Thursday, July 19, 2018

நீளட்டும் உன் வெற்றிப்பாதை...

எனக்குப்பின், பல வருடங்கள் கழித்து வீட்டில் சின்னஞ்சிறு பாதம் பதியப்போகுதுன்னு  ஏகப்பட்ட எதிர்பார்ப்ப்பை மனதில் சுமந்தபடி  நானும், என் பெற்றோரும்..., வயிற்றில் குழந்தையின் அசைவை உணராமல், அருகிலிருக்கும் டாக்டர்க்கிட்ட ஓட, என்ன கடுப்பில் இருந்தாரோ டாக்டர், பாப்பா செத்து போச்சுது. நீங்க  ஸ்கேன் செய்து பார்த்துட்டு   வந்தால் ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துடலாம்ன்னு சொன்னதைக் கேட்டு,  அலறி அடிச்சுக்கிட்டு சி.எம்.சி ஆஸ்பிட்டலுக்கு போனதும்,  குழந்தை பூரண நலம். பனிக்குடத்தில் நீர் குறைஞ்சதால அசைவில்லை. அட்மிட் ஆகிடுங்கன்னு சொல்லி இரு நாட்கள் நார்மல் டெலிவரிக்கு காத்திருக்க, முடியாத பட்சத்தில், ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனாங்க. 
சின்ன வயசிலிருந்தே எனக்கு ஊசின்னா பயம், அதிலும் வயத்துல யாராவது ஆப்ரேசன், தழும்புன்னு பார்த்தா மயங்கிடும் ஆள் நான். விதியை நொந்துக்கிட்டு, ஆஃப்ரேஷனை எண்ணி பயந்து அழுதுக்கிட்டு இருக்கும் வேளையில், பிரசவ வலி எதுமில்லாம அஞ்சே நிமிசத்துல பிறந்தவ என் பெரிய பொண்ணு.
அன்றைய நாளைத்தவிர அவளால் நான் எதற்கும் பதறி நின்றதில்லை. அவ்வளவு பக்குவமாய் நடந்துக்குவா. என் கண்ணை பார்த்தே, என் மனசுல உள்ளதை புரிஞ்சு நடந்துப்பா. அவளின் ஒரே பார்வையில்,  என் உலகமகா கோவத்தை கரைக்கும் உத்தி தெரிந்தவள். நான் சொல்வதற்கெல்லாம் எதிர்வாதம் செய்வா. ஆனா, சொல்பேச்சை தட்டாதவ. சில சமயம் யார் அம்மா?! யார் மக?!ன்னு தெரியாத அளவுக்கு எங்க சேட்டை இருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தவங்க, எங்க அரட்டையை பார்த்து அம்மா, மகள்தானா?!ன்னு கேப்பாங்க. அந்த அளவுக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ். 
அம்மா செல்லம்ன்னு அத்தனை பேரின் கண் பட்டதோ என்னமோ, தனது எதிர்காலத்தை தீர்மாணிக்கும் உரிமை தனக்கே என தன் அறிவுக்கும், திறமைக்கும் ஒத்து வராத பாதையை தீர்மாணிக்க, முட்டிக்கிச்சு ஆத்தாளுக்கும் மகளுக்கும் சண்டை...
பிரசவ வலியைவிட பெரிதான மனவலியை தர,  போராடி இன்னிக்கு அவள் திறமைக்கு, விருப்பத்துக்கும் ஏத்த வேலையில் பழைய பிரியங்காவாய் அம்மா செல்லமாய் புதுசா பிறந்து புதுசா வந்திருக்கா... அவ நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும், நினைவாற்றலுக்கும் ஐ.ஏ.எஸ் ஆக்கனும்ன்னு எனக்கு ஆசை. அவ உயரம், உடலமைப்புக்கு அட்லீஸ்ட் ஐ.பி.எஸ் ஆக்கனும்ன்னு ஆசை. 
அவ தப்பே பண்ணி இருந்தாலும், கோவமா திட்ட போறவங்களையும் பேசி சமாதானப்படுத்தும் பேச்சாற்றல் உண்டு. அதனால் வக்கீலுக்கு படிக்க வைக்கனும்ன்னு அவ அப்பாக்கு ஆசை. என் அம்மாக்கு டாக்டராக்கனும்ன்னு ஆசை. ஆனா, அவளுக்கு மீடியாதான் கனவு. அவ பேச்சாற்றலுக்கு தகுந்தபடி இன்னிக்கு ஹலோ எஃப்.எம் வேலூர் பிராஞ்சின் ரேடியோ ஜாக்கி.

நாளெல்லாம் காத்திருந்து
என் மகளாய் எனக்கு நீ பிறந்தாய்!
ஊருக்கே விருந்து வைத்து
உச்சம் குளிர நான் மகிழ்ந்தேன்.

கற்கண்டு சாதத்தோடு
அ,ஆ சொல்லித்தர..
அழகாய் பயின்று இன்று
ரேடியோ ஜாக்கியானாய்.

மெல்ல செய்யும் செல்லக்குறும்புகள்
உடனுக்குடன் கொள்ளும் பெருங்கோபம்
சொல்லுக்கடங்கா பெருஞ்செயல்கள்
புரியாமல் மறுத்து பேசும் மடத்தனம்... 

அழுது செய்யும் ஆர்ப்பாட்டங்கள்
அவ்வப்போது சில அர்ப்பணிப்புகள்
தேவையறிந்து நடக்கா பொறுப்பின்மை
ஆசையுடன் பேசும் அன்பு வார்த்தை
மொத்தத்தில் என்னின் 
மறு உருவம் நீ!!

அன்புக்கொண்ட பெரியோர்களின் அறிவுரை கேட்டு
இனிமையுடன் தொடங்கட்டும் உன் முன்னேற்றம் 
கல்லெறிபவர்கள்
எறியட்டும்.. 
நீ காய்த்துக்கொண்டே இரு. 
நீளட்டும் உன் வெற்றிப்பாதை...
ஆன்றோர்களே! சான்றோர்களே! என் சகோதர சகோதரிகளை என் மகளை வாழ்த்துங்கள் வளரட்டும், 
நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தூயா . இறைவன் துணையோடு ஆசீர்வாதத்தோடு உன் வாழ்வில் அனைத்தையும் முன்னெடுத்துச்செல் .சிகரம் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஏஞ்சல்.

   Delete
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இனி எப்படி என் எண்ணம் ஈடேறும்?! இருப்பதை நினைச்சு சந்தோசப்பட வேண்டியதுதான்ண்ணே

   Delete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜி., அவ என்றும் எப்போதும் நலமோடும் மகிழ்வோடுமிருக்க வாழ்த்துகிறோம்..

  தற்செயலாக பார்த்ததில் தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. கிடைத்தற்கரிய வாழ்த்து.. நன்றிங்க சகோ

   Delete
 5. மகளின் கனவுகள் நிறைவேறட்டும். ப்ரியங்காவின் அம்மாவின் ஆசைகளும் நிறைவேறட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ; வாழ்க பல்லாண்டு.

  ReplyDelete
  Replies
  1. என் எண்ணம் நிறைவேறுமா?! கஷ்டம்தான்.. அவளுக்கு திருப்தியும், மனசுக்கு பிடிச்சும் இருந்து இந்த வேலையிலேயே நல்ல பேரெடுத்தாலும் எனக்கு போதும்...

   Delete
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 7. என்றென்றும் வாழ்த்துகள் உண்டும்மா

  ReplyDelete
 8. எனது வாழ்த்துக்களும் ராஜி க்கா...


  என்றும் மகிழ்வுடன்,

  நலமாய்,

  அன்பாய்,

  சிறப்பாய் அவள் நாட்களும் வருடங்களும் அமையட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அனு

   Delete