Monday, July 23, 2018

பெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்சுவை அவியல்

நான் வந்ததுகூட தெரியாம அம்புட்டு இண்ட்ரஸ்ட்டா எப்.பில என்ன  பார்த்துக்கிட்டு இருக்கே?!

அது ஒன்னுமில்ல மாமா!  மாதவிடாய் பத்தி ஒரு டிவி நிகழ்ச்சில நெறியாளர் ஒருத்தங்க பேசப்போயி அது பெரிய பஞ்சாயத்தாகிட்டுது. அதான் அதுலாம் படிச்சுக்கிட்டிருக்கேன்.

தீட்டு, பீரியட், த்ரீ டேஸ், வீட்டு விலக்கு மாதவிலக்குன்னு பலபேரால் சொல்லப்படும்  மாதவிடாய்ன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்க.  இது பொண்ணுங்க பிரச்சனைதான். ஆனா, இதுப்பத்தி பொண்ணுங்களுக்கே தெரியாது. என்னமோ கெட்ட ரத்தம் வழியும், இடுப்பு, வயிறு வலிக்கும், உடல் சோர்வு, பூஜை அறைக்கு போகக்கூடாது. வெளில போனா பேய் பிடிச்சுக்கும். யாரையும் தீண்டக்கூடாதுன்னு இதுமட்டும்தான் பொண்ணுங்களுக்கு தெரியும்.

உனக்குதான் எல்லாம் தெரியும்ன்னு நினைக்காத மாமா. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மாதவிடாய் சுழற்சின்னா உடல் ரீதியான இயற்கையான வளர்ச்சி முறை. இச்சுழற்சி பெண்கள் வயதுக்கு வந்தவுடன் தொடங்குது.  முன்னலாம் 14 வயதிலிருந்து இந்த சுழற்சி ஆரம்பிச்சது. ஆனா, உணவில் ரசாயணம் கலந்ததால் இப்பத்திய பிள்ளைகள் 10 வயசுலயே வந்திடுதுங்க. இது முறையாகவும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதனை மாதவிடாய் சுழற்சின்னு சொல்றோம்.  மாதவிடாய் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு பக்க கருமுட்டைப்பையில் ஒரு முட்டை உருவாகி முதிர்ச்சி அடைகிறது. அது சினைக்குழாயின் வழியாக வரும்போது கருப்பையை அடைகின்றது. முட்டை கருப்பையை அடைஞ்சதும் கருப்பை விரிவடையுது.  அந்த கருமுட்டை உயிரணுவோடு சேரலைனா, ஹார்மோனின் காரணமாக கருப்பை சுருங்க ஆரம்பிக்குது. அப்படி சுருங்கும்போது அதன் உட்சுவரில் உள்தோல் பகுதியாகிய என்டோமெடரியம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு உதிரும். அப்போது அதோடு தொடர்புடைய ரத்த நாளங்களும் துண்டிக்கப்படுவதால் இரத்தமும், கருவுறாத முட்டையும், உட்சுவராகிய சளிச்சவ்வும் வெளியே தள்ளப்படுது.இதுதான் மாதவிடாயின் நிகழ்வு.

மாதவிடாய் அவரவர் உடல்நிலையை பொறுத்து 3 முதல் 6 நாட்கள் வரை தொடரும்.  இந்த நாட்களில் பெண்கள் சோர்வாகவும், சோம்பலாகவும், கலகலப்பின்றியும் இருப்பது இயற்கை. இதற்கு காரணம் உடலில் நிகழும் இரசாயன மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களே. இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த தொடக்கக்காலத்தில் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை மாறுபடும். அதனால் இரத்தப் போக்கும் மாறுபடும். சில சமயங்களில் மாதவிடாய் தள்ளி போகவோ அல்லது அடிக்கடி வரவோ செய்யலாம். ஆனால் இது 16-18 வயதிற்குள் சரியாகிவிடும். அதே பிரச்சனை மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 27-28 நாட்களுக்கு ஒரு முறையும் சிலருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறையும் ஏற்படும். தினத்துக்கு இரண்டு ஸ்பூன் அளவு ரத்தம் வெளியேறுவது இயற்கை. அதுக்கு அதிகமா போனாலோ இல்ல குறைவா போனாலோ கவனம் கொள்வது அவசியம். மாதைவிலக்குக்கு முந்தைய நாட்களில் கருப்பை விரிவடைஞ்சிருப்பதால்  கிட்னி, கல்லீரல்லாம் அழுத்தம் கொடுப்பதால் வயிறு வலி, இடுப்பு வலி என்பது சாதாரணம். தாங்கிக்கொள்ளும் வலியென்பது சாதாரணம். வலி அதிகமானால் கவனிக்கனும். மன அழுத்தம், திடீரென எடை குறைப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி  போன்றவற்றின் காரணமாக மாதவிலக்கு வராமல் இருக்கலாம். கர்ப்பத் தடை மாத்திரைகளின் விளைவாலும் அப்படி நிகழலாம். எப்போதும் சுழற்சி முறையாக இருந்துவிட்டு, திடீரென தடைப்பட்டால்  டாக்டரை பார்க்கனும். மாதவிலக்கில் மிளகு அளவிலான கட்டிகள் வருவது இயல்பு, அதை தவிர்த்து ரத்தக்கட்டிகள் அதிகமா இருந்தா டாக்டர்க்கிட்ட போகனும். இல்லன்னா நாளடைவில் கருப்பை கோளாறுகள் வரும்.

முன்னலாம் பெண்களை தனியா இருக்க வச்சதுக்கான காரணம் பெண்கள் சுலபத்தில் தொற்றுக்களால் பாதிக்கப்படுவாங்க. அதுமாதிரி நோய்தொற்றுக்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அந்நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய அளவிலான ஓய்வு அவசியம். அவர்கள் ஓய்வா இருக்கனும்ன்னுதான் தனியா விட்டாங்க. அதேமாதிரி, இந்த மாதிரியான நேரங்களில் பெண்கள் உடம்பிலிருந்து நேர்மறையான அதாவது நெகட்டிவ் அலைகள் உருவாகும். அது மத்தவங்களை பாதிக்காம இருக்கனும்ன்னுதான் தனியா இருக்க வச்சாங்க. ஆனா, இந்த காலத்தில் பெண்கள் பெண்ணியம், மூட நம்பிக்கைன்னு பேசி தனக்கு சாதகமான விசயத்தைக்கூட அவாய்ட் பண்ணி அவஸ்தைப்படுறாங்க.

இந்நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். தோல் நீக்காத உளுந்தை உடைச்சு களி செஞ்சு சாப்பிடலாம். முதல் நாள் இரவு எள் ஊற வச்சு அதிகாலையில் அந்த தண்ணிய குடிச்சு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை தீரும். கடுக்காய், ஆவாரம்பூ, மருதம்பட்டையை சம அளவு எடுத்து காய வச்சு பொடி செஞ்சு 5கிராம் எடுத்து கசாயமாக்கி குடிச்சு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சீராகும், ரத்தப்போக்கு அதிகமா இருந்தால் குணமாகும். கருஞ்சீரகத்துடன், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சரியாகும். கீழாநெல்லிவேரை இடிச்சு பாலோடு கொதிக்க வச்சு வடிகட்டி சாப்பிட்டாலும் மாதவிலக்கு ஒழுங்காகும். பப்பாளி, பேரீச்சை, பாதாம்லாம் சேர்த்துக்கலாம்.. இம்புட்டுதான் இந்த “அந்த”மேட்டர். அதைவிட்டு பேய், பூதம், தீட்டுன்னுலாம் ஒதுக்க தேவையில்ல.

 பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்ற மாதிரி என்னோடு சேர்ந்து உனக்கும் புத்தி வந்திட்டுது. இதோ இந்த படத்திலிருப்பது என்னன்னு சொல்லு...

ஏதோ பாக்டீரியா, வைரஸ் மாதிரியானதுன்னு மட்டும் புரியுது, ஆனா அது எதுல இருக்குறதுன்னுதான் தெரில.

நீ சொன்னது சரிதான், நாம குடிக்கும் குடிநீரின் ஒரு சொட்டு தண்ணில இருக்கும் நல்ல, கெட்ட நுண்ணுயிரிகள்தான் இது.

இந்த மாதிரி ஆளுங்களால தமிழ் மட்டுமில்ல எல்லா மொழியுமே மெல்ல சாகும்.. இது வாட்ஸ் அப்ல வந்துச்சு மாமா.
உன் அறிவாளித்தனத்தை டெஸ்ட் பண்ண ஒரு விடுகதை கேக்குறேன்.
கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,
இதுக்கு விடை சொல்லு பார்க்கலாம்...
நான் யோசிச்சு வைக்குறதுக்குள்ள ஒரு கப் காபி போட்டுட்டு வாங்களேன்.. ப்ளீச்.

நன்றியுடன்,
ராஜி

13 comments:

 1. பயனுள்ள தகவல்கள்
  விடுகதை இதோ வர்றேன்...

  ReplyDelete
  Replies
  1. இந்தா.. மீசைக்காரரே! பதில் சொல்லாம எங்க போறீங்க?!

   Delete
 2. அதென்ன ஆண்களும்...? ஆண்கள் தான் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்...

  விடை : நத்தை, நண்டு, ஆடு, பாம்பு

  ReplyDelete
  Replies
  1. ஆண்கள் புரிஞ்சுக்கிட்டாதான் பெண்களை பத்திரமா பார்த்துப்பாங்க.

   விடை சரிதான்ண்ணே.

   Delete
 3. நல்ல பகிர்வு. புரிதல் பலருக்கும் இல்லை. சொல்லிக் கொடுப்பதும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. சொல்லி கொடுக்கனும்ண்ணே. புனிதம், தீட்டுன்னு இருவேறு கருத்துகள் சொல்லி எல்லாத்தையும் நம்மாளுங்க குழப்பி வச்சிருக்காங்க.

   Delete
 4. அறிந்து கொள்ளவேண்டிய தகவலகள்.

  ReplyDelete
 5. வாட் ஈஸ் திஸ் சேக்ஸ் அண்ணா?!

  ReplyDelete
 6. மிக அவசியமான பகிர்வு ராஜி கா...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா, கால ஓட்டத்தில் பெண்களும் இப்ப வெளியில் செல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இன்னமும் தீட்டு வெளில போகாதன்னு அடக்குறதும், மாதவிலக்கு நாளிலும் லோல்படுவதை பார்த்துக்கிட்டு இருக்கும் ஆட்களை என்ன சொல்ல?!

   Delete
 7. உச்ச நீதி மன்றமே இப்போது பெண்கள் கோவிலுக்கு செல்லலாமென்கிறது நாப்கின்ஸ் உபயோகித்தாலெப்பவுமெதுவு செய்யலாம் என்கிறார்களே

  ReplyDelete
  Replies
  1. நாப்கின் உபயோகிச்சா விளையாடலாம், செய்தி சேகரிக்கலாம், ஓடலாம், என்னவேணும்ன்னாலும் செய்யலாம்ன்னு காட்டும் டிவி விசேச வீட்டுக்கு போகலாம், பூஜைல கலந்துக்கலாம், கோவிலுக்கு போகலாம்ன்னு சொல்றதில்லையே!

   Delete