Thursday, April 05, 2012

குழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டோரும் விரும்பும் ஜாக்கி சான்



 குழந்தைகளுக்கும், குழந்தை மனதுள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஜாக்கி  சான்,  10 மாதங்களுக்கு பதிலாக, 12 மாதங்கள் அம்மாவின் வயிற்றில் இருந்த  பிறக்கும்போது 5 கிலோ வரை இருந்தார். பிரசவம் பார்த்த டாக்டர் எங்களுக்கு பீஸ் எதும் வேண்டாம், இந்த குழந்தையை எங்களுக்கு குடுத்துடுங்க” அன்றார், அந்த அளவுக்கு கொள்ளை அழகுடன் இருந்தார் ஜாக்கி சான்.

அன்பு மகனுக்கு ”கோங் சாங் சான்” எனப் பெயரிட்டார் சார்லஸ். “பாவ் பாவ்” என்றும் செல்லமாக அழைப்பார்கள். இதற்கு பீரங்கிக் குண்டு என்று பெயர். சூ சாங் சான் என்ற சகோதரனும் தாய் சான்(Tai chan)என்ற சகோதரியும் உண்டு. மிகவும் குறும்புபுப் பிள்ளையாக வளர்ந்தார் ஜாக்கி சான்.

ஏழ்மை காரணமாகவும் சரியாகப் படிப்பு வராத்தாலும், சிறு வயதிலேயே நாடகப் பள்ளியில் சேர்ந்தார் ஜாக்கி. அங்கேயே தங்கி இருந்து, ஆடல், பாடல், ஜூடோ, குங்க்ஃபூ எனக் கற்றுக் கொண்டார். அப்பா சார்லஸுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்க, அவர் மனைவியுடன் ஹாங்காங்கை விட்டுக் கிளம்பிவிட்டார்.
                                 

நாடகப் பள்ளியில் படிப்பை முடித்த சான், சிறு சிறு வேடங்களில் நடித்தார். மூன்று வேளை சூப் குடிக்க முடியாத அளவுக்குதான் இருந்தது வருமானம். அதனால், பெற்றோரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றாற்.. சானின் பெயரை, ஆஸ்திரேலியா மக்கள் உச்சரிக்க கஷ்டப்பட்டனர். ஜாக்கி என்று விளையாட்டாய் அழைக்க போய், அதுவே இன்று, ஜாக்கி சானாக மாறியது.

மீண்டும் ஹாங்காங் திரும்பிய ாக்கியின் திறமையைப் பார்த்து, அதிரடி நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், புரூஆ லீக்குப் பிறகு, அவர் இடத்தைப் பிடிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் எல்லா நடிகர்களுமே குழம்பினர். அந்த சமயத்தில் உதித்தது ஆக்‌ஷன்+காமெடி. இந்த ஃபார்முலாவில் உருவான முதல் படமான “Snake in the Eagle Shadow" அதனை அடுத்த ‘Drunk-en Master" செம ஹிட். நடிகராக மட்டுமே இருந்த ஜாக்கி, பிறகு டைரக்டராகவும் ஆனார்.

1983ல் ஃபெங்ஜியோ லின் எனும் தைவான் நடிகையை மணந்த ஜாக்கிக்கு ஒரே ஒரு பையன், பெயர் ஜெய்ஸி சான்.
                             

பள்ளிக்குச் சென்று படிக்காத ஜாக்கி சானுக்கு, 7 மொழிகள் பேசத் தெரியும். சிறு வயதில் தன்னை வளர்த்த ரெட்கிராஸ் நிறுவனத்துக்கு கைமாறு செய்யும் வகையில் பன்மடங்காக உதவுகிறார். காடு வளர்ப்பு, எயிட்ஸ் விழிப்பு  உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிருக வதை தடுப்பு என சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் ஆர்வம் உண்டு.

உலக அளவில் எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் இன்சூரன்ஸ் கொடுக்க முன்வராத ஒரே நடிகர் ஜாக்கி சான். கை, கால், முது, கண், காது, மூக்கு என இவர் உடம்பில அடிபடாத இடமே இல்லை.

                                

2011 செப்டம்பர் 11ந்தேதி, நியூயார்க் உலக வர்த்தக மையத்தில், ஜாக்கி சான் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தார். ஆனால், ஏதோ காரணத்தினால் படப்பிடிப்பு ரத்தானது. அன்றுதான் உலகமே உறைந்துப் போன தீவிரவாத தாக்குதலால், அந்த வர்த்தகக் கட்டிடம் தரை மட்டமானது.

ஜாக்கி சானின் நீண்ட காலக் கனவு....., சீனாவில் தற்காப்புக் கலகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்குவது. “தி கராத்தே கிட்” படத்தில் வருவது போன்று, தனக்குத் தெரிந்த கலைகளை மற்றவர்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறார்.

டிஸ்கி: தகவல்கள் சுட்டி விகடனிலும், படங்கள் கூகுளிலும் சுட்டது

16 comments:

  1. எனக்கு பிடித்தமான
    சண்டை வீரர்களில் இவரும்-
    ஒருவர் !

    அழகான பழைய படங்களை
    போட்டு அசத்திடீங்க!
    பொக்கிசமான படங்கள்!
    நல்ல தகவல்கள்!

    இரட்டை கோபுர தாக்குதல்-
    சந்தேகம் உலகம் முழுவதும்-
    உள்ளது -
    ஏன் அனுமதி கிடைக்க வில்லை-
    என தெரியவில்லை!

    ReplyDelete
  2. ஜாக்கி இஸ் த கிரேட்......!!!

    ReplyDelete
  3. கஷ்ட்டபட்டு முன்னேருபவர்களுக்குதான் தெரியும் அதன் வேதனையும் வலியும், அதானால்தான் எல்லாருக்கும் உதவிகள் செய்கிறார்....!!!

    ReplyDelete
  4. ஜாக்கியை பற்றிய எனக்கு தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி.....

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பள்ளிக்குச் சென்று படிக்காத ஜாக்கி சானுக்கு, 7 மொழிகள் பேசத் தெரியும். சிறு வயதில் தன்னை வளர்த்த ரெட்கிராஸ் நிறுவனத்துக்கு கைமாறு செய்யும் வகையில் பன்மடங்காக உதவுகிறார். காடு வளர்ப்பு, எயிட்ஸ் விழிப்பு உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மிருக வதை தடுப்பு என சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் ஆர்வம் உண்டு.


    சுட்டாலும் சுவாரஸ்யமான தகவல்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  8. vikatan copy paste post kkuthaan naangka irukkaRoomae? hi hi

    ReplyDelete
  9. அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  10. எனக்கும் இவர் படம் பிடிக்கும் நல்ல நகைச்சுவையும் செய்வார். நல்ல பதிவு ராஜி அக்காள்.

    ReplyDelete
  11. நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  12. அந்த அற்புத மனிதர் அறியாத பல அற்புத தகவல்களை
    அறிந்து கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. அறியாத பல தகவல்கள் ! நன்றி !

    ReplyDelete
  14. அகராதியில் ஜாக்கி சான் என்றால் கடின உழைப்பு, விடா முயற்சி என்றுதான் இருக்கும். அனைவருக்கும் பிடித்த அவரைப் பற்றிய பகிர்வு அருமை.

    ReplyDelete
  15. ஜாக்கி சான் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete