Sunday, July 15, 2018

ஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்

மிஸ்டர் சந்திரமௌலீஈஈஈஈஈஈன்னு கூவி  எல்லாரையும் மெளனராகம் படத்தில் கொஞ்ச நேரமே வந்திருந்தாலும் கவர்ந்திழுத்தவர் கார்த்திக். ரேவதியோடு அவர் வரும் காட்சிகளனைத்துக்கும் அன்றைய ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டாங்க.   அடடா! இம்புட்டு சில்லறை சிந்துதே! போட்டு தாக்குன்னு சொல்லி அதே பாணியில் படமெடுத்து  சம்பந்தப்பட்ட நடிகர்களை ஒழிப்பதுதானே கோலிவுட்டின்  வழக்கம்?. அதைத்தான் செஞ்சாங்க. 

1989ல  இதயதாமரை ரிலீஸ். கார்த்திக் ரேவதி நடித்தார்கள். படம் படு மொக்கை.  மிச்சமிருந்தது சில இனிய பாடல்களும், கார்த்திக், ரேவதி லவ்வுசும், நம்ம கழுத்தில் ரத்தமும்தான். படம் ஒருசில நாட்கள் ஓடுனதுக்கு முக்கிய காரணங்களில்  ஒன்று இந்தவொரு காதல் தேவதை பூமிக்கு வந்தது பாட்டு. கார்த்திக்கின் குறும்புத்தனமும், எதார்த்தமான நடிப்புக்கூட இந்த படத்தில் மிஸ்சிங்க்.  சங்கர் கணேஷ் இசை. அடிக்கடி கேட்ட வரிகளா இருந்தாலும் ஓரிரு பாட்டுகள்  மட்டும் ஹிட்.  சுமாரான வரிகளைக்கொண்ட இந்த பாட்டுகூட ஹிட் அடிச்சதுக்கு காரணம் எஸ்.பி.பியும் சித்ராவும் இப்பாடலைப் பாடியிருக்கும் விதம். மெளனராகத்தில் ரேவதிக்கும் கார்த்திக்குக்கும் டூயட் இல்லாத குறையை இப்படத்தில் இந்த பாட்டு  தீர்த்தது. மெளனராகம் ஒளிப்பதிவு செய்த பிஸி ஸ்ரீராம்தான் இதிலும் ஒளிப்பதிவு. இந்த பாட்டு ஹிட் அடிச்சதுக்கு இவரும் ஒரு காரணம். அழகான ஊட்டியை, அதோட பனிமூட்டத்தை அப்படியே படமாக்கி இருப்பார்...


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூறும்  காலை வேளையில்..


பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா?!
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடுதந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்

யாருக்கு யார் உறவு யாரறிவாரோ?!
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ?!
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ.?!
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ?!
கல்லூரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது?!
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது?!
இயல்பானது!!

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையேடுதந்தாள்..
கள்ளூறும் காலை வேளையில்...படம் : இதய தாமரை (1989)
இசை :சங்கர் கணேஷ்
பாடியவர்:  S.P.பால சுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடலாசியர் :  வைரமுத்து
டிகர்கள்  கார்த்திக், ரேவதி

பாட்டு புத்தகம்லாம் வாங்கி மனப்பாடம் பண்ண பாட்டு வரிகள் இது. பாட்டு கேக்கும்போதெல்லாம்   படம் பார்த்திட்டு  ட்யூசன் போறேன்னு சொல்லிட்டு, கார்த்திக், ரேவதி மாதிரி ரயில் தண்டவாளத்துல நடக்க ஆசைப்பட்டு நடந்து முட்டிலாம் பேத்துக்கிட்ட வரலாறுலாம்  கார்த்திக்கோடு  சேர்த்து கண்முன் வந்து போகும். 

நன்றியுடன்,
ராஜி

14 comments:

 1. நல்ல பாடல். இன்னும் சில பாடல்களும் கேட்க நன்றாகவே இருக்கும். இசை சங்கர் கணேஷ் என்று சரியாக குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் ஆமா சகோ... அவங்கதான் நியூமராலஜி, வெங்காயம் வெள்ளைப்பூண்டுன்னு போனால் நானும் போகனுமா?!

   Delete
 2. மிகவும் பிடித்த பாடல்... இனிமை...

  ReplyDelete
  Replies
  1. சேம் பிஞ்ச்ண்ணே

   Delete
 3. நல்ல பாடல். இப்போது கூட ஒரு கார்த்திக் பாடல் தான் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது - பழமுதிர்ச் சோலை எனக்காகத் தான் பாடல்.....

  ReplyDelete
  Replies
  1. வருசம் 16 படப்பாடல்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. குஷ்புவும், கார்த்திக்கும் செம அழகு இந்த படத்தில்...

   Delete
 4. நான் ரசித்த பாடல்களில் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வயது வித்தியாசமில்லாம ரசிக்கும் பாடல்தான்ப்பா இது

   Delete
 5. அருமையான பாடல்

  ReplyDelete
 6. நல்ல பாடல். அந்தப் படமே பி சி ஸ்ரீராம் தயவில் கொஞ்சம் பெயர் பெற்றது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. படத்தின் கார்த்திக், ரேவதி கல்லூரி காலத்தை அழகிய பனிமூட்டத்தின் வழியா காட்டி இருப்பார்.

   Delete
 7. பாடல் நல்லாருக்கு ராஜி. இப்பத்தான் கேட்கிறேன். இப்படி ஒரு படமும் வந்ததாஆஆஆஆஆஆ..!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்ன கீதாக்கா இப்படி சொல்லிட்டீங்க?! ரொம்ப பேமசான பாட்டு இது.. என் முதல் செல்போனின் ரிங்க் டோன் இதுதான்

   Delete