரம்'ன்னு இன்னொரு பேருண்டு. அதுக்கு என்ன காரணம்ன்னா, இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறித்து. இவ்வூருக்கு திருவோத்தூர் என உண்டானது. . இதுவே மருவி திருவத்திபுரம் என்றானது.

சின்னாளப்பட்டி...
மேற்கு தொடர்ச்சி மலைக்கும், சிறுமலைக்கும் இடைப்பட்ட பகுதியை மேலக்கோட்டை ஜமீன் சின்னன் ஆண்டு வந்தததால் இந்த ஊருக்கு 'சின்னாளப்பட்டி'னு பேர் வந்தது. பட்டு பூச்சியை கொன்று உருவாக்கப்படுவதால் குறிப்பிட்ட இனத்து மக்கள் பட்டுபுடவை கட்ட மாட்டாங்க. அதுக்கு பதிலா பட்டைப்போலவே மென்மையாய் பளப்பளப்பா இருக்கும் இந்த ஊர் சேலையை விரும்பி அணிவர்.

காணிப்பாக்கம்....
மூன்று அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊமை, இன்னொருவர் செவிடு, மற்றொருவர் குருடு . மூவரும் தங்களது நிலத்தில் கிணறு வெட்டினர். ஊமை பள்ளத்தில் நின்று கடப்பாரையால் நிலத்தை பிளக்கும்போது, ரத்தம் பீறிட்டு வந்ததைக்கண்டு, ஐயோ ரத்தம்! என வாய் விட்டு அலறினார். பக்கத்தில் மணலை அள்ளிக்கிட்டு இருண்ட்ஹ செவிடனுக்கு இது கேட்டு கரையிலிருந்த குருட்டு சகோதரனிடம் சொல்ல, அவன் கிணற்றை எட்டி பார்த்து ஆமாம்டா எனச்சொல்லி, ஓடி ஊராரை அழைத்து வந்தனர். ஊமை பேசிய, செவிடன் கேட்ட, குருடன் பேசிய அதிசயத்தை கண்ட ஊரார் கிணற்றில் எட்டி பார்க்க ஒரு கல்லி ரத்தம் வடிந்ததை கண்டனர். அதை வெளியில் எடுத்து பார்த்தபோது அக்கல் வினாயகர் போல காட்சியளித்தைக்கண்டு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். அவ்வாறு பக்தர்களால் உடைத்த தேங்காயிலிருந்து வந்த நீர் காணி நிலமளவு நிறைந்ததாம். அதானால் இவ்வூருக்கு காணிப்பாக்கம்ன்னு பேர் உண்டானது

11 comments:

 1. சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வழுக்கம்பாறை சித்தனுக்கு என்னாச்சுது?! இந்த பக்கம் காத்தடிக்குது!!

   Delete
 3. சின்னாளப்பட்டி சுங்கிடி சேலை உலக பிரசித்தம்...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் தெரியும்ண்ணே

   Delete
 4. காணிப்பாக்கம் பெயர் காரணக்கதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. இப்பயும் இக்கோவிலில் பிள்ளையார் கிணற்றுக்குள்தான் இருக்கார். பார்க்க அழகா இருக்கும் கோவில். லட்டுதான் இங்க பிரசாதம்

   Delete
 5. சுவாரஸ்யமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete