Thursday, January 31, 2019

யோசிங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க - சுட்ட படம்


பக்கம் பக்கமாய் படிக்கும் இம்சையிலிருந்து விடுதலை. எஞ்சாய் சகோ,ஸ்..

Image may contain: text
கல்யாணத்தால ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போல!


இம்புட்டு பெருசா மூளை இருந்து என்ன பயன்?! யூஸ் பண்ணாம துருப்பிடிச்சு போகுது பாதிப்பேருக்கு...


மாற்றம் வேண்டும்ன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல!

 சாணிமாடுன்னு சொல்வாங்களே! அது இதுதான் போல! மாட்டுப்பொங்கல் பரிதாபங்களில் இதும் ஒன்னு..

வெளிநாட்டில் இப்படிதான் சம்பளம் கிடைக்கும்ன்னு நிறைய பேருக்கு நினைப்பு...


பூனையை மாதிரி சூடு போட்டுக்காமயே நாய் புலியாகிட்டுது.

அடி ஆத்தி! நரம்பு மண்டலம் பாதிக்கும்ன்னு தெரியாம பாதி பல்லை புடுங்கி டாக்டருக்கு இனாமா கொடுத்திட்டு வந்துட்டேனே!


எத்தனை படத்து தீம் மியூசிக் கேட்டாலும் இதுக்கு ஈடு இணை இல்லை. என்ன படம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமோ?!
சதாசர்வ காலமும் தனக்கு அபிஷேகம் ஆராதனை செய்யும் அர்ச்சகரை, அதும் தனக்கு பணிவிடை செய்யும்போதே காப்பாத்த முன்வராத சாமியா கருவறைக்கு வெளிய இருக்கும் நம்மை காப்பாத்த முன்வரும்?! கர்மா, பாவம், புண்ணியம், சுத்தம்ன்னு காரணம் சொல்லாதீக. அப்புறம் நான் கடுப்பாகிடுவேன்.  இதுக்கு ஒரு கார்பெண்டரை நம்பி இருந்தால் அவனாவது நல்லதா ஒரு சாரம் கட்டி அர்ச்சகரை காப்பாத்தி இருப்பார். யோசிங்க! இல்லாட்டி வருத்தப்படுவீங்க!

நன்றியுடன்,
ராஜி




20 comments:

  1. வெளிநாட்டில் பணத்தை அள்ளுவது ஸூப்பர்.
    கடைசி காணொளியும் அதன் கேள்விகளும் யோசிக்க வைத்தது.

    யோசித்து முடிக்கும்முன்னே அடுத்தொரு சாய்பாபா பதிவை போடுங்க சகோ.

    கடந்த அரிவாள்மனை பதிவுக்கு நீண்ட கருத்துரை போட்டேன் பப்ளிஷ் ஆகும்முன் பதிவே காணாமல் போயிடுச்சே...

    ReplyDelete
    Replies
    1. அது ஞாயிறுக்கான பதிவுண்ணே. டைப் பண்ணி முடிச்சுட்டு க்ளோஸ் பண்ணுறதுக்கு பதிலா பப்ளிஷ் கொடுத்துட்டேன்.

      Delete
  2. வருத்தப்பட்டு யோசிக்கிறேன்...

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. அபிசேகம், ஆராதனைய ஒழுங்கா செய்யலியோ என்னமோ

    ReplyDelete
    Replies
    1. பழவாங்கும் கடவுளையா நாம கும்பிடுறோம்?!

      Delete
  5. ஜனவரி ஐந்தாம் தேதி செய்தி சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் கோவிலில் எதுக்கு இந்த பாகுபாடு?!

      Delete
    2. பாகுபாடு கூடாது, ஆனால் பூசிப்பவர் யாராக இருந்தாலும், அவரைத் தவிர மற்றவர் யாரும் நுழைவதில்லை என்பது தென்னகத்து கோவில் நடைமுறை. அது ஒரு குறிப்பிட்ட ஜாதிதான் இருக்கணும்னு அவசியமில்லை. அந்தத் தொழிலுக்கு குவாலிபை ஆனவங்க இருந்தால் போதும். (வடக்கில் எல்லோரும் உள்ளே போகலாம்). அவ்வளவுதான். மத்தவங்க உள்ள போக முடியாது என்பதும் என்னைப் பொறுத்தவரையில் சரிதான்.

      Delete
    3. பாதுகாப்பு காரணங்கள், தலையீடுகள் அதிகம் இருந்தால் சரிப்படாதுங்குற மாதிரியான காரணங்கல் ஓகே. ஆனா, ஒரு குறிப்பிட்ட இனத்தினர் ஆதிக்கத்தினைதான் இந்த படம் எதிர்க்குது.

      Delete
  6. முதல் நகைச்சுவை அருமையோ அருமை. ஆமா இது காட்சி உங்கள் வீட்டில் நடந்து முடிந்தவுடனே, பதிவா போட்டுட்டீங்க போல.
    வெளிநாட்டில் பணம் காய்ச்சி மரம் நிறைய இருக்கு, அதிலிருந்தும் பணத்தை பறித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கமெண்ட் வரும்ன்னுதான் விடியோ கேசட்டை உடைச்சு போட்டுட்டேன். அப்படியும் கமெண்ட் வந்திருந்தால் பல் எகிறிப்போயிருக்கும்.

      பணம் காய்ச்சி மரம் எல்லா இடத்துலயுமே இருக்கு. ஆனா, அந்த மரத்தினை அடையாளம் கண்டுக்கனும். அப்படி கண்டுக்க அதிர்ஷ்டமும், மரம் கிடைத்தால் மரத்தில் ஏற உழைப்பும் வேணும்

      Delete
  7. சுவை....

    வெளிநாட்டில் பணம்: (

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  8. எல்லாமே நல்லாருக்கு ராஜி. குறிப்பா அந்த பைரவ ஃபோட்டோ க்ராஃபி சூப்பர்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சுட்ட படங்கள் கீதாக்கா

      Delete
  9. //யோசிங்க! இல்லாட்டி வருத்தப்படுவீங்க!// - ஏங்க இதுமாதிரி சிந்திக்கிறீங்க... நீங்க கடவுளைக் கும்பிடுகிறீர்கள் என்பதற்காக 2000 வருடம் உயிரோடு இருக்கணும்னு ஆசைப்படுவீங்க போலிருக்கே. தவறுதலா விழுந்துவிட்டார். அவர் நேரம் முடிந்ததுன்னு நினைத்துக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளை கும்பிடுறேனா?! நானா?! 2000 வருசம் உயிரோடு இருக்க வேணாம். ஆனா, அற்பாயுசில் போகாம இருக்கலாமில்ல!

      Delete