தினமும் ஒரு கீரையை சாப்பாட்டில் சேர்த்துக்குறது உடலுக்கு நல்லது. சாம்பார், சூப், பொரியல், போண்டா, கூட்டு, வெரைட்டி சாதம்ன்னு கீரையிலும் விதம் விதமா சமைக்கலாம். என்ன கீரையை சுத்தம் செய்வதுதான் கொஞ்சம் கஷ்டம்தான். டிவி, சீரியல்லாம் வருவதற்குமுன், முன்னலாம் அம்மாவின் அம்மா/மாமியார், மாமியாரின் அம்மா/மாமியார்ன்னு வயசான பெரியவங்க யாராவது ஒருத்தங்க எல்லா வீட்டிலும் இருப்பாங்க. அவங்க காய்கறிகளை அறிவது, தானியங்களை நோன்ப, புடைக்க, இட்லிக்கு மாவரைக்கன்னு உக்காந்தபடியே வேலை செய்வாங்க. வீட்டு வேலைகள் முடித்தபின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எதாவதொரு வீட்டின்முன் உக்காந்து பேசுவாங்க. அப்ப கீரை சுத்தம் செய்றது. கிழிஞ்ச துணிகள் தைக்க, பூ கட்டுறது, தானியங்கள் சுத்தம் செய்வதுன்னு வேலைகள் பகிர்ந்து நடக்கும். உடல் உழைப்பு அதிகமா இருந்தாலும் பகிர்ந்து செஞ்சுக்கிட்டதால் அலுப்பு இல்லாமல் இருந்தது, இன்னிக்கு மிக்சி, கிரைண்டர், பாக்கெட் பண்ணப்பட்ட மளிகைப்பொருட்கள்ன்னு இருந்தாலும் அலுப்பாவே இருக்கு.
தேவையான பொருட்கள்:
சிறுகீரை - 1 கட்டு
து.பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 1
பச்சை மிளகாய்-1
வெங்காயம் - 1
தக்காளி -1
பூண்டு- 5 இல்ல ஆறு பற்கள்
மிளகாய் தூள் - சிறிதளவு
உப்பு
எண்ணெய்
சிறுகீரையை 3 முறைக்கு கழுவி, நீர் வடிஞ்சதும் சுத்தம் செய்து பொடியா வெட்டிக்கனும். துவரம்பருப்பை கழுவி குழைஞ்சு போகாமல் வேக வச்சுக்கனும்.
கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கனும்,
வெங்காயம் சேர்த்து வதக்கனும்....வெங்காயம் லேசா வதங்கியதும் பொடியா நறுக்கின தக்காளி சேர்த்துக்கனும்.
சுத்தம் செய்த கீரையை சேர்த்து லேசா வதக்கனும்....
குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்.
கீரை வதங்கியதும், வெந்த துவரம்பருப்பை சேர்த்து , தேவையான அளவு உப்பினை சேர்த்தும் கொதிக்கவிடனும்.
கீரை வெந்து தண்ணீர் வற்றி வரும்போது, தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடனும்.
உ.பருப்பு சேர்த்து சிவக்க விடனும்...
காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கனும்.
வெந்த கீரையில் கொட்டி கிளறி அடுப்பை அணைச்சுடனும். சூப்பரான கீரை கூட்டு தயார். துவரம்பருப்புக்கு பதிலா பாசிப்பருப்பும் சேர்த்துக்கலாம். எந்த பருப்பா இருந்தாலும் ரொம்ப குழையக்கூடாது.
தாளிப்பில் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்ப்பதால் வாசனையா இருக்கும்.
செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இல்ல உங்க வீட்டு செய்முறையை சொல்லுங்க...
நன்றியுடன்,
ராஜி
அனைத்து கீரைகளும் பிடிக்கும்... அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி - மிகவும் பிடிக்கும்...
ReplyDeleteஎனக்கு கீரை வகைகள் பிடிக்கும் சகோ.
ReplyDeleteகொஞ்சம் கிண்ணத்துல தேவகோட்டைக்கு பார்சல் அனுப்பலாமே...
கீரைகள் அனைத்தும் பிடித்தமானனையே
ReplyDeleteநாங்கள் இதில் தேங்காய்,சீரகம் சேர்த்து அரைப்போம். பெரும்பாலும் வெங்காயம், தக்காளி, பூண்டு மைனஸ்.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு ராஜி...
ReplyDeleteஇப்படியும் செய்வதுண்டு..ராஜி.
கீரையுடன் தக்காளி சேர்த்துச் செய்யும் போது கீரையின் இரும்புச் சத்து உடலில் நல்லா சேரும்..
தக்காளி இல்லாமலும் செய்வதுண்டு. தேங்காய், வற்றல் மிள்காய்/ப மி, ஜீரகம் அரைத்துவிட்டு..
அல்லது உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் வறுத்து தேங்காயுடன் அரைத்து...
து ப பதில் பாசிப்பருப்பு போட்டு
என்று வேறு வேறு முறையில்...
கீதா
எங்கள் வீட்டிலும் கீரை வகைகள் நன்கு பிடிக்கும் எப்படியாவது அடிக்கடி செய்துகொள்வோம்.
ReplyDeleteகீரை உடலுக்கு நல்லது. ஊரில் நிறைய பயன்படுத்துவது உண்டு. தில்லியில் கீரை வகைகள் குறைவு தான். நம் ஊர் வகைகள் கிடைப்பது அரிது.
ReplyDelete